• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
அத்தியாயம் 6 :





மூன்று மாதங்களுக்குப் பிறகு...



மெல்லிய மஞ்சள் நிற வெளிச்சம் அடர்ந்த மாலைதனில், பச்சை பசேலென்று எங்கு நோக்கினும் புல்வெளி...முடிவேயில்லாத முடிவிலியாய் ஒரு மாயத்தோற்றம் கொண்ட இடம்…



இது என்ன இடம் என்ற யோசனையைக் கண்களில் தேக்கி வைத்தவாறு சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டே வந்தான் யாதவ்...



திரும்பி நிற்கும் ஒரு பெண் அவன் பார்வை வட்டத்தில் விழுகிறாள்….அடர் சிவப்பு நிற சேலையுடுத்தியிருக்க முந்தானை முழுவதும் காற்றிலாடி கொண்டிருந்தது...கண்ணகி முதன்முதலாக மதுரை மாநகரத்தில் நுழைந்தபோது...மதுரையின் நுழைவுவாயிலிலிருந்த மீன் கொடி காற்றிலாடி அசைந்து அவளை வா என்று அழைத்ததுபோல...இவனையும் இந்த முந்தானை அழைப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது...



அவளது முதுகு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு அலையலையாகப் புரண்டு கொண்டிருக்கும் கேசம்…பின்னிருந்து பார்த்தவனுக்குத் தோன்றியது இது தான்...இவளைப் பிரம்மன் செதுக்கியபோது முத்தாய்ப்பாய் இருக்கட்டுமென்று இவளது கூந்தலைப் படைத்திருப்பான் போலும்…



இவனின் பார்வையின் கூர்மை தாங்காமல் திரும்பினாளோ...அல்லது எதார்த்தமாகத் திரும்பினாளோ...மொத்தத்தில் இவனை நோக்கி திரும்பியிருந்தாள் அந்தப்பெண் ...யாதவனிது பார்வை அவளது காலின் பெருவிரலை விட நீண்டு இருக்கும் பக்கத்துக்கு விரலின் இந்தச் சமூகம் கூறும் யாருக்கும் அடங்காதவள் எனும் உருவக லட்சணத்திலிருந்து தொடங்கியது....



சைனீஸ் விசிறி மடித்துவைத்தது போன்று இடுப்பிலிருந்து நீளும் நேர்த்தியான கொசுவ மடிப்புகள்... நன்னிடையின் இலக்கணத்திற்கு ஒத்துப் போகும் இடை... இறக்கி கட்டிய கொசுவத்தில் ஆளை இழுத்துப்போடும் குழிந்த ஆழிச்சுழி...செல்ல தொப்பை...தார்மீக கடமையைச் செய்ய மறந்த ஒற்றையாய் விடப்பட்ட மேலாக்கு….திண்ணிய மார்புகளுக்கு நடுவில் கொஞ்சிவிளையாடும் ஒற்றைச் சங்கிலி… நீண்ட கழுத்து...பார்த்தவுடன் என்னைத் தொடேன் என்று கொஞ்சி அழைக்கும் தாடை...ஆரஞ்சு சுளை உதடுகள்...சங்கைக் குறுக்காக வெட்டி வைத்தது போன்ற இரு செவிகள்...கேள்விக்குறி நாசி...தாமரை இதழ் போன்ற நீண்ட கண்கள்…நுதலில் புரளும் அளகம்... அவளின் நிறம் சுண்டக்காச்சிய பசும்பாலில் சிறிது குங்குமப் பூவை கலந்தால் வருமே ஒரு இளஞ்சிவப்பு வெண்மை நிறம்...இவள் ஒரு வசந்த ஒய்யாரி...யட்சி…



" ஆரு..."என்று கூறிக்கொண்டே அவளை நோக்கி சென்றான் யாதவ்…



இதுவரை யாருமே ஷாவின் முகத்தில் பார்த்திராத வெட்கச்சிரிப்புடன் ஷாவும் இவனை நோக்கி வந்தாள்...



"இத்தனை நாள் என்னை விட்டுட்டு எங்கே போயிருந்த...உனக்கு நான் ஞாபகமே வரலையா...என்னை விட்டு போகாதே..."என்று யாதவ் அவள் கரத்தை பிடிக்கவர…



"நீ பண்ணது தப்பு தானே...என் கனவை அடைய நினைச்ச நேரத்துல நீ தட்டிவிட்ருக்க கூடாது தானே..."என்றவள் அவனை விட்டு ஓட ஆரம்பித்தாள்…



யாதவும் அவளை பிடிக்க அவளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான்... இதோ...இன்னும் ஒரு நொடியில் அவளை பிடிக்க போகிறான்….



"அண்ணா சார்...அண்ணா சார்...அண்ணா சார்…"என்று காதிற்குள் கேட்கவும் அடித்துபிடித்து எழுந்தான் யாதவ்…

சுற்றும்முற்றும் பார்த்தவன் கனவா என்று மனதில் நினைத்துக்கொண்டு கண்களை தேய்த்தவாறு என்ன என்பதுபோல் கவிதாவை பார்த்தான்…



"அண்ணா சார் மணி ஐஞ்சு சார்…."



"அதை சொல்ல தான் நல்லா தூங்கிட்டு இருந்த என்னை...ஏய்ய் என்ன சொன்னே மணி ஐஞ்சு ஆச்சா….ஐஞ்சு இருபத்தஞ்சுக்கு பிலைட்..." என்று தூக்க கலக்கத்தில் வார்த்தைகளை ஆரம்பித்தவன் புரிந்ததும் இந்த முறையும் இப்படிச் சொதப்பிவிட்டாளே என்று ஆதங்கமாக அவளைப் பார்த்தவாறு கேட்டான்...



"இல்லை அண்ணா சார்...நான் நாலு மணிக்கெல்லாம் வந்துட்டேன்...வந்துபார்த்தேனா நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்களா சரி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உசுப்புவோம்னு போய் ஹால்ல உக்காந்து இருந்தேனா...அப்படியே என்னை அறியாம தூங்கிட்டேனா...இப்ப அம்மா மேடம் போன் பண்ணவும் தான் எந்திரிச்சேன்...பார்த்தா மணி இவ்வளவு ஆயிருச்சு..." என்று பள்ளிக்கு நேரம் சென்று போன குழந்தை ஆசிரியரிடம் கூறும் பாருங்களேன் அதைப்போல் காரணத்தைக் கூறிக்கொண்டிருந்தாள் கவி…



கவியை முறைத்தவாறே அவள் கரத்திலிருந்து அலைப்பேசியைப் பறித்தவன் தனது தாய்க்கு அழைப்பெடுத்தான்…அவனின் அன்னை ரோஹிணி கிருஷ்ணா... வாழ்வின் இடுக்குகளிலெல்லாம் பாசம் நேசம் அன்பு என்று ஊற்றி நிரப்பிவைத்துக் கொண்டு கணவர் மற்றும் பிள்ளைக்கிடையில் அல்லாடும் சராசரி தாய்...



"கிளம்பிட்டியா யாதவ்..."



"கிளம்பிக்கிட்டே இருக்கேன் மா...நீங்க தூங்கவேண்டியது தானே...எதுக்கு இதெல்லாம்.."எப்பொழுதும் போல் இப்படி கணவன் பிள்ளைகளென உடம்பை கெடுக்கத்துக்கொள்கிறாரே என்று ஆற்றாமையுடன் யாதவ் கேட்கவும்…



"ஏன் டா...இன்னைக்கு உன்னோட புது படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கப்போற முதல் நாள்...அன்னைக்கு கூட பேசாட்டி என்ன அம்மா டா...இல்லை வீட்டை விட்டு வெளியே போய் தனியா இருக்குற மாதிரி அம்மா மகன்ற பாசத்தை விட்டும் தனியா இருக்க போறியா..."என்று சிறிது குரல் இடற கேட்கவும்…



"ப்ச்...அப்படிலாம் இல்லை மா...உங்க உடம்பு கெடுதேன்னு தான்...இல்லாட்டி அந்த வளர்ந்து கெட்ட ரகுவரன் வந்து என் பொண்டாட்டியை துங்கவிடாம முழிக்கவிட்டு கஷ்டப்படுத்துறேன்னு சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டுட்டா என்ன பண்றது...அதுக்கு தான்..."என்று அவரின் எண்ணத்தை மடைமாற்ற பேசினான்…



"ஹா ஹா ஹா...என் ஒட்டகச்சிவிங்கி புருஷனை வம்பிழுக்காட்டி உனக்கு சாப்பிடுற சாப்பாடு உள்ளே இறங்காதே..."



"நீங்களும் உங்க புருஷரை விட்டு கொடுக்கமாட்டீங்களே..."



"டேய்...கல் மாதிரி கம்முனு இருந்தாலும் கணவன்...புல்டவுஸர் மாதிரி சவுண்ட் விட்டாலும் புருசன்ற கொள்கைளைக்கொண்டு வாழுற கண்ணகியோட கடைசி தங்கச்சியோட முதல் கொள்ளுபேத்தியோட கடைசி வாரிசு டா நான்…."என்று யாதவின் அம்மாவென்று நிரூபிக்குமாறு பேசினார் ரோஹிணி…



"ஹா ஹா ஹா…அம்மா போதும்...உங்களோட பதி பத்தியத்தை கேட்டு புல்லரிச்சு போச்சு...எனக்கு லேட் ஆச்சு...வைக்குறேன் அம்மா..."



"ஆல் தி பெஸ்ட் டா..."என்றவர் கைப்பேசியை அணைத்துவிட்டு தனக்கு அருகில் உறங்குவதை போல் வெறுமனே கண்ணைமூடி படுத்துக்கிடக்கும் ரகுவரனை ஒரு கேலிச்சிரிப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்...



யாதவ் அவனது வீட்டைவிட்டு வெளியே வந்து ஆறுவருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது...இவன் படிப்பை முடித்திருந்த சமயம் அடுத்து தொழிலைப் பார்த்துக்கொள்ளுமாறு ரகுவரன் கூற...அவனுக்கோ திரைத்துறைக்குச் சென்று நீங்கா இடத்தை பிடிக்கவேண்டுமென்று ஆசை...எப்படியோ தயங்கித் தயங்கி ரகுவரனிடம் கூற ஒரே வார்த்தையில் முடியாது என்றுவிட்டார்...அதன் பிறகு பல போராட்ட சத்யாகிரங்களுக்கு பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் போன்று ஒரு வாய்ப்பு கொடுத்தார்...இரண்டு வருடங்கள் அதற்குள் உன்னால் அதில் இடம்பிடிக்க முடிந்தால் அது தான் உனது எதிர்காலம்...சோபிக்க முடியாவிடில் தொழில்..என்று நிபந்தனைகளோடு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்...



எப்படியோ அவனது பின்பெயராலே வாய்ப்பு கிடைத்தது...மூன்று புதுமுகங்கள்...காலத்திற்கும் அழியாத பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் வேதன்...முதன்முறையாக புது முகங்களை அவர் அறிமுகம் படுத்திக்கிறார்...அவரது ப்ரொடக்ஷன் தான்...எல்லாம் பெரிதாக அமைய எப்படியோ முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்...அதன் பின்பு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க மிகவும் கஷ்டப்படவேண்டியதாக இருந்தது...அலைந்து திரிந்து இரண்டாம் வாய்ப்பு பெற்றான்...அதுவும் வெற்றிப்படமாக அமைய அடுத்ததெல்லாம் ஏறுமுகம் தான்...ஆனால் களங்கத்திற்கு முந்தைய படம் வசூல் ரீதியாக ஆவெரேஜ் ரகத்தைப் பிடிக்க…இவனது பல பர்சனல் ஆராதனா...ஷாக்கு பிறகு வந்த களங்கம் கலவையான மதிப்பீடுகளையும் பெற்று சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் ஹிட் வரிசையில் வந்தது…



இருவருடத்திற்கு பிறகும் யாதவ் அவனது அப்பா வீட்டிற்குச் செல்லவில்லை...ஏதாவது முக்கிய நிகழ்வு...விழாக்கள்...பண்டிகைகள் என்று அதற்கு மட்டும் அவனது அப்பா வீட்டிற்குச் சென்றுவந்தான்...அவன் அம்மா...அண்ணன் ஹரி...அண்ணன் மனைவி ஸ்ரீ...அண்ணன் மகன் நான்கே வயதான ஜீவா... ஆராதனா...நெடுவருடங்களாக அங்கு வேலைசெய்யும் சமையல்காரர்...என்று அவன் அப்பாவைத் தவிர அனைவரும் கூப்பிட்டும் அங்கே செல்லவில்லை...



இதெல்லாம் நினைத்துக்கொண்டே குளியலறைக்குள் சென்று குளிக்காமல் முகம் மட்டும் கழுவிவிட்டு உடைமாற்றி வந்திருந்தான் யாதவ்…



"ஐயையை...குளிக்கலையா அண்ணா சார்..."என்று முகத்தைச் சுளித்தவாறு யாதவை பார்த்துக் கவி கேட்கவும் அவளை ஒரு தீப்பார்வை பார்த்தவன் "வாயில நல்லா வந்துரும் சொல்லிவிட்டேன்...மணி இப்பவே ஐந்து பத்து ஆச்சு...போய் வேகமா ட்ரைவரை வண்டி எடுக்க சொல்லு...போ..."என்று கவியை விரட்டியவன் நேற்றே எல்லாம் எடுத்துத் தயார்செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்…



வாகனத்துக்கு அருகில் அசட்டுச் சிரிப்பைக் கொடுத்தவாறு தலையைச் சொரிந்துகொண்டு நின்றிருந்தாள் கவி…



"என்ன...ஒரு மார்க்கமா முழிக்கிற...எங்கே ட்ரைவர்..."என்று படிகளில் இறங்கிக்கொண்டே அவளிடம் கேட்டவாறு வந்தான் யாதவ்…



"அது வந்து அண்ணா சார்...அது வந்து…."



"என் பொறுமையைச் சோதிக்காதே...கவி...வேகமா சொல்லு..."



"இல்லை அண்ணா சார்...ட்ரைவரோட முதல் பொண்டாட்டியோட இரண்டாவது சித்திக்கு மூணாவது தடவை ஹார்ட் கட்டாக் வந்துருக்குன்னு உடனடியா போய் பார்க்கணும்னு என்கிட்டே வந்து நேற்று பெர்மிசன் கேட்டார் சார்...நானும் பாவமே அப்படினு சொல்லி அனுப்பிவைச்சுட்டேன் ...எட்டு மணிபோல வந்து ஏர்போர்ட்ல இருந்து கார் எடுத்துட்டு போகச் சொல்லிருந்தேன் அண்ணா சார்...ஆனால் அதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்…."என்று தலையைச் சொரிந்துகொண்டே கவி அப்பாவியாகக் கூறினாள்…



"ஒஒஒஒஒ…..ஒன்னும் சொல்லறத்துக்கு இல்லை...உன்னை அப்பறம் வைச்சுக்குறேன் வண்டியை எடு….மணி எப்படியும் ஐந்தே கால் ஆயிருக்கும்..."என்று யாதவ் பல்லைக் கடித்துக்கொண்டு கூறவும்...



வேகமாகத் தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் “இல்லை சார் மணி ஐந்து பன்னெண்டு “



"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...முதல் வண்டியை எடு..."என்று யாதவ் கூறியவாறு வாகனத்தின் பின்னாடி பயணப்பொதிகளை வைத்துவிட்டு பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான்…



யாதவ் அமர்ந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தவள் எடுக்காமல்...யாதவை திரும்பி பார்த்தாள் கவி…



"என்ன...வண்டியை எடு..."



"இல்லை...அண்ணா சார்..இன்னைக்கு நம்ம புதுப்படத்தோட ஷூட்டிங் போகப்போறோம்...எல்லாம் நல்லபடியா நடக்கும்னு காருக்கு முன்னாடி எலுமிச்சை பழத்தை வைச்சு நசுக்கிட்டு தானே கார் எடுக்கணும்..."என்று சிறு குழந்தை போல் இமை தட்டிக்கேட்டாள் கவி...



 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
"அதெல்லாம் ஒன்னும் வேணாம்...வண்டியை எடு..."என்று இவள் யாருடா என்பதுபோல் கூறினான் யாதவ்...



"அம்மா மேடம் கண்டிப்பா பண்ண சொன்னாங்க...நீங்க அம்மாகிட்டையே சொல்லிக்கோங்க..."என்றவள் அலைபேசியை எடுத்து வேகமாக அவருக்கு அழைப்பு எடுக்கப்போனாள்...



"சரி...சரி...அவங்களுக்கு கால் பண்ணாதே...போய் எடுத்துட்டு வா...வீட்டு சாவியை மறக்காம எடுத்துட்டு போ..."என்று நொந்தகுரலில் கூறினான் யாதவ்...



யாதவை பார்த்து ஈஈஈ என்று சிரித்த கவி வீட்டினுள் வேகமாகச் சென்று எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வந்தவள் வாகனத்தின் இரண்டு முன் சக்கரத்துக்கும் முன்பும் பழத்தை வைத்தவள் வண்டியை ஸ்டார்ட் செய்து பழத்தை நசுக்கி வெற்றிகரமாக வீட்டிலிருந்து வெளியேறி வீதிக்கு வண்டியை ஓட்டிவந்திருந்தாள் கவி...

மணி ஐந்து பதினெட்டு…



இவர்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட இடைவேளையில் தான் விமானநிலையம் உள்ளதால் எப்படியும் விமானத்தைப் பிடித்துவிடலாம் என்று நினைத்தவாறு வந்தான் யாதவ்…

திடிரென்று வண்டி நிற்கவும் "என்ன ஆச்சு கவி..."



"அச்சச்சோ அண்ணா சார்..என்னோட ட்ராவல் பாக் வீட்டு வாசலையே இருக்கு...மறந்துட்டேன்..."என்று கவி திருட்டுமுழி முழித்துக்கொண்டு கூறவும்…



ஆஆஆஆ என்று கத்தனும் போல் வந்த ஆத்திரத்தை அடக்கியவன் படிக்காதவன் படத்தில் தனுஷின் தந்தையாக நடித்த பிரதாப் போதன் கோவம் வந்தால் நாடியில் குத்துவாரே அதேபோல் குத்தி தனது கோவத்தை அடக்க முயன்றவன்...



"நீ மட்டும் சந்திரன் சார்க்கு பொண்ணா இல்லாம போயிருக்கணும்...இந்த இடத்துலயே உன்னை வேலையை விட்டு தூக்கிருப்பேன்...அந்த மனுஷன் முகத்துக்காக மட்டும் தான்...அதுக்கு மட்டும் தான்..."என்று கவியை பார்த்து கூறியவன் அவனது இயக்குனருக்கு அழைப்பெடுத்து மதியம் போல் இருக்கும் விமானத்தில் வருவதாக என்று யாதவ் கூறிக்கொண்டிருக்கும் போதே...



இடையில் குறுக்கிட்ட கவி "இப்பவே போயிரலாம் அண்ணா..."என்று கூற வர வாயில் விரல்வைத்து பேசாதே என்பது போல் சொன்னவன் அவரிடம் பேசி மேலும் சிலதகவல்களை பெற்றுவிட்டு அலைப்பேசியை வைத்தான்...
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
"இன்னைக்கு முழுக்க நீ பேச கூடாது சொல்லிட்டேன்..."என்று யாதவ் கூறவும்



"சரி அண்ணா சார்..."



"பேசாதே சொன்னேன்...” என்றவுடன் சரி என்பதுபோல் தலையாட்டினாள் கவி



“உங்க அப்பாக்கு எப்ப உடம்பு சரி ஆகும்... எப்ப உன்கிட்ட இருந்து என்னை காப்பாத்த வருவார்…”



“ஒய் காட்...ஒய்...ஏன் இந்த மாதிரி ஆட்கள் கூட எல்லாம் என்னை கூட்டு சேக்குற..."என்று வாய்விட்டே புலம்பியவன் "வீட்டுக்கு போய் உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு உடனே வண்டியை எடுக்குற..."

அதற்கு ஏதோ கவி கண்கள் மற்றும் கைகளாலே ஏதோ கதகளி பண்ணிக்கொண்டிருக்கவும் புரியாமல் பார்த்தவன் "என்ன..."என்று கேட்கவும்…மீண்டும் அதேபோல் செய்தாள்…



புரியாமல் குழம்பியவன்"பேசித்தொலை..." என்றவுடன் அதற்காகவே காத்திருந்தவள் போல



"இல்லை அண்ணா சார் மத்தியானம் பிலைட்க்கு இப்பயே எதுக்கு…" என்று வேகமாக கேட்டாள்



"தெய்வமே...உன்னை மாதிரி ஆட்களை எல்லாம் இப்பயே கிளப்புன தான் மத்தியானம் கூட்டிட்டு போக முடியும்...இப்பயே போறோம்..பக்கத்துல இருக்க ஹோட்டல்ல ஸ்டே பண்றோம்...மதிய பிலைட்டை பிடிக்குறோம்..சரியா..."



"சரிங்க அண்ணா சார்...அதுல கண்டிப்பா போயிரலாம்...அதுக்காக தானே இவ்வளவும்..."என்று கவி வாய்க்குள் முனங்கவும்…

"இப்ப என்ன சொன்ன நீ..."



"ஒண்ணுமில்லை சார்..." என்றவாறு வண்டியை திருப்பினாள் கவி...



**********************************************************************************

ஆருஷா மற்றும் மாஹிர் மூன்று மாதத்திற்குப் பிறகு நேற்றுதான் இந்தியா வந்திருந்தார்கள்...அவளது வேலை சம்மந்தமாக பல்வேறு நாடுகளுக்கு அலைந்துகொண்டிருந்தாள்...இன்று அவளது நெடுநாளைய கனவு நிறைவேறப் போகிறது...ஒரு வருடத்திற்கு முன்பு தட்டிச்சென்ற அல்லது யாதவால் தட்டிவிடப்பட்ட வாய்ப்பு இன்று அவளது கைசேர போகிறது... முதன்முறையாக சிறகுகளை விரித்துப் பறக்கத்தயாராக இருக்கும் பறவையின் தயக்கத்திலும்...பயத்திலும்... ஆச்சரியத்திலிருந்தாள்…


தான் இந்தநிலைக்கு வரக் காரணமாக இருந்த விஸ்வநாதனிடம் ஆசீர்வாதம் அல்லது வாழ்த்து வாங்க என்றுகூடச் சொல்லலாம்... அதற்காகத் தான் விஸ்வநாதன் இல்லத்திற்கு அதாவது அவளது இல்லமாகவும் இருந்த இடத்திற்கு வந்திருந்தாள்…



ஷா அவளது தந்தை மற்றும் இந்த வீட்டைவிட்டுச் சென்று தனியாக வாழ்க்கை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கும் மேல் ஆயிற்று...பண்டிகைகள் விழாக்கள்...விஸ்வநாதன் அல்லது அவரது மனைவி பூஜா அத்தை அழைத்தால் இங்கு வருவாள்...அவ்வளவு தான்...



பூஜையறைக்கு முன்பு காசி,விஸ்வநாதன்,ஷா,மாஹிர்,சிவா,ஆராதனா என்று அரை நீள்வட்ட வடிவில் நின்றிருந்தனர்...பூஜா உள்ளே விளக்கேற்றி தீபம் காட்டி கொண்டிருந்தார்…

கற்பூரம் கொண்டுவந்து அனைவர்க்கும் காட்டியவர் விபூதி எடுத்து வாழ்வின் அடுத்த நிலைக்கு போகும் தனது வளர்ப்பு மகளின் நெற்றியில் பூசியவர் "உனக்கு இன்னும் இன்னும் நிறைய வாய்ப்பு வரணும் டா..."என்று கூறியவாறு நெற்றியில் முத்தமிட்டார்…

சிவா ஆருஷாவை காதலிக்கும் போது ஒரு தாயாக அவருக்கு அதில் விருப்பம் இல்லை...தனது மகனை அடையவேண்டுமென்றால் அவள் இலட்சியத்தை இழக்க வேண்டும் என்று விரும்பியவர்….அதை அறிந்தவள் தான் ஷா...அதற்காக அவர் முன்பு காட்டிய அன்பை அவள் அப்பொழுது சந்தேகிக்கவில்லை...இப்பொழுதும் இந்த அன்பை சந்தேகிக்கவில்லை…



அடுத்து விஸ்வநாதன் சிரித்தவாறு அவளை தோளோடு அணைத்துக்கொண்டவர் ""thank யூ மை சைல்ட்...யூ மேக் மீ ப்ரௌட்..."என்றார்…



ஷாவும் உள்ளன்போடு "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் சார்...ரொம்ப ரொம்ப நன்றி சார்... "

என்றவள் சிவாவை பார்த்து லேசாக சிரித்தாள்...அவனும் சிரித்தவாறு "ரியலி ப்ரௌட் ஆப் யூ..."என்று அவன் கூறியதற்கு சின்ன உதட்டு சுளிப்புடன் தலையாட்டினாள்…

ஹா ஹா ஹா...ஆண்களை பொறுத்தவரை எங்கோ ஏதோ ஒரு பெண் குடும்பம்...சமுதாயம் என்ற தளைகளை எல்லாம் அற்றுஎரித்து சாதித்தால் பெருமை படுவார்கள்...பாராட்டுவார்கள்...ஆனால் அவர்கள் வீட்டு பெண்ணோ...காதலியோ...மனைவியோ கோடுகளை தாண்ட நினைத்தால்..நான் முக்கியமா...இல்லை உன் வேலை முக்கியமா என்று கேட்டு லாக் செய்கிறார்கள்… அவளால் இயல்பாக இன்னும் ஆராதனாவிடம் பேசமுடியவில்லை...எதுவோ தடுத்தது...ஆராதனா தன்னை பார்த்து சிரித்ததும் தான் அவளை நன்றாக பார்த்தாள்...மிகவும் அழகிய பெண்...பெண்ணுக்குண்டான அத்தனை வரையறைகுள்ளும் அடங்கும் பெண்...என்று ஷா ஆராதனாவை பார்த்து நினைத்துக்கொண்டிருக்கும் போதே

“என்ன பொண்ணு தெரியுமா டி...பொண்ணுன்னா அப்படி இருக்கனும்...எப்பயும் புடவை கட்டி...தலைநிறய மல்லிப்பூ வைச்சு சிரிச்ச முகத்தோட...நீயும் தான் இருக்கியே..."என்று அன்று யாதவ் சொன்ன வார்த்தைகள் நியாபகம் வந்தன…

அதில் தலையை குலுக்கி சமநிலைக்கு வந்தவள்...என்ன இப்பயெல்லாம் இவன் நினைப்பு அதிகமா வருது...என்று யோசித்தவாறு நின்றாள்…

சிலநொடிகளில் நினைவுக்கு வந்தவள் மாஹிரை அணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்..."ஜலோ...ஜலோ தீதி...லேட் ஆயிருச்சு..."என்றவாறு பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டு மாஹிர் வெளியேறினான்…



விஸ்வநாதனிடமும் பூஜாவிடமும் தலையசைத்து விடைபெற்று திரும்பியவளை நான்கு விழிகள் ஏக்கமாக பார்த்தன….



இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் மீண்டும் வந்து சிவாவை அணைத்துக்கொண்டாள்...அவர்களுக்குள் இருந்த சிக்கலான நிலையற்ற காதலை தாண்டி இருவருக்கும் பொதுவில் நிறைய விஷயங்கள் இருந்தன….வாழ்வின் சிக்கலான தருணங்களில் துணையிருந்தவன்….நண்பன்…

"ஆல் தி வெரி பெஸ்ட் பேபி...be safe..."

அவனிடம் சிரித்தவாறு விடைபெற்று வெளியே வந்தாள்…

மாஹிர் ஒரு டாக்ஸியை பிடித்து வைத்து தயாராக இருந்தான்... பின்னிருக்கையில் அவனுக்கு அருகில் சென்று அமர்ந்த ஷா அவனை ஒரு மாதிரி மேலிருந்து கீழ் வரை நிதானமாக பார்த்தாள்…

"என்ன ஆச்சு தீதி..."என்று உடைந்த தமிழில் மாஹிர் கேட்டான்…

"இல்லை...இப்ப எல்லாம் நீ நிறைய தமிழ் வார்த்தை பேசுறியே அதான் என்னனு பாக்குறேன்...எதுவும் புது டீச்சர் கிடைச்சுட்டாங்களோனு…."

"நஹி தீதி...நானா பழக்குனேன்..."என்று மாஹிர் ஷாவின் கண்களை சந்திக்காது கூறினான்…

"ஓஹ்...அப்படி சொல்லுற நீ...சரி அதை விடு...இப்ப எதுக்கு டா இப்படி அவசரம் அவசரமா என்னை மத்தியானம் பிலைட்ல கூட்டிட்டு போய்ட்டு இருக்க...அவங்களே நம்மள மெதுவா வரசொல்லிட்டாங்க தானே..."

"தீதி தும் சாதா டயர்டுல இருக்கேனு தான்...பிலைட்ல ஹம் ஜலே…"

"ஆனால் எல்லாமே எங்கையோ இடிக்குது டா..."என்றவள் அமைதியாகி விட்டாள்…



சென்னை சர்வதேச விமான நிலையம்….



மாஹிர் உள்ளே வந்தும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்தான்...அவனது லேசர் விழிகள் மொத்த இடத்தையும் அலசிகாய போட்டு கொண்டிருந்தது…

"யாரை தேடுற..."என்று ஷா கேட்கவும்…

ஒண்ணுமில்லை என்பதுபோல் தலையாட்டியவன் ஒன்னும் தெரியாத சின்னப்பிள்ளை போல் அவளுடன் சேர்ந்து விமானத்துக்குள் வந்துவிட்டான்…

"தீதி உனக்கு business கிளாஸ்...எனக்கு எகனாமிக் கிளாஸ்...தும் வாஹன் ஜாவோ..."என்றவன் அவள் மறுமொழியை கூட கேட்காமல் அமர்ந்துவிட்டான்…

அவனை சிறிதாக முறைத்தவள் அவனை தாண்டி சென்றாள்...அவனுக்கு அடுத்து முன்னதாக மூன்றாவது வரிசையில் கவி அமர்ந்திருந்தாள்...இவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தவள் ஷா அருகில் வரவும் திரும்பி தனது கைப்பையால் முகத்தை மறைத்தவாறு அமர்ந்துகொண்டாள்…இருந்தும் அவளை பார்த்துவிட்ட ஷா திரும்பி மாஹிரை பார்த்து த்து என்று துப்பியவள் "இவங்க போதைக்கு இன்னைக்கு நாம ஊறுகாவா...ரைட்…."என்றவாறு தனது இருக்கையை நோக்கி நகர்ந்தாள்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ரேவதி கயல் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கயல்விழி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top