• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முதல் பயணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
முதல் பயணம்

அருவியின் ஆர்ப்பரிக்கும்
முதல் பயணம்
மலைமுகட்டின் முன்னுச்சாம்

ஆழ்ந்து அமிழ்ந்த கடலின்
முதல் பயணம்
அலைகளின் அடிப் பிறப்பாம்

இனிய மழைச்சாரலின்
முதல் பயணம்
இணைந்து நின்ற மேகத்திரளாம்

ஈரமிக்க மனதின்
முதல் பயணம்
அன்னையின் அரவணைப்பாம்

உள்ளக் காதலின்
முதல் பயணம்
உன்னுடைய விழியசைப்பாம்


ஊரும் மோகத்தின்
முதல் பயணம்
உன்னிதழ் முதல் முத்தமாம்


எல்லையில்லாக் காதலின்
முதல் பயணம்
என்றுமிருப்பேன் எனும் நம்பிக்கையாம்


ஏற்றம் பெறும் வாழ்வின்
முதல் பயணம்
எதுவும் வசப்படும் தன்னம்பிக்கையாம்


ஐயம் தெளிதலின்
முதல் பயணம்
துணிந்து செயல்படுதலாம்


ஒன்றுபட்ட இல்லறத்தின்
முதல் பயணம்
உள்ளுணர்வுகளின் முழுப்புரிதலாம்


ஓங்கும் இன்பத்தின்
முதல் பயணம்
உண்மையுள்ள உறவுச் சுற்றமாம்


ஒளஷதத்துறை அடிநாத
முதல் பயணம்
ஆயிரம் வேர் கொன்றலாம்


அனைத்திற்கும் உண்டு ஓர்
முதல் பயணம்

அஃதே எனக்கு இதுவதுவாம்......

?????










 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வாழ்த்துக்கள் நதிஜீ...உங்களின் இந்த பயணம் மென்மேலும் வெற்றியடைய என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்....????????
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
வாழ்த்துக்கள் நதிஜீ...உங்களின் இந்த பயணம் மென்மேலும் வெற்றியடைய என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்....????????
நன்றி சாகோ????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நன்றி சாகோ????
சகோ தெரியும்... அது யாரு சாகோ?:unsure::unsure: நிறைய தடவை இத கேக்கனும்னு நினைக்கிறேன் நதிஜி:p:p நீங்க இப்படியே சொல்றீங்க யார் அது?
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
சகோ தெரியும்... அது யாரு சாகோ?:unsure::unsure: நிறைய தடவை இத கேக்கனும்னு நினைக்கிறேன் நதிஜி:p:p நீங்க இப்படியே சொல்றீங்க யார் அது?
சகோ தெரியும்... அது யாரு சாகோ?:unsure::unsure: நிறைய தடவை இத கேக்கனும்னு நினைக்கிறேன் நதிஜி:p:p நீங்க இப்படியே சொல்றீங்க யார் அது?
Hello sissy spelling கவனிக்கத் தவறிவிட்டேன் ?அதுக்கு இப்பிடி ஒரு பல்ப் குடுக்கணுமா????

சொன்ன திருத்திக்க போறோம்,??அப்புறம் ,சாகோ அப்படின்னா ஜவ்வரிசி என்பது அர்த்தமாம்;

பாயசத்துக்கு எப்படி ஜவ்வரிசி முக்கியமோ அது மாதிரி வாழ்க்கை என்ற பாயசத்துக்கு நட்பு என்ற ஜவ்வரிசி முக்கியம் அதான் அப்படி சொன்னேன் (அப்பாடி எப்படியோ ஒரு வழியா சொன்னது கரெக்ட் பண்ணி மேட்ச் பண்ணியாச்சு ??????)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
பார்த்தீங்களா நானும் ஒரு புது வார்த்தைய தெரிஞ்சுகிட்டேன்?... இதுக்கு தான் கேட்டது நதிஜி???. Ippdiye புது புது வார்க்தைய கண்டுபிடி ச்சு பொருள் கூறவும்????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top