யார் அவன்?

#1
யார் அவன்?

அரைக்கால் சட்டையில்
அரை வயிற்றுக் கஞ்சிக்கு
அடை மழை பாராமல்
அடைக் காக்கிறான்
அவன் விதைத்த பயிர்களை

யார் அவன்?

என் வீட்டுப் பசி போக்க
அவன் வீட்டுப் பட்டினியைப் பரிசாக்கி
ஊருக்கே அன்னம் ஊட்டிடும்
அன்னை அவன்....

யார் அவன்?

சுட்டெரிக்கும் வெயிலில்
தன்னை உருக்கி
வடிந்த வேர்வையை
கிழிந்த வேட்டியில்
துடைத்தெடுத்து நிம்மதி பெருமூச்சு விடும்
ஏழை அவன்...

யார் அவன்?

தனக்கென்று பாராமல்
தன் உழவுக்கு உதவிடும்
உயிர் ஜீவன்களுக்கும்
உணவுப் பகிரும்
உயர்ந்த மனிதன்...

யார் அவன்?

வஞ்சக ஓநாய்களின்
நஞ்சக தொழிற்சாலைகளால்
தன் நிலம் இழந்து
தண்ணீரை இழந்து
தன்னிலை மறந்து
தற்கொலை செய்து
கொள்ளும்
என் நாட்டு முதுகெழும்பவன்

யார் அவன்?

உழவன்.......
 

Sponsored

Advertisements

Top