வறுத்த கறி(மட்டன் கிரேவி) 😋😋

#1
Screenshot_2019-11-14-22-31-38_1573751019906.jpg
தேவையான பொருட்கள்:-
மட்டன் - கால் கிலோ
சி. வெங்காயம்- 100 கிராம்
பூண்டு - 10 பல்
தக்காளி- 1 பெரியது
தேங்காய் - 2 ஸ்பூன் அரைத்தது
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - சோம்பு, சீரகம், உ.பருப்பு
செய்முறை :-
மட்டனை முதலில் கழுவி வைத்து கொள்ளவும். குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம் , உளுந்து தாளித்து மட்டனை போட்டு நன்கு வதக்கவும். மட்டன் வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து வேக விடவும். ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி வைத்து கொள்ளவும். பின்னர் மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் குக்கரை திறந்து வதக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி சேர்த்து வேக விடவும். சிறிது தேங்காயுடன் 7 மிளகு மற்றும் 5 சின்ன வெங்காயம் 5 பூண்டு பல் சேர்த்து அரைத்து மட்டனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top