Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
வாழைப்பூ - 1 ( சிறியது)
க. பருப்பு _ 150 கிராம்
சி. வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
க.பருப்பை முதலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஊறிய கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாழைப்பூவையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.