• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர்- Compilation

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Maha

?காதல் ? கடிதம்?

உண்மையான காதலுக்கு மதம், பணம், அழகு இரண்டாம் பச்சம்...

பல வருட காதல் இருவருக்கும்
வேறு வேறு மதம்...

பதுமையாக அவள் அழகி... ஒரே மகள் இருப்பது OMR ரோடு பீச் மாளிகை...

மனம் கவர்தவன் இருப்பது எதிரே இருக்கு குப்பம், குடிசையில் காலம் கடந்து பிறந்தால் வயதான பெற்றோர் ...

குடிசை வீட்டில் தொடங்கிய அவன் காதல் கை கூடி வரும் வேளையில் அவனுக்கு அழைப்பு வந்தது... அவன் தந்தையின் விருப்பம் , அவன் விரும்பி தேர்வு செய்த ராணுவத்தில் இருந்து ...

காத்திருப்பேன்... நீ என் உயிர் வரும் வரை, அனுப்பி வைத்தால் பிரியாவிடையுடன் அவன் பைங்கிளி...

கிளிபெண்... காத்தும் இருந்ததாள் இலவு காத்த கிளி போல வருடங்கள் ஒன்றா, இரண்ட எல்லாம் கடந்து...

காதலன் வர முடியாத சூழ்நிலை... ராணுவத்தில் கெடுபுடி காதலியின் நினைவோடு தவித்து தொடர்பு கொள்ள முடியாது நிலை.

எல்லையில் பதட்டம், கடமை காதலை தூரம் தள்ளி வைத்து, கடமை முடித்து மிகவும் காதலோடு, ஆவலோடு தான் உயிரானவளை காண ஓடோடி வந்தான்...

கம்பீரமான நம் தேச எல்லையில் காவல் காக்கும் வீர ஆண்சிங்கம்...

என்ன கொடுமை...? அவனை காண மறுத்துவிட்டாள் அவன் காதலி...?

தவித்து போனான் வீரன்... தொடர்ந்து இரண்டு நாள் முயற்சி செய்தும் அவனை காண மறுத்துவிட்டாள் பெண்...

காரணம் புரியாது பித்து பிடித்த நிலை அவனுக்கு, அவள் பெற்றோரிடம் கேட்டும் பதில் இல்லை சோகம் நிறைத்த அவர்கள் முகமே கண்முன்னே...

பிடிவாதமாய் கதவை உடைத்து உள்ளே சென்றவனுக்கு பேரதிர்ச்சி...

அழகு பதுமையாக இருந்த தான் காதலி முகம் பாதி வெந்து சிதைந்த ரூபத்தில் ...
காலேஜ் லேப்லில் பயிற்சியின் போது தவறான, கவன சிதறலில் வெடித்து கோர விபத்து...

இவனை பார்த்தது முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழ..

தாங்கவில்லை அவனுக்கு ஓடி சென்று கட்டி தழுவி அணைக்க துடிக்க..

அழுகை நிறுத்தி நிமிர்ந்து நின்று...

"வேண்டாம் தூர போங்க என கத்தினாள்..? "

"ஏன்....? "

"இனி... நான் உங்களுக்கு தேவையில்லை என்னாலே இந்த அவலச்சணமான முகத்தோடு உங்க கூட வாழ முடியாது...? "

"போங்க வெளியே... நீங்க வேற அழகான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும் அதை நான் பாக்கணும் இது தான் ஏன் முடிவு..? " என சொல்லி திரும்பி நின்று வாய் பொத்தி அழ...

அவள் அருகில் சென்று வலுக்கட்டாயமாக தோள் பற்றி...

"ஏய்.. இங்க பாருடி நான் உன் முகத்தை காதலிக்கல உன் மனசை தாண்டி நேசிச்சேன்... இத்தனை வருடம் உனக்கனவே காத்து இருந்த நான் என்ன லூசா...? "

"என்ன நெனச்ச என்ன பத்தி...? "

"பொழுது போகணும்ன்னு உன்னை காதலிக்கல... என் ஒவ்வொரு பொழுது உன் மடியில் உன்னோடு தான் விடியணும்ன்னு...,
நீ மட்டும் தான் வேணும்ன்னு காதலிச்சேன், அழிய போற உன் அழகை பார்த்து இல்லடி. உன் அழகான மனசை பார்த்து ..

"சரி.... எனக்கு ஒரு பதில் சொல்லு இதுவே நான் இப்போ என் காலு கை போயி வந்து இருந்த... அப்போவும் நீ இப்பிடி என்னை வேண்டான்னு சொல்லுவியா..இது தன் உன் பதிலாக இருக்குமா சொல்லுடி...? "

"இல்ல இல்ல.. !"என் உயிர் போனாலும் சொல்ல மாட்டேன் வாய் விட்டு அழுத்தவள்..."

"நீங்க என் உயிர். செத்து போயிடுவேன் டா..."

"ஹீம்.. அதுவே தான் எனக்கும்இப்போ புரியுதா, நீ இல்லனா நானும் செத்துருவேன் டி.."

எனக்கு உன் முகம் முக்கியம் இல்ல அதை சரி பண்ணிக்கலாம்ல்ல, இல்லனா அப்பிடியே, உன் கூட நான் வாழ ரெடி டி..."

"எனக்கு நீ மட்டும் போதும் டா... என்னை வேண்டாம் சொல்லாதே..?
ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக உன்னை நினைத்து கனவோடு வாழ்ந்துட்டு வரேன் டி...

நமக்கு இப்போ ரெண்டு குழந்தை கூட இருக்கு தெரியுமா.. அப்பிடி எல்லாம் உயிரை கையில் பிடிச்சு வாழ்வா சவானு வாழ்ந்துட்டு வந்து இருக்கேன்...

இந்த ரெண்டு நாளும் என்னை கொள்ளாம கொன்னுட்டே டி நீ...? என்று கண்ணை அழுத்த துடைக்க..

ஓடி வந்து அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கதறி விட்டாள் பெண்..

"Iam sry..."

நீங்க இல்லனா எனக்கு மட்டும் என்ன இருக்கும்...

என் முகத்தை பார்க்க எனக்கே ஒரு மாதிரி இருக்கு...

எங்க என்னை நீங்க வெறுத்துட்டா அந்த வேதனை என்னை கொள்ளமா கொன்னுட்டு இருக்கு டா ..

போதும் டி, நீ அழுதது இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வர கூடாது வா என்று சிரித்து கை விரிக்க....

கட்டி பிடித்து இருந்தவள் இன்னும் அவனை இறுக்கி காட்டி கொண்டாள்.
அவள் முகம் எங்கும் முத்தமிட்டவனுக்கு அவள் அழகு தெரிய வில்லை.. மாறாக இத்தனை நாள் பூட்டி வைத்தஅவன் காதல் தான் முட்டி கொண்டு வந்தது...

பல வருடங்கள் கழித்து....

ஒரு நடுக்கத்தோடு... தான் இத்தனை ஆண்டு தன் மனைவி, குழந்தையோடு வாழ்த்த இனிய வாழ்க்கையை... சுருக்கமாக காதல் கடிதமாக, தங்கள் காதல் கதையை, கதையாக அந்த டைரியில் எழுதியதை பிரித்து படித்து கொண்டு இருந்தார் .

(இப்போ நீங்க மேல ?இவ்வளவு நேரம் படிச்சது தான் )


இன்று 80 வயதை தொட்ட பின்னும் பசுமையாக இருந்தது.
மீண்டும் மீண்டும் படிக்கும் போதும் இன்றும் காதல் பொங்கியது இந்த கிழவனுக்கு.
மடியில் தூங்கும் மனைவியின் தலையை கோதி கொண்டே தன் பசுமையான காதல் நினைவில் திளைத்தான் அந்த காவிய காதலன், ராணுவ வீரன்.....
காலம் பல கடந்தாலும் காதலுக்கு ஏது வயது... நீங்க பண்ணுங்க? லவ் ? ராசா.... ??

???????
சும்மா ஏதோ தோணியது தூங்கி வழிஞ்சு கிட்டே ஏழுதி போட்டேன் குற்றம் குறை தவிர்த்து சும்மா ஜாலியா படிங்க... ????
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Premalatha

“கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல
உன்னை தூங்க விடாமல் செய்வதே”

என்று அப்துல் கலாம் ஐயா சொல்லி இருக்காங்க அந்த மாதிரி என்னை தூங்க விடாமல் இம்சித்த இம்சை அரசிக்கு தான் இந்த மடல்...

இது காதல் மடல் அல்ல ..
கண்டன மடல்...

அன்பே சாரா..
நீயென்ன வேதியலின் கோணார் உரையா..
இல்லை காதலை இழுக்கும் புல்டோஜரா..
நீ காதல் காட்சிகளை எழுத போகவேண்டாம் போரா போரா..
வந்தா தானே உன் GEMக்கு... ??

என் கிருஷ் டார்லிங் போல வருமா..

அவன் நடந்தால் அதிரடி
அவன் பேச்சு சரவெடி
அவனை சுற்றும் காதல் கொடி நான்

அவன் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் யாரு அவனை ரசிக்கும் முத்துச்சரம்

அவன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணால் பார்த்தால் கிடைக்கும் பேட்டா (ஹிந்தி)

அவன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
அவனோ உன்(சாரா) கையில் பொம்மலாட்டம் ??

அப்படிபட்ட என் கிருஷ்யை நீ கருஷ் பண்ணுற.. நான் எத்தனை முறை சந்திரமுகியாக மாறினாலும் நீ புலிகேசி ஆகி என்னை அலட்சியம் செய்கிற ..

பறந்து விரிந்த வங்காள விரிகுடா மாதிரியான காதல் காட்சிகளை அமைக்க வேண்டாம் என் கிருஷ் டார்லிங்க்கு குறைந்த பட்சம் வங்காள விரிகுடாவிற்க்கு வெகு அருகாமையில் இருக்கிற உங்க ஊரு பெங்களூரில் இருக்கும் MG ரோடு மாதிரி நீண்ட நெடிய காதல் காட்சிகளையாவது அமைத்து இருக்கனும் இல்லையா..

ஆனால் நீ என்ன பண்ண உன் நகைச்சுவை என்னும் riffle ல் கிருஷ்யை தோட்டாவாக போட்டு நீ டூமீல்.. டூமீல் .. என்று சுட்ட அதை பார்த்து இந்த SM தளமே தரையில் உருண்டு உருண்டு சிரிக்கும்.. அப்ப எல்லாம் என் மனசு சில்லு சில்லாக உடையும்..

கிருஷ் மேல கருஷ் (ஈர்ப்பு) வந்தப்பவே உன்கிட்ட தானே முதலில் சொன்னேன்.. நீ ஒரு பெரிரிரிய்யய மனுஷியா என்ன செய்து இருக்கனும்.. இனிமேல் உன்னிடம் பேசி பயனில்லை.. உன்னை எப்படி ஆப் பண்ணனும் என்று கண்டு பிடிச்சுட்டேன்.. ???

Annabellக்கு ஒரு கிலோ காஜூ கட்லி வாங்கி கொடுத்து உன்னை வைச்சி செய்ய ஏற்பாடு பண்ண போறேன்...

கடைசியாக ஒரே ஒரு முறை கேட்கிறேன் உன்னால என் டார்லிங்கை தேதாரம் செய்யாமல் இருக்க முடியுமா முடியாதா... உனக்கு அடுத்த பதிவு வரைக்கும் நான் டைம் தரேன் இல்லையென்றால் A2B காஜூ கட்லி தான் பேசும் Annabell மூலமாக... ஹா ஹா ஹா..

வரட்டா.. கடைசிய ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்...

கனவுநாயகன்களோடு டூயட் படுவதை தடுக்கும் உன்னை மாதிரியான ஆளுங்க நிஜத்தில் டூயட் படுனதா சரித்திரமே இல்ல... ஹா ஹா ஹா

இப்படிக்கு
கிருஷ்ன் கனவுக்கன்னி பிரேம்ஸ் ♥♥♥

@Sara saravanan late achoo... yesterday very busy ..??
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top