விடை சொல்லுங்கள் பார்ப்போம்... | அறிவியல் புதிர் | விடுகவிகள்

Kathambari

Author
Author
SM Exclusive Author
#24
நான்காவது X ray ஆ?
I think Yes... கரும்பொருள் topic related.. So ஒளிமின் விளைவு
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#26
நான்காவது X ray ஆ?
இதுவும் எக்சு-ரே மாதிரி ஒரு கதிர்தான்... (y):)
 
#28
(முதலிரண்டும் கொஞ்சம் எளிமையானவை... பின்னிரண்டும் சற்றே கடினமானவை!)

#விடுகவி_இயற்பியல் 1

ஓடி வருங்குதிரை ஒய்யார மாளிகைக்குள்
ஊடி வருகையிலே ஓரேழாய் ஆகிடுமாம்
நாடும் திசைநீளம் நாட்டிடு மாமதனைத்

தேடி விடைநீயுஞ் செப்பு!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

[’நாடும் திசைநீளம் நாட்டிடும்’ - குதிரை நாடும் திசையை அதன் நீளம் நாட்டிடும்!
’நாட்டிடு மாமதனை’ = ’நாட்டிடுமாம் அதனை’]#விடுகவி_இயற்பியல் 2

வேறினங் கண்டால் விழைவூறிச் சேர்ந்திடும்
மாறும் தனதினமே வந்தக்கால் - கூறு
விதந்த வியல்பின் விடை!

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)

[விழைவூறி = விழைவு+ஊறி; தனதினமே = தனது+இனமே; விதந்த வியல்பின் = விதந்த இயல்பின்]


#விடுகவி_இயற்பியல் 3

நில்லாப் புரவி நிகரில்லா வேகத்தீர்
ஒல்லும் இயல்பின் ஒருபுரவி - சொல்லிய
அப்புரவி ஈதென்றே ஆராய்ந்து கூறுநீ

தப்புகள் எல்லாம் தவிர்த்து!

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

[வேகத்தீர் = வேகத்து+ஈர்; ஈர் = இரண்டு; ஒல்லும் = பொருந்தும்]


#விடுகவி_இயற்பியல் 4

உமைக்கேள்வன் ஒண்ணுதலோ சூரியனின் சொட்டோ
குமையாத தீக்கீற்றோ கூர்வெயில்செய் வாளோ
சமையா விதிகள் சமைத்திட்ட தாய்ந்தே

அமைவாய் விடைநீ அறைந்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

[உமைக்கேள்வன் = சிவன்; கேள்வன் = கணவன்; ஒண்ணுதல் = ஒள்+நுதல் (ஒளிமிக்க நெற்றி); குமையாத = அழியாத / சிதையாத; கூர்வெயில்செய் = கூரிய வெயிலால் செய்யப்பட்ட; சமையா = செய்யப்படாத; ’சமைத்திட்ட தாய்ந்தே’ = ’சமைத்திட்டது ஆய்ந்தே’; ’அமைவாய் விடைநீ அறைந்து’ = ‘நீ விடை(யை) அறைந்து அமைவாய்’ என்று கூட்டுக!]

--வி :cool::cool:
ஏங்கண்ணு விசய் இளவலே?
42 வருஷங்களுக்கு முன்னே
படித்ததை இப்போக் கேட்டால்
நானு எப்படி பதில் சொல்வது,
விசயநரசிம்மன் தம்பி?
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#29

Vijayanarasimhan

Author
Author
SM Team
#30
ஏங்கண்ணு விசய் இளவலே?
42 வருஷங்களுக்கு முன்னே
படித்ததை இப்போக் கேட்டால்
நானு எப்படி பதில் சொல்வது,
விசயநரசிம்மன் தம்பி?
ம்ம்ம்... கடினம்தான்... இருந்தாலும் முயன்று பாருங்கள் அம்மா... அனுமனைப் போல உங்கள் ஆற்றல் உங்களுக்கே தெரியாமல் புதைந்திருக்கும்... :giggle::giggle:(y)(y):coffee:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top