• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்ரீ சாயிநாதர் அஷ்டகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சாயிநாதர் அஷ்டகம்



1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழும் அடியேனின் ஐயன் சாயிநாதனே! அத்ரி அநுசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே! வாசுகியால் கடையப்பெற்று அமுது பொங்கிய தலம் ஷீர்டியில் எழுந்தருளிய பரப்ரஹ்மே. கற்பகத்தருவே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே. ஸ்ரீ பாத வல்லபனே! நரஸிம்ஹ சரஸ்வதியே. அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தனே! பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரட்சகனே. அல்லாவின் புதல்வனே. இடர் நீக்கி, துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



2. அனுதினமும் சாயிநாமமே பிரதானமென்று எனக்கு விதித்த கடமையும் மறந்து, உன்னையே நினைந்து, உன் பாதமே பணிந்து பலவித பூஜைகள் செய்தேன். உன் திருக்கதை படித்தேன். திருநாமம் ஜபித்தேன். உன் சொற்படி அன்னதானமிட்டேன். பிறர் மனதை நோகடித்து அறியேன். இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட யாம் செய்த பிழைதாம் யாதென உரைத்திடுவாய். பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பனென்று என்னைப் புரிந்திட்டாயா? குழம்பித் தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



3. வசீகர அருளால் பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பதம் பற்றியதால் அடியேனுக்கு இரங்கிட உமக்கு நேரமில்லையா? மனமில்லையா? நொடிப்பொழுதும் உன்னைப் பிரியேன். இமைப்பொழுதும் உன்னை விலகிடேன். என் பக்தியில் நீ கண்ட பிழையறியேன் சாயி! முன்வினையோ! தீவினையோ? நானறியேன். தீவினையைத் தீக்கிரையாக்க உன் தயவொன்று போதுமே. கருணா சாகரா! தாயிலும் மேலான தயை மனம் கொண்டவனே. சேய் அழுதால் தாங்குமோ உன் மனமே? உன் நாமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும், ஷாமாவை காலனின் பிடியிலிருந்து காத்தாயே! சர்வேஸா! சேஷசாயி! என்னைக் காத்தருள ஏனிந்த தயக்கம்? கண்கள் நீர் சொரிந்து காய்ந்தும் போனதே. நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே. உன் நினைவன்றி வேறு எதையும் நினைந்திடேனே. நீயே அடைக்கலமென்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திக்கிரங்கி இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரமளித்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



5. தூய மனதில் நான் உன்மேல் கொண்ட பக்தி சத்தியமே. உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி, சாயி பித்தனாயும் ஆனேனே. உன் பாதமலரில் பக்தியோடு விழுந்து கிடந்தேனே. நீ என்னைப் பாராமல் போனால் அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் நம்மைக் கேலி பேசுமே, சாயி உன்னிடம் இரங்கவில்லை. உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னைத் தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்? உலகம் உன்னையும் பழிக்குமே. உலகம் உன்னைப் பழித்தால் என் மனம் தாங்காதே. பழிச் சொல்லிலிருந்து காப்பாற்றி பக்தனையருள விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



6. ஏதுமறியா மூடனாய், அறிவிலியாய், இறைவனை அறியாமல் திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய். எம்மதமும் சம்மதம் என்ற சர்வதத் போதகனே. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்காளமிடுமே. தெய்வம் பொய்யானதே என்று எள்ளி நகையாடுமே. பக்தி நம்பிக்கையை ஏசிடுமே. நீ பொய்யில்லை, நீ சத்தியமென்று நான் அறிவேனே. உண்மையாய் உலக முழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருமையுடன் பறைசாற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



7. அக்னி ஹோத்ரியாய் துனியை எரிய விட்டு, அரும் உதியால் பக்தனின் பிணி, துயர் போக்கும் துவாரகாமாயி வாழ் ஆனந்த சாயி! பஞ்ச பூதமும் உந்தன் கையசைவிலே, விரல் சொடுக்கில் விதியையே மாற்றும் விஸ்வநாதனே, பிரம்ம ஸ்வரூபனே! உம்மையன்றி யாரையும் அறியாத என் வேதனையைப் போக்கிடுவாய். துன்பக் கடலில் தத்தளிக்கும் எமக்குத் தோணியாய் வந்திடுவாய். என் விண்ணப்பங்களை விருப்பமாய்க் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தருவாய். ஈடில்லா செல்வமும் வெற்றியும், பிணியிலா வாழ்வும், இறையருளும், நற்கதியும் பெற்றிட விரைந்து வந்து அருளுவாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.



8. யாமிருக்க பயமேன்! நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். பொறுமைக்கொரு எல்லை உண்டே. நான் உயர் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே, காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன்சென்று விட்டனரே. கவலையில் நெஞ்சம் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு, வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட புழுப்போல் துடிதுடிக்கும் பக்தனுக்கிரங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும், சீரும் சிறப்பும், ஆரோக்கியம் ஆயுளும், புகழ் தரும் வெற்றியும், தனதானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

ஸ்ரீ சாயிநாதருக்கு அர்ப்பணம்.



ஸ்ரீ சாயி நூற்றியெட்டு குரு ஓம்



ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம:

ஓம் சத்குரு சாயிநாதாய நம:

ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:

ஓம் ப்ரமகுரு சாயிநாதாய நம:

ஓம் தேவ குரு சாயிநாதாய நம:

ஓம் சாயி சிவசக்த்யை நம:

ஓம் சாயி சர்வ சக்திமானாய நம:

ஓம் சாயி சர்வவ்யாபங்காய நம:

ஓம் சாயி சர்வ ஆத்மாய நம:

ஓம் சாயி அலக நிரஞ்சனாய நம: 10

ஓம் சாயி சர்வ சாட்சியாய நம:

ஓம் சாயி அந்தர்யாமியாய நம:

ஓம் சாயி பரிபூரஜாத நம:

ஓம் சாயி ஆதிசக்தியை நம:

ஓம் சாயி அனாதி சக்த்யை நம:

ஓம் சாயி ராமாய நம:

ஓம் சாயி த்ரிலோகிநாதாய நம:

ஓம் சாயி த்ரைகால தர்ஷியாய நம:

ஓம் சாயி கோவிந்தாய நம:

ஓம் சாயி சச்சிதானந்த ஸ்வரூபாய நம: 20

ஓம் சாயி பக்த ரடிகாய நம:

ஓம் சாயி பரமானந்த ஸ்வரூபாய நம:

ஓம் சாயி மஹா துர்காய நம:

ஓம் சாயி ஆகர்ஷண சக்தியாய நம:

ஓம் சாயி அஞ்ஞான விநாசகாய நம:

ஓம் சாயி யோகீச்வராய நம:

ஓம் சாயி புருஷோத்தம புருஷாய நம:

ஓம் சாயி சங்கராய நம:

ஓம் சாயி சுகஸ்வரூபாய நம:

ஓம் சாயி கல்யாண ஸ்வரூபாய நம: 30

ஓம் சாயி ஜக ஆதாராய நம:

ஓம் சாயி ரகுநந்தனாய நம:

ஓம் சாயி தேவரடிகாய நம:

ஓம் சாயி அசுரஸம்ஹாரியாய நம:

ஓம் சாயி கர்மபலதாதாய நம:

ஓம் சாயி தாத்தாத்ரேய நம:

ஓம் சாயி கர்த்தா புருஷாய நம:

ஓம் சாயி தீனபந்துவாய நம:

ஓம் சாயி பகத் பயஹாரிய நம:

ஓம் சாயி துக்க நிவாரணாய நம: 40

ஓம் சாயி அகால புருஷாய நம:

ஓம் சாயி ஆதிநாராயணாய நம:

ஓம் சாயி லீலாதாரியாய நம:

ஓம் சாயி ஜனஹித் காரியாய நம:

ஓம் சாயி சிவசம்புவாய நம:

ஓம் சாயி ஆபத்தி ஹரனாய நம:

ஓம் சாயி சரணாகத வத்ஸலாய நம:

ஓம் சாயி மாதவாய நம:

ஓம் சாயி ராகன் ஹாராய நம:

ஓம் சாயி ஜகத் காரணாய நம: 50

ஓம் சாயி சத்கதிதாதாய நம:

ஓம் சாயி மாகாளிகாயை நம:

ஓம் சாயி கருணாசிந்துவாய நம:

ஓம் சாயி சர்வேஷ்வராய் நம:

ஓம் சாயி ஜகதீச்வராய நம:

ஓம் சாயி அகால சக்தியை நம:

ஓம் சாயி பதீத பாவனாய நம:

ஓம் சாயி விஸ்வநாதாய நம:

ஓம் சாயி வேத ஸ்வரூபாய நம:

ஓம் சாயி சுக தாதாய நம: 60

ஓம் சாயி ஹரிநாராயணாய நம:

ஓம் சாயி சத்ய ஸ்வரூபாய நம:

ஓம் சாயி சர்வ ஸாமர்ணாய நம:

ஓம் சாயி ஜோதி ஸ்வரூபாய நம:

ஓம் சாயி மஹாலடி;ம்யை நம:

ஓம் சாயி ஹரிகோவிந்தாய நம:

ஓம் சாயி சோஹம் தேவாய நம:

ஓம் சாயி ஓம்கார ஸ்வரூபாய நம:

ஓம் சாயி மஹாசரஸ்வத்யை நம:

ஓம் சாயி ஹரிவிட்டலாய நம: 70

ஓம் சாயி வெங்கடேஷ்வராய நம:

ஓம் சாயி மாயா விநாசகாய நம:

ஓம் சாயி மோஹ விநாசகாய நம:

ஓம் சாயி விபித்தி பஞ்சநாத நம:

ஓம் சாயி பக்தி தாதாய நம:

ஓம் சாயி முக்தி தாதாய நம:

ஓம் சாயி ஞான தாதாய நம:

ஓம் சாயி கோபிவல்லபாய நம:

ஓம் சாயி பவதாரகாய நம:

ஓம் சாயி சர்வப்ரியாய நம: 80

ஓம் சாயி அபராத ஹர்தாத நம:

ஓம் சாயி பண்டரீ நாராய நம:

ஓம் சாயி கிருபா சாகராய நம:

ஓம் சாயி மங்கலகாரி தேவாய நம:

ஓம் சாயி அமங்கலஹாரி தேவாய நம:

ஓம் சாயி அம்ருத சிந்துவாய நம:

ஓம் சாயி சாந்தி தாதாய நம:

ஓம் சாயி சந்திரமௌலீஸ்வராய நம:

ஓம் சாயி ஜகத்ரூபாய நம:

ஓம் சாயி ஆத்ம ஜோதியாய நம: 90

ஓம் சாயி லடி;மிநாராயணாய நம:

ஓம் சாயி அபேதசக்தியாய நம:

ஓம் சாயி விஷ்வ ஆத்மாய நம:

ஓம் சாயி பரமாத்மாய நம:

ஓம் சாயி பக்த வத்ஸலாய நம:

ஓம் சாயி அக்னி ரூபாய நம:

ஓம் சாயி காயத்ரியை நம:

ஓம் சாயி மஹா அம்பிகாயை நம:

ஓம் சாயி தர்மரடிகாய நம:

ஓம் சாயி சித்திதாதாய நம: 100

ஓம் சாயி ரித்திதாதாய நம:

ஓம் சாயி ஊர்ப்ரகாய நம:

ஓம் சாயி சாதுரடிகாய நம:

ஓம் சாயி சிந்தாநாசாகாய நம:

ஓம் சாயி ஆனந்தமூர்த்தாய நம:

ஓம் சாயி பாக்ய விதாதாய நம:

ஓம் சாயி ஹரிஹராய நம:

ஓம் சாயி பரப்ரஹ்மாய நம: 108
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சாய் ராம் ?? அருமை ??
 




SaiDivya

புதிய முகம்
Joined
Apr 28, 2020
Messages
9
Reaction score
1
Location
Chennai
நெய்வேதிய மந்த்ரா

குருவே சாய்! குருவே சாய்!
எனக்கு உணவு அளிக்கும் எந்தன் குருவே சாய்!
இந்த நைவேத்தியத்தை தாழ்மையுடன் படைக்கிறான் சாய்!
இதை ஏற்று கொண்டு என் வாழ்வில் ஒளி வீசுவார் சாய்!
பழம் பால் தேன் படைத்துள்ளேன்!
கங்கை யமுனை காவேரி நீர் படைத்துள்ளேன்!
வெத்தலை பாக்கு ஏலக்காய் படைத்துள்ளேன்!
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு
என் துன்பம் துடைக்க வாரும் சாய்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top