• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்டோன் கோல்டு செல்வா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
சுட்டெரிக்கும் சூரியன் நிசாவின் தலையை குறி வைத்து அடிப்பது போல இருந்தது. எந்நேரமும் பீச் பலூனாக தலை வெடித்து விடுமோ என பயந்தாள். 'ஸ்டோன் கோல்டு செல்வா' மித்ரன் தம்பி பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். பேரே பயங்கரமாக தெரிந்தது. தனியாக சென்று தேடுவோம் என நூர் சொன்ன போது மறுக்காத தன் மடத்தனத்தை எண்ணி வருந்தினாள். குப்பமெங்கும் மீன் வாடை குப்பென அடித்தது, மீன் குழம்பு வாடையாக இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். குப்பத்துக் காரர்கள் வேறு ஏதோ காணாத்தை கண்டதை போல இவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் அதிலும் ஒரு பொறுக்கி இவளை பின் தொடர்ந்தவாறே இருந்தான். ஒரு வழியாக அவனிடம் இருந்து தப்பிய நேரம் தான், நூர் கால் செய்து இவளை அவசரமாக வர சொல்லியருந்தாள். அங்கு தான் சென்று கொண்டிருந்தாள், தொலைவில் நூர் இன்ஸ்பெக்டர் கணேசுடன் பேசிக் கொண்டிருக்க, அந்த உரையாடலின் பதற்றத்தை இங்கிருந்தே இவளால் உணர முடிந்தது. இவள் அருகில் வந்ததை கண்டதும் பேச்சை சட்டென நிறுத்தி விட்டு இவளை நோக்கினர்


"என்ன மேடம் வர சொல்லிட்டீங்க அந்த ஸ்டோன்கோல்டு கிடைச்சுட்டானா..?" நிசா மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கிக் கொண்டிருந்தாள்.


"இல்லை" நூர் இவள் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள். கணேசின் முகம் கவலையில் தோய்ந்து போயிருந்தது. சிறிது நேரம் மவுனித்து விட்டு தொடர்ந்தாள், "நிசா.. ஒரு ப்ராப்ளம்.. காயத்ரி இறந்து போனது மித்ரன் தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க பட்.." அவள் கண்கள் மீண்டும் நிலம் நோக்கியது. "காயத்ரி ஜெர்ரிட்ட மாட்டிட்டாங்க.. இப்போ தான் எனக்கு அவன்ட்ட இருந்து கால் வந்தது.." நிசாவின் காது கேட்டதை இதயம் நம்ப மறுத்தது. "மாமி மாட்டிட்டாங்களா..?" அவளை ஏமாற்றி அனுப்பியதற்கான குற்ற உணர்வை முதன் முறை உணர்ந்தாள். கைகள் பதறியது. தலை லேசாக சுற்றியது காயத்ரிக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என மனம் பதை பதைத்தது.
அவள் கலக்கத்தை உணர்ந்தவளாய் நூர், " பயப்படாதீங்க.. அவங்களுக்கு நான் தான் தேவை. நானே வரேன்னு சொல்லிட்டேன்" கணேஸ் ஏதோ சொல்ல முயல , நூர் அவனை பார்வையாலே நிறுத்தினாள். "நான் கிடைச்சதும் நிச்சயமா காயத்ரிய விட்டுருவாங்க.. டோன்ட் ஒர்ரி.."
இதை கேட்டும் நிசாவுக்கு மனம் ஆறவில்லை. காயத்ரிக்கு ஏதேனும் நேர்ந்தால் தன்னால் தாங்க முடியாது என்பதை அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவளுக்கு உணர்த்தியது.
"ஐ எம் வெரி சாரி.. என்னால தான் எல்லா பிரச்சனையும் உங்களுக்கு.." என்ற நூர்ஐ சமாதானப் படுத்த நிசாவுக்கு தோணவில்லை இவளால் தான் எல்லாம் என்றே அவள் மனதின் ஓர் ஓரம் கூறியது. மேரி மட்டுமல இங்கிருந்தால் சமாளித்திருப்பாள், " மேரிய எங்கே.." என்றாள் அவளை காண வேண்டி, மேரியை காண வேண்டும் அவள் ஆறுதல் வார்த்தைகள கேட்க வேண்டும் என நிசா மனம் துடித்தது.
மேரிக்கும் சொல்லியாச்சு வந்தடுவாங்க.." என்று சொன்ன நூரின் கண்களிலும் குரலிலும் முதன் முறையாக பயத்தை உணர்ந்தாள் நிசா.



***
ஜெர்ரி நூர் மாட்டி விட்டாள், எல்லாம் முடிந்தது என்ற குஷியில் தன் அலுவல்களை முடித்து விட்டு குதூகலமாக காயத்ரியை அடைத்து வைத்த இடத்தை அடைந்தான். அங்கே காயத்ரி ஒரு சேரில் அமர்ந்திருக்க ஒரேயொரு குண்டு பல்பு மட்டும் தன் மஞ்சள் நிற ஒளியை செலுத்தி அந்த அறைக்கு ஒரு திரில்லிங் லுக்கை கொடுத்தது. காயத்ரி அந்த மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தாள். ஊத்தாப்பம் போல உடல் இருந்தாலும், அவள் முக லட்சணம் காலேஜ் படிக்கும் வயதில் சிக்காமல் போனாளே என ஜெர்ரியை ஏங்க வைத்தது.



"ஏய்யா இப்படி லைட்ட போட்டு பயமுறுத்துறீங்க ..!" என்றவாறே நுழைந்தான் ஜெர்ரி.



"சார்..! வாங்க சார்..! நீங்க தான் சரியான ஆள். இந்த பொம்பழ எப்படி விசாரிச்சும் மலுப்புது. சிபிஐ ல ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்துருக்கும் போல.."



அவனை கவனியாமல் " நீங்க நொச்சிக் குப்பம் போலயா..? இங்க என்ன பண்றீங்க?"



"அத ஏன் சார் கேக்குறீங்க.. அவன் பேர கேட்டாலே உக்கிரமாகுறாங்க.. ஊரெல்லாம் கடன் வாங்கி வச்சிருக்கான், மப்டில போறோமேனு, அவன் சித்தப்பான்னு சொன்னேன் . என்ட்டயே வசூல் பண்ணிட்டாங்க சார்.. அதான் கடுப்புல இங்க வந்துட்டேன்.. ரவி சார் அங்க தான் இருக்காக.."



வெறுப்பில் பெரு மூச்சு விட்ட ஜெர்ரியின் கண்கள் காயத்ரி மீது விழுந்தது... அவள் பேயறைந்தது போல உறைந்து போய் இருந்தாள்,
"அடிச்சீங்களா.." அவளை நோக்கி கண்சாடை காட்டி கேட்டான்.



"அடிக்கவா..! நீங்க வேற .. கேட்டதுக்கே சாபமா விட்டுத் தள்ளுது.. ஐயமாரு வேற சாபம் உட்டா பலிச்சிடும், அதான் நீங்க வந்ததும் பாத்துக்கலம்னு.."



"அப்போ நாங்க சாபம் வாங்கி நாசமா போனும்.?."



"ஐயோ அப்படி இல்ல சார்.. நீங்க கிறிஸ்டியனுங்க உங்கள ஒன்னும் செய்யாது." தன் சொட்டை தலையை சொறிந்தான் நாராயணன்.



பெருமூச்சு விட்டு விட்டு ஒரு சேரை எடுத்து காயத்ரி முன்னாள் போட்டு அமர்ந்தான் ஜெர்ரி.



"இங்க பாருங்க மேடம்.. நான் கேக்குறதுக்குலாம் உண்மையான பதில சொல்லிட்டா நீங்க போகலாம்.. ஓகே..? "



காயத்ரி தயக்கத்துடன் தலையை ஆட்டினாள்.
"அன்னைக்கு நடந்தத முதல்ல இருந்து சொல்லுங்க..?"



"அன்னைக்கு தோசைக்கு மாவு ஊற போட்டேன் சார் .. அப்புறம் பால் பாக்கெட் வரலேனு.."



"ஸ்டாப் .. ஸ்டாப்.. முதல்லனு நீங்க காலைல எழுந்ததுல இருந்து இல்ல.. " எலிச்சலில் குதிரை போல உஷ்ஷ் என மூச்செறிந்து விட்டு,
"நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, மித்ரன் வீட்டுக்கு ஏன் போனீங்க..?"



"நாயை தேடி போனோம் சார்.."



"பாத்தீங்களா சார்.. மித்ரனையே நாய்னு சொல்றா.." நாராயணன் குறுக்கிட்டான்



"அங்க என்ன பாத்தீங்க..?"



"நான் பாக்கல என் ப்ரெண்ட்ஸ் தான் இன்னொரு நாய பாத்தாங்க"



"பாத்திங்களா சார் .. சாமியையும் நாய்னு சொல்றா.."



"சாமிய அடிச்சது யாரு..?"



இம்முறை சிறிய மவுனத்திற்கு பின் "நான் தான் சார் அடிச்சேன்."



"பாத்தாங்களா சார் , சாமியையே அடிச்.." நாராயணன் முடிக்கும் முன் ஜெர்ரி தன் பார்வையால் பல கெட்ட வார்த்தைகளை உதிர்க்க, அதன் அர்த்தம் புரிந்தவனாய் "பொத்திக்குறேன் சார்" வாயை பொத்தியவாறே பின் சென்றான்.
தன் நாற்காலியை சற்று இழுத்து, காயத்ரியை நெருக்கி போட்டு அமர்ந்தான்,
"லுக் காயத்ரி ரைட்..! சீ காயு.. நீங்க இப்படி மலுப்பிட்டே இருக்கலாம், நீங்க பொண்ணு உங்கள அடிக்குற அளவுக்கு நான் கெட்டவன் இல்ல.." லேசாக சிரித்தான் " பட், எனக்கு உண்மை தெரியனுமே.. தப்பா நினைச்சுக்காதீங்க.. இந்த வயசுலயும் கும்முனு தான் இருக்கீங்க." காயத்ரி முகம் சுழித்தாள்
"நாராயணன்..! நேத்து ப்ராத்தல் கேசுக்கு ஒரு ஆள் குறையுதுனு சொன்னீங்கல்ல..?" ஆமாம் என வாயை பொத்தியவாறே பதிலளித்தான் அவன்.
மறுபடியும் காயத்ரியிடம் திரும்பி,
"உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.ஒரு நாள் மட்டும் உங்கள லாக்அப்ல வச்சுட்டு அப்புறம் விட்டுடறேன். எனக்கு மறந்திடும்.. ஆனா உங்களுக்கு..? உங்க அஸ்பெண்டுக்கு..? இல்ல பசங்களுக்கு..?" சிறிது நேரம் காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை ரசித்தான். "அழாதீங்க.. உண்மையா சொல்லிடுங்க இது ஏதும் நடக்காது.. பர்ஸ்ட் சாப்பிடுங்க.." சாப்பாடு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் அவள் முன் வைத்தான். காயத்ரி அருதவாறே அவனை பார்க்க,
"சைவம் தான் மேடம்..!" சாதாரணமாக அவளை பார்த்து சிரித்தான்.



**********************



மேரி இன்னும் வராதது நிசா வயிற்றில் புளியை கரைத்தது. நூர் கணேசுடன் சற்று தொலைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து கொண்டிருக்க, ஒரு விசில் சத்தம் நிசா கவனத்தை திருப்பியது, சத்தம் வந்த திசையில் அதே ஜொள்ளு பார்ட்டி. சட்டென அங்கிருந்து நகல முயன்றவளை மேலும் ஒரு விசில் சத்தம் சிதறடித்தது. கண்டு கொள்ளாமல் நூர்ஐ நோக்கி நடக்கலானாள், "ஹலோ மேடம்" என அவன் அழைக்க, நிசா பொறுமை இழந்தாள். சட்டென அவனை திரும்பி அக்னியாய் முறைக்க, அதன் அர்த்தத்தை காதல் என கொண்டானோ..! இவளை நெருங்கினான். "பளார்ர்ர்ர் " என நிசா அவனை விட்ட அரை நூர்க்கு கேட்டது. திடீரென வந்த துணிவை நம்ப இயலாமல் நிசா தன் கரங்களை பார்த்த வேளை நூர் கணேஷ் அவ்விடம் வந்தனர். "என்னமே எம்மேலயே கை வக்கிறியா.." என சத்தம் போட்டவன் கணேஷை ஏறிட்டு விட்டு,
"என்ன அடியாள் வச்சிகிறியா..?" என கேட்க,



"டேய் நான் போலீஸ்" குத்து விட ஏதுவாக கையை மடக்கினான் கணேஷ்.



"பெரிய அலெக்ஸ் பாண்டியன் .. எங்க அண்ணன் மித்ரனுக்கு தெரியாத போலீஸே இல்ல .." தன் காலரை தூக்கி விட்டு நக்கலாக நின்றான்.



மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவர்கள் பயந்ததாய் எண்ணியவன்,
"என்ன பேர கேட்டாலே சும்மா அதிருதா.." என பஞ்ச் டயலாக் அடித்தது தான் தாமதம்
குபீர்ர்ர்ர்ர்.. என மூவரும் ஒரு சேர சிரித்தனர், அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என புரியாமல் விழித்தான் ஸ்டோன் கோல்டு செல்வா.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
பாவம் மாமி. மாமியின் சாபமெல்லாம் பலிக்காத ஆளா இருக்கிறானே .
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Stone gold Selva maatikittana....... Very Interesting and nice ud bro. Eagerly waiting for the next ud........
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Volunteer ஆ சிக்கறீங்களே செல்வா...காயு அழுறது கஷ்டமா இருக்கே...மேரி எங்க... அருமையான பதிவு அண்ணா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னாலே பாதி udக்கு மேல் படிக்க முடியல
சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திரும் போல jalan
செம்ம போங்க இது crime இல்ல செம்ம காமடி ஸ்டோரி
அதுவும் மாமி காயு அந்த ரௌடி பேசிக்கும் இடம் சான்ஸ் இல்ல ஏட்டிக்கு போட்டியா பதில்கள் ?????
பேசாம full humour novel ஒன்னு ஏழுதுங்க ரொம்ப அருமையா சரளாமா வருது உங்களுக்கு அடி dool ?? ud
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
stone gold selva thana poi sikkittane:D katha semaya poguthu tnx sago :love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Stone gold selva thaanaa vanthu sikkitaanae... gayu thaan paavam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top