வாட்டியதோ வறுமை

#1
"கருமை சூழ்ந்த
குடிசையில்
கண்ணா நீ
உதித்தது
காலம் இட்ட கோலமோ"


"கண்ணீர் துடைத்திடுவாய்
கார்மேக வண்ணனே"


"உன் அரைவயிற்று
கஞ்சிக்கு அல்லல்பட்டாயோ
கிழிந்த ஆடையில்
கிறுக்காய் திரிந்தாயோ"


"துயர் கொள்ளாதே
துவண்டு விடாதே
வறுமை
உன்னை அமைதியாக்கிட
இமையோரம் ஈரத்தோடு
நின்றாயோ தெருவோரம்"


"தூய்மை இந்தியாவில்
தெரு நாய்களோடு
சண்டையிட்டாயோ
சாப்பாட்டிற்காக"


"உன் வாழ்வில்
வெறுமை
உண்டாக்கியதோ
வறுமை
"


"பசி
உன்னிடம் சொன்னதோ
பணம் தான்
பஞ்சத்திற்கு காரணம் என்று"


"பசிக்காக
பணம் பறிக்க எண்ணி
பாதாளத்தில்
விழுத்தாயோ"


"உன்னில்
குற்றமில்லை
குவியும் இடத்தில்
கோடிகள்
குறைவில்லாமல்
குவிய
நலியும் மக்கள் தான்
நாராய் கிழிய
நாசாமாகியது நாடு
வாட்டிய வறுமையால்"
 
Last edited:

Sponsored

Advertisements

Top