• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

15. குட்டி தலைவி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
நாட்டின் நாளைய தூண் இங்கு மண் அளவில் குறுகி

கடுகு அளவு காசில்
எந்தன் கற்றல் ஆசை...
காப்பானும் மறைந்துபோக
நானும் கடை வேலையில்…

எழுத்து பாடம் காணும்
முன்னே
வாழ்க்கை பாடம்
வழிநெடுக்கில்…
பாதங்கள் படிந்ததே
என்றவுடன்
பாரமது பாதை வடிவில்…


சமூகமே...

பிஞ்சு மனங்கள் பழக்கம் எனக்கு
ஆதலால்
நஞ்சு முகம் அறியேன்…
பேதையாய் இருப்பதாலே
சில
பித்தர்களுடன் நடந்தேன்…

வலிகளும் எனக்கு இருந்ததில்லை
மறுத்து போன
மனதின் துணையில்
இருக்கையில்...
மானமும் என்றும் விற்பதில்லை
மானிடர்களின்
வெறிகள் தீர்த்திட
நினைக்கையில்...


அடம் கொண்டிட
ஆசையுடன் அனைத்திடும்
அப்பனை இழந்ததாலே…
ஆசை கொண்டவுடன்
அதட்டி அடக்கிட
சில திரைகள் போடும் நிலை…


அப்பா...

செல்வமாய் பிறந்தவள்
இன்றோ
செல்வம் தேடி திரிகின்றாள்…???

_பாலா

Salute for those brave Queens???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top