• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர் எழுத தெரியுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
என் தோழனாகி கணவாகி இதயம் கவர்ந்த கள்வனே,

கவலையே இல்லாமல் பட்டாம்பூச்சிகளாய், ஆண் பெண் என்ற பேதமின்றி, கல்லூரி என்ற சோலையில் நாம் சுற்றி திரிந்தோம்.
ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு, சோகம் என்பதே தெரியாமல், சந்தோஷ சாரலில் நனைந்து இருந்தோம் காதல் என்ற உணர்வு இல்லாமல், நட்பு என்ற பாதுகாப்பு கவசம் சூடி இருந்தேன். வசந்த காலம் தான் அது! நினைக்கும் பொழுதே இதழோரம் சிரிப்பும், கண்களோரம் நீர் துளியும் தோன்றுகிறது

ரொம்ப உயரமாய் பறந்து விட்டேன் போல! பட்டம் வாங்கிய கையோடு இந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளும் அறுபட்டு போயின!

காதல் இல்லாமல் இயற்கையின் விதியால் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்தேன். என் பெண்மையை மதியாமல், நான் ஒரு ஜீவன் என்றும் நினையாமல், குரங்கு கையில் பூ மாலையாக அவன் கையில் நான்!
உடலும் மனமும் ரணப்பட்டு போக, எந்தவொரு உணர்வும் இல்லாமல் கூடிய கூடலின் வினையாய் என் மணி வயிற்றிலும் ஓர் உயிர் ஜனிக்க, துன்பத்தில் இன்பமாக நினைத்து மகிழ்ந்தேன். சந்தோஷம் உன் உருவில் வர வேண்டும் என்று கடவுள் நினைத்தாரோ? கருவும் உரு தெரியாமல் உருவாக்கியனே அழித்து விட, வாழும் வாழ்க்கை நரகம் ஆகியது!

விபத்தாக காலன் வர, என்னை கொல்லும் காலனோ நிஜ காலனிடம் செல்ல, பூவும் பொட்டும் சிரிப்பும் குழந்தை தனமும் கனவாக சென்றது.
நிவேதா என்னும் பெயரில் தேவதை வாழ்வில் நுழைய, கவலை எல்லாம் கடின உழைப்பில் செலுத்தினேன்.

வாழ்க்கை அதன் போக்கில் செல்ல, மன்னவனே உன் வருகையில் மீண்டும் நான் கல்லூரி நினைவில் திளைத்தேன். நிவேதாவின் தாயின் சூழ்ச்சியால், உன் திருமணத்தில் நம் திருமணம் நிகழ, காதலே இல்லாதவள் உன் காதலையும் அழித்து விட்டேன்!

இறைவன் அருளால் இமை திறந்து என் வாழ்வை வண்ணமயமாக்க வந்த நீ, காதலோடு நெருங்குகையில் எனக்குள் வேலி அமைத்து விலகினேன் இன்று நீயே என்னிடம் கோபத்திலும் மென்மையை கையாளுகிறாய். எந்நிலையிலும் என்னை வெறுக்காமல் அன்போடு அரவணைத்து, என்னை எனக்கே புரிய வைத்து வாழ்க்கையின் அர்த்தம் சொல்கிறாய்! என்னை தேவதையாய் பாவித்து, எனக்குள் உன் உயிர் கொடியை படர விடுகிறாய்! பெண்ணின் மென்மையை உணர வைத்து, உணர்வுகளை கிளர செய்கிறாய். கேள்வி குறியாக இருந்த வாழ்வு, உன்னால் ஆச்சரிய குறியாக மாறியதே!

மனதை வென்ற கள்வனே! தினந்தினம் உன்னில் தொலைந்து, காதலுக்கு புது அர்த்தம் செய்யலாம், காதலே!

சன்சாயியாக இருந்த என்னை காதல் பித்தனாக மாற்றிய பெருமை உனக்கு தான்டா!

வார்த்தைகளும் தமிழும் நினைப்பதையும் கூற பஞ்சமாகி போனதே! இது தான் காதலா?

இப்படிக்கு,
உன் தமிழ்!

Note:
எல்லாரும் வாழ்வை தொடங்க காதல் கடிதம் எழுத, தமிழாகிய நான், கடவுள் அருளால், எதிர் பாராமல் நிகழ்ந்த மறுமணத்தில், எ










ன் இதயம் வென்ற என் காதல் கணவனுக்கு எழுதுகிறேன்! என் கதையை எல்லாரும் சொல்ல கேட்ட
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top