• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பெர்முடா முக்கோண மர்மம்... இதுதான் காரணமா?

??இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.


View attachment 11598

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ?

??வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

??அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும்⛵⛵, 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.

??1945-ம் ஆண்டு பிளைட்✈✈ 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின.

??1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

விமானியின் அனுபவம்

??இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.

காரணம் கண்டுபிடிப்பு

View attachment 11599

??சமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய தியரியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி, அந்தப் பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்ததாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


??இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றிருக்கிறார்

எப்படியோ இத்தனை ஆண்டு கால மர்மம் ஒருவழியாகத் தெளிவாகி இருக்கிறது....????
??? நன்றி தெரியாத விஷயத்தை தெரியவைதமைக்கு???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top