• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோனிஷாவின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் தோழமைகளே!
எல்லோருக்கும் என்னுடைய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த தினத்தில் என்னோட நாட்களை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தி சென்று பார்க்கலாம்னு ஒரு ஆசை…

ஸ்கூல் டிரஸ் போட்ட மோனி எப்படி இருப்பா???

எனக்கு பள்ளியில் பாடம் சொல்லி தந்த ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்பு!

என்னோட ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்… பார்க்க அப்படியே எனக்கு பிடிச்ச நடிகை தேவயானி முகம் மாதிரி இருக்கும், ரசிச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன். என்ன பாடம் எடுத்தாங்கன்னுதான் சுத்தமா நினைவில இல்லை.

என்னோட எட்டாவது வகுப்பில் எனக்கு வந்த கணக்கு ஆசிரியர். என்னை உசுபேத்தி எங்க அக்கா மார்க்கோடா கம்பேர் பண்ணி பேசி முதல் முறையா என்னை மேக்ஸ்ல சென்டம் வாங்க வைச்சவங்க… நம்ம கூட நல்லா படிபோம்ன்னு அப்பத்தான் எனக்கே தெரிஞ்சுது…

என்னோட ஒன்பதாவது வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஜான் சார் பிரிட்டின் இங்கிலீஷ் பேசுவாரு… செமையா இருக்கும். ஆனா சுத்தமா புரியாது. அது வேற விஷயம். . ஆனால் மறக்கவே முடியாது. அவரோட இங்கிலீஷ் அப்புறம் அவரோட பாடி பிலிடிங்… இதெல்லாம் விட அவரோட அரை…
பப்பா இப்பவும் என் காது கொயிங்ங்னு இருக்கு.

அதே வகுப்பில படிக்கும் போது என்னோட தமிழ் ஆசிரியர் சொல்ற கதைகள்… கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஒவ்வொரு செய்யுளுக்கும் கதை சொல்லுவாரு. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சம்பவத்தை சொல்லுவாரு… அவர் கதையை கேட்டுட்டுதான் எனக்கு இந்த திறமையே வந்தது போல. ஒரே ஒரு நாள் அவர் லீவ் போட்டுட்டா நான் ஏன்டா ஸ்கூலுக்கு வந்தேன்னு கடுப்பாவேன்.

பன்னிரெண்டாவது படிக்கும் போது என்னோட கெமிஸ்ட்ரி ஆசிரியரோட ஆர்கனிக் பத்தின பாட வகுப்புகளை இன்னைக்கும் மறக்க முடியாது… methane ethane propane இன்னும் பசுமையாக நினைவு இருக்கு

கடைசியா என்னோட கல்லூரி நாட்களில் என் ஆங்கில ஆசிரியர் ஒரு அட்வைஸ் பண்ணாங்க. இப்பவும் அது எனக்கு நல்லா நினைவு இருக்கு. பெண்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். என்னோட அடுத்த கதையோட கான்சப்ட் கூட அதுதான்… ரெயின்போ கனவுகள்

பள்ளி வாழ்க்கைதான் நம்மோட மொத்த வாழ்கையின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்குது.

ஆசிரியர்கள் தங்கள் வேலையின் பலத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்! உங்கள் கையில்தான் நிறைய குழந்தைகளோட எதிர்காலம் அடங்கியிருக்கு. மீண்டும் என் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

நான் இந்த உலகத்திலேயே ரொம்பவும் உயர்வாக மதிப்பாக கருதும் மூன்று தொழில்… 1. விவசாயி 2. ஆசிரியர் 3. எழுத்தாளன்
இந்த மூன்றுக்கு மட்டுமே விதைக்கும் வல்லமை இருக்கிறது.

நல்லதை விதைத்து கொண்டே இரு… அது முளைக்கும் போது முளைக்கட்டும்!

-மோனிஷா
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,971
Location
madurai
எல்லோருடைய வாழ்விலும் ஆசிரியர் என்பவர் ஒரு அசைக்க முடியாத இடத்தில் ஏதோ ஒரு வகையில் அவர் சொல்வதை மனதில் இருத்தி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்... அழகான பதிவு...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நம்மை விட வளர்ந்துட்டானே(ளே)
என்று பொறாமைப்படாத ஒரே
ஜீவன் நம் ஆசிரியர்கள் மட்டும்தான்
அனைத்து அன்பு ஆசிரியர்
பெருமக்களுக்கும் என்னுடைய
இனிய ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்,
அன்புத் தோழிகளே
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஒரு ஒற்றுமை இருவருக்கும்.. ????

பொதுவா நான் நல்லா படிக்குற ஸ்டுடெண்ட் சோ எல்லாருக்கும் செல்லம்தான் அடி திட்டு பத்தியெல்லாம் கவலையே இல்லை. என்ன வேணும்னாலும் பண்ணலாம். அதுக்காக கற்பனைய ரொம்ப பறக்க விட கூடாது.

மிஞ்சி மிஞ்சி போனா ஸ்கூல்க்கு மாசம் ஒருவாட்டி லேட்டா போவேன். தினம் சாப்பாடு நேரம் முடிஞ்சி கால் மணி நேரம் கழிச்சுதான் கிளாஸ் போவேன். அது ஒன்னும் இல்ல நான் பேசுற நேரம் அது மட்டும் தான் மத்த நேரமெல்லாம் படிச்சிட்டே இருப்பேன். பேசிட்டே சாப்பிட லேட்டா ஆகிரும். (ஒரு வாய் வச்சிட்டு 5 நிமிஷம் பேசினா அப்படித்தான்)

நாளக்கி லேட் ஆகுனா வெளிய நிக்கனும்ன்னு தினமும் சொல்வாங்க. இதுவரை நிக்க வச்சதில்லை.. ???

அப்புறம் நமக்கு maths னா அல்வா சாப்பிடுற மாதிரி அதனால சார் example கணக்கெல்லாம் நடத்தி எழுத சொன்னா கண்டுக்காம உட்கார்ந்திருப்பேன். ஒருநாள் நான் சும்மா இருக்குறதை பார்த்துட்டு ஸ்கேல் எடுங்கன்னு கேட்க கிளாஸ் கப்சிப்.. அவரு வேற கிளாஸ் போய் வாங்கிட்டு வரதுக்குள்ள எழுதி முடிச்சிட்டேன்.. ??? ஆனா அடிக்காம விட்டா கெத்து என்ன ஆகுறதுன்னு சிரிச்சிட்டே ஸ்கேல் வச்சி அடிக்குற மாதிரி பில்ட் அப் பண்ணிட்டு போயிட்டாரு.. அதாவது தட்டி குடுத்துட்டு போனாங்க கைல.. :LOL:

யக்காவ் அந்த ஒற்றுமை என்னன்னா.. கெமிஸ்ட்ரி மிஸ்தான் செம அழகு அவங்க திட்டுனாலே கொஞ்சுற மாதிரி இருக்கும். அப்போ பாடம் நடத்துனா அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும். நல்லா நடத்துவாங்க 198 வாங்குனேன்னா பாத்துக்கோங்க.
இப்போவும் அந்த மிஸ் கூட contactல இருக்கேன். அவங்க வீட்டுக்கு போயிருக்கேன் அதுவும் அவங்க வீட்டுல எல்லாரையும் எனக்கு பிடிக்கும். Even எனக்கு பிரியாணி செஞ்சி கொடுத்தாங்க பக்கத்துலயே வச்சி எப்படி செய்யணும்ன்னு சொல்லிட்டே. (இது காலேஜ் போன பிறகு நடந்தது) அதை நான் செய்தும் பார்த்தேனே முதல் தடவை..????

எல்லாரையும் பிடிக்கும் ஆனா இவங்க கொஞ்சம் special.. ???

காலையிலும் 5 மணிக்கே நான் தான் first வாழ்த்து சொன்னேன். உண்மையா ஆசிரியர்கள் இன்னொரு தாய் தந்தை.

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.. ?????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top