• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வே.வா.அலுவலகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அவள் பெயர் சந்தியா. வயது 21. அந்த வருடம் தான் பி.இ முடித்திருந்தாள்.சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில், கிராமமுமல்லாத , நகரமுமல்லாத ஊர் . எதோ ஓர் ஆர்வத்தில் , சென்னையில், தோழிகளுடன் ஹாஸ்டலில் தங்கி வேலை தேடுகிறாள்?

இப்பொழுது, காலை 9.30. தரமணியில், 4 வழி சாலையில் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல், திரு திருவென விழித்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறாள். எங்கே செல்கிறாள்? எங்கே செல்ல வேண்டும்?

நான்கு வழிகளிலிருந்தும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிற்காமல், வந்த வண்ணம் சென்ற வண்ணமுமாயிருந்தன. சந்தியா பிரமிப்புடன், அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்பா, காலையில் போன் செய்து சொல்லியிருந்தாரே! "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விடு, டிலே பண்ணாதே! தரமணியில் இருக்கிறது என்ஜியர்களுக்கானது" என்று.

வந்தாகி விட்டது. இது தான் தரமணி. இங்கு, எங்கே இருக்கிறது. இங்கிருந்து எப்படி செல்வது? எந்த பக்கம் செல்வது? யாரைக் கேட்பது ? யாருமே நிற்க கூட இல்லையே ! ப்ளட்போர்மில் கடைகள் கூட இல்லை! சாலையை எப்படி கடப்பது? நடைப்பாதை எங்கே இருக்கிறது? இறங்கின பஸ் ஸ்டாப்பிலேயே நின்றிருக்கலாமோ ? பேசாமல் ஆட்டோவில் போய் விடலாமா? எவ்வளவு கேட்பான்? எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லையே? ஒருவேளை அருகிலேயே இருந்துவிட்டால்?

"அதோ.. ஓர் ஆட்டோ வருகிறது?" கை காட்டினாள்.
ஆனால், நிற்கவில்லை. ஒருவேளை ஆள் இருப்பார்களோ என்னவோ?
"மேடம் , என்ன ஆட்டோ வா? " என்ற குரல் கேட்டு, திரும்பி பார்த்தாள்.
"ஆம் " என்றாள் தன்னையறியாமல்.

அந்த ஆட்டோ அவளருகில் வந்து நின்றது. பிளாட்போர்மிலிருந்து, ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். அப்போது தான் கவனித்தாள். " இளைஞன் ". பயம் தொற்றிக்கொண்டது. இவள் நின்றிருந்த சாலைக்கு எதிர்புறமாக "யு டர்ன் " செய்து ஆட்டோவைத் திருப்பினான்.

"எங்கே போகணும் ?"
" employment exchange "
"அட்ரஸ் இருக்கா ?"

இருந்தது. நேற்றிரவே கூகுளைக் கேட்டு வைத்திருந்தாள். போனைக் காட்டினாள். அவன் அதை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, திரும்பி சாலையைப் பார்த்து ஆட்டோவை செலுத்தினான்.

" வேலை தேடிக்கினு இருக்கிங்களா ?"
"ஆமாம் "
"நான் காண்டி ஆபிஸ் வச்சிருந்தா என்னாண்டையே வேலைக்கு வச்சுக்குவேன் “

அவள் கண்கள் பயத்தைக் கக்கின. சுதாரித்துக்கொண்டு, "கடவுள், உங்களை ஆட்டோவில் கொண்டு விடும் படி தான் சொல்லியிருக்கார்" என்றாள். தன் தைரியத்தை தானே மெச்சிக்கொண்டாள். சற்றுத் தெளிந்து, சாலையை கவனித்தாள். அதிர்ந்தாள்.

இருபுறமும் எந்த கட்டிடங்களும் இல்லை. "ஹெச்சிஎல்,விப்ரோ எல்லாம் இங்க தான இருக்குனு சொன்னாங்க." ம்ஹும் .. மேடான சாலையின் இருமருங்கிலும் மண் சரிந்து பள்ளமாக இருந்தது. ஒரே புழுதி. இப்பொழுது தான் சாலை போட்டு கொண்டிருக்கிறார்கள் போலும். மனித நடமாட்டமும் இல்லை. எதிரே பஸ் ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது. போர்டை படிக்க முயன்றாள். புழுதி மறைத்திருந்தது. தூரத்தில் வீட்டின் கூரை, சாலையின் மேட்டிற்குச் சரியாக இருந்தது. யோசித்தாள்."ஆட்டோ எங்கே செல்கிறது?" படபடப்பாக உணர்ந்தாள்.எதாவது கேட்கலாமென்றால், நோஸ்கட் செய்த அப்புறம் அவன் இவள் பக்கம் திரும்பவே இல்லை. என்ன கேட்பது?

சுமார் 10 நிமிடங்களுக்கு பின் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. ஆள் அரவமே இல்லை. புதிதாகச் சாலை போட்டுக்கொண்டிருந்தார்கள். பிஹாரி ஒர்க்கர்ஸ் இவளையும், ஆட்டோவையும் பார்த்தனர். அலுவலகம் எதையும் காணோம். தூரத்தில், டீ கடை மாதிரி, ஒரு பெட்டி தெரிந்தது.இறங்க முயன்றாள். ஆனால்,அவன் தடுத்தான். கையை மட்டும் அசைத்து, திரும்பிப்பாராமல். அவனே இறங்கினான்.

இரண்டடி நடந்து, அங்கிருந்தவர்களிடம் பேசினான். திரும்ப வந்தான். மறுபடி, ஆட்டோவில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். பேசவில்லை.அமைதியாக அமர்ந்திருந்தாள்.போன் இருக்கிறது.சரவணனுக்கு (friend) கால் செய்யலாமா? text ? என்னவென்று? இது என்ன இடம் என்றே தெரியவில்லையே!?

என்ன செய்வது? என்ன செய்வது? யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஆட்டோ நின்றது. "இதான் மேடம்! ஆபிஸ் எங்க இருக்குனு பாருங்க ?" என்றான்.

இவள் அவசரமாக ஆட்டோவிலிருந்து இறங்கினாள். " தேங்க்ஸ் " என்றாள். 100 ரூ நோட்டை நீட்டினாள். அவன் அதை வாங்கி கொண்டு மீதி பணத்தைக் கொடுத்தான். அவன் முகத்தை பார்க்காமலேயே வாங்கிக்கொண்டாள்.

திரும்பி பார்க்காமல், வேகமாக நடந்தாள்? எங்கே? அருகில் எந்த கட்டடமும் இல்லை. ரோட்டிலிருந்து கீழிறங்கி ஒரு நடைப்பதைச் சென்றது. 50 அடி தூரத்தில், நிறைய, பெரிய மரங்கள் சூழ்ந்த பழைய வீடு ஒன்று தெரிந்தது. பின் பக்கம் போலும்? என்ன இது? யார் இருக்கிறார்கள்? அலுவலகம் எங்கே இருக்கிறது? தயங்கி, தயங்கி 10 அடி நடந்தாள்.

பின்புறத்திலிருந்து, ஆட்டோவின் ஹாரன் சத்தமாக ஒலித்தது.அதிர்ந்து, திரும்பிப்பார்த்தாள். அவன் தான்! போகவில்லை? ஏன் நிற்கிறான்? அங்கிருந்தே அவன் சத்தமாகப் பேசினான். " மேடம்! ஆபீஸ் அங்க இருக்கா பாருங்க! இல்லைனா வந்திடுங்க ! நான் திரும்ப தரமணிலயே விட்ருறேன்"

இப்போது , எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. " ஒன்றும் பயமில்லை.இவன் இருக்கிறான்.அருகே போய் பார்ப்போம். அலுவலகமாக இல்லையெனில், இதே ஆட்டோவில் திரும்ப போய் விடலாம் “ . நடந்தாள்.பெரிய மரங்களைக் கடந்து, கட்டிடத்தின் முன்பக்கம் போய் பார்த்தாள். வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயிண்ட் போன போர்டு தொங்கிக்கொண்டிருந்தது.

சந்தோஷப்பட்டாள்.திரும்பி அவனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். போகச் சொல்லி சைகை செய்தாள். அப்பொழுதும், அவன் அரை மனதுடன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

அவள் ஆபிஸ் உள்ளே சென்று, அவர்கள் கொடுத்த காகிதங்களை எல்லாம் நிரப்பி, தன்னிடமிருந்த நகல் காகிதங்களை சேர்த்து அங்கிருந்த அம்மாவிடம் கொடுத்தாள். அம்மா, காகிதங்களை இடதுகையால் வாங்கி, ஏற்கனவே 2 அடி உயரம் அடுக்கியிருந்த காகித கட்டின் மீது போட்டார். அதை பிரமிப்புடன் பார்த்துவிட்டு, வாசலில் நின்றிருந்த உதவியாளரிடம் பேருந்து பற்றி விசாரித்துவிட்டு, 40 நிமிடங்கள் காத்திருந்து, பஸ் பிடித்துத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தாள்.

நான்கு வருடங்களுக்கு பிறகு: வே.வா. அலுவலகத்திலிருந்து, எந்த ஒரு கடிதமும் வராவிட்டாலும், நல்ல தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து, இதோ... நாளை திருமணமும் நடக்கவிருக்கிறது. இவ்வேளையில், ஏனோ அந்த முகமறியா ஆட்டோக்காரனின் நினைவு வருகிறது.மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டாள்!

my first attempt..! Please share your comments!
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
First deeps.... Welcome authorji ???
Very good narration.... Simply super?? கூடிய சீக்கிரம் பெரிய கதை கொண்டு வாங்க??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top