• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ஆரின்பனின் வீடு

அழைப்பு மணியின் ஓசை கேட்டு இன்பனின் தாயார் எழுந்து, கதவைத் திறக்க வந்தார்.

கதவைத் திறந்தவுடன், அங்கே இன்பன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். அவரும் சிரித்தார்.

பின் "ஏப்பா.. அந்தப் பொண்ணு வீடென்ன, அவ்வளவு தூரமா.. நைட்டு போயிட்டு, காலைல வர... "என்றார்.

எதிர்பார்த்தது தான். ஆனால் சமாளிக்க வேண்டும் என்று நினைத்தான்.

“உள்ள வந்து சொல்றேனே… “ என்று கெஞ்சினான்.

அவன் அருகில் நின்று அனலிக்காவைப் பார்த்து “ நீ உள்ள போமா.. “என்றார் இன்பனின் தாயார்.

“ நீ சொல்லிட்டு போ…” என்றார் இன்பனிடம்.

“அது மா.. அவளுக்கு தலையில அடிபட்டிருக்கா..அதான் வீடு எங்கனு மறந்திருச்சி.. நைட் ஃபுல்லா தேடுனோம்.. கண்டுபிடிக்க முடியல.. அதான் திருப்பியும் இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன்… “என்று சொல்லிக்கொண்டே அவரை விலக்கி நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவனின் எதிரில் அவனது அக்கா வந்து நின்று கொண்டு ”அவளுக்குத் தானடா அடிபட்டிருக்கு.. நீ நல்லாதான இருக்க.. “ என்றாள்.

“அக்கானு பார்க்கிறேன்… “என்று போய் விட்டான்.

“டேய்.. அவ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… “என்று அவன் பின்னே போனார்.

“பதிலா… “ என்று யோசித்தான்.

“பதிலெல்லாம் சொல்லத் தெரியாது.. அதான.. “ என்றான் அங்கே இவ்வளவு நேரமும் அமைதியாக அமர்ந்திருந்த மதி.

“இல்ல இன்னைக்கு சொல்றேன்.. மா.. இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்… “ என்றான் அனலிக்காவைக் கை காட்டி.

“யாரு வேண்டாம்னா.. தாராளமா பண்ணிக்கோ.. “என்றார்.

“இப்பவே.. “என்றான் உடனடியாக.

“டேய் சீக்கிரமானு சொன்னேன்.. அதுக்காக நைட்டு சொன்னதுக்குக் காலைல கல்யாணம் பண்ணுவியா.. “

“ நல்லா கேளுங்க மா… “என்றாள் அவனின் அக்கா.

“மதி, நீ சொல்ல மாட்டியா… “என்று மதியையும் உள்ளே இழுத்தாள்.

“இந்த விஷயத்துல நான் அவனுக்கு தான் சப்போர்ட்டு.. “என்று விட்டான் மதி.

பின் அமைதியாக நின்று அனலிக்காவைப் பார்த்து, அவள் அருகில் சென்ற இன்பனின் தாயார் “உனக்கு பயமா இருக்கா.. . “ என்று கேட்டார்.

அவள் அதிர்ச்சியுடன் திரும்பி இன்பனைப் பார்த்தாள்.

“அவங்க திடீர்னு கல்யாணம்னு சொல்றது பயமா இருக்கான்னு கேட்டாங்க.. வேற எதுவும் இல்லை.. “ என்றான் நிறுத்தி அழுத்தமாக.

“ இல்ல ஆன்ட்டி.. “என்றாள்.

“அந்தப் பொண்ணு இன்னும் ஆன்ட்டி லெவல்ல தான்டா இருக்குது.. நீ கல்யாணம் வரைக்கும் போற… “ என்றார் இன்பனைப் பார்த்து.

“மா, ஒரு பையன் உடனே கல்யாணம் பண்ணனும்னு சொன்னா.. ‘ எப்படிடா தாலி எதுவும் வாங்காமா’ னு மட்டும் கேக்கனும்.. அத விட்டுட்டு இத்தனை கேள்வி கேட்பாங்களா….. “

‘இவன் திடீர்னு ஏன் இப்படி கேட்கிறானு’ என்று ஆரின்பனின் அக்காவிற்கு சந்தேகம் வந்தது.

“ சரிடா.. தாலிக்கு என்னடா பண்ண…” என்றார்..

“ இது கேள்வி.. மதி அதகொடு.. “ என்றான்.

“இதுக்குத் தான் காலைலயே இங்க வந்து உட்கார்ந்திருக்கியா.. “ என்றாள் மதியைப் பார்த்து இன்பனின் அக்கா.

இன்பன், மதியிடம் இருந்து வாங்கிய தாலியை அனலிக்கா கழுத்தில் கட்டி விட்டான். கட்டி முடித்தவுடன் நேராக அவன் அம்மாவின் அருகில் சென்றான்.

அவரோ “வாதம்பி, ஆனா இனிமே கால்ல விழனும்னா சேர்ந்துதான் விழனும்.. அவளையும் கூட்டிட்டு வா.. “ என்றார் மகிழ்ச்சியுடன்.

“கால்ல யார் விழவந்தா.. ஹனிமூன் போப்போறேன்.. அதான் சொல்லிட்டுப் போகலாம்னு… “

பொறுக்காமல் இன்பனின் சகோதரி அவன் அருகில் வந்து, “நீ தாலி வாங்கிட்டுதான் கல்யாணம் பண்றதா நினைச்சேன்.. ஆனா ஹனிமூனுக்கு ப்ளான் பண்ணிட்டுதான், கல்யாணமே பண்ணிருக்க.. “ என்றாள்.

‘ஏன்’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

“அப்படியாடா… “என்றார் வரவழைத்த கோபத்துடன் இன்பனின் தாயார்.

இப்போதுதான் வாய் திறந்தார் ஆரின்பனின் தந்தை “ஏம்மா.. நீதானமா சொல்லிக்கிட்டு இருந்த.. மூனு மாசம் எப்படி இவன சமாளிக்க போறேனோனு… இப்ப அவனே போறேங்கிறான்… போய்ட்டு வரட்டுமே.. “என்றார் அவர் மனைவியைப் பார்த்து.

‘அப்படியா’ என்பது போல் இன்பன் அவன் அம்மாவை பார்த்தான்.

அவர் “நீ போய் பேக் பண்ணு “ என்று நழுவினார்.

“பாக் பண்ணிட்டு வந்து பேசறேன்… “என்றவன் அனலிக்காவின் கைப் பிடித்து “வா” என்று கூப்பிட்டான்.

ஆனால் ஆரின்பனின் அக்காவோ அவன் கையை அவளிடமிருந்து பிரித்துவிட்டு “நீ மட்டும் போய் பேக் பண்ணு… “ என்றாள்.

“ ஹெல்ப்புக்கு.. “என்றான்.

“ மதி, நீ போய் ஹெல்ப் பண்ணு… “

சரி என்று மதியை கூட்டிட்டு அவன் அறைக்குச் செல்லும்போது கண்களால் அனலிக்காவைப் பார்த்து ‘பார்த்து பேசு’ என்றான்…

உள்ளே வந்த இன்பன் “மதி…” என்று சொல்லும்போதே…

“வந்து பேசிக்கலாம்.. நீ கிளம்பு.. என்று சொன்ன மதி, “ப்ரித்திஸ் கிட்ட சொன்னியா.. “என்று கேட்டான்.

“சொல்லிட்டேன்.. “

திடீரென்று கதவைத் திறந்து கொண்டு யாரோ வருவது போல் இருந்தது. வந்தது இன்பனின் அக்கா. ‘நீ தானா ‘என்பது போல் பார்த்தான்.

“இந்தா.. “என்று ஒரு காஃபி கோப்பையைக் கொடுத்துவிட்டு “அனாவுக்கு கூட தெரியாதாடா எங்க போறீங்கனு… “என்று கேட்டாள்.

“ஏன்.. உங்களுக்கு எல்லாம் வேற பேரே கிடைக்கலையா… “என்று கேட்டான் கோபமாக.

“என்னவோ நாங்கதான் புதுசா பேரு வெச்ச மாதிரி சொல்ற.. இருந்த பேரச் சுருக்கி கூப்டுறோம்.. “ என்று சொல்லிச் சென்று விட்டாள்.

மதி இன்பனைப் பார்த்து பாவமாக சிரித்துக்கொண்டிருந்தான்.

இன்பனும் லேசாகச் சிரித்தான்.

அதற்கடுத்து அதிக நேரம் அவர்கள் அங்கே இருக்கவில்லை. அவன் நேற்று அவளிடம் சொன்னது போல, இருவரும் சென்னை மாநகரத்தை விட்டுக் கிளம்பினர். அவளுக்குப் புதிய இடம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் தந்தது. சில நேரம் அவனின் தோள்களில் சாய்ந்து அழுதும், பல நேரம் அவன் மடிகளில் தூங்கியும் நாட்களைக் கழித்தாள்.


இருபது நாளைக்குப் பிறகு


இன்பன் காஃபி டேபிளில் அமர்ந்து இருந்தான். அனலிக்கா புத்தகத்துக்குள் புதைந்து இருந்தாள்.

திடீரென்று” டாக்டர் இங்க வாங்க.. “ என்றான்.

அவள், சலிப்புடன் திரும்பி பார்த்தாள். இந்த இருபது நாளில் ஒவ்வொரு நாளும் திடீரென்று கூப்பிடுவான்.. பின் அன்னைக்கு காஃபி ஷாப்ல சொன்னது நியாபகம் இருக்கானு கேட்பான்.. இருக்குன்னு சொன்னா.. அதேதான், திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது, ஞாபகம் வச்சுக்கோ என்பான்.. ஒவ்வொரு நாளும் அவளுக்கு கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்விட்டது…

இன்றும் அவனது எதிரே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

அவன் ஆரம்பித்தான் “அன்னைக்கு காஃபி ஷாப்ல .. “என்றான்..

‘ஆரம்பிச்சுட்டியா’ என்பதுபோல் அவள் பார்த்தாள். அவளும் ஒவ்வொரு தடவையும் புதிதாய் கேட்பது போல் எப்படி கேட்பது…

“அன்னைக்கு காஃபி ஷாப்ல, நீ பண்ணதுக்கு நான் ரியாக்ட் பண்ணவே இல்ல.. இப்போ பண்ணலாமா… “என்றான்.

‘என்ன இது புதுசா ‘ என்பது போல் பார்த்தாள்… என்ன சொல்லவென்றும் தெரியவில்லை…

அவன் அவள் முகத்தின் முன் கைகளை அசைத்து “ரியாக்ட் பண்ணவா.. வேண்டாமா… “ என்று கேட்டான்.

சம்மதம் என்பது போல் தலையை அசைத்தாள்.

‘எழுந்து வா ‘ என்பது போல் சைகைச் செய்தான். நகத்தைக் கடித்துக் கொண்டே எழுந்து, அவன் முன் வந்து நின்றாள்.

“நகம் கடிக்கிறது நல்லதில்ல தெரியுமா… “என்றான் சம்பந்தமே இல்லாமல்..

ரொம்ப நேரமாக பதில் சொல்லாமல் இருக்கிறோம்.. அதனால் ஏதாவது சொல்வோம் என்று…. “தெரியும் நகத்தில ஜெம்ஸ் இருக்கும், டர்ட் இருக்கும், அப்புறம் பாய்சன் கூட.. டாக்டர் தான.. எனக்குத் தெரியும்.. “ என்றாள்.

அவள் சொல்லும்போதெல்லாம் ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்து விட்டு.. அவள் முடிக்கும் போது ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்து “நான் அதுக்காக சொல்லல.. நான் ரியாக்ட் பண்றதுக்கு டிஸ்டர்பா இருக்கும்… அதனால சொன்னேன்.. “என்றான்.

இப்பொழுதுதான் அவள் நகத்தைக் கடிப்பதை நிறுத்திவிட்டாலே… அதனால் அவன் ‘ரியாக்ட்’ பண்ணினான்..

அடுத்த வந்த நாட்களில்..

இரவுக்குக் கதை சொல்லித் தூங்க வைத்துவிட்டு, இவர்கள் இருவரும் விழித்திருந்தனர். சில சமயம் பகலவனிடமும் அதே கதையைப் படித்தார்கள்.

மூன்று மாதத்திற்கு பின்
ஆரின்பனின் வீடு



கண்ணாடி முன்னே நின்று, காவலர் சீருடையை அணிந்து கொண்டிருந்தான் ஆரின்பன்.

அருகிலேயே அவள் கைகளை கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்த படி நின்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று “ஐ லவ் யூ.. “என்று சொன்னாள்...

“என்ன திடீர்னு.. “என்று கேட்டான்.

“இந்த யூனிஃபார்ம்ல தானே ஃபர்ஸ்ட் பார்த்தேன்.. அதான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிச் சொன்னேன்.. “ என்று சொல்லி விட்டுச் சென்று, அமர்ந்து விட்டாள்.

“இத அன்னைக்கே சொல்லி இருந்தா.. இந்த யூனிபார்ம் கலட்ட வேண்டியதே வந்திருக்காது.. “என்று வாய் வார்த்தையை விட்டான். சிறிது நொடிகளுக்குப் பின்பு தான் சொன்னதை யோசித்து, திரும்பிப் அவளைப் பார்த்தான்.

ஆனால் அவளோ, எந்த அலட்டலும் இல்லாமல், கை போன போக்கில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

‘பொண்ணு தேரிடுச்சி ‘என்று நினைத்துக் கொண்டான்.

பின் அவளருகே சென்று “ஏதாவது தனியா இருக்கிற மாதிரி இருந்தா.. உடனே போன் பண்ணனும்…சரியா” என்றான் அக்கறையாக.

“ஏன், ‘முடியாது’ ‘வர மாட்டேன்னு’ சொல்லி ரொம்ப நாளாச்சு.. “என்று சிரித்தாள்.

‘ஏன்டா சொன்னோம்’ என்று நினைத்துபடியே கிளம்பி விட்டான் ஆணையர் அலுவலகம் நோக்கி.

ஆணையர் அலுவலகம்


ப்ரித்தீஷ் இன்பனை வரவேற்பதற்காக பூச்செண்டு வாங்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

‘எப்ப வருவான்’ என்று நினைத்துக்கொண்டே நடந்து கொன்டிருந்தான்.

இன்பன் உள்ளே நுழைந்தவுடன்,

“வெல்கம் பேக்.. “என்று பூச்செண்டை கொடுத்தான் ப்ரித்திஸ் .

அதை வாங்கிக் கொண்டு ‘இன்னைக்கே அட்வைஸ் பண்ணுவானோ’ என்பது போல் பார்த்து விட்டு உள்ளே வந்து அமர்ந்தான். சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்கும் போதுதான், அந்தப்பக்கம் கருப்புசாமி நின்று கொண்டிருந்தார். எழுந்து அவர் முன்னே சென்று நின்றான்….

“ வந்துட்டீங்களா சார்… “என்று கேட்டார் சாமி.

“ஏன்.. வர மாட்டேன்னு நினைச்சீங்களா… “

அவர் தலை குனிந்து நின்றார்.

பின் “மூனு மாசம் வீட்டில பொழுதே போகல சாமி … வாஸ்து, ஜோசியம் இப்படி எல்லாம் பார்த்தேன்.. “

‘இவன் ஏன் இதைச் சொல்கிறான்’ என்பது போல் பார்த்தனர் ப்ரித்திஸூம் மதியும் … சாமியும்தான்..

அவனே தொடர்ந்தான் “அப்பதான் தெரிஞ்சது, கமிஷனர் ஆபீஸூக்கும் ஸ்கிரீனுக்கு ராசி இல்லனு.. அதனால கலட்டிருங்க.. “என்றான்

“இப்பவேவா சார்… “என்றார்.

‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு, வந்து அமர்ந்தான். அவர் வெளியே போய்விட்டார்.

வந்து அமர்ந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்திஸ், அவன் சட்டையில் அங்கங்கே கசங்கி, அழுக்காகி இருப்பதைப் பார்த்தான்.

” மூனு மாசம் வீட்டிலதானடா இருந்த, யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. ” என்றான் ப்ரித்திஸ்.

இன்பன் ஒரு மாதிரி மதியைப் பார்த்தான்.

சிரித்துக்கொண்டே மதி “வந்து ஆரம்பிப்பீங்கனு நினைச்சேன்.. ஆனா ஆரம்பிச்சிட்டுதான் வந்திருக்கீங்க போல… “என்றான்.

புரிந்தவனாய் ப்ரித்திஸ் “ஃபர்ஸ்ட் நாளே இப்படிப் பண்ணுவியா.. இப்பதான சஸ்பெண்ட் முடிஞ்சு வந்திருக்க..அடங்கமாட்டியா…உனக்கு எத்தன தடவ சொல்றது..நா ” என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தான்.

“அடிங்.. வந்த நாளே ஆரம்பிக்கிற.. ” என்று கோபமாகக் கூறி, அவன் பக்கத்தில் அடிப்பது போல் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“நானும் “என்று ஓடி வந்து மதியும் இணைந்துக் கொண்டான்.

அந்த அறை நண்பர்களின் சிரிப்பொலியில் நிரம்பியது. வெளியே சென்ற கருப்பசாமிக்கு இது நன்றாகவே கேட்டது.

‘இவர்கள் ஆட்டம் என்றும் அடங்காது ‘ என்று நினைத்துக் கொண்டே சென்றுவிட்டார்…

ஆம்! இவர்கள் ஆட்டம் என்றும் அடங்காது…

முற்றும்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இதுவரை கதையை வாசித்த.. கருத்துக்களும், விருப்பங்களும் தெரிவித்த.. அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடங்கொன்னியா?
மூணு மாசம் சஸ்பென்ஷன்
வாங்கியும் இந்த இன்பனுக்கு
இன்னும் புத்தி வரலையே?
கசங்கிய அழுக்கு யூனிபார்ம்
போட்டுட்டு டுயிட்டிக்கு வந்துட்டு
இவங்கெல்லாம் ஒரு போலீசு
இதுக்கு பூச்செண்டு வேற
வெளங்கிடும் போ
ஆரின்பன் தம்பி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top