லவ் லெட்டர்- Compilation

Status
Not open for further replies.
#1
@Selva sankari


நானும் எழுத வந்திருக்கிறேன் காதல் கடிதம்...
கட்டையைத் தூக்கி வராதீர்கள் யாரும்.

அன்புள்ள மன்னவனே… ! ஆசைக் காதலனே… !

மூளையை எவ்வளவு கசக்கினாலும் சினிமா பாட்டுதான் வருது… நான் என்ன செய்ய 🤔🤔🤔


அன்பே… பிரௌனி… :):) உனக்கு நான் எழுதும் தமிழ் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் என் உணர்வுகள் நிச்சயம் புரியும்.
அன்பே…
ஆருயிரே…
அருமருந்தே…
அடிக் கரும்பே…
மானே…
தேனே…
மணியே…
நிலவே… என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்குத் தெரியவும் இல்லை, தோன்றவும் இல்லை. :p:p


மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா… என்று ஏங்கிப் பாட்டெழுத உனக்கு கருகரு மீசையும் இல்லை. (எல்லாம் பிரவுன் தான்) :p:p


என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என யோசித்து யோசித்தே நேரம் கழிகிறது… என் ஃபோனில் சார்ஜும் குறைகிறது. :(:(


எதுவும் தெரியாது யோசித்த போதும், உன் அன்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு நான் எழுதும் மடலை நீ ரசிப்பாயா? அல்லது வெறுப்பாயா… ? எதுவும் புரியாமல் பத்தாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட்டின் போது பரிதவிக்கும் நெஞ்சம் போல பரிதவிக்கிறேன்.:confused::confused:


சரி… போதும்… கதை பேசாமல் காதலைப் பேசலாம் வா… :)


:unsure::unsure:எங்கே…? எப்போது… ? எப்படி… ? நீ என்னுள் நுழைந்தாய் என, சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல எனக்குள் கேட்டு, ஆற அமர அசை போடும் மாடு போல கடந்த நாட்களின் நினைவுகளை அசைபோட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். :):)


நான் படிக்கும்
நாவலில் வரும்
நாயகியை மட்டும்
நயமாய் ரசித்திருந்தேன்…
நானும் இருக்கிறேனடி என்று
திரும்பிப் பார்க்க வைத்து
திகைக்க வைத்தாய் என்னை…!
திரும்பும் திசையெல்லாம்
திருஉறுவாய் நின் பிரகா(ஷ்)சம் கண்டு
திணறித் தவித்து நின்றேன்.


எது ஈர்த்தது என்னை…?
எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்…
உன் விழிகளில் வழிந்த ஏக்கம் மிகு காதலா...
உன் இதழில் மலரும் புரியா பாஷையா…
அந்த கிறுக்கியை(சிமி) கரெக்ட் செய்ய நீ படும் துயரங்களா…
ஆகமொத்தம் எனக்குள் விழுந்து விட்டாய் புரியாமலே…


உயிர் விடும் வரை உன்னோடுதான்…
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்…
நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…!😊😊

இறுதியாக மிகுந்த வெட்கத்துடன் ஒன்று. 🙈🙈

முத்தத்தில் வித்தகனாம் நீ…
மொத்தமாகப் பேசுகின்றனர் சைட்டில்…
சித்தத்தில் உனை ஏற்றி…
பித்தத்தில் மூழ்கும் எனை மீட்க…
நித்தமும் நினைவில் இனிக்கும்படி…
சத்தமாய் ஒரு முத்தம் பதி… 🙈🙈

வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும். நம் காதல் வரலாறை எழுதட்டும்.
காத்திருக்கிறேன் நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன். 😘😘
காதல் என்றும் வாழட்டும். அதில் நாமும் வாழ்வோம். 😍😍

இப்படிக்கு அன்புக் காதலி…
செல்வா
 
#2
@shanthinidoss

அன்பே...
ஆருயிரே...
கண்ணே...
கலைமானே...
இப்படி எல்லாம் எழுத எனக்கு ஆசை தான்... ஆனா பாரு எனக்கு அப்படி தோணவே இல்லை😉😉😉 ஏன்னா நான் உன்னை நேர்ல பாக்கவே இல்லை😝😝😝

நேர்ல பாத்தா தான் கவிதை அருவியா கொட்டுமாம் 🙈🙈🙈

"மேகத்தை தூது விட்டா திசை மாறி போகுமோன்னு...🤔🤔
தாகமுள்ள மச்சானே தண்ணிய தான் தூது விட்டேன்" இப்படி உன்னை நினைச்சு பாட நான் சரிதாவும் இல்ல...

நீ ராஜேஷூம் இல்ல😉😉😉

காதல் கடிதம்னாலே தேனாய் ஆரம்பிச்சு காதலாய் முடிக்கணுமாம் காதலிப்பவர்கள் சொல்லுறாங்க🤔🤔 ஆனா பாரு எனக்கு அப்படியெல்லாம் ஆரம்பிக்க தோணவே இல்ல😐😐

அன்பே... நலம் நலமறிய ஆவல்னு எழுதவும் மனசு வரல உறவுக்காரங்களுக்கு எழுதுவதாய் நினைப்பு வருது... நீ உறவாக்காரனா 🤔🤔🤔

காதலனே உனக்கு காதலியாய் எப்படி எழுதுவதாம்🤔🤔

என்ன எழுதுவது.... எப்படி எழுதுவது... யோசித்து யோசித்து நிமிடங்கள் தான் கழிகின்றன😐😐

திங்கள் வேலைக்கு போகணுமேன்னு சனிக்கிழமை வயிறு கலக்குவதை போல் தான் இப்பொழுது என் நிலை😝😝😝...

என்னை காதலியாய் ஏற்றுக் கொண்டால் மேகத்திடம் தூதணுப்பு...

காதலியாய் காதல் கடிதத்துடன் வருகிறேன்...

🙈🙈🙈 சந்தோஷ் பவ...

மீதியை யோசிச்சுட்டு வாரேன் 🏃🏃🏃🏃
 
#3
@SAROJINI

முதல் பார்வையில்...:love::LOL::ROFLMAO:

‘ரொம்பத்தான் பயபுள்ள (மீய கண்டுக்காத காண்டுல...) படம் காட்டுது... பெரிய மன்மத குஞ்சுனு நெனப்பு போல... ஆளும் மீசையும் பாரு (நேக்கு ரெண்டுமே ரொம்ப பிடிச்சிங்... அதான் திட்டிங்...)’

அவன் பார்க்காத போது... போது... பார்த்தேனே நானு... நானு... அவன் பார்க்கின்ற போது போது மனதை மறைக்க பார்வையை தழைத்தேனே நானு... நானு...

இதுக்கு மேல எழுத வரல... தூக்கம் தான் வருது...:sleep::sleep::sleep::sleep:
**************************

ஆஃப்டர் லவ் ஸ்டார்ட்... :love::love::love:

பீனிக்ஸ் போல மனம் உன்னையே தேடி வருவதால் நீ என் வானில் சூரியனாக மாறிய மாயம் சொல்லவா? :love:

உண்ணவும், உறங்கவும் முடியாமல் உழன்று போகுது உள்ளம்! உணவாய் உன் நினைவை உட்கொள்வதால் பசியில்லை.

உறங்க விழி கிறங்கையில் உன் தோள் தேடுது உள்ளம்.

தனிமையில் வந்த உன் நினைவால் தனித்து சிரிக்கிறேன்.

உன் மேல் பித்தாகிப் போன என் மனதின் விந்தையறியாதவர்கள் எனை பயத்துடன் பார்க்கிறார்கள். நான் அவர்களைப் பரிதாபமாகப் பார்க்கிறேன்.

மனங்களின் நெருக்கம் உணரத் துவங்கிய நாள் முதல் உன் நினைவு என் மனதில் மத்தாப்பூவாய் பரவசம் கொள்ளச் செய்கிறது.

உனக்கும் அப்படித் தானா? இல்லை எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கிறதா?

இன்னும் இதே நாடகமும், நடிப்பும் எத்துணை நாட்களுக்கோ? என் அரிதாரம் கலைக்கும் முன் உன் மனையாள் எனும் அரிதாரம் நிரந்தரமாக வேண்டும்.

இதையெல்லாம் உன்னிடம் நேரில் பேச வெட்கச் சல்லடை தடுக்குது.

அதனால் வார்த்தைகளை விரல்களின் வழியே தூது அனுப்பிகிறேன். உனைக் காண ஏங்குது உள்ளம். எனைக் காண எப்போது நேரில் வருவாய்.

எனைக் காணக் காத்திருக்கும் உன் ஜீவன்.....:love::love::love:
 
#4
@sandhiya sri

என் இதயத்தை களவாடிய கள்வனே,

உன் காதலியின் கண்ணீர் குரல் கேட்ட பின்னும் நீ விழி மூடி தவக்கோலத்தில் அமர்ந்திருப்பது சரியென்று நினைக்கிறாயா பிரபா..

யாரிடமும் மயங்காத என் மனதை ஒரு பார்வையில் மயக்கிய நீ.. சிலநோடி என்றாலும் நான் கொடுத்த இதழ் முத்திற்கு மயங்கய உன் மனம் எனக்கு தெரியாதா..

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை உன் வசம் வைத்துகொண்டு இந்த உலகத்தை விட்டு செல்ல நினைக்கும் உனக்கு என்னோட கண்ணீர் புரியவில்லையா?

நீதான் எல்லாம் என்று உன்னையே விரும்பிய என் நினைவுகள் உன் உள்ளத்தில் இடம்பெறாமல் போய்விட்டதா?

நேசம் என்ற விதையை என் இதயத்தில் விதைத்துவிட்டு காதல் பயிரை வளரவிட்டு வேடிக்கை பார் பார்க்கிறாயே கள்நெஞ்சம் கொண்டவனே...

என்னுடைய குரல் உன் காதுகளுக்கு எட்டவில்லையா பிரபா பிளீஸ் கண்விழித்து பாருடா.. நீ மற்றவர்காக உயிர்விட துணிந்துவிட்டாய் இல்ல..

சரி நான் போகிறேன் பிரபா.. உன்னைவிட்டு அல்ல இந்த உலகத்தை விட்டு போகிறேன்.. உன் ஜீவனின் கடைசி சுவாசகாற்று இந்த காற்றோடு கலக்கும் என்றால் நானும் உன்னோடு கலக்க வருகிறேன்...

இது சுயநலம் என்றாலும் என் இதயம் அதைதான் விரும்பி கேட்கிறது.. பிரபஞ்சன் உன்னோடு கைகோர்த்து நான் இந்த பூமியில் வாழும் நாட்களை காட்டிலும் நம் சுவாசம் கலந்த காற்றின் மூலமாக நாம் இந்த பிரபஞ்சத்தில் யுகம் யுகமாக வாழ போகிறோம் என்பதே எனக்கு சந்தோசம் தான்..

ஒருவேளை நீ விழி திறந்து பார்க்கும் பொழுது நான் உன்னருகில் இல்லை என்று வருத்தம் கொள்ளாதே பிரபா... நீ சுவாசிக்கும் காற்றில் என் காதலும் என் உயிரும் கலந்திருக்கும்..

காற்றாக இருக்கும் நான்
உன் சுவாசத்தில் கலந்திருப்பேன்..
தென்றலாக உன் தோள் தொடுவேன்..
மழை பொழியும் நேரத்தில் சாரலாக வந்து உன்னை நனைத்து செல்வேன்..
பூஞ்சோலை இருக்கும் மலரின் நறுமணத்தை என் காதலுக்காக உன்னிடம் தூது அனுப்புவேன்..
ஆயிரம் கனவுகளுடன் காற்றோடு கலந்த என் சுவாசம் என்றுமே மயங்கும் உன் பச்சை நிற விழிகளில் மட்டுமே.. நான் மீரா அல்ல.. நீ வருவாய் என்று காலம் முழுவதும் காத்திருக்க... நான் உன் காதலி அதன் விதியை வெற்றிகொள்ள இந்த பிரபஞ்சத்தில் என் சுவாசத்தை கலந்து விட்டேன்..

என் காதலை வெற்றி கொள்ள யாருண்டு இனி இந்த பிரபஞ்சத்தில்..

காதலில் வென்ற
பிரபஞ்சனின் காதலி
சந்தியா ஸ்ரீ...

Monisha akkavin avaninri oranuvum பிரபஞ்சன் கதாபாத்திரத்திற்கு நான் எழுதிய காதல் கடிதம்...
 
#5
@Premalatha

VNE நட்புகளுக்கு இந்த கடிதம் ..

மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்த நட்பு எங்களுடையது.. தூங்குற, சாப்பிடும் நேரம் தவிற இங்கையே ஆட்டம்..

கதைக்கு மட்டும் fantasy இல்ல எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் அந்த காலம் வசந்தகாலமே ..

காதலை பார்க்காத காதலி எப்படி ஏங்கி போவாளோ அப்படி ஏங்கி போவோம் எபி வரவில்லை என்றால்.. வந்த பிறகு keyboard உடையுற அளவுக்கு மேசேஜ் போட்டு சண்டை போடுவோம்.. இதுல ஷியாம், மகா என்று ஆர்மி வைச்சு நீயா நானா வேற .. (கோபிநாத் மட்டும் மிஸ்ஸிங்😝)

கலாட்டாக்களும், சண்டைகளும், சிரிப்புகளும், நையாண்டிகளும், வம்புகளும் அலாதி அலாதி..
கதை என்பதையும் தாண்டிய ஒரு உணர்வு. கதை முடிந்து வெகு நாள் ஆகிவிட்டது. இருந்தாலும் இப்பவும் நியாபகம் வரும் போது எல்லாம் அந்த திரெட்டுக்கு போய் பார்ப்பேன்.. எங்க கலாட்டாக்களை.. என்ன தான் சொல்லு இனிமையான நினைவுகளை அசை போடுவதிலும் ஒரு சுகம் தானே😍

இத்தனை விதமான உறவுகள், நட்புகள் கிடைத்து இருக்கு என்றால் அதற்கு முழுக்க முழுக்க SM தளம் மட்டுமே காரணம்.. எந்த கல்லூரிகளிலும் கிடைக்காத சுதந்திரம் இந்த SM கல்லூரியில் உண்டு.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. நாங்க அடிச்ச கூத்து கொஞ்சமா.. நஞ்சமா.. storyக்கு என்று போடும் thread 100 பக்கங்களை எல்லாம் சுலபமாக தாண்டி VNE chat என்று தனியாக ஒரு thread திறந்து அதையும் முடிப்போம் என்றால் எங்க கல்லூரி எப்படி திறம்பட வேலை செய்து இருக்கும் .. அடுத்த பதிவு வரும் வரை தொடரும் எங்கள் அரட்டை..🤪🤪

கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாள் மாணவர்களுக்கு எப்படி ஒரு துயரம் இருக்குமோ அப்படி இருந்தது VNE final episode.. அன்று

இந்த தளத்தின் மேல் ஏற்பட்ட காதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. அது தீராத காதலாக மாறியது.. இந்த காதல் இத்தனை சொந்தங்களை தந்தது..SM என்று சொல்லும் போது எல்லாம் Shyam Maha உடைய initial ஆக தான் எனக்கு தோன்றும் அதனாலேயே எனக்கு இன்னும் கொஞ்சம் கூடும் லவ்வு 😍😍

I miss you all darlings 😘😘😘
Love you all 💖💖💖

@lakshmi2407 @Maha @Puvi @Suvitha @அழகி @Manikodi @Selva sankari @banumathi @Shaniff @ORANGE @Aparna @vairam @Sanshiv @shanthinidoss

My dear microbats
@Kavyajaya @Riha @bhagyalakshmi

Kavya, pradeepa, Divya இவங்களோட id எல்லாம் இப்ப மறந்துவிட்டது.. தெரிஞ்ச சொல்லுங்கள் பா..
 
#6
@Premalatha

மன அழுத்தத்தை குறைப்பதற்காக எங்க ஊரு வெள்ள கார டாக்டர் கதை படிங்க, நடை பயிற்சி செய்யுங்கள், யோகா செய்யுங்கள் என்று நிறைய சொன்னார். நமக்கு உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது தான் ஈசியாச்சே அதானல் கதை படிக்க வந்தேன். வந்த இடத்தில் வந்தது காதல்.. ஆம் SM தளத்தின் மீது தீராத காதல்..

ஒரு காலத்தில் காலையில கண் விழித்து பார்ப்பதில் துடங்கி இரவில் தலையணைக்கு அடியில் போனை ஓளித்து வைக்கும் வரை குத்தகைக்கு எடுத்து இருந்த SM site க்கு தான் இந்த காதல் கடிதம்..

Chat என்பது எது வரை..
போனில் charge இருக்கும் வரை..

சாப்பாடு என்பது எதுவரை
புள்ளைங்க பசி என்று சொல்லும் வரை

தூக்கம் என்பது எதுவரை
புருஷர்கள் முறைத்து பார்க்கும் வரை.. ஓஓஓஓ

எங்க காதலும் ராதா கிருஷ்ணருக்கு நிகரான காதல் காவியம் .. எப்படியா ? எப்போது பிருந்தாவனம் (காம்யவனம் புது பேரு தென்றல் சொன்னா) போல கவலைகளை மறந்து காதல் இன்பத்தில் திளைத்து அல்லவா இருப்பேன் என் கனவு நாயகர்களுடன் ..

கிருஷ்ணருக்கு மட்டுமா கோபியர்கள்.. எனக்கும் எத்தனை கேபியர்கள் (male version கோபியர்கள் 😝😝)... ஒன்றா இரண்டா.. ஆசிரியர்கள் எல்லாம் போட்டா போட்டி போட்டு கொண்டு எனக்கு பித்து பிடித்து ஏர்வாடிக்கு அனுப்பிய திருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு அல்லவா இருந்தார்கள்.. கனவு நாயகன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது .. என்ன செய்ய பதின் பருவத்தில் வரவேண்டிய காதல் இப்படி பெரிளம் பெண் ஆகி வந்து என்னை இன்பமாக்கியது..🤦🏽‍♀️🤦🏽‍♀️ என்று நான் இருமாப்பில் இருந்தேன்..

மன்மதனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை இப்பொழுது எல்லாம் எனக்கு கனவு வருவதே இல்லை .. இந்த @vanisha அழுகாட்சி கதையா எழுதுது.. பிரௌனியை எவ்வளவு மிஸ் பண்ணுறேன் தெரியுமா.. என் பசலை நோயை பற்றி இவர்களுக்கு துளியும் கவலை யில்லை.. ஹிரோவ கூட்டிகிட்டு வா என்றா ஒன்டறை கண்ணை கூட்டிகிட்டு வராங்க... இதை கேட்க இந்த @smteam பிரியங்காவும் வரதில்லை.. வந்தா எங்க பார்த்திபனை கேட்பார்களோ என்று sss ஆவது மட்டும் தன் வாழ்நாளின் முக்கிய குறிக்கோள் போல இருக்கிறார்கள்..

சரி வனி தான் இப்படி என்றா இந்த அழகி ஒரு வெள்ளைகாரனை கொண்டு வருது .. அவன் கூட நான் டூயட் பாடினால் பாலும் டிக்காக்‌ஷன் போல இருக்கும் ☺️☺️ நம்ம திராவிட கலரில் ஒன்னும் இல்ல..

செல்வா மாஸ் ஹிரோவ கூட்டிகிட்டு வந்தாங்க என்று குதுகலமாக இருந்தா கடைசியாக காத்து போன பலூன் போல ஆகிடுச்சு எபிலாக்..☺️☺️

இந்த காதம்பரி பொண்ணு கடைசியாக தான் ஹிரோவ கண்ணுல காட்டின .. கேட்ட பீல் பண்ணுங்க கா ஏன் பார்க்கனும் என்று சொல்லுற.. 🙄🙄 என் கவலை அவளுக்கு எங்க புரிய போகுது..

பசலை நோயில் இருந்து என்னை காப்பாற்ற ஒரே ஒரே வழி தான் உண்டு.. அனைத்து ஆசிரியர்களும் நோன்பு இருந்து விரதம் கடைபிடித்து பக்தி மயமாக ஹர ஹர மகாதேவகி நாமம் சொல்லி கதையை எழுதினால் மட்டுமே என் பித்து தெளியும்..

ஷியாம் green வாழ்க!
பிரௌளி கிஸ்சோலாஜி வாழ்க!
குரு கலேரி வாழ்க!
மணி பாயாசம் வாழ்க!
வெங்கி ஜீரா வாழ்க!
சாரதி மைதா வாழ்க!
சதா கேசரி வாழ்க!

காதல் காதல்
காதல் இல்லையேல்
வாழ்வில் ஏது ... (உங்களுக்கு பிடிச்ச மாதிரி fill பண்ணீக்கோங்க 😬😬)

Love 💖
Prems 😍😍

Just for fun guys.. please don’t take kattai .. 😬😬😬
 
#7
@Husna

இது லவ் லெட்டரா இல்லையானு தெரியாது பட் இந்த லெட்டர் ஜென்னித்தா என்கிற சாக்ஷிக்காக....

ஜென்னித்தா நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு பொண்ணு இருப்பாங்களானு எனக்கு தெரியல பட் ஒரு பொண்ணு உங்களை மாதிரி தான் இருக்கணும் கிட்டத்தட்ட ஒரு ரோல்மாடல் நீங்க :love::love:

பல பெண்கள் பல வகையான பிரச்சினைகளை சந்தித்து தோல்வியடைந்து துவண்டு போய் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போய் இருப்பாங்க

ஆனா நீங்க எப்படி எப்படியோ பல இன்னல்களை கடந்து இன்னைக்கு ஜென்னித்தாவா இருக்குறதைப் பார்த்து நான் மொத்தமாக வீழ்ந்துட்டேன்:giggle::giggle:

பார்வை இல்லாமல் இருந்த போதும் சரி இப்போ எல்லார் முன்னிலையிலும் நிமிர்வாக நிற்கும் போதும் சரி நான் உங்களை பார்த்து வியப்படையாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

உங்களோட ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு விதமான செய்திகளை தாங்கி இருக்கும் உங்களோட ஒவ்வொரு பேச்சும் ஒரு தனி அர்த்தத்தை எனக்கு உணர்த்தும்

ஒரு கற்பனை என்கிற நிலையைத் தாண்டி நான் நிஜமாகவே மெய் மறந்து ரசித்த ஒரு கதாபாத்திரம் ஜெனித்தா!

எனக்கு சாக்ஷியாக நீங்க மனதில் நின்றதை விட ஜென்னித்தாவாக தான் இப்போ வரைக்கும் மனதில் பதிந்து இருக்குறீங்க எப்போதும் இருப்பீங்க!

உங்க மேல பல பேர் காதல் வைத்து இருக்கலாம் ஆனால் நான் வைத்த அந்த ஆழமான பாசம் வார்த்தைகளால் சொல்ல முடியாது இட் இஸ் அன் கன்டிஸனல்!
:giggle:;)


இந்த ஜென்னித்தா மேல இப்படி ஒரு கரைகடந்த காதல், அன்பு, பாசம் என எல்லா உணர்வுகளையும் வர வைத்த ஆத்தர் ஜி மோனி சிஸ் உங்களுக்கு தான் இது!;);)

லவ் யூ சிஸ்!!!!:love::love:

எத்தனை கேரக்டர் வந்தாலும் எத்தனை புதுப்புது கதைகள் வந்தாலும் எனக்கு எப்போதும் ஜென்னித்தா மேல தான் லவ்வோ லவ்!!! :giggle::giggle:;)


இது தான் நான் எழுதிய லவ் லெட்டர்
பி.கு: எனக்கு இப்படி தாங்கோ லவ் லெட்டர் எழுத தெரியும் (முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்:LOL::ROFLMAO:! வாட் கேன் ஐ டூ?) அதோட இதற்கு ரிவார்ட் எல்லாம் நான் எதிர்பார்க்கலைங்கோ;):p:giggle:
 
#8
@Maha

காதல் கடிதம் 💖🤩

இந்த நிமிடம் தோன்றிய என் அன்புக்கும் மரியாதைக்குரிய கடிதம் இது...

காதல்....

ஒரு பெண்ணுக்கு ஆணிடம்..
ஆணுக்கு பெண்ணிடம் தான் காதல் வரணுமா...
ஏன் பெண்ணுக்கு பெண் மீதும், வரும் காதல்...
வரலாம் தப்பு இல்லை...

அதற்க்கு உதாரணம் இந்த sm (superior motivator )team நாயகி பிரயத்துக்குரிய ப்ரியங்கா சஷிமா.
இது பில்டப்மும் இல்ல பில் பாக்கெட்டும் இல்லை.. இந்த நிமிடம் மனதில் இருந்து வரும் உண்மை...

லவ் லெட்டர் எழுதணும் நாம உயிர் இல்லாத இந்த கற்பனை உருவங்களுக்கு லவ் லெட்டர் எழுதுவதை விட

எனக்கு...

உயிர் ஓவியமாக இந்த சைட்டை உயிரோட்டமாக நடத்தி கொண்டு,

பல முகம் தெரியாத நட்புகளுக்கு தான் எழுதும் இடத்தை கொடுத்து, தள்ளி நின்று,
இந்த நீயும் எழுதி பழகு என ஒரு ஆசிரியராக...
பல எழுத்து போட்டிகள் வைத்து அதற்க்கு பரிசும் கொடுத்து,
ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்டிவ் பெண்ணாக முன் நின்று ...


மண்டை ஒடைச்சிக்காத குறையாக சில நேராக்களில்சண்டை, பிரச்சனைகள் வந்தாலும், கடையை இழுத்து சாத்த நினைக்காம ஒரு அன்னைக்குரிய அன்போடு எல்லா முடிச்சுக்கும் பெவிகால் போட்டு ஒட்டாத குறையாக ஒட்டி ஒரு கை தேர்ந்த கார்பெண்டர்ராக...

(அய்யோ இதை படிச்சு சுத்தி வைச்சு அணி அடிக்க வராம இருந்த சரி சஷி பேபி மன்னிச்சு 🥴)

இன்னைக்கு கூட இருக்கும் உறவே ரத்த கண்ணீர் விட்ட கூட, என்ன..? தக்காளி சட்னியா டி அதுன்னு கேக்கும்😥
கலியுகத்தில், ஒரு பிட்டு பிரட் கூட புட்டு கொடுக்காத பிராடு பிரண்டு, பேமிலி தான் யா சுத்தியும் இருக்கு 🥶

எழுதும் தன் பணியை நிறுத்தி தான் இடத்தையும் விட்டு கொடுத்து,

இந்த புகுந்து விளையாடு உன் திறமையை வெளி கொண்டுவான்னு யாரு தூக்கி விடுறாங்க,

இங்கு எத்தனை கவிஞர்கள் கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்... பல பேரோட கவலை, பிரச்சனைகளை மறக்க
(அவங்களுக்கே ஆயிரம் பிரச்சனை அதை ஒரு ஓரம் வைத்து)

ஒரு உண்மையான தோழியாக, சகோதரியாக, மகளாக , அன்னையாக அவங்க இந்த சைட்டை நடத்தி கொண்டு போறாங்க...

இது போல உரிமை, அன்பு, ஊக்கம் அவங்களை திட்டினா கூட ஒரு கடினமான வார்த்தை கூட பதில் குடுக்காத ஒரு மென்மையான பெண் அவங்க..
இது மாதிரி ஒரு உரிமையான சைட் வேற எந்த சைட்டிலும் பார்க்க முடியாது என்பது என்னோட என் எண்ணம்.

சொல்லுங்க டார்லிங்ஸ்...
இப்போ,சொல்லுங்க யாரு மேல காதல் வரும், யாருக்கு எழுத தோணும்...
காதல் கடிதம் எழுத சொன்னவங்க மேல தானே வரும்.
அதை தான் நான் இப்போ செஞ்சு இருக்கேன்.
சஷிமா இதையே உங்களுக்காக நான் ஏழுதிய காதல் கடிதம்மாக பவிச்சு குற்றம் குறை இருந்த மன்னிச்சு என் லவ் லெட்டரை ஏற்று கொல்லுவிங்களாம் சிரிப்பழகி 😜🙏🙏
லவ் யூ பேபி மா, 🤩🤩🤩😍😍💖💖💃💃
 
#9
@Selva sankari

அன்புள்ள மன்னவனே… ! ஆசைக் காதலனே… !

மூளையை எவ்வளவு கசக்கினாலும் சினிமா பாட்டுதான் வருது… நான் என்ன செய்ய 🤔🤔🤔
அன்பே… பிரௌனி… உனக்கு நான் எழுதும் தமிழ் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் என் உணர்வுகள் நிச்சயம் புரியும். :love::love:
அன்பே…
ஆருயிரே…
அருமருந்தே…
அடிக் கரும்பே…
மானே…
தேனே…
மணியே…
நிலவே… என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்குத் தெரியவும் இல்லை, தோன்றவும் இல்லை. :):)

மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா… என்று ஏங்கிப் பாட்டெழுத உனக்கு கருகரு மீசையும் இல்லை. (எல்லாம் பிரவுன் தான்) :p:p:p

:confused::confused: என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என யோசித்து யோசித்தே நேரம் கழிகிறது… என் ஃபோனில் சார்ஜும் குறைகிறது.

எதுவும் தெரியாது யோசித்த போதும், உன் அன்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு நான் எழுதும் மடலை நீ ரசிப்பாயா? அல்லது வெறுப்பாயா… ? எதுவும் புரியாமல் பத்தாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட்டின் போது பரிதவிக்கும் நெஞ்சம் போல பரிதவிக்கிறேன். :(:(

சரி… போதும்… கதை பேசாமல் காதலைப் பேசலாம் வா… :D:D

எங்கே…? எப்போது… ? எப்படி… ? நீ என்னுள் நுழைந்தாய் என, சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல எனக்குள் கேட்டு, ஆற அமர அசை போடும் மாடு போல கடந்த நாட்களின் நினைவுகளை அசைபோட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். :love::love:


நான் படிக்கும்
நாவலில் வரும்
நாயகியை மட்டும்
நயமாய் ரசித்திருந்தேன்…
நானும் இருக்கிறேனடி என்று
திரும்பிப் பார்க்க வைத்து
திகைக்க வைத்தாய் என்னை…!
திரும்பும் திசையெல்லாம்
திருஉறுவாய் நின் பிரகா(ஷ்)சம் கண்டு
திணறித் தவித்து நின்றேன்.

எது ஈர்த்தது என்னை…?
எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்…
உன் விழிகளில் வழிந்த ஏக்கம் மிகு காதலா...
உன் இதழில் மலரும் புரியா பாஷையா…
அந்த கிறுக்கியை(சிமி) கரெக்ட் செய்ய நீ படும் துயரங்களா…
ஆகமொத்தம் எனக்குள் விழுந்து விட்டாய் புரியாமலே…


உயிர் விடும் வரை உன்னோடுதான்…
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்…
நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…!

எனக்குப் பிடித்த வரிகளாகிப் போயின...

இறுதியாக மிகுந்த வெட்கத்துடன் ஒன்று.

முத்தத்தில் வித்தகனாம் நீ…
மொத்தமாகப் பேசுகின்றனர் சைட்டில்…
சித்தத்தில் உனை ஏற்றி…
பித்தத்தில் மூழ்கும் எனை மீட்க…
நித்தமும் நினைவில் இனிக்கும்படி…
சத்தமாய் ஒரு முத்தம் பதி… 🙈🙈

வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும். நம் காதல் வரலாறை எழுதட்டும். :cool:

காத்திருக்கிறேன் நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன்.
காதல் என்றும் வாழட்டும். அதில் நாமும் வாழ்வோம்.
இப்படிக்கு அன்புக் காதலி…
செல்வா...
 
#10
@Sara saravanan

காதல் கடிதம் எண் : 1

ஆயிரமாயிரம் கிரஷ்கள் டெய்லி என்னை கிராஸ் பண்ணி போனாலும் வித விதமா கிஸ்ஸடிச்சு என் நெஞ்சுல பெர்மணன்ட் டாட்டூவா மாறிப்போன பிரவுன் கலர் மன்னா…, பிரேமலதாவின் அண்ணா…., கபூர் கண்ணா….,

நான்தான் மனசை உன்கிட்ட இழந்துட்டு சுகவீனமா இருக்கேன்… நீயாவது நல்லா இருக்கியா…?

இருப்ப ,இருப்ப….. நித்தம் ஒரு வித முத்தம்ன்னு சித்ரா கூட நல்ல குஜாலாத்தான் இருப்ப…. இருந்தாலும் ஒரு தவிப்பு. அதனால் செய்கிறேன் இந்த காதல் அறிவிப்பு…..

இந்த லவ் லெட்டர ,தந்தியா பாவிச்சு உடனே வந்து என்னை பாரு…. இல்லைன்னா எனக்கு இறங்காது சோறு….

கப்பூர் கட்டி வெல்லம்,

எப்படிடா இருக்கடா என் செல்லம்…
உன்னைக் காணாம நெஞ்சுல இப்போ பள்ளம்…
கர்நாடகாவில் மழை பெய்து காவிரியில வெள்ளம்….
நீ சித்ராவுக்கு செருப்பை கழட்டி, காலில் மருந்து போட்டதில் , இருந்து காணவில்லை என் உள்ளம்…


நீ தலை முதல் பாதம் வரை பிரவுன் கலராய் இருப்பதினால் , ஃபில்டர் காஃபியை தவிர வேற எதுவும் குடிப்பதில்லை….
நுரைத்து வரும் பிரவுன் காஃபி நுரையிலே, நீ தெரியிற நினைவிலே….
புளோரிங்கை பிரவுன் உட்ட்டா மாத்தலாம்னு பார்த்தா ,வீட்டு ஓனர் வெளக்கமாத்த கொண்டு மாத்திடுவான் போல.
என் கலருக்கு எடுப்பா இல்லைன்னாலும் ,காதல் துடுப்பா இருக்கட்டும்னு சேலை,சுடிதார்,ரெண்டு ராசாத்தி நைட்டின்னு, என் ராசாவுக்காக பிரவுன் கலர்ல வாங்கி போட்டிருக்கேன்…
உன்னை வச்சு 2.0 எழுதுவாங்கன்னு ஆசையா இருந்தேன் பாத்து…,
மணி மட்டும் வந்தான் நேத்து,
லெக் பீஸ் சாப்பிட போயி , வெறும் குஸ்காவை மட்டும் பார்த்தது போல ,ஒன்னும் கிடைக்காமல் ஏங்கி இளைச்சு போனேன் நீர்த்து…


சரிடா தங்கம் இதோட நான் நடைய கட்டுறேன் வரட்டும் காத்து….


காதல் கடிதம் எண் : 2

டார்லிங் வநி…,
என்னம்மா படுத்தி வைக்கிற நீ….
ரக ரகமாய் காதலிக்க வைப்பது உன் பாணி…
தேனாய் அதில் காமெடியும் கலந்து, நானாகி விட்டேன் தேனீ….


டார்லிங் வநி…,
கடிதத்தில் அன்பை கொட்டிட்டென் நாணி….
அலட்டிக்காம என் அன்பை ஏத்துக்க வாநீ…
இதுக்கு மட்டும் பதில் சொல்லாம போ , நீ…
உன்னை கட்டி தூக்க மலேசியா எடுத்துட்டு வரேன் கோணி…
வரட்டி தட்ட தேவை சாணி…
கிரிக்கெட்க்கு தல நம்ம தோனி…
என்னைக்கும் நீ தான் என் இதய ராணி…


டார்லிங் வநி…,

நானும் எனது அன்பை பல இடங்களில் , பல முறை கூறி விட்டேன்… புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கிறாய்…
எட்வர்ட் பன்னை(bun) காட்டி என்னை ஜாமாக மாற்றினாய்….
பிரவுனி கப்புவை காட்டி மப்பு வை ஏற்றினாய்…
வெட்டு மாமாவை காட்டி அப்பியாய் மெட்டு கட்டி பாடினாய்…
ஜம்பு வை காண்பித்து மெய்யாய் வம்பு செய்கிறாய் , உன் காதல் அம்பெய்தி….
இன்னும் அதிகமாய் வசப்படுகிறேன் நான்…
குறும்புக்காரி, முட்டை முழி கொண்டு நீ வைத்திருக்கும் வாட்சாப் டீபி க்கள்….
ஃபேஸ் புக்கில் ஆங்காங்கே தலை தூக்கும் உன் காமெடி சம்பாஷனைகள்…
என உன்னை குறித்த ரசனைகள் நீள்கின்றன என் பட்டியலில்…
வோ ஐ நீ டார்லிங் வநி…


காதல் கடிதம் எண் : 3

சொந்த பேரு ஒன்னு, புனைப் பெயர் ஒன்னுன்னு இருந்தாலும் நான் உங்களுக்கு வச்ச பேரு தல…

Sm சைட்டோட தல…
உண்மையில் நீ ஒரு அழகு சிலை…
உங்க அன்புக்கு ஏது விலை…


தல இருக்கும் போது பல இடங்களில் வாலாடி , ஏற்பட்ட செய்கூலி சேதாரம் எல்லாத்தையும் சீர் செய்யும் உண்மையான தல…
நம்ம தளத்தின் சுதந்திரம், எழுத்தாளர்களின் வளர்ச்சி, ரவுண்டு கட்டும் வெளியூர் உள்ளூர் பஞ்சாயத்துகள், இடையறாது எபிஸ் கேட்க்கும் காத்தாடி குரல்கள் என அனைத்தையும் தூக்கி சுமக்கும் ,
எங்க தல சஷி… ,
எப்பவும் மல்டி டாஸ்கில் பிஸி…
தினம் தூங்க ஆகிடுது நடுநிசி…
ரசிகர்கள் ரொம்ப நாளா வெயிட்டிங் வித் பசி…
ஏன்னா உங்க எழுத்து அலாதியான ருசி…


தல ,நான் சைட்டை தேடி வந்தது டார்லிங் வநி க்காக…
வீணையடி நீ எனக்கு முதல் ஆன்லைன் சீரிசாக அறிமுகம்…
ஒவ்வொரு எபிசோட் க்கும் மிரட்டி வழிப்பறி பண்ணும் உங்க ரீடர்சை பார்த்து முதலில் மெர்சலாயிட்டென்…
அப்புறம் தேடல்… உங்க மற்ற படைப்பை தேடி தேடி படிச்சேன்… அப்பப்பா அற்புதமாய் இருந்தது அந்த பயணம்…
கம்பனி ஓனர் நீங்க, ஆனா இங்க உங்களை நீங்க புரஜெக்ட் பண்ணிக்காம ,
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் ,
எல்லாரும் படிச்சதும் மயங்கி விழுந்துரனும்னு மத்த ரைடர்சை முன்னிறுத்தினீங்க…
அங்க விழுந்து தான் பெர்மிஷன் கேட்க்காம கதை எழுதின என்னை அரவணைச்சுகிட்டீங்க…
எக்ஸ்குளுசிவ் ஆத்தராக்கி, ஒரு மாமாங்கமாய் ஒரே கதையை எழுதினாலும் ,ஒரு முறை கூட கோவித்து கொள்ளவில்லை…


லவ் யூ தல… இது நீங்க எனக்கு தந்த இடத்துக்கு மட்டுமில்லை… sm ஸைட்டை ஒரு குடும்பமா, ரீடர்ஸ் ரைட்டர்சை பாசமா வழிநடத்தி போறதுக்காக பொங்குன பாசம்…
பேக்கிரியை ஆரம்பிச்சதுல இருந்து பன்னு வேணும் ,வெண்ணெய் வேணும்னு நச்சரிக்கிற மாதிரி, டெய்லி நாங்க எங்க போயி ஏழரையை கூட்டி வந்தாலும் , எங்களுக்காக தனியாக நின்று போராடி , பாசத்துக்கு முன்னாடி நான் பனி,பகைக்கு முன்னாடி புலி nnu நிரூபிக்கும்,
எங்க தல சஷி….
எனக்கு நீங்க தல யாய் கிடைத்ததில் மீ செம குஷி…


லவ் யூ தல…


காதல் கடிதம் எண் :4

இவள் என் லேட்டஸ்ட் கிரஷ்…
அழகா கதை எழுதுறன்னு நினைக்கல…
அம்சமா தமிழை கத்து வச்சிருக்கன்னு நினைக்கல…


ஆனா இதுலாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு… காது ம்மா..

யெஸ்… அவங்க பேரு காதம்பரி…
கற்பு நிலை யாதெனில்… என்னா நாம பார்க்காத கருப்புன்னு ,அலட்சியமா காலடி எடுத்து வச்சேன்…
மரண அடி… சாய்ச்சுப்புட்டா மச்சான்…


படிச்சு முடிச்சதும்,தமிழுக்கு சாபம் விட்டேன்..
நான் எழுத ஆரம்பிச்சதும் டமுக்கு டக்கான்னு குத்தாட்டம் போடற தமிழ், காதம்பரி க்கிட்ட அழகா கிளாசிக்கல் ஆடினத பார்த்த வவுத்தெரிச்சல் தான்…


நிறைய உயரங்களை சீக்கிரம் தொடப் போற sm சைட்டொட செல்ல குட்டி…
இன்னும் என் ரிவியூ வை காதம்பரிக்கு தரல… என்னை யாருன்னே கூட தெரியாது அந்த புள்ளைக்கு ஆனா, அதுக்காக எல்லாம் என் அன்பை மூடி வைக்க முடியுமா…
இன்னும் கனலை விழுங்கவில்லை , நேரம் கிடைக்கும் போது விழுங்கி விட்டு காதலை கக்க காத்திருக்கிறேன்…


காதும்மா , ஆர் யூ ஓக்கே பேபி…
ஐ யம் கமிங் சூன் டா…


லவ் யூ ஆல் டார்லிங்ஸ்….

இத்தோட என் கடிதங்கள் நிறைவு பெறுகிறது…
கண்ணனுக்கு மீரா…
காதலை சொல்லி விட்டாள் இந்த சாரா…
 
Status
Not open for further replies.

Sponsored

Latest Episodes

Advertisements

Top