விழியின் மொழி அவள் - கதை

Status
Not open for further replies.
#1
ஹாய் மக்களே

எஸ்‌எம் தமிழ் நாவல் தளத்தில் புதிதாக எழுத வந்துள்ள சரண்யா வெங்கட் அவர்களை வரவேற்கிறோம். இந்த திரியில் அவரது கதையை பதிவு செய்வார். அனைவரும் படித்து அவரது நிறை குறைகளை தன்மையாக கூறி அவரை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
sure(y):love:
 
#4
முன்னோட்டம்

குளிரும் நிலவு அவள், காற்றின் மொழி அவள், கார் இருள் நீக்கும் ஒளி அவள் .......

அவள் வேல்விழி....

அமைதியின் உருவம் அவள், அழகின் பிரதி பிம்பம் அவள்....

சுடும் சூரியன் அவன், வெடிக்கும் எரிமலையின் சீற்றம் அவன், சூறாவளியின் வேகம் அவன்......

அவன் அகில் வேந்தன்.....

குளிரும் நிலவாக இருப்பவளின் வாழ்வில் சூறாவளியாக நுழைக்கிறான் ஒருவன்

அவள் வாழ்வின் நிலை என்ன .....

நிலவாக ஒளி வீசுவாளா.....

இல்லை

ஒளி மறைந்து கலை இழப்பாளா...

அடர்ந்த கார் இருள்....

காற்றின் சத்தத்தை விட ஒருவனின் உயிர் நீங்கும் ஒளி மட்டுமே கேட்டு கொண்டு இருக்கிறது...

அவன் நிலை என்ன...

பதில் வரும் பதிவுகளில்....
 
#5
விழியின் மொழி 1

மும்பை மாநகரம்...

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரம், 12.4 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம், UNESCO வால் அங்கரிக்க பட்ட புராதன சின்னங்களை கொண்ட நகரம்.....

மும்பை - ஆகு பெயர் காக்கும் கடவுளான அம்பா தேவியின் அல்லது மும்பா எனும் பெயரால் அழைக்கபடும் நகரம், ஏழு தீவுகளின் கூட்டு அமைப்பு......

நவி மும்பை....

மணி நள்ளிரவு 12 மணி...

அடர்ந்த இருள், நிலவு அதன் ஒளியினை உலகிற்கு அளித்து வெளிச்சம் பரப்பி கொண்டு இருந்தது, மழை தான் கண் முன்பு ஓர் உயிர் மடிய போவதை எண்ணி ஓயாமல் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது...

ஆள் அரவம் அற்ற சாலையில் மின் விளக்குகள் அதன் ஒளியினை உமிழ்ந்து கொண்டு இருந்தது, இருளினை கிழித்து கொண்டு அங்கு ஒரு கார் வேகமாக வந்த கிரிச்சிட்டு நின்றது.... அதில் இருத்து ஒருவனை கீழே தள்ளி நாலு பேர் அவனை அடித்து கொண்டு இருந்தனர், மற்றொருவன் அருகில் உள்ள காரின் மீது தனது கால்களை மடித்து வைத்து அவர்கள் அடிப்பதை நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்....

எதிரில் இருப்பவன் வதைக்கபடுவதை கண்களில் குரோதம் மின்ன வேடிக்கை பார்த்து சிரித்த கொண்டு இருந்தான்..

எதிரில் இருப்பவனின் உயிர் அடக்கிய பின்பும் அவன் வெறி அடக்கியதாக தெரியவில்லை...

அவனின் கை ஆசைப்பில் அனைவரும் விலகி போயினர்... நின்று கொண்டு இருந்தவன் இறந்தவனின் அருகில் சென்று " என் உயிரை என் கிட்ட இருந்து பிரிக்கணும் நினைக்குறவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும் என்று கூக்குரல் இட்டு" அவ்விடம் விட்டு சென்றான்..


அவன் அகில் வேந்தன்....


தன் பார்வை கொண்டு எதிரில் உள்ளவர்களை எடைபோடும் கழுகு கண்களை உடையவன்,, கத்தி போன்ற முக்கினை உடையவன், பரந்த நெற்றியினையும் அதன் கீழ் கருத்த இரு புருவங்களை கொண்டவன், ஆறு ஆடி ஆணழகன், பெண்கள் மையல் கொள்ளும் அகன்ற தோள்களை உடையவன், எக்கு போன்ற கால்களை உடையான் தேக்கு போன்ற தேகத்தை உடையான்..... அகவை 26, நமது கதையின் நாயகன்


​


சென்னை....


தமிழ்நாட்டின் தலை நகரம், சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் உள்ள நீளமான கடல் கரையை கொண்ட நகரம், 7.45 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம்...நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.

அடையார்...

காலை 6 மணி...

மான் போன்ற மருண்ட விழிகளை கொண்ட விழியால் அவள், அதன் கீழ் இரு கரு நிற வானவில் போன்ற வளைந்த புருவங்களையும், கரும் போர்வை போன்ற கூந்தலை உடைய காரிகை அவள், தலைகீழான ஏழாம் எண்ணினை போன்ற கூர்ந்த முக்கினை கொண்டவள் அவள் பால் போன்ற வண்ணம் கொண்டு, 5.5 அடியில் ரவி வர்மன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் அவள்.... நமது கதையின் நாயகி, அகவை 21

அவள் வேல் விழி....

​


தன்னை சூழ்ந்து இருக்கும் ஆபத்து யாது என்பதை அறியாது பேதை அவள் தனது இரு விழிகளை மூடி துயில் கொண்டு இருந்தாள்...

அகில் ஒருவனின் உயிர் பறிக்க காரணம் என்ன???...

வேல் விழியின் வாழ்வில் இவனால் ஏற்படும் நிலை என்ன ???...

காலம் இவர்களுக்கு என்ன பதில் வைத்து உள்ளது வரும் பதிவுகளில்...
 
#6
விழியின் மொழி 2

சூரியன் தனது ஒளி கதிர்களை அவளின் நேசம் கொண்ட பெண் துணையான நிலவிடம் அளித்து விட்டு கடல் அன்னையின் மடியில் துயில் கொள்ள தனது கோபம் விடுத்து சென்றான்....

நிலவு மகள் தனது குளிர் கதிர்களை பரப்பி அவள் கணவன் விட்ட செயலை செவ்வனே செய்தாள்.....

​

நவி மும்பை...

மக்கள் கூட்டம் கொலை நடந்த இடத்தை மொய்த்து கொண்டு இருந்தனர்....

பத்திரிக்கையாளர்கள் தங்கள் தொலைகாட்சியின் TRP உயர்ந்துவற்கான தங்கள் பணியினை செய்து கொண்டு இருந்தனர்..

மக்கள் கூட்டம் கொலை எப்படி நடந்தது,, என்ன காரணம், யார் செய்தது, என ஒருவர் ஒருவர்களுக்கு தங்களுக்குள் உரையாடி கொண்டு இருந்தனர்....

போலீஸ் வாகனம் ஒன்று காவலர்களை சுமத்த படி சைரன் அடித்து கொண்டு வந்து நின்றது....

காவல் துறை வழக்கம் போல கொலை நடத்த இடத்தை ஆய்வு செய்து கொலையுண்ட நபர் தொடர்பான தகவல்களை சேகரித்து மற்ற விவரங்களை விசாரணை செய்து கொண்டு இருந்தார்....

கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது....

செத்தது வேற யாரும் இல்லை மத்திய மந்திரி செந்தூர் பாண்டியனின் மகன் அஸ்வின்....

கொலைக்கான காரணம் யாருக்கும் இது வரை தெரிய வில்லை..

ஒருவனை தவிர....

செந்தூரபாண்டியன் காவல் துறையினரை பார்த்து "என்ன யா எல்லாரும் பன்றிங்க என் பையனை எவனோ ஒருத்தன் எனக்கு தெரியாம கடத்தி கொன்னுபோட்டு போய் இருக்கான் நீங்க என்ன புடுகின்றிங்க" என் வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டு இருந்தார்.....

இரு கண்கள் அங்கு நடப்பதை ருத்திரம் பொங்க திருப்தியுடன் கண்டு அவ்விடம் விட்டு அகன்றது....

மருத்துவர்கள் கூர் ஆய்வு செய்து பிணத்தை அவ்விடம் விட்டு மருத்துவமனை எடுத்து சென்றனர்.....

சென்னை.....

நகரத்தின் மையத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு இருந்த மேடை பூக்களால் அழகாக வேயப்பட்டு இருந்தது....

அருகில்...

மலரனினும் மெல்லிய சிரிப்புடன், பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன், மருண்ட மான் விழி கொண்ட அஞ்சனையாக, வானத்து தேவதைகள் பொறாமைபடும்படி அழகுடன் நின்று இருந்தாள் நமது நாயகி....

வேதநாயகம்- பூரணி தம்பதியின் ஒரே தவ புதல்வி....

​

அவளுக்கு இணையான அழகுடன் நின்று இருந்தான் அரணவ்( நடக்காத கல்யாணனதுக்கு உனக்கு எதுக்காக intro, mind voice pa😋😋🤔🤗)

நம்ம ஹீரோயினுக்கு இந்த திருமணத்தில் துளி விருப்பம் இல்லை, படிக்கணும் தான் விருப்பம். அல்ரெடி நம்ம மேடம் இளங்கலை library and information science முடிச்சு இருக்காங்க....

சென்ட்ரல் லைப்ரரி லா லைப்ரரியானா வேலை செய்யுறங்க.... மேடம் க்கு முதுகலை படிக்கணும் ஆசை.... ஆன பரேன்ட்ஸ் விட்டதானே

திருமணத்திற்கு வந்த உறவினர்களும் விருந்தினர்களும் தங்களின் பரிசுனை அளித்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர்....

மறு பகுதியில் பார்ப்பவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், ஆண்களின் கம்பிரத்திற்கு உதாரணமாக அழகுடன் மிடுக்குடன் உள்ளே வந்தான் நமது நாயகன் வேந்தன்....

​


கண்களின் கழுகு பார்வையை அனைவரையும் எடை போட்டு கொண்டு இருந்தான், தன்னை சூழ்த்து இருக்கும் ஆபத்தின் விளைவு தெரிந்தும் அங்கு காலடி வைத்தான்.....

மறுநாள் காலை....

மண்டபத்தில் அனைவரும் மணமகளை காணாது தவித்து கொண்டு இருந்தனர், ஆனால் இதை அறியாத பேதை அவள் அவனுடன் தனது எதிர் காலம் யாது என்பதை அறியாது காரில் பயணித்து கொண்டு இருந்தாள்....

அவளின் மூடிய சிற்பி போன்ற கண்களிலும், மருண்ட மான் விழியிலும், முத்து இதழ் விரிப்பிலும், தன்னை தொலைத்து தனது மதியினை அவள் வசம் இழந்து கொண்டு இருந்தான் அந்த ஆறு ஆடி ஆண்மகன்.....

முத்து சிற்பி
மூடியது போன்ற
உனது கரு விழிகளை
காணும் கணம்
காதலில் ...
திளைபேனா....

இல்லை கடமை பெருது
என்று நினைப்பேனா
யான் அறியேன்
என் கண்மணி...

விதி இவர்களின் வாழ்வில் என்ன வைத்து உள்ளது?

இவர்கள் நிலை என்ன...

அஸ்வின் மரணத்திற்கு காரணம் என்ன? மரணத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்?

பதில் வரும் பதிவுகளில்.....

Kadhai eppadi poguthunu solunga pa....Any guess
 
#7
விழியின் மொழி 3
​

ஊட்டி......

மலைகளின் ராணி அவள், கடல் அன்னையின் மடியில் இருந்து 7347 அடி உயர்ந்து நிற்கும் காரிகை அவள்,

கதிரவனின் கதிர்கள் மலைகளின் முகடுகளில்
எதிர் ஒளித்து அழகான விடியலை பூமிக்கு கொண்டு வந்தது....

சல சலவென ஓடும் நீரில் பட்டு எதிர் ஒளிக்கும் சூரிய கதிர்களை கண்ட பறவைகள் மின்னலின் கீற்றோ என்ன அஞ்சி தனது கூட்டினை விட்டு உணவு தேடி மேலே உயர பறந்தது....

பச்சை கம்பளம் விரித்தது போன்று இருந்த நகரின் எல்லையில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குளுக்கின.... கானகுயில்கள் நமது நாயகியின் வரவை உரைக்கும் விதம் தேவ கானம்இசைத்தன....

இயற்கை அழகு அவனது கண்ணிலும் கருத்திலும் படவில்லை, அவனது இலக்கினை நோக்கி அவனது கார் அதி வேகமாக கட்டேஜ் நோக்கி செலுத்தி கொண்டு இருத்தான்....

வேந்தன்....

​

சுற்றிலும் மரங்களின் நடுவில் அமைந்து இருந்தது அந்த கட்டிடம்....

​

காரில் இருந்து இறங்கிய வேந்தன் கண் மூடி துயில் கொள்ளும் தேவதையை தனது கைகளில் ஏந்தி ஒரு அறையில் நுழைந்து மெத்தையில் கிடத்தினான்....

அவளது முகத்தில் விழும் கற்றை கூந்தலை ஒதுக்கி தனது மதியினை இழக்க செய்யும் அவளது மதி முகத்தினை பார்வையால் பருக்கினான்...

அடையாத பொருள்,
போல..
கிடைத்த உன்
நேசத்தை
காப்பேனா....

இல்லை
விதியின்
வழியில்,

உன் விழியில்
பயணித்து...

உன்னை
இழப்பேனா...

பதில் சொல்லடி
என் வேல்விழி... 🌸🌸🌸

சிறிது நேரத்தில் தனது சித்தம் தெளிந்து தனது நிலை அறிந்து அவளின் உடைகளை சரி செய்து விட்டு அவள் கண் விழிக்கும் வரை காத்து இருத்தான்.....

வேல் விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது...

நேற்று இரவு தன்னை யாரோ கடத்தியது கனவு போல நினைவு வர கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது...

தன்னை நிதானித்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்...

தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போல தோன்ற தனது தலையினை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்வையால் எடையிட்டாள்...

இம்முறை அதிர்வது வேள்விழியின் முறையானது,

6 அடி ஆண்மகன், ஈட்டி போன்ற கண்கள், எதிரில் இருப்பவரின் மனதை எளிதில் படித்துவிடும் கண்கள், தேக்கு போன்ற தேகம் என் அவனை அங்குலம் அங்குலமாக எடை போட்டு கொண்டு இருந்தாள் விழியாள்....

​


தனது கண் முன்பு நிற்பவன் நேற்று தன்னை கடத்தியவன் என்று நினைவு வர அவளது முகம் குழப்பத்தை தத்து எடுத்தது....

"யார் நீ, எதுக்காக என்னை கடத்தின என கேட்டாள்.

எதிரில் இருப்பவன் அவளது கேள்விக்கு பதில் கூறாது கண்ணால் அவளை ஆராய்ந்து பின்பு பதில் உரைத்தான்..

"நான் யார இருந்த உனக்கு என்ன, இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட புருசன் ஆக போறவன்".,

"இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு கல்யாணம் ரெடியா இரு" என்று கூறிசென்றான்...

" கல்யாணம் பண்ண மாட்டேனு வீம்பு புடிச்சினா உன்னோட அப்பா, அம்மா , நீ யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க யோசிச்சி முடிவு பண்ணு"

"முடியாது சொல்றதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாரு" என்று அவங்க அப்பா , அம்மா கடத்தி வச்சி இருக்க வீடியோவை ஓட விட்டான், நல்லா யோசிச்சி சொல்லு நான் வரேன் என்று கூறி சென்றான்.

தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சி யாதும் அறியாது பேதை அவள் ஆற்றுவர் தேற்றுபவர் யாரும் இன்று கண்ணீர் கரைந்தாள்...​


மண மேடையில் ஆண்களின் கம்பிரத்துக்கு இலக்கணமாய் அமர்ந்து இருத்தான் வேந்தன்...

இரண்டு பெண்கள் அழைத்து வர மருண்ட விழிகளுடன் மணவரை நோக்கி சென்றாள் வேல்விழி

முகம் நிமிர்த்தி அவன் கண்களில் என்ன கண்டலோ தலை குனிந்து அவன் இட்ட மலையினை மணமகளாய் ஏற்றால்...

ஒரே நாளில் தனது வாழ்க்கை தடம் மாறி விட்டது அப்பா, அம்மா, காப்பதனும் னா இதை செஞ்சி தன் ஆகணும் என்று மனதை திட படுத்திக்கொண்டு தன்னை கவர்ந்தவனின் (கடத்தியவனின்) கழுத்தில் மாலை இட்டாள் மங்கை அவள்,

​


கெட்டி மேளம் ஒலிக்க...

முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கதிரவன், நிலவு, வானம், பூமி மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் அவளை மங்கள நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக மாற்றி கொண்டான் அகில் வேந்தன்....

அங்கு நடப்பதை இரு ஜோடி விழிகள் கோவத்துடம் பார்த்து கொண்டு இருந்தது....

வேந்தனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன...

வேல் விழியின் வாழ்வில் வேந்தன் ஏற்படுத்த போகும் சூறாவளி என்ன...

அந்த இரு ஜோடி விழிகள் யாருக்கு சொந்தம் ஆனது...

பதில் வரும் பதிவுகளில்....
 
#8
விழியின் மொழி 4
நவி மும்பை,....
நெடுங் உயர்த்த கட்டிடங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு நின்றது...


அரணவ் கான்ஸ்டருக்ஷன் கம்பெனி,

அரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான், கண்களில் கோவம் மின்னியது, அதே நேரத்தில் உள்ளே நுழைத்தார் மத்திய மந்திரி செந்தூர பாண்டியன்,

"எப்படி இப்படி நடந்து டாடி அவ்வளவு perfect ஆஹ் பிளான் பண்ணி அவள marriage பண்ண try பனேன், " everything is waste, என்னோட கண்ணு முன்னாடி அவளை காப்பத்தி தாலியும் கட்டிடான் அந்த அகில்", என்று பொரிந்து கொண்டு இருந்தான்.

"லுக் மை சன்அவனை இப்ப அடிக்க முடியாது , வெய்ட் பண்ணி தான் ஆடிக்கணும், நேரம் வர வரைக்கும் பொறுமையா இரு மை சன், நான் ஒரு மீட்டிங் விஷயமா டெல்லிக்கு வரைக்கும் போறேன் சோ be careful, எது பன்றதா இருந்தாலும் என்ன கேக்கமா பண்ணாதே"... என்று கூறி அவரிடம் விட்டு சென்றார்..

"டேய் , அகில் உன்னை சும்மா விடமாட்டேன், என்னயும் என்னோட தம்பி சாவுக்கு காரணமான உன்னை, அணு அணுவை சித்திரவதை பணி ஏன்டா இந்த உலகத்துல வாழுறோம்னு நீ ஒரு ஒரு நாளும் அழர மாதிரி பண்ணலை என் பேரு அரணவ் இல்லை" என்று சுளுரைத்தான்.

"உன்னை கஷ்டப்படுறதுக்கு னா ஆயுதத்தை நீயே என்னோடு கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டா, அவளை காப்பாத்த தானே இது எல்லாம் பண்ண அனா அளவும் வெஸ்ட், உன்னோட கண்ணு முன்னாடியே அவளை கொல்லறேன், அவ செத்து போறதா பார்த்து நீ கண்ணீர் வடிக்ககணும், என்னோட தம்பி செத்த அப்போ நான் எப்படி அழுதேன் அதே மாதிரி நீ அழனும், அதுக்கு அப்புறம் உன்னை கொல்லறேன் என்று கத்தினான்".

அவனுக்கு தெரியவில்லை அவள் அவனை அழிக்கும் ஆயுதம் இல்லை, அவனை காக்கும் ஆயுதம் என்று, அன்றே அறிந்து இருந்தால் அவன் உயிர் தப்பி இருக்கும், ஆனால் விதி வலியது, அவனது மரணம் அவளால் என்றோ எழுதபட்டுவிட்டது.

அவனுக்கு தெரியவில்லை, அகில் இடம் மோதுவது அவனுக்கு அவனே அடித்து கொள்ளும் சாவு மணி என்று, மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் செயல் என்று.

அரணவ் அடி பட்ட வேங்கை என்ன இரையை வேட்டை அட தயார் ஆனான்.

அகில் வேந்தன், யாழ்வேந்தன் - சக்தி தம்பதியின் தவ புதல்வன், அவனது பெற்றோரை ஒரு விபத்தில் 21 வயதில் பறி கொடுத்துவிட்டான், அதற்கான காரணம் யார் என்பதை அகில் நன்கு அறிவான், அவர்களை வெற்றி அடைவதற்கான பரம பத விளையாட்டு அவன் என்றோ தொடங்கிவிட்டான். பாவம் ஆட்டத்தின் காய்கள் இதனை இன்னும் அறியவில்லை.

அகில் வேந்தன், வேந்தன் க்ரூப் ஆப் கம்பெனி, M.D, அவன் கால் பத்திகாத துறையே இல்லை எனலாம். Export and important, foods products, leather business, construction company, என்ன எல்லா துறைகளும் கொடி கட்டிபறந்தான்

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன், கண் அசைவில் கட்டி வைக்க தெரிந்தவன், தன்னை வெற்றி கொள்ள நினை பவர்களை அவர்களுக்கு முன்பு வெற்றிகொள் பவன், மொத்தத்தில் பிசினஸ் ஜாம்பவான், 26 வயதில் தனக்கு என தனி இடத்தை பிடித்தவன்.

ஆனால் அவனின் மற்றொரு முகம் யாரும் அறியாதது, அவனுக்கு மட்டுமே தெரிந்தது. அறிந்தால் உயிர் உறைய செய்ய கூடியது.

ஊட்டி...

திருமணம் முடித்த கையோடு அகில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருத்தான். கருப்பு நிற சேர்வனியில் தனது மனதினை கொள்ளை கொண்ட அவனின் விழியலுக்காக காத்து கொண்டு இருந்தான்.

மதி மயக்கும் அழகுடன், அழகு தேவதை என உள்ளே நுழைத்தாள் வேல் விழி,வேந்தனின் மனம் பின்னோக்கி சென்றது...

அவனின் மனம் கவர்த்தவளை கண்ட நாள் கண் முன்பு நிழல் ஆடியது....

ஜூலை 7,

கரும்மேகம் திரண்டு மழையின் பூமிக்கு கொண்டு வர தயாராய் இருந்தது, மழை மண்ணுடன் இணையும் நேரம், வேந்தன் அவளின் விழியாளை கண்டான்.

வேள்விழி மழையில் நின்று கொண்டு தனது தோழிகளுடன் பேசி கொண்டு இருந்தாள். அவளின் மோகன புன்னகையில் வேந்தன் தன்னை இழந்தான்.

நான் உன்னுள்
என்னை தொலைத்து
உனது காதலை
வரமாக பெற்றேன்....

உன்னை கண்டு
என்னை மறந்தேன்...

உன் கண்களில்
எனது பிம்பம்
கண்டு
காதல் கொண்டேன்
கண்மணி....

நம் உலகம்....
அதில்
நீயும் நானும்
நமக்காக உதிக்கும்
சூரியன் .....

நமக்காக
மட்டுமே
காயும்
நிலவு....

நிகழ் உலகம்
மறந்து காதல்
செய்வோம் வா
பெண்ணே...🌸🌸🌸

முதல் நாள் காலேஜ் செல்வதற்கு நேரம் ஆகி விட்டதால் வேகமா சென்று கொண்டு இருந்தாள் வேல் விழி. அங்க தன் நம்ம ஹீரோ மேடம் பார்த்தது....

அவளின் வருகை வேந்தனை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது, அவளின் கை கோர்க்க துடித்த கரங்களை அடக்கி புன்னகையுடன் அவளை வரவேற்றான்.

வரவேற்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருக்கும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக வந்த துப்பாக்கி குண்டு வேல் விழியின் நெஞ்சை துளைத்தது.....

விழிகள் பேசும் ......
 
#9
விழியின் மொழி 5


திருமணம் முடித்த கையோடு வேந்தன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தான். வேல்விழி மேடை நோக்கி வரும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக துப்பாக்கி குண்டு ஒன்று வேந்தனை நோக்கி வந்தது, வேந்தன் அதனை உணர்வதற்கு முன்பு வேல் விழியின் குண்டினை மார்பில் தாங்கி கொண்டாள்....

இதனை கண்ட இரு விழிகள் திருப்தியுடன் , இகழ்ச்சி புன்னகை மின்ன அங்கு இருந்து சென்றது.

வேர் அருந்த மரம் போல, பிடுங்கி எறிய பட்ட கொடி போல மண்ணில் விழுவதற்கு முன்பு வேந்தன் அவளை தனது நெஞ்சோடு தாங்கி கைகளில் ஏந்தினான்....

தன் கண்முன்பு நடப்பது எதுவும் அறியாத வேல்விழி மயக்கம் உற்றாள்.

வேந்தன் தனது மனம் கவர்ந்தவள்
மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அடுத்து செய்வது யாது என்பதை அறியாது விழி பிதுக்கி நின்றான். அருகில் உள்ளவர்கள் வேந்தனுடன், வேல் விழியை மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றனர்.

வேந்தன் நடைபிணம் போன்று அவளுடன் சென்றான், அவள் கைகளை வேந்தன் கைகளில் இருந்து பிரிப்பது சிரமமாக இருந்தது, அவன் பிடி இரும்பு பிடி போன்று இருந்தது எங்கே அவளை பிரிந்தால் தன் உயிர் நீங்கி விடும் என நினைத்தானோ என்னவோ அவன் அவளை விட்டு நீங்கவே இல்லை.

மருத்துவர்கள் அவளை வலுக்கட்டாயமாக பிரித்து ICU விற்கு எடுத்து சென்றனர். உள்ளே அவளை பிழைக்க வைக்க பெரும் போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. ஆப்ரேஷன் செய்து அவள் நெஞ்சில் இருந்த குண்டை வெளியில் எடுத்தனர்.

வெளியில் அவள் நிலை தெரியாது வேந்தன் கண்ணீரில் கரைத்தான். தனது 5 வருட காதல் இப்படி கை சேர்ந்த வேளையில் 5 நிமிடத்திலே பிரியும் என அவன் நினைக்கவில்லை.

உன்னை கண்ட

நொடியில்

காலம் கடந்து

கவலை மறந்து

ஏழு ஜென்மம்

உன்னுடன் வாழ

ஆவல் கொண்டேனடி .....

மாலையிட்டு

ஐந்து நொடியில்

என்னை பிரித்தது

ஏனடி

என் காதல்

கண்மணி.....

கடவுள் ...

என் இன் உயிர்

எடுத்து

உன் உயிர்

அளித்தால்

மகிழ்வேனடி.....

வேல்" உன்னை அவன்கிட்ட இருந்து காப்பதனும் தானே உன்ன மிரட்டி கல்யாணம் பண்னேன், இப்படி உனக்கு நானே எமனா மாருவேனு தெரியாது டி, இதுக்காகவா 5 வருஷம் உன்னோட பின்னாடி அலைச்சேன், நான் யாருன்னு உனக்கு தெரியரத்துக்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே டி, உன்னோட உயிருக்கு ஆபத்து, உன்ன பாதுகாத்து என் கூடவே வச்சிகனும் நிர்ப்பந்தத்துல தானே உன்ன மிரட்டி கல்யாணம் பண்னேன்,

"உங்க அப்பா அம்மா கிட்ட உண்மையை சொல்லி உன்னை பாதுகாக்க, அவங்களகளையும் நான் கடத்துற மாதிரி நடிக்க சொன்னேன், அவங்களும் உனக்காக எல்லாம் பண்ணங்க, இப்படி எல்லாம் பண்ணியும் என்னோட உயிரை காப்பதனுமனு உன்னோட உயிரை பணயம் வச்சிட்டீயே ஏண்டி இப்படி பண்ண என மறுக்கினான் வேந்தன்.

வேதநாயகம் மற்றும் பூரணிக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் மருத்துவமனை விரைந்தனர்.

இது எதுவும் அறியாத வேல்விழி உள்ளே உயிருக்கு போராடி கொண்டு இருத்தாள், வெளியில் வேந்தன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

வேல்" உன்னை இந்த நிலைமைக்கு ஆளுகினவனை சும்மா விடமாட்டேன் டி, ஏற்கனவே உன்னை கொலை பண்ண பார்த்த அஸ்வினை கொன்றேன், அரணவ் உன்னை கல்யாணம் பண்ண பார்த்தான் அவன் கிட்ட இருந்து உன்னை சேவ் பண்ணி கல்யாணம் பண்ணனேன்" என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த மருத்துவர்கள் அவள் பிழைத்து விட்டதாக வேந்தன் மற்றும் வேல்விழி குடும்பத்திடம் கூறினார்.

வேந்தன் புயல் என உள்ளே நுழைத்தான், கட்டிலில் பிடிங்கி எறியப்பட்ட குருக்கத்திய கொடி பெண் அவள் கிடந்தாள்,


வேந்தனின் கண்களில் நேற்று அவளை கண்ட காட்சி நினைவுக்கு வந்தது, வரவேற்பில் அன்றுஅலர்ந்த மலர் போல இருந்தவள், இன்று வாடிய மலர் போல காட்சி அளிக்கிறாள் என வேதனை உற்றான்.

தனது காவலர்களை அழைத்து இதனை செய்தது யார் என்று கண்டு அரிய சொன்னான்.அவர்களின் கூற்று படி விசாரித்ததில் இதனை அரணவ் மற்றும் செந்தூர பாண்டியன் செய்ய வில்லை. இதனை செய்தது தனது எதிரிகளில் யாராக இருக்கும், என அவனுக்கு யோசனை ஓடியது.

ஆனால் அவனின் யோசனைக்கு அப்பால் ஒருவன் அவனின் பலத்திற்கு சமமான பலத்துடன் அவனை எதிர்க்க தயராகிகொண்டு இருத்தான், என்பதை வேந்தன் அறியவில்லை.

ICU உள்ளே சென்ற வேந்தன் வேள்விழியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு"வேல் உன்னை இந்த நிலைமைக்கு ஆளு அகினவனை நான் சும்மா விடமாட்டேன், நான் இப்போ துடிக்கிறதா விட அவனை அதிகமா துடிக்க வைப்பேன்" என்று சுளுரைத்தான். ஆனால் அவனுக்கு தெரிய வில்லை அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று.

அதே நேரத்தில்.....

கோயம்பத்தூர் விமான நிலையத்தில் தனது மும்பை செல்லும் விமானத்திற்காக காத்து இருத்தான் ஒருவன்......

6 ஆடியில், ஆண்களின் கம்பிரத்துடன், எதிரில் உள்ள நபர்களை எளிதில் இனம் கண்டு விடும் கண்களுடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருத்தான்....

அவன் அபிணவ்,

இவன் வேந்தன்- வேல்விழி வாழ்வில் ஏற்படுத்த போகும் பூகம்பம் என்ன....

வேல்விழி வேந்தனின் காதலை புரிந்து கொள்வாளா இல்லை பிரிந்து செல்வாளா....

வேள்விழியின் உயிருக்கு யாரால் எதனால் ஆபத்து?

விழிகள் பேசும்.........
 
Status
Not open for further replies.

Sponsored

Latest Episodes

Advertisements

Top