• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதுமாகி??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Ammavota idatha yaralayum nirapa mutiyathu...unmayana varigal... superb kavithai da????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
தேவதை பெண்ணவளோ

தீந்தமிழ் சொல்லவளோ

தீங்கனிச் சுவை உணர்த்தியவளோ

தீதை தீயிலிடுபவளோ

தீவினை கலைபவளோ

நல்லவை சொல்லும் நங்கையவளோ

நாவடக்கம் கற்பித்தவளோ

மனதில் நன்னெறி விதைத்தவளோ

நல் ஆசிரியையாய் விளங்குபவளோ

திறமை தனை கண்டெடுத்தவளோ

அன்பினும் அன்பானவளோ

பண்பினை பறைசாற்றுபவளோ

வீரம் விளைவித்தவளோ

நேசம் நிறைந்தவளோ

பாசம் கொண்டவளோ

தூக்கம் தொலைத்தவளோ

துக்கம் நீக்கியவளோ

ஏக்கம் தீர்த்தவளோ

ஏகாந்தத்தை தந்தவளோ

அகந்தை ஒழித்தவளோ

ஆசை துறந்தவளோ

போதனைகள் போதித்தவளோ

சோதனைகள் கடந்தவளோ

வேதனை போக்கியவளோ

சாதனைகள் புரிந்தவளோ

மலராய் மலர்பவளோ

புன்னகையில் புது உலகை காட்டியவளோ

கருணை பொழிபவளோ

கடவுளின் திருவுருவோ

குழந்தையின் மறுவுருவோ

தவமின்றி கிடைத்த வரமோ...

வரமாய் வந்தவளோ

என் அன்னை அவளோ

யாதுமாகியவள்...
??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top