• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முட்டை குழம்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190409_162844.JPG
தேவையான பொருட்கள்:-
முட்டை - 4
சி. வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மிளகு - 10
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
புளி - சிறிதளவு ( நெல்லிக்காய் அளவு )
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - சோம்பு, சீரகம், உளுந்து , கறிவேப்பிலை
செய்முறை :-
முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து உரித்து எடுத்து கொள்ளவும். தேங்காயுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம் , உளுந்து தாளித்து கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவும். அதனுடன் அரைத்த தேங்காய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த முட்டைகளை சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து மீதமுள்ள இரண்டு முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து குழம்பில் சேர்க்கவும். முட்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top