• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

14.கிழட்டின் கதறல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
பெற்ற கடனும் தீர்ந்து போக...
பிறந்தவனுக்கோ
என்மேல் இரக்கமாம்...

தள்ளாடும் வயதினிலே...
எனக்கு
தவணை முறையில்
இன்பமாம்...

வரவுகள் பல புகுந்திட...
செள்ளரித்த
செல்வமாய் நானும்
போனேனாம்...

அழுக்காய் அவன்
என்னை நினைக்க...
அருகில் வைத்திட
வெறுத்தனாம்...

கடந்த காலங்களை சொல்லி மழிந்திட...
புது
அறிமுகங்கள் கொடுக்க நினைத்தானம்...

திரும்பிட கால்கள்
வலித்திடும் என...
தூரமாய்
அழைத்து சென்றானாம்...

காற்றிலே கரையும்
வயதினில்
கல்லாய் கிடந்திடு
என்றானாம்...

கண்களும் உறைந்து போக
என் கடமையும் முடிந்தது என
பத்திரம் என்று போனானாம்...

இது என்ன வாழ்க்கையோ!

மகனே...
பணத்தை சேர்த்திட
பணியில் கிடந்திட
பாழும் மனதோ
பாசம் காட்டிட மறந்ததோ...

உன் ஆசையும் நடந்திட
என் உடலும் தளர்ந்திட
நான் நாளும் ஓடியதை
நீ
மறந்தாயோ...

இதுவா என் தவறு? குழப்பத்தில் நான்!

என் அன்பையும்
உன் தேவைகளையும்
நான் பணத்தை கொண்டே
நிறைவு செய்தேனா...?

இல்லை...?

கணத்த குரலில்
உன்னை ஒடுக்கி அமர்த்தி
என் ஆசைகள் உன்மேல் திணித்தேனா...?

அன்றோ நான் உன்னை ஊரறிய கதறல் சத்தத்தில் பள்ளியில் அமர்த்தினேன் இன்றோ நீ யாரும் அறியா வண்ணம் என்னை என்
மனக்குமுறல்கள் உடன் விடுதியில் அமர்தினாய்...

எனக்கு குளிரூட்டும் கருவி வேண்டாம்.பஞ்சு நிறைந்த மெத்தைகள் வேண்டாம்.ஓரமாய் ஒரு நாற்காலி போதுமானது .எனது பேரனுடன் பல கதைகள் பேசி.அவன் சிரிப்பினில் சிதறி இறந்து விடுவேன்.

மகனே...
உந்தன் நாவலில் நானும் அரக்கனாய் ஆனேனோ...?


_பாலா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top