JeyaBharathi
மண்டலாதிபதி
விழிமொழியொளி
எடுத்துரைக்கா - உன்
ஆழ்மன அன்பின்
அனிச்சை பயணம் ..
விழியெனும் புறவழிச்சாலையில்..
நேசநொடிகள் ஆளும்
நிறை மௌனங்களில்
நேத்ரமதின் பரிபாஷை
பேரிரைச்சலாய்..
கொள்ளளவு கூடிய
உள் அகஅன்பு,
உணர்வெனும் ஒளியிசையாய்..
எனக்காய் மீட்டப்படும்
நின் நரம்பு நயனவீணையில்...
அசடு மறைத்து
ஆழ உறைந்த அன்புதனை
கணக்காய் தூர்வாரும்
பிணக்குநேர நின் விழியசைவு..
புரிதல் அறுவடைநாடி
விதைக்கப்பட்ட விழிவழி மொழியில்
வீரிய ஊடுபயிராய்
நம்முள் விளைந்த நட்பு..
இமையிதழ் அணைத்து
உளம் கோதிடும்
உன் விழிமொழி...
என் உளரண மருந்தாய்...
உன்
விழியோர விசை சமைக்கும்
புரிதல் பரிபாஷையில் ,
தீரா பசியோடு
பசியாறும் என் நேசம்..
என்றென்றுமாய்...
நின் விழிமொழியது
ஒளியாய் பிரதிபலிப்பு..
என் வாழ்வின் வெளிச்சமாய்..
எடுத்துரைக்கா - உன்
ஆழ்மன அன்பின்
அனிச்சை பயணம் ..
விழியெனும் புறவழிச்சாலையில்..
நேசநொடிகள் ஆளும்
நிறை மௌனங்களில்
நேத்ரமதின் பரிபாஷை
பேரிரைச்சலாய்..
கொள்ளளவு கூடிய
உள் அகஅன்பு,
உணர்வெனும் ஒளியிசையாய்..
எனக்காய் மீட்டப்படும்
நின் நரம்பு நயனவீணையில்...
அசடு மறைத்து
ஆழ உறைந்த அன்புதனை
கணக்காய் தூர்வாரும்
பிணக்குநேர நின் விழியசைவு..
புரிதல் அறுவடைநாடி
விதைக்கப்பட்ட விழிவழி மொழியில்
வீரிய ஊடுபயிராய்
நம்முள் விளைந்த நட்பு..
இமையிதழ் அணைத்து
உளம் கோதிடும்
உன் விழிமொழி...
என் உளரண மருந்தாய்...
உன்
விழியோர விசை சமைக்கும்
புரிதல் பரிபாஷையில் ,
தீரா பசியோடு
பசியாறும் என் நேசம்..
என்றென்றுமாய்...
நின் விழிமொழியது
ஒளியாய் பிரதிபலிப்பு..
என் வாழ்வின் வெளிச்சமாய்..