• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வருவேன் நான் உனது நிழலாக-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithranjani

மண்டலாதிபதி
Joined
Aug 22, 2019
Messages
140
Reaction score
300
Location
Kandiyur
ஹாய் பிரெண்ட்ஸ்

அடுத்த எபியோட வந்திட்டேன்.போன பதிவுக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் பண்ணவங்களுக்கு மிக்க நன்றி....இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்....


திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் சன்ஜனா.உடலெல்லாம் கடகடவேன நடுங்கி வியர்வை அவள் நெற்றியிலிருந்து ஆரம்பித்து பூங்கன்னங்களில் ஓடி சங்கு கழுத்தில் இறங்கியது.கண்ட கனவு யாதென்று அவளால் நினைவுகூர முடியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம் சூழ்ந்தது.தாளாத துக்கம் இதயத்தைப் பிழிந்தது.

குழந்தை பருவத்தில் அதிகளவில் கனவுகள் வந்து கத்துவது அழுதுக் கொண்டு ஓடுவது என்பன போன்ற ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் மனநல மருத்துவர் ஜோசியர் என அவளை கூட்டிக்கொண்டு திரிந்தனர்.ஆனால் அவர்களாலும் அவளுக்கு எதனால் அப்படி ஆகிறது என கண்டுப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் வளர வளர கனவுகள் வருவது குறைந்துவிட்டது.எப்போதாவது வருபவை சில நிமிடங்கள் அவளை படபடப்புக்கு ஆளாக்குவதை தவிர வேறு எதுவும் விளைவுகள் இல்லையென்று ஆகவும் பெற்றோர் நிம்மதி பெரூமூச்செரிந்தனர்.ஆனால் அவளின் சுதந்திர போக்கும் பிடிவாதமும் அவர்களால் சகிக்க முடியாததாக இருந்தது.

சிறிய வயதிலிருந்தே சன்ஜனா அவள் குடும்பத்திலிருந்து வேறுப்பட்டவளாகவே இருந்தாள்.இரண்டு அண்ணன்களுக்கு பிறகு கோடிஸ்வரர் விஸ்வநாதனுக்கு மகளாகப் பிறந்தாள் அவள்.மகளும் பிஸ்னஸ் படித்து கம்பெனியில் வந்து சேருவாள் என அவர்கள் எதிர்ப்பார்த்திருக்க அவளோ டாக்டர் ஆக வேண்டும் என்றாள்.அவள் பிடிவாதம் தெரிந்ததால் அவள் விருப்பப்படியே டாக்டருக்கு படிக்க வைத்தனர்.

சர்ஜன் படிப்பு முடிந்த பின் மூத்த அண்ணன் பெரிய அளவில் உயர்ரக மருத்துவமனை கட்டித் தருவதாகக் கேட்ட போது தான் டாக்டருக்கு படித்தது ஏழை எளியவருக்கு சேவை செய்ய...குளிர்சாதன அறையில் பரிசோதித்து ஐநூறு ஆயிரம் வாங்குவதற்கல்ல என கண்டிப்பாக மறுத்துவிட்டாள்.

இன்னும் அவர்கள் பொறுமையை சோதிப்பது போல் தினம் ஒரு அனாதை இல்லம் முதியோர் காப்பகம் என சென்று இலவசமாக சிகிச்சை அளித்தாள்.அந்த பிஞ்சு குழந்தைகள் முகத்திலும் வயதானவர்களின் வாழ்த்திலும் அவள் அடையும் மனத்திருப்தி அவர்கள் தொழிற்துறை அறிவுக்கு எட்டாததில் ஆச்சரியமில்லை.

கனவின் தாக்கத்திலிருந்து விடுப்பட்டவள் எழுந்தாள்.அதற்காகவே காத்திருந்தது போல் போன் செய்தி வந்திருப்பதாக கூவியது.யார் என பார்த்தவளின் இதழ்கள் அதில் கண்ட செய்தியில் புன்னகையாக மலர்ந்தது. மூன்று மாதங்களுக்கு வெள்ளம் பாதித்த பகுதியில் இலவச மருத்துவ முகாம் குழுவில் அவளும் அவள் உயிர் தோழி கீதாவும் அன்று புறப்படுவதாக இருந்தது.அதற்கு தயாராகி விட்டாயா...?என செய்திக்கு அரை மணியில் சந்திப்பதாக பதில் செய்தி அனுப்பியவள் பரபரப்பாக தயாரானாள்.

பெட்டியோடு அவள் கீழே வந்த போது அவள் அன்னையைத் தவிர வேறு யாரும் அங்கில்லை.அவள் முகாமிற்கு செல்லப் போவதாக அறிவித்ததிலிருந்து பெற்றோர் உடன்பிறந்தவர்கள் அவர் மனைவிமார் என அனைவரும் அவள் முடிவை மாற்ற பாகீரத பிரயத்தனங்கள் செய்தனர்.ஆனால் அவர்கள் சக்தி இழந்தது தான் மிச்சம்.அவள் குணம் நன்றாக அறிந்தவர்களாதலால் மேலே வாதாடாமல் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

கீழே ஹாலில் தனக்காக காத்திருந்த தாயின் முகம் மீண்டும் அதே பல்லவியைப் பாட அவர் தயாராக இருப்பதை அவளுக்கு உணர்த்தியது.பெட்டியை வாயிலருகில் வைத்தவள்,

"அம்மா!ப்ளீஸ் மறுபடியும் அதையே சொல்லாதீங்க....அங்க எத்தனையோ பேர் வீடு வாசல் இழந்து சரியான சாப்பாடு இல்லாம விஷ ஜுரம் பரவி ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க...இங்க என்னால நிம்மதியா சாப்பிட்டு தூங்க முடியாது...எனக்கு விஷ் பண்ணி அனுப்புங்க"

அவளை மாற்ற முடியாது என்பது தெள்ளத்தெளிவாக அவருக்கு புரிந்ததால்,

"சரி சரி போய்ட்டு வா...சுஜித் கூட ஏதோ வேலையா அங்க இருக்கிற எஸ்டேட்டுக்கு வரானாம்...அவன் அப்பப்ப வந்து உன்னை பாத்துக்குவான்"

சுஜிதை சன்ஜனாவின் பெற்றோர் கலந்துக் கொள்ளும் அனாவசிய(அவள் அபிப்பிராயத்தில்) பார்ட்டிகளில் நிறைய தடவை சந்தித்திருக்கிறாள்.அவனுக்கு தன்னை மணம் புரியும் எண்ணம் பெற்றோருக்கு இருப்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் அது ஒருபோதும் நடவாது என்பது பாவம் அவர்கள் அறியாதது.

"அம்மா!நா ஒரு எம்பிபிஎஸ் டாக்டர்...என்னை பாத்துக்க எனக்கே நல்லாத் தெரியும்...யாரோட ஹெல்ப்பும் எனக்கு தேவையில்லை...."

"சரி சரி எனக்கு தெரியும்டா குட்டி!நீ ஜாக்கிரதையாவே இருப்பேன்னு"

ஆனால் அவன் அங்கே வந்தே தீருவான் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை.

அந்த மலைப்பிராந்தியத்தில் விடாமல் பெய்த பெருமழையால் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி எல்லாவற்றையும் நாசமாக்கி இருந்தது.வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் நிறைய உயிர்கள் பலியாகியிருந்தனர்.உயிர் பிழைத்தோர் வீடுகளை இழந்து மீட்பு முகாமில் கிடைத்த உணவை உண்டு இனி வாழ்வாதாரம் என்ன என்று கலங்கி கண்ணீர் வடித்தனர்.

இது போதாது என்பது போல் விஷ ஜுரம் வாந்தி பேதி என நோய்கள் படையெடுத்து தன் பங்குக்கு அவர்களை ஆட்டிப் படைத்தது. ராணுவ வீரர்களும் பொதுநல சேவகர்களும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது உயிர்களை காப்பாற்றி வந்தனர். ஆனால் நோய்வாய்ப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் மருத்துவர்கள் தேவைப்பட்டனர்.

அரசு மருத்துவர்கள் இருந்தாலும் தனியார் மருத்துவர்களுக்கும் அரசு அழைப்பு விடுத்திருந்தது.

அதை ஏற்று நடத்தவென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில முன் வந்தன.அதில் ஒன்றில் தான் சன்ஜனா மற்றும் அவள் தோழி கீதா இலவச சிகிச்சை செய்வதற்கு வந்திருந்தனர். பாதித்த பகுதிக்கு செல்வதற்கு எட்டு கிலோமீட்டருக்கு முன்பே சாலை துண்டாகி வாகனப் போக்குவரத்து சுத்தமாக நின்றிருந்தது.அந்த தூரத்தை நடந்தே கடக்க வேண்டியிருந்தது.என்ஸிஸியில் பயிற்சி பெற்றிருந்ததால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கவில்லை.

மருத்துவர்கள் தங்குவதற்காக அழுத்தமான டெண்ட்கள் தயாராக இருந்தன.தங்களுக்கு அளிக்கப்பட்ட டெண்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்த இருவரும் அங்கே இருந்த தலைமை மருத்துவர் அங்கிருந்த நிலைமையை விளக்க சிறிதொரு மீட்டிங்கிற்கு அழைத்தார்.இவர்களைப் போலவே நிறைய இளம் மருத்துவர்கள் அங்கே வந்திருந்தனர்.

டெண்ட்டுகளுக்கு சிறிது அப்பால் பரந்த வெளியில் அனைவரும் வரிசையாக நின்றனர்.எல்லோரும் வந்ததை திடப்படுத்திக் கொண்ட தலைமை மருத்துவர் சீனிவாசன்,

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க இவ்வளவு தூரம் வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.நகரத்தை விட்டு மக்கள் சேவையே பெரிது என வந்துள்ள உங்கள் சேவை மனப்பான்மை மிகவும் உயர்வானது.இங்கே இப்போது பெருமழை நின்றிருந்தாலும் நதிகளில் வெள்ளப்பெருக்கு இன்னும் இறக்கவில்லை.சாலைகளும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.இதில் மக்களுக்கு கடுமையான நோய்கள் பரவத் தொடங்கியிருக்கிறது.உங்களில் நான்கு பேர் கொண்ட குழுவாக முகாம்களில் சிகிச்சை அளிக்க வேண்டும்.இரண்டு பேர் சீனியர் டாக்டர்ஸ் அவர்களின் கீழ் இரண்டு ஜுனியர் டாக்டர்ஸ்.யார் யார் எந்த குழு என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும்...இங்கே உங்களுக்கான வசதிகள் அவ்வளவாக இல்லை.கூடிய விரைவில் அதை சரி செய்ய முயற்சிக்கறோம்...தேங்க் யூ அண்ட் அல் தி பெஸ்ட்..."என்று அவர் பேச்சை முடித்துக் கொண்டார்.

எல்லாரும் கலைந்து அவரவர் தங்குமிடம் நோக்கி சென்றனர்.

ஆனால் சன்ஜனா மட்டும் அங்கே சிறிது தூரத்தில் நின்றிருந்த அந்த இளம் டாக்டரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனோ அருகில் நின்றிருந்த அவன் நண்பனோடு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அவனை இதற்கு முன் பார்த்த நினைவில்லை அவளுக்கு.ஆனால் ஏதோ ஒன்று அவனிடம் அவளை ஈர்த்தது.சொல்ல முடியாத உணர்வொன்று இதயத்தை அழுத்தியது.அது என்னவென்று வரையறுக்க இயலவில்லை அவளால்.

தன்னோடு வராமல் நின்றுவிட்ட தோழியின் பார்வை சென்ற திசையை பார்வையிட்ட கீதா அங்கே பேசியவாறு நின்றிருந்த இரண்டு இளம் மருத்துவர்களை கண்டு தோழியின் தோளைத் தட்டினாள்.

"சன்ஜு! உனக்கு அவங்கள தெரியுமா?"

"தெரியாது"

"பின்னே ஏன் அப்படி திகைச்சுப் போய் நிக்கற?"

"அது...அது... வலதுபக்கம் நிக்றவர எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு...எங்கேன்னு தெரியல..."

"அதுக்கு ஏன் கொழப்பிக்கற...ஏதாவது மெடிக்கல் மேகசின்ல பார்த்திருக்கலாம்...வா போலாம்.‌..கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்... ஈவினிங்லேந்து ட்யூட்டி ஆரம்பிச்சிடும்"

சரியென தோழியோடு விரைந்தாள் அவள்.ஏனெனில் அவனைப் பாராமல் இருந்தால் இந்த படபடப்பும் குழப்பமும் வராது என்று நிம்மதியடைந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top