• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
அத்தியாயம் 7



கவியை இங்குப் பார்த்தபோதே யாதவை இந்த விமானத்தில் எதிர்பார்த்தாள் தான்...ஆனால் தனது இருக்கைக்கு அருகிலே இருப்பானென்று ஆருஷா எதிர்பார்க்கவில்லை…



ஆருஷா தனது இருக்கையைத் தேடி அமரச்சென்றபோது...அவள் எண்ணுக்கான இருக்கை யாதவ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகிலே இருந்தது...ஷா வந்ததை அவன் கவனிக்கவில்லை...இடப்பக்கமாகச் சிறிது திரும்பி அமர்ந்துக்கொண்டு அலைபேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்…



யாதவை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் ஒருநிமிடம் தடுமாறினாள் என்று தான் சொல்லவேண்டும்…... ஷாவின் வாழ்கை வரலாற்றிலே முதன் முறையாக ஒரு நபரை எப்படி கையாளவேண்டும் என்று தெரியாமல் தடுமாறினாள்... இனிமேல் உன் முகத்திலே முழிக்கக்கூடாது என்று வசனமெல்லாம் அடித்துவிட்டு பற்றாக்குறைக்கு நடுவிரலையும் காட்டிவிட்டு வந்தாயிற்று...இனிமேல் அவனிடம் என்ன பேசுவது...விலகியே சென்றுவிடலாம் என்று நினைத்தவள் மாஹிரை அழைத்து இங்கு அமரவைத்துவிடலாம் என்றெண்ணி மாஹிர் மற்றும் கவி இருந்த இடத்திற்குச் செல்லலாம் என்று திரும்பும் போதே...எப்பொழுதும் தனக்கென்ன என்பது போல் அக்கடா என்று உறங்கிக்கொண்டிருக்கும் அவளது மனசாட்சி இன்று என்னமோ போர்வை தலையணையை எடுத்துக்கொண்டு அரக்க பறக்க ஓடி வந்து ஆஜர் ஆகியது"ஷா...போயும் போயும் இந்த ஆண்ட்டி ஹீரோவுக்குப் பயந்தா இடம் மாத்த போற நீ ….இந்த பிலைட்ஐ விட்டு இறங்க மூணு மணி நேரம் ஆகும்...அது வரைக்கும் உனக்கும் எனக்கும் என்டேர்டைன்மெண்ட் வேணாமா... யோசிங்க ஷா யோசிங்க…" என்று கொளுத்திப்போட்ட மனசாட்சி வந்தவேலை முடிந்ததென்று எப்பொழுதும் போல் உறங்கச் சென்று விட்டது..



"ஆமாம்...கொஞ்ச நேரம் இவனைக் கத்தவிடுவோம்..."என்று முதன்முறையாகத் தனது குணத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லாத குறும்பு தனத்தை கையிலெடுத்தவள் அவளின் அடையாளமாகத் திகழும் ஏற்றிப்போடப்பட்ட மேசி பன் கொண்டையை அவிழ்த்து விட்டு கூந்தலை கோதி அலையலையாகச் செட் செய்தவள்...கருப்பு சட்டமிட்ட கண்ணாடியை அவிழ்த்து கைப்பையினுள் வைத்துவிட்டு...டீஷர்ட்க்கு மேல் போட்டிருக்கும் டெனிம் மேல்ச்சட்டையைக் கழட்டி அதையும் கைப்பையுனுள் வைத்துவிட்டு...தான் செய்ததை எவரும் பார்த்தார்களா என்பதுபோல் சுற்றிமுற்றி பார்த்தாள்…



அப்பொழுது தான் அவள் சரியாக அமர்ந்துவிட்டாளா என்று பார்க்கவந்த மாஹிர் சிறிது தூரத்திற்கு முன்பே அதிர்ந்து நின்று இவளின் இந்தக் கூத்துக்களைப் பார்த்துவிட்டு இது என்ன டா பைத்தியம் என்பதுபோல் முழித்தவாறு நின்றிருந்தான்…



மாஹிரை பார்த்ததும் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவள் "என்ன..."என்பது போல் தலையசைத்துக் கேட்டாள்...அவனும் மீண்டும் முடி மற்றும் கண்களில் கைவைத்து நீ என்ன செய்துவைத்திருக்கிறாய் என்பது போல் கேட்டான்…



ஒண்ணுமில்லையே என்று தலையை ஆட்டினாள் ஷா...நம்பாமல் உதட்டை சுளித்து நெற்றியின் ஓரம் ஆள்காட்டி விரலை வைத்து சுற்றி லூசா நீ என்று மாஹிர் கேட்கவும்...முறைப்புடன் ஆள்காட்டி விரலை அவனை நோக்கி ஆட்டி வா என்பதுபோல் ஷா சைகை செய்ய… மாஹிர் சிரிப்புடன் ஓடி விட்டான்...



சிரிப்பை உதட்டில் அடக்கியவள் யாதவின் ஒன்றும் தெரியாதவள் போல் அருகில் போய் அமர்ந்தாள்...யாரோ அருகில் வந்து அமர்கிறார்களே யார் என்று பார்ப்பதற்காகக் கூட அவன் நிமிரவில்லை...அலைபேசியில் தனது இன்ஸ்டா கணக்கில் வரும் போது பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்திற்கு வந்திருந்த பின்னூட்டங்களை படித்துக்கொண்டிருந்தான்..





நாம் ஒரு பொருளையோ...நபரையோ...இடத்தையோ...எதையோ ரசிப்பது என்பதை விட...நாம் ரசிக்கப்படுவது என்பது ஒரு மாதிரி போதை...





அந்த போதையினுள்ளே மூழ்கி தங்களுக்கான உண்மையான முகம் என்பதே ஒன்றில்லாமல் அனைவரும் ரசிக்கவேண்டும் என்பதற்காகப் போலியான ஒரு முகமூடி செய்து அதற்குள்ளே தங்களை இட்டு நிரப்பிக்கொண்டு அது தான் தங்களது உண்மையான முகம் என்று நம்பி பொய்யாகவே தங்களது வாழ்க்கையைக் கடத்தும் சாபம் வாங்கப்பெற்றவர்கள் திரைநட்சத்திரங்கள்...அப்படி பட்ட போதையைத் தான் சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டிருந்தான் யாதவ்…







அதில் பெரும்பாலான பின்னூட்டங்கள் ஹாஷ்டாக் யாஷ்கா(#yashka) ரசிக மக்களும் ஹாஷ்டாக் (#yasha )ரசிக மக்களுக்கும் இடையில் சண்டை தான் இருந்தது...யாஷ்கா என்பது யாதவ் மற்றும் கனிஷ்கா ஜோடியின் ரசிகர்கள்...யாஷா என்பது யாதவ் மற்றும் ஆருஷா ஜோடியின் ரசிகர்கள்...அதில் ஒருத்தன் யாஷ்கா குரூப்பை சேர்ந்தவன் பின்னுட்டதில் போட்டிருந்த படத்தைப் பார்த்து யாதவிற்கு சிரிப்பு வந்துவிட்டது…









"இதை மட்டும் அந்த பஜாரி பாக்கணும்...உன் மண்டையை ஆய்ஞ்சு விட்ருவா...முகம் தெரியாததினால் தப்பிச்ச..."என்று நினைத்தான்...







பின்னே அது ஏதோ ஆருஷாவின் பழைய புகைப்படம் மரத்தில் ஏறுவதுபோல் இருந்தது...அதில் அவள் முகத்தை எடுத்துவிட்டு குரங்கு முகத்தை வைத்துவிட்டிருந்தான் அந்த ஒருத்தன்...அது தான் இப்பொழுது அவன் புகைப்படத்துக்குக் கீழ் பின்னுட்டத்தில் நடக்கும் சண்டைக்குக் காரணம்…





அந்நேரம் இருக்கைவார் மாட்டுவதற்கான அறிக்கை வர அலைப்பேசியைப் பையில் வைத்துவிட்டு...இருக்கைவாரை மாட்டியவாறு சிரித்துக்கொண்டே அருகில் இருப்பவரைத் திரும்பிப் பார்த்தவனின் சிரிப்பு அப்படியே உறைந்தது...



தன் கண்கள் பார்த்து மூளை அறிந்து தனக்குச் சொன்ன செய்தி சரிதானா என்பது போல் இரண்டு மூன்று தடவை இமைத்தட்டி தனக்கு அருகில் இருப்பவளைப் பார்த்தான் யாதவ்…









"இவளா...இவளா...இவளா...இவளா...இவளா..."என்று நான்கு ஐந்து தடவைக்கு மேல் அவனது மனது எதிரொலிக்க வாய் "நீயா நீயா..."என்று இரண்டு தடவை கேட்டிருந்தது…







யாதவின் சத்தத்தில் மெதுவாகத் திரும்பிப் பார்த்தவள் யாரு நீ என்பதுபோல் அவனை நோக்கி அந்நிய பார்வையைப் புரியாத பார்வையை வீசினாள்…







"ஏய் நீ என்ன டி இங்க பண்ற..."என்று வாயில் கைவைத்தவாறு அதிர்ச்சியுடன் கேட்டான் யாதவ்…மீண்டும் அதே யார் நீ பார்வை…







"பெரிய இவளாட்டம் உன் மூச்சிலேயே முழிக்க மாட்டேன்...அப்படி இப்படினு மிடில் பிங்கர் காட்டிட்டு போன...இப்ப என்ன திரும்பி வந்திருக்க..."என்று யாதவ் கேட்கவும் யாரு நீங்க என்று கேட்க வாய் எடுக்க வந்தவள் திடீரென்று வடிவேல் பார்த்திபன் நகைச்சுவை நினைவுக்கு வர...அதைச் செயல்படுத்துவோம் என்று நினைத்தவள் அதே யார் நீ பார்வையையே அவனை நோக்கி வீசினாள்…







"பேச மாட்டியா நீ...என்ன டி..."என்று யாதவ கேட்கவும் மூஞ்சியைப் பாவமாக வைத்துக்கொண்டு "யாரு நீங்க.."என்று சைகையில் கேட்டவள் எழுந்திருந்து தனது பையிலிருந்து ஒரு பேனா நாட்குறிப்பை எடுத்து who are யூ என்று எழுதி அவன் முகத்தை நோக்கி நாட்குறிப்பை எடுத்துக்காட்டினாள்...



"என்னது நான் யாருனு உனக்கு தெரியாதா..."என்று யாதவ் நெஞ்சில் கைவைத்து கொண்டு அதிர்ச்சியில் கூவவும்...பாவமாக இமைத்தட்டி ஆமாம் என்று தலையாட்டினாள்...

"பாரு டா...என்ன டி நீ எனக்கு மேல நடிக்குற..."என்றவன்..."பொய் சொல்லாதே ஆரு..."



எனக்கு உங்களை யாருன்னே தெரியவில்லை என் அக்கானு நினைச்சு நீங்க என்கூட பேசிட்டு இருக்கீங்கன்னு நினைக்குறேன் என்று நாட்குறிப்பில் எழுதி அவனிடம் காட்டினாள்...



"அடியே...என்ன டி கலர் கலரா...ரகம் ரகமா ரீல் சுத்துற...எனக்கு நெஞ்சு வலியே வந்துருமோனு பயமா இருக்கு டி..."என்று யாதவ் நெஞ்சை பிடித்துக்கொண்டு பேசவும் யாதவின் மார்பில் அவன் கைக்கு மேல் இவள் கைவைக்கவும் ஹிந்தி சீரியல்களில் வருவது போன்று ஊரே பற்றி எரிந்தாலும் அவர்களை சுற்றியிருக்க கூடிய அனைத்தும் நிசப்தத்தில் ஆழ்ந்து நொடிகள் துளி துளியாக கரைவதுபோல் இவர்களும் உணர்ந்தனர்….

அதிலிருந்து முதலில் வெளிவந்த யாதவ் "கை...கை...எடு டி...கற்பு டி..கற்பு..."என்று யாதவ் கை என்று கூறும்போதே கையை எடுத்த ஷா நீ உறுப்படவே போறதில்லை என்று மனதில் நினைத்தவள் அவனை பார்த்து பாவமாக முழிப்பது போல் நடித்தாள்...



"ஏன் வாய் திறந்து பேச மாட்டியா..."என்று யாதவ் கேட்கவும் இல்லை என்று அவள் வாயில் கைவைத்து சைகை செய்ய...

"வாந்தி வருதா..."அவள் இல்லை என்று தலையாட்ட..."எச்சி துப்பனுமா"

என்று யாதவ் கேட்க... மீண்டும் இல்லை என்று தலையாட்டியவள் தான் ஒரு பிறவி ஊமை செவிடு என்று எழுதி காட்ட...

"ஆரு போதும் நடிச்சது...ரீல் அந்துபோய் ரொம்ப நேரம் ஆச்சு டி…ஏன் டி என்னை பார்த்தா உனக்கு என்ன இளிச்சவாயன் மாதிரி தெரியுதா...இன்னும் நடிச்ச அடிச்சு பல்லை உடைச்சுருவேன்..."என்று யாதவ் கூற கைகளை கொண்டு கண்ணை மூடி அழுவதை போல் திரும்பி கொண்டாள்





அவனுக்கு எதிர் புறம் திரும்பியவள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுவதை போல் நடிப்பை போட்டவள் எச்சி தொட்டு கண்களில் வைத்துக்கொண்டு யாதவ் புறம் திரும்பி துடைப்பத்தை போல் கைக்குட்டையை ஒற்றி எடுத்து உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மேல் நடித்துக்கொண்டிருந்தாள்…

ஷா அழுகையை தவிர வேறு என்ன செய்திருந்தாலும் அவள் கூறும் பொய்யை நம்பியிருக்க மாட்டான்...ஆனால் அழுததும் நம்பிவிட்டான்...அவன் அறிந்த மற்றும் கேள்விப்பட்டிருந்த ஷா எப்பொழுதும் அழுகவே மாட்டாள் அல்லவா...அதனால் பாவம் நமது ஆண்ட்டி ஹீரோ...ஐயோ...மன்னிச்சு ...நமது மனம் கவர் நாயகன் நம்பிவிட்டான்…

"சரி...சரி...நம்புறேன்...பயப்படாத..."என்று யாதவ் கூறவும் ஷாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது மீண்டும் கைகளை கொண்டு மூடி அழுவதை போல் சமன்செய்தவள் சரி என்பதாக தலையாட்டினாள்…

"ஆனால் நீ அந்த பஜாரி மாதிரி அப்படியே இருக்க..."என்று யாதவ் இன்னும் சந்தேகத்துடனே கூறியவன்...ஆமாம் உன் பேர் என்ன என்று கேட்டான்…

"நிஷா..."என்று அவள் எழுதிக்காட்டவும் "நிஷாவா...ஆருஷா...நிஷா... என்ன உங்க அப்பன் சாவிலே பேரு வைச்சுருக்காரு...அந்த ஆளுக்கு அப்பயே தெரிஞ்சுருக்கு...இப்படி யாதவ்னு ஒருத்தன் வந்து அவர் மூத்த மககிட்ட மாட்டிகிட்டு லொள் படுவான்னு " அவன் கூறியதில் வரும் கோவத்தை பல்லை கடித்து...அவனுக்கு பதில் சொல்ல துடிக்கும் நாவை வாயை மூடி...அவன் கன்னத்தை பதம் பார்க்க விரும்பும் கையை மற்றோரு கையுடன் கோர்த்து அடக்கியவாறு ஒரே நேரத்தில் மல்டி டாஸ்க் செய்துக்கொண்டிருந்தாள்…

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க அப்பாக்கு ஒரு பொண்ணுன்னு தானே கேள்விப்பட்டேன்...நீ எப்படி..." என்று கேட்டவன்...அவள் பதில் சொல்வதற்கு முன்பே…
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
"எனக்கு தெரிஞ்சு போச்சு...உங்க அக்கா ஆரு உங்க அப்பாவை வெறுக்க காரணம் இதான்...அவர் கட்டப்பஞ்சாயத்து தொழில் பண்ணிட்டு இருந்தப்ப உங்க அம்மாவை எங்கயோ பார்த்து பிடிச்சு போய் ஆருவோட அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டாரு...அது மூலமா பிறந்த பொண்ணு தான் நீ...அதாவது நிஷா...அதுனால ஆருஷா அவங்க அப்பா காசியை வெறுக்குறா...ஆனால் அவளால உன்னை வெறுக்க முடியலை...ஏன் அப்டின்னா நீ ஒரு பிறவி ஊமை அப்படின்றதுனால உன் மேல அவளுக்கு ஒரு சாப்ட் கார்னெர்...இருந்தாலும் உன்னையும் உங்க அம்மாவையும் அவளால குடும்பமா ஏத்துக்க முடில...அதுனால தான் உங்க அப்பாவை விட்டு பிரிஞ்சு இப்ப தனியா இருக்கா….அதே மாதிரி உங்களையும் உங்க அப்பா கூட சேர விடல...சரியா..."என்று ஒரு சூப்பர் டூப்பர் குடும்ப கதையை சொல்லி முடித்திருந்தான் யாதவ்…

அவன் சொல்ல சொல்ல ஆருஷாவோ என்ன டா டேய் என் குடும்பத்தை இவ்வளவு டேமேஜ் பண்ணிட்டு இருக்க…. என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு வேறு ஒரு பக்கம் வந்து தொலைத்தது...இருந்தும் அடக்கிக்கொண்டு அவனை பார்க்க….தான் சொன்னது சரி தானா என்று கேட்க ஆருஷாவும் தலையாட்ட அப்பொழுது அவன் விட்ட ஒரு லுக் இருக்கே தாமஸ் ஆல்வா எடிசன் கூட தான் கண்டுபிடித்த பல்பை மற்றவரிடம் காட்டி அது வேலை செய்தவுடன் அப்படி ஒரு பெருமிதமான பார்வை பார்த்திருக்க மாட்டார்...இவன் அப்படி பார்த்தான்…

"எப்படி சரியா சொன்னேன் பார்த்தியா...உங்க அக்காவை பார்த்தவுடனே தெரிஞ்சது...கொஞ்சம் கவனிப்பு வேணும்னு...நீ எம்புட்டு அழகா இருக்க...லட்சணமா...உங்க அக்காவும் உன்னை மாதிரி இருந்திருக்கலாம்...அமைதியா...அடக்க...ஒடுக்கமா..பொண்ணு மாதிரி...அப்படி இருந்திருந்தா போன போகுதுனு நானே வாழ்க்கை குடுத்துருப்பேன்…."என்று யாதவ் கூற அப்படியா ராசா என்பது போல் அவனை பார்த்தாள்…

"ஒன்னு உன்கிட்ட சொல்றேன்...இதை ஏற்கனவே வடிவேல் பார்த்திபன் கிட்ட சொல்லிட்டாரு இருந்தாலும் அந்த dialogue தான் இந்த சூழ்நிலைக்கு சரியா இருக்கும்நீ தப்பா எடுத்துக்காத..."என்றவன்

"அவளை மாதிரி இருக்க உனக்கு வேற ஏதாவது கண்ணு தெரியதுனோ...இல்லை நடக்க முடியாதுனோ...சொல்லிருந்த கூட இவ்வளவு சந்தோசம் பட்டிருக்க மாட்டேன்...ஆனால் வாய் பேச வராது சொன்ன பார்த்தியா...ரொம்ப சந்தோசமா இருக்கு...உங்க அக்கா கொஞ்ச நஞ்ச பேசுவா...இந்நேரத்துக்கு நாற்பதாயிரம் English கெட்ட வார்த்தை பேசிருப்பா...எல்லாமே f வார்த்தை தான்...அதுவும் புது புதுசா கம்மினேசன் போட்டு திட்டுவா பாரு….பொம்பளையா அவ பஜாரி..."என்று சிரிப்புடன் கூற ஆரம்பித்தவன் கடைசி வார்த்தையை கொஞ்சலுடன் முடித்தான்...

ஆரு எங்கே அவன் கொஞ்சலை எல்லாம் கவனித்தாள்….யாதவ் தன்னை பத்தி சொல்ல சொல்ல சிரிப்புதான் வந்தது...இப்படி ஒரு பச்சை மண்ணா டா நீ என்பது போல்…

இவ்வாறு அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிமுடிக்கவும் விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது…

"அதுக்குள்ள இரண்டரை மணி நேரம் ஆயிருச்சா...உங்க அக்கா கூட மாதிரி உன் கூட பேசுனாலும் நேரம் போனதே தெரில..."என்று அவள் அக்காவே பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான் யாதவ்…

விமானம் அசாம் மாநிலத்திலுள்ள கௌஹாத்தி லோக்ப்ரியா கோபிநாத் பர்டோலி சர்வேதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது...யாதவும் ஆரூவும் உடன் வந்தவர்களை மறந்துவிட்டு விமானத்திலிருந்து இறங்கி தங்களது பைகளை எடுக்க வந்திருந்தனர்…

"ஆமா இவ்வளவு நேரம் பேசுனே...முக்கியமான விஷயத்தை கேட்காம விட்டுட்டேன் கௌஹாத்தி எதுக்கு வந்த..."என்று யாதவ் ஆருவிடம் கேட்டு கொண்டிருக்க தீதி என்ற அழைப்புடன் யாதவை முறைத்தவாறே மாஹிர் அந்த இடத்தை அடைத்திருந்தான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top