• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

4. Sevvanthip poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
செவ்வந்திப் பூ:

பாட்டி கொடுத்த செக்கை கையில் பிடித்துகொண்டு உற்சாகமும் பரபப்புமாக சென்னை வந்து இறங்கினாள் உதயா. அவளால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இனி வங்கியில் தொழிற் கடன் பெற்று தனது எண்ணம் போல கட்டிடத் தொழிலில் மிக அதிகமாக பெயரும் புகழும் பெறலாம் என எண்ணிக்கொண்டாள். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு இவளது உற்சாகம் பிடிபட்டது.

"என்னடி? உங்க பாட்டி என்ன சொன்னாங்க? என்னைப் பத்தி ஏதாவது மூட்டி விட்டுருப்பாங்களே?" என்றாள்.

சட்டென வடிந்தது அவளது உற்சாகம். சே! என்ன இது அம்மா ஏன் இப்படிப் பேசுகிறாள்? இத்தனைக்கும் பாட்டி ஒரு வார்த்தை கூட அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசவில்லை. என்று நினைத்துக்கொண்டாள்.

"அம்மா! நான் முதல்ல குளிச்சுட்டு வரேன். டிஃபன் சாப்பிட்டுக்கிட்டே உங்க எல்லார் கிட்டயும் சொல்றேன். ரொம்ப சந்தோஷமான விஷயம் இது" என்று சொல்லி விட்டு மாடிக்கு துள்ளி ஓடினாள். குளித்து முடித்து கீழே வரும் போது டேபிளில் அம்மா, அக்கா காவ்யா அப்பா என மூவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் அக்கா கத்தினாள்.

"உதிக்குட்டி ஓடியா ஓடியா! என்ன அது சந்தோஷமான சமாசாரம்? உனக்கு பாட்டியே மாப்பிள்ளை பார்த்து முடிவு செஞ்சிட்டாங்களா?" என்றாள்.

"இல்ல காவ்யா! இது அதை விட சந்தோசமான விஷயம். நான் பிசினஸ் ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னேன் இல்லியா? அதுக்கு முன் பணம் பாட்டியே கொடுக்கறேன்னு சொல்லி என் கையில அஞ்சு லட்ச ரூவாய்க்கான செக்கைக் கொடுத்துட்டாங்க" என்றாள்.

ஊசி விழுந்தால் கூடக் கேட்குமளவு மௌனம் நிலவியது அங்கு. அக்காவின் முகமும் அம்மாவின் முகமும் வேறு மாதிரியாகிவிட்டன. அப்பா தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரது முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை. ஆனால் உதயா எதிர்பார்த்த ரியாக்ஷன் இது இல்லை. அம்மா மகிழ்ச்சியில் இனிப்பு கொடுப்பாள். அக்கா வாழ்த்துவாள். அப்பா தோளில் தட்டிக்கொடுப்பார் என எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு அவர்கள் முகங்கள் இவளிய விரோததோடு பார்த்தன.

"என்னம்மா பேசாம இருக்கீங்க? நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன்? ஏன் இப்படி பார்க்கறீங்க?" என்றாள் சமாளித்துக்கொண்டு.

"ஹூம்! உன்னைக் கெடுக்குறதே உன் பாட்டி தான். சின்னப்பொண்ணு கையில இவ்வளவு ரூவாயை கொடுத்து அனுப்பிச்சிருக்காங்களே? இவங்களை என்ன சொல்ல?" என்றாள் அம்மா கோபமாக.

"ஏம்மா அதை மட்டும் சொல்ற? என் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டதே அவங்க கிட்ட அப்பா கேட்டதுக்கு எங்கிட்ட பணமே இல்லைன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் குடுத்திருக்காங்க? அதை யாருமே சொல்ல மாட்டேங்கறீங்க?" என்றாள் காட்டுக் கத்தலாக.

"அம்மா காவியா! நீ டென்ஷனாகாதேம்மா! வயத்துப்புள்ளகாரி இப்படிக் கத்தக் கூடாது" என்று அம்மா அவளை சமாதானப்படுத்தினாள். அவர்களது பேச்சைக் கேட்ட உதயாவுக்கு மயக்கம் வராத குறை. அவள் எதிர்பார்த்தது என்ன இப்போது நடப்பது என்ன? எதிலுமே பட்டுக்கொள்ளாமல் இட்லிகளை உள்ளே தள்ளுவதில் முனைந்திருந்த தந்தையை நோக்கினாள். எரிச்சல் வந்தது. என்ன மனிதர் இவர்? என்றுஎண்ணத் தோன்றியது.

"என்னப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?" என்றாள் அதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல்.

"அவர் என்னடி சொல்லுவாரு? அவங்கம்மா உன்னை வேணும்னே கல்யாணம் செஞ்சுக்க விடாம தடுக்கறாங்க! இது கூடப் புரியாதவரா அவரு? என்றாள் அம்மா.

"அம்மா ஏன் இப்படிப் பேசுற? அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்? சொந்தமா தொழில் தொடங்கணும்னு நெனச்சேன். அதுக்கு பாட்டி சப்போர்ட் பண்ணுனாங்க அதுக்காக அவங்களை என்னென்ன பேசுற?"

"அது தான் தப்புன்னு சொல்றேன். நீ ஓடினியே உங்க பாட்டியைப் பார்க்க அப்ப கூட நான் அப்பா கிட்ட என்ன சொன்னேன்னு கேளு. அவங்க வயசுல பெரியவங்களா உதயாவுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புவாங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க என்ன செஞ்சிருக்காங்க பார்த்தீங்களா? என் மேல உள்ள கோபத்தை என் மேல தான் கட்டணும். அதை விட்டுட்டு என் மகளை கல்யாணம் பண்ண விடாமக் கெடுக்கப் பார்க்கறாங்க" என்றாள். கோபத்தில் மூச்சிறைத்தது அம்மாவுக்கு.

"நீ கொஞ்சம் அமைதியா இரு பார்வதி! இப்படி டென்ஷனானா ரத்தக் கொதிப்பு ஜாஸ்தியாயிரும். அப்புறம் யாரு அவஸ்தைப்படுறது?"

"அந்த அக்கறை நான் பெத்த பொண்ணுக்கு இல்லையே? அம்மாவை கத்த விட்டு வேடிக்கை இல்ல பார்க்குறா?" என்றாள் கடூரமாக.

அழுகை வந்தது உதயாவுக்கு. ஏன் எப்போதுமே அம்மா இப்படி என்னை தவறாகவே பார்க்கிறாள். அம்மாவைக் கத்த விட்டு வேடிக்கை பார்க்கும் அளவுக்கு எனக்கு என்ன அத்தனை கல் நெஞ்சா? அம்மா என்ன அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாள்.? நான் என்ன எதிர்பார்த்தேன்? இங்கு நடப்பது என்ன? அதுவும் சரி தான் மற்றவர்களுக்கு நான் சொந்தமாக தொழில் செய்வது பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்தது என் முட்டாள்தனம் தான். எண்ணியபடியே அமர்ந்திருந்தாள். அப்பா வாய் திறந்தார்.

"ஏம்மா! பாட்டி எதுவுமே சொல்லாமலா பணத்தை கொடுத்தாங்க?"

"இல்லப்பா! அவங்களும் என்னோட நிறுவனத்துல ஒரு பங்குதாரர்னும் அதை பத்திரத்துல எழுதி பதிவு செய்யணும்னும் சொன்னாங்க! அவங்க முதல்ல இதைச் சொல்லல்ல. நான் தான் அவங்களை சம்மதிக்க வெச்சேன். என்ன இருந்தாலும் பிசினஸ்ல கறாரா இருந்துட்டா அப்புறம் பிரச்சனை இல்லை பாருங்க" என்றாள்.

"என்னாங்க கேட்டீங்களா? சொந்த பேத்தி கிட்ட அஞ்சு லட்ச ரூவா பணத்துக்கு எழுதி வாங்குனாங்களாம் உங்க அம்மா. எப்படி இருக்கு கதை? இந்த வயசுலயும் அவங்களுக்கு மூளை நல்ல வேலை செய்யுது! ஹூம் பணத்து மேல என்ன ஆசை பாருங்க" என்றாள் அம்மா கசப்பாக.

இப்போது உண்மையிலேயே கோபம் வந்தது உதயாவுக்கு.

"என்னம்மா நீ அப்படியும் பேசுற இப்படியும் பேசுற? அவங்க எதுவுமே சொல்லாமத்தான் பணம் கொடுத்தாங்க! நான் தான் கட்டாயப்படுத்தினேன். அதனால தான் அவங்க இதுக்கு சம்மதிச்சாங்க" என்றாள்.

"ஆக மொத்தத்துல நீ நல்லாயிருக்கணும்னு உங்க பாட்டி நினைக்கல்ல! அதானே?"

"நான் நல்லாயிருக்கணும்னு தான்ம்மா இந்தப் பணத்தையே கொடுத்தாங்க! நீங்க என்ன சொன்னாலும் சரி நான் என்னோட சொந்தத் தொழிலை தொடங்கத்தான் போறேன்."

"ரொம்ப நல்லாயிருக்கு. உனக்கு இப்பவே 23 வயசு. நீ சொந்தமா தொழில் தொடங்கி அதுல முன்னுக்கு வந்து பத்து வருஷம் ஆயிரும். அப்ப உன்னைக் கட்ட யாரு வருவாங்க? விவாகரத்து ஆனவன், கிழவன் இவங்க தான் வருவாங்க! அதைத்தானே பிளான் பண்ணியிருக்காங்க உங்க பாட்டி" என்றாள்.

என்ன பதில் சொவது என புரியவில்லை அவளுக்கு. ஆனால் பாட்டி அந்த நோக்கத்தோடு பணம் கொடுக்கவில்லை என்பது மட்டும் தெரியும் அவளுக்கு. பாட்டி அம்மாவைத் தன் எதிரியாகக் கருதவில்லை. ஆனால் அம்மாவைப் பொறுத்தவரை பாட்டி மகளை கல்யாணம் செய்துகொள்ள விடாமல் தடுக்கும் ஒரு சதிகாரி. ஏன் அம்மாவின் மனது இப்படிக் குறுகலாக இருக்கிறது. பெண் என்றால் கல்யாணம் மட்டும் தான் லட்சியமா? மற்ற லட்சியங்கள் இருக்கவே கூடாதா? இதையே ஒரு ஆண் சொல்லியிருந்தால் எத்தனை பாராட்டி யிருப்பார்கள்? இதனை இப்படியே விடக் கூடாது. எனது லட்சியம் நிறைவேறும் வரை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாக சொல்லி விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அப்பாவின் பக்கம் திரும்பினாள்.
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
Nice going
amma appa santhosa paduvaanganu paarththa varuthapaduraanga
adhai vida help panniya paatikku ketta peyar...
idhula iva vera.... "எனது லட்சியம் நிறைவேறும் வரை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாக சொல்லி விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அப்பாவின் பக்கம் திரும்பினாள்."
ippadi sonna eriyura theeyil ennai vitta maathiri aagatha

nallathai sonnalum nayama sollanum :)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
itenna amma ippadi:( oru kannil vennai, innoru kanil sunnamba:oops::oops:nice epi(y)
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
udaya nilamai romba sangadama irukku....ava ammavum akkavum ean ipdi ivala torture pandranga...enga thirumbinalum adichha avalum evlo thanguva....Pavam patti avangala ennama varukkaranga udhaya amma........Kavyava pathi yosikkara alavu Udayava ean ipdi pandranga.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top