• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Alagiyin kaathal thavam - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 13

இன்று:

பாரிஸில் இறுதி நாள் ஷூட்டிங் முடிந்து, ஆதி, மதி, விஷ்வா, பிரகதி,கிருஷ்ணா எல்லோரும் தனியார் படகு ஒன்றில் அரட்டை அடித்துக் கொண்டே அந்த ஊரில் உள்ள மற்றொரு அழகிய கோட்டையை காண ஒரு தீவிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

படகு என்று சொல்வதை விட, ஒரு குட்டி சொகுசு மினி கப்பல் என்று சொன்னால் மிகவும் பொருத்தம். ஒரு வீட்டை உள்ளே வைத்தது போல், எல்லா வசதியும் அங்கே இருந்தது. அதில் விஸ்தாலமான ஹால் போல் இருந்த ஒரு அறையில் தான், எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

படகிற்குள் எல்லோரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த மதி, வெளியே கடல் காற்று வாங்க அந்த அறைக்கு வெளியே உள்ள பால்கனி போல் இருந்த, அந்த இடத்திற்கு வந்து அங்கு உள்ள கைபிடியை பிடித்துக் கொண்டு, கடல் காற்றை சுவாசித்து அனுபவித்தாள்.

பேசிக் கொண்டு இருந்த ஆதி, மதி வெளியே செல்வதை பார்த்து அவள் சென்ற சிறிது நேரத்தில் அவனும் வெளியே வந்தான். அங்கே அவள் இயற்கையை ரசித்தும், கடல் காற்றை அனுபவித்தும் கொண்டு இருந்ததை பார்த்து அவளை ரசித்துக் கொண்டு இருந்தான்.

உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவள், அங்கே ஆதி இவளையே வைத்த கண் வாங்காமல் சுவாரசியமாக பார்க்கவும், மனம் கவர்ந்தவனின் பார்வையில் சொக்கி போய் முகம் சிவந்து நின்றாள் மதி. அவளின் முக சிவப்பை ரசித்தவாறு, அவன் அவளை நெருங்கி வந்தான்.

“அழகி! உனக்கு இந்த ஊர் பிடிச்சு இருக்கா” என்று கேட்டான் ஆதி.

தன் பக்கத்தில் நின்று கொண்டு, முதல் முறையாக குழைந்த குரலில் பேசும் தன்னவனை ரசித்துக் கொண்டு இருந்தவள், அவனின் கேள்வியில் அதுவரை முகத்தில் இருந்த வெட்கம், இப்பொழுது கோபத்தில் சிவந்து விட்டது.

“எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை, அது என்ன எப்போ பார்த்தாலும் யார் வேணும்னாலும் முத்தம் கொடுக்கலாங்கற மாதிரி, இப்படி வெளிப்படையா எல்லோருக்கும் தெரிற மாதிரி கொடுக்கிறது”.

“அந்தரங்கம், அப்படினா என்னனு தெரியுமா? நம்மளை நல்லா புரிஞ்சிகிட்டு, நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம துணை எப்பொழுதும் இருக்கணும். உனக்கு முத்தம் கொடுக்க தோணுதா, வீட்டுல நாலு சுவத்துக்குள்ள போய் கொடு”.

“அதுக்கு, இப்படி பப்ளிக் ல கொடுக்கிறது, அந்த காதலுக்கு தர மரியாதையா எனக்கு தெரியல. இப்படி ஒரு ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டு, எப்படி இருக்குன்னு கேட்குறீங்க?” என்று கோபத்தில் மூச்சு வாங்க, அவனை பார்த்து கேட்டாள் மதியழகி.

அவளின் அந்த கோபத்திலும், பேச்சிலும் ஆதி சிலையாக நின்றான். அவன் அறிந்த மதி, எப்பொழுதும் தூய தமிழில் பேசி தான் கேட்டு இருக்கிறான். இங்கு இருப்பது மதி தானா என்று, அவன் சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அவள் தேறி இருந்தாள்.

அது மட்டுமில்லாமல், அவளின் தோற்றத்திலும் இப்பொழுது மாற்றம். ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கு ஏற்ப உடை விஷயத்திலும் இப்பொழுது இடத்திற்கு தகுந்தது போல், நன்றாக மாற்றிக் கொண்டு இருந்தாள் தன்னை.

ஆனால், அவளிடம் மாறாத ஒரு விஷயம் அவளின் நேர்பாரவையும், அந்த இளவரசிக்கே உரிய மிடுக்கும். இது அவளோடு கூட பிறந்தது போல், எப்பொழுதும் அவள் கூடவே இருக்கும்.

இப்படி அவன், அவளை பற்றிய சிந்தனையில் மூழ்கி இருக்க, சுற்றுபுறத்தை மறந்தான். அவனிடம் இருந்து சத்தம் வராது இருக்கவும், அவள் அவனை வர்மா என்று கூறி அவனின் தோல் தொட்டு உலுக்கினான்.

அதில், சுய உணர்வுக்கு வந்த ஆதி, இமைக்காமல் அவளையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தான். தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை, அவளும் சளைக்காமல் இப்பொழுது பார்க்க தொடங்கினாள்.

இவர்களை தேடி வந்த விஷ்வாவும், கிருஷ்ணாவும் இவர்களின் நிலையை பார்த்து காதில் புகை வரும் அளவிற்கு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் சென்று இவ்வளவு நேரமாகியும், ஒருவரும் வரவில்லை எனவும், பிரகதி அங்கே வந்தாள்.

அங்கு இருந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட பிரகதி, உடனே நமட்டு சிரிப்புடன் ஹையோ சுனாமி வந்திடுச்சு என்று அலறினாள். அதில் பயத்தில் எங்கே என்று, எல்லோரும் கத்த தொடங்கவும், சிரிக்க தொடங்கினாள் பிரகதி.

“ஆமா! ஆதி அத்தான், இன்னும் எவ்வளவு நேரம் மதியை சைட் அடிப்பீங்க? சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க எங்களுக்கு, நீங்க இப்படி இவ்வளவு நேரம் இருந்ததை பார்த்து, ரெண்டு பேருக்கும் காதுல இருந்து புகையே வெளியே வந்திடுச்சு” என்று சொல்லி சிரித்தாள்.

மதியோ, இவ்வளவு நேரம் நாம் இப்படி எல்லோரும் பார்க்கும் படியாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தோமே என்று, சிறிது சங்கோஜம் கொண்டும், தன் மேல் கோபம் கொண்டும் நின்று இருந்தாள்.

அவளின் நிலையை புரிந்து கொண்ட ஆதி, அவளின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மென்மையாக அழுத்தம் கொடுத்து, நானிருக்கிறேன் எதற்கும் கலங்க வேண்டாம் என்று கண்களால் செய்தி அனுப்பினான்.

அவளும், அதை புரிந்து கொண்டு மென்மையாக சிரித்தாள். இவர்கள் இப்படி இங்கு இருக்க, அங்கே இருவரையும் பிரகதி பிடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.

“அறிவு இல்லையா உங்களுக்கு, அவங்களை பார்த்து பொறாமை படுறீங்க? அத்தை சொன்னது மறந்து போச்சா? அத்தான், மதியை சீக்கிரம் கல்யாணம் பண்ணினா தான், மதியை காப்பாத்த முடியும்ன்னு சொல்லி இருக்காங்க ல”.

“அதுக்கு அவங்களுக்குள்ள பேசிகிட்டா மட்டும் தான், விடை கிடைக்கும். நீங்க என்னனா, எப்போ டா பிரிக்கலாம் மாதிரியே பார்க்குறீங்க?” என்று அடி குரலில் சீறினாள்.

“இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் போன் ல சொன்னாங்க, இப்படி விஷயம் அப்படின்னு. அதுக்கு தான் இந்த ஏற்பாடு செய்தது, ஆனா இப்படி வயசு பசங்களை வச்சுட்டு அவங்க ரொமான்ஸ் பண்ணும் பொழுது, மீக்கு ஒரே அழுகை” என்று விஷ்வா, பக்கத்தில் இருந்த கிருஷ்ணாவை கட்டி பிடித்துக் கொண்டு, அழுவது போல் செய்யவும், முதுகில் இரண்டு போடு போட்டாள் பிரகதி.

“நீ திருந்த மாட்ட, டேய் அண்ணா உனக்கு ஏன் டா பொறாமை. இவ்வளவு நாள் அந்த ராதாவோடு, எப்படி எல்லாம் கொஞ்சி குலவிகிட்டு இருந்த, இப்போ என்ன வந்துச்சு உனக்கு” என்று இப்பொழுது கிருஷ்ணாவிடம் எகிறினாள்.

“ம்ம்.. அவளையும் இங்க நம்ம கூட வர சொல்லி கூப்பிட்டேன், அவ தான் வரமாட்டேன் சொல்லிட்டா. அவங்க அம்மா, அப்பா கிட்ட முறையா பொண்ணு கேட்டதுக்கு அப்புறம் தான் வருவாளாம்” என்று சோகமாக கூறியவனை பார்த்து, கொலவெரியானான் விஷ்வா.

“ஏன் டா, கூடவே இருக்கேன் எனக்கு எதுவும் சொல்லுறது இல்லையா இது எல்லாம். அப்போ உனக்கும் செட் ஆகிடுச்சா, நான் தான் அவுட்டா அப்போ” என்று ஜெர்கானான் விஷ்வா.

கிருஷ்ணாவோ, அசடு வலிந்து விட்டு அவனிடம் மொத்து வாங்கும் முன் வேகமாக உள்ளே சென்று விட்டான். அங்கே பிரகதி, அவனின் ரியாக்ஷன் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தாள்.

கண்ணுக்கு கண்ணாடி போட்டு, தலையை விரித்து போட்டு, ஒரு பாவாடை சட்டையில் திரியும் பிரகதியை தான் பார்த்து இருக்கிறான். இன்று லென்ஸ் அணிந்து இருப்பாள் போலும், அந்த கண்கள் சிரிக்கும் பொழுது என் கூட சேர்ந்து சிரி என்று அழைப்பது போல் இருந்தது விஷ்வாவிற்கு.

முதல் முறையாக, பிரகதி தன்னுள் இருக்கிறாளோ என்று ஆராய தொடங்கினான். அதற்க்கு விடை தான் அவனுக்கு சரியாக கிடைக்கவில்லை, அவனும் முயன்று பார்த்தான் பதில் என்னவோ பூஜ்ஜியம் தான்.

ஒரு வேளை, நமக்கு இவ இல்லையோ? சீக்கிரம் எனக்கான பார்ட்னர் வரட்டும் என்று வேண்டிக் கொண்டான். சரியாக அதே நேரம், அவனின் மொபைலில், கல்யாண வயசு தான் வந்திடுச்சு டி, டேட் பண்ணவா? இல்லை சாட் பண்ணவா? என்று பாடல் ஒலிக்காவும், பிரகதி அவனை பார்த்து முறைத்தாள்.

“ஹையோ! இவளுக்கு முன்னாடியா இந்த போன் வரணும், பெரிய லெக்ஷர் எடுப்பாளே இன்னைக்கு முழுவதும். எனக்கு வர வர நேரம் சரி இருக்க மாட்டேங்குது, கடவுளே கொஞ்சம் கருணை காட்டுங்க எனக்கு” என்று புலம்பினான்.

பிரகதி, மதி இருவரும் உள்ளே சென்ற பின்னர் ஆதி, விஷ்வா அருகே வந்து அவனை அணைத்து கொண்டான்.

“கவலை படாத டா, உன் மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும். ஆனா இன்னைக்கு யாருமே, உன்னை பிரகதி கிட்ட இருந்து காப்பாத்த முடியாது டா. உனக்கு சப்போர்ட் பண்ணா, நாங்களும் உள்ள மாட்டிக்குவோம், சோ நீ இன்னைக்கு தனியா சமாளி” என்று மேலும் அவன் வயிற்றில் புளியை கரைத்து விட்டு சென்றான் அதி.

தன் தலைவிதியை நொந்து கொண்டு, உள்ளே சென்றவன், அங்கே மதிய உணவு பரிமாறி இருக்கவும், நமக்கு இப்போ சோறு தான் முக்கியம் என்பது போல் வேகமாக வந்து ஒரு தட்டை எடுத்து சாப்பிட தொடங்கினான்.

அவன் அவ்வளவு வேகமாக வந்து சாப்பிட தொடங்கவும், பிரகதி அவனிடம் அவ்வளவு பசியா என்று கேட்டாள். அவனோ, இல்லை உன் அட்வைஸ் மழை கேட்க தெம்பு வேண்டாமா, அதுக்கு தான் சாப்பிடுறேன் நல்லா எனவும், மீண்டும் சண்டை பிடித்தனர் இருவரும்.

மதிய உணவை முடித்துக் கொள்ளவும், அங்கே அவர்கள் பார்க்க வேண்டிய கோட்டை வரவும் சரியாக இருந்தது. அந்த சிறிய சொகுசு படகில் இருந்து எல்லோரும் இறங்கி, அந்த கோட்டையை பிரமிப்புடன் பார்த்தனர், மதியை தவிர.


 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அந்த தீவில், சில சுற்றுலா பயணிகள் மட்டுமே காணப்பட்டனர். ஏனெனில், அது ஒரு தனியாருக்கு சொந்தமான கோட்டை. இங்கு வர வேண்டும் என்றால், ஏகப்பட்ட விசாரிப்புக்கு பின்னே அவர்கள் அனுமதி அளிப்பர்.

இன்னும் அந்த கோட்டையின் ஒரு பகுதியில், அந்த இடத்தின் உரிமையாளர்களும், மக்களும் வாழ்ந்து கொண்டு இருந்தனர். ஆகையால் தான், அவ்வளவு கட்டுப்பாடு அந்த கோட்டையை சுற்றி பார்க்க.

“வாவ்! செம லொகேஷன்! ஆமா ஆதி அத்தான், இங்க ஏன் நீங்க ஷூட்டிங் பிடிக்கல?” என்று கேட்டாள் பிரகதி.

“இங்க ஷூட்டிங் எடுக்க விட மாட்டாங்க டா, சுத்தி பார்க்க மட்டுமே விடுவாங்க. அதுக்கும் இங்க டைமிங் எல்லாம் உண்டு, அதான் இங்க எடுக்கல” என்று விளக்கி கூறினான் ஆதி.

அப்பொழுது, கிருஷ்ணாவின் செல்லுக்கு அழைப்பு வரவும், எடுத்து யாரென்று பார்த்தான். அதில் ராது என்று பெயர் வரவும், இவன் அதை வேகமாக எடுத்து, சொல்லு டா ராது என்று கூறிக் கொண்டு முன்னால் செல்லவும், சிரிக்க தொடங்கினான் ஆதி.

“டேய்! இன்னும் ஒரு மணி நேரத்துல, போட்க்கு வந்திடு இல்லை விட்டுட்டு போயிடுவோம்” என்று ஆதி சொல்லவும், கிருஷ்ணா மண்டையை ஆட்டிவிட்டு சென்றான்.

“விஷ்வா! நீ பிரகதிக்கு சுத்தி காட்டு, நான் மதியை கூட்டிட்டு இன்னொரு இடத்துக்கு போறேன்” என்று அவனை, அவளிடம் மாட்டி விட்டு சென்றான் ஆதி.

“அட பாவி! இப்படி கோர்த்து விட்டுட்டு, போறானே! டேய் ஆதி, ஊருக்கு போன உடனே முதல நான் அம்மா கிட்ட சொல்லி, எனக்கு கல்யாணம் பண்ண ஒரு பெண்ணை பார்க்க சொல்லுறேன்”.

“சீக்கிரம், கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரெண்டு மாசம் லீவ் போடுறேன். அப்போ தெரியும் டா, என் அருமை உனக்கு தெரியும்” என்று மனதிற்குள் கூறுவதாக நினைத்து, வாய் மொழியாகவே கூறிவிட்டான்.

“நீ லீவ் எடுத்தா, நானும் லீவ் எடுப்பேன் டா தம்பி” என்று நீ கூறியது எனக்கு கேட்டு விட்டது என்று பதிலளித்து விட்டு சென்றான்.

பாலை எப்படி போட்டாலும், இவன் சிக்ஸர் அடிப்பான்னு தெரிஞ்சும் வாயை கொடுத்துட்டேன் பாரு என்னை சொல்லணும், என்று நினைத்துக் கொண்டே திரும்பியவன், அங்கே பிரகதி முறைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.

அவளோ, அவனிடம் டேட் பண்ண வரியா? இல்லை சாட் பண்ண வரியா? எதுனாலும் சீக்கிரம் யோசி என்று கூறிவிட்டு முன்னால் நடந்தாள்.

எதற்கு இப்படி சொல்லிவிட்டு செல்கிறாள், என்று தெரியாமல் முதலில் குழம்பியவன், அதன் பின் புரிந்து அவள் பின்னாடி வேகமாக ஓடினான்.

அந்த தீவின் ஒரு பகுதியில், ஆதியும், மதியும் நின்று அந்த கடல் அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர். கோட்டையை விட, அந்த தீவில் கடலை ரசித்து பார்க்கவென அமைத்து இருந்த இடம், அவனுக்கு பிடித்தம். இப்பொழுது, அவளுக்கும் அந்த இடத்தின் ரம்யம், கவர்ந்தது.

“அழகி! உன்னை பத்தி இந்த கொஞ்ச நாள் ல, நான் நல்லா தெரிஞ்சிகிட்டேன். ஆனா நீ யாரு, நிஜமாவே ஐநூறு வருஷம் முன்னாடி இருந்து வந்தியா? இல்லை உனக்கு ஏதும் பழசு மறந்துடுச்சா?”

“இப்படி எந்த ஆராய்ச்சியும், நான் இனி பண்ண விரும்பவில்லை. நீ என் கூட இருந்தா மட்டும் தான், என்னால இனி இந்த உலகத்துல வாழ முடியுங்கற மாதிரி, இந்த ஒரு மாசத்துல நான் நல்லா உணர்ந்துட்டேன்”.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, என்னோடு இந்த உலகத்தை சுத்தி பார்க்க வரியா அழகி” என்று அவன் காதலை நிதானமாக, அந்த இடத்தில் அவளிடத்தில் உரைக்கவும், முதல் முறையாக அவள் விழிகளில் ஆனந்த கண்ணீர் உடைபெடுத்து ஓடியது.

இந்த காதலை பெறுவதற்கு, அவள் எத்தனை ஆண்டு கடந்து வந்தாள். இதற்காக, தந்தையிடம் எத்தனை போராட்டம், உண்ணாவிரதம் என்று இருந்து இருக்கிறாள்.

ஆரம்பத்தில், அவன் தன்னை இப்படி காதலாக பார்க்க மாட்டானா என்று எவ்வளவு ஏங்கி இருக்கிறாள். இன்று, அவன் தான் உணர்ந்த காதலை, இவளிடம் சொல்லிய பின், இவள் உணர்ச்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறாள்.

அவளின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தவன், அவளின் இந்த அழுகையை கண்டு பதறி விட்டான். என்னவென்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, அவளாகவே அவனை அனைத்துக் கொண்டாள்.

சற்று முன்பு கூட, எதற்கு இப்படி கட்டி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் என்று முகத்தை சுருக்கிக் கொண்டு இருந்தவள், இப்பொழுது தானாகவே தன்னை அவள் அணைத்து இருந்ததை பார்த்து, அவனுக்கு அவள் மனது புரிந்தது.

அவனும், அவளை அணைத்து ஆறுதல் கூறினான். அப்பொழுது கிருஷ்ணாவிடம் இருந்து போனில் இவனுக்கு அழைப்பு வரவும், அந்த சத்தத்தில் விலக நினைத்தாள். அவனோ, அவளை விடாது பிடித்துக் கொண்டே, அவனிடம் இப்பொழுது வருவதாக கூறினான்.

பின்னர் எல்லோரும் மீண்டும் படகு பயணம் செய்து, இரவில் தங்கி இருந்த இடத்திற்கு வந்தனர். அன்றைய இரவை அங்கு செலவழித்து விட்டு, அடுத்த நாள் விமானம் ஏறி சென்னை வந்து சேர்ந்தனர்.

காதலை சொல்லிய பின்பும், இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனரே தவிர, மேற்கொண்டு வேறு எதுவும் பேச முயற்சிக்கவில்லை. சென்னை வந்த பின், அவன் பெற்றோர்களிடம் திருமணத்திற்கு நாள் குறித்து வைக்கும் படி கூறவும், அவர்களுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

“மதி மா! உனக்கு ஏதும், அப்பா, அம்மா, தம்பின்னு இப்படி நம்ம கல்யாணத்தை பார்க்க முடியலன்னு வருத்தம் இருக்கா டா?” என்று மெதுவாக கேட்டார்.

“என் வரலாறு தெரிஞ்சிகிடீங்களா மா, இப்போ சொல்லுங்க நான் உங்க கிட்ட சொன்னது உண்மை தான” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும், அவர் ஆம் என்று கூறி ஆமோதித்தார்.

“நான் கேட்ட கேள்விக்கு, நீ இன்னும் பதில் சொல்லல மதி மா. உண்மையை மட்டுமே சொல்லணும், மறைக்க கூடாது” என்று கண்டிப்பாக கூறவும், அவள் கண் கலங்கினாள்.

“எனக்கு வருத்தம் நிறைய இருக்கு, ஆனா இது தான் கடவுள் எனக்கு எழுதி இருக்கிற விதின்னு தெரிஞ்ச பின்னாடி வருந்தி என்ன செய்ய. இப்போ எனக்கு நீங்க தான், என்னோட அம்மா, அப்பா”.

“நாங்க நல்லா இருக்கனும்ன்னு, நீங்க எங்களுக்கு வாழ்த்து சொல்லுங்க மா” என்று அழகி கூறவும், அவர் மனம் கனிந்தது.

அதன் பின் வேகமாக நாட்கள் அதன் போக்கில் செல்ல, அவர்களின் கல்யாண நாளும் வந்தது. சிவன் சன்னதியில் வைத்து சிம்பிளாக திருமணம் முடித்து, பெரிய அளவில் வரவேற்ப்பு வைக்க ஏற்பாடு.

இப்பொழுது, எல்லோரும் சிவன் கோவிலுக்கு தான் வண்டியில் விரைந்து கொண்டு இருந்தனர். கோவில் வாசலில் இறங்கியவர்கள், ஆதியை முன்னே அனுப்பிவிட்டு, மதியை தங்களுடன் சிறிது நேரம் வைத்துக் கொண்டனர்.

அப்பொழுது ஓரிடத்தில், இவர்கள் இறங்கியதை பார்த்த ஒரு உருவம், மனதிற்குள் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தது. அழகியை, வஞ்சதுடன் பார்த்துக் கொண்டே, அவளை நெருங்கியது.

“மணம் செய்ய இருக்குறீர் போல, உன் கனவில் வந்த பிரகஸ்பதியா உன் மணாளன். எங்கே அவன்? என் முன்னாடி அழைத்து வா, அப்படி அவன் என்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று நானும் பார்க்கிறேன்” என்று நாக்கில் விஷம் தொடுத்து, வார்த்தைகளை துப்பியவனை திரும்பி பார்த்தாள்.

அங்கே பாசில், விகார சிரிப்புடன் இவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் மக்களே, இதோ இந்த பதிவில் இருந்து நிகழ்காலம் வந்து கொண்டு இருக்கும். வில்லன் என்ட்ரி கொடுத்துட்டான்,அப்புறம் ஹீரோ இன்னும் சரியா ப்ரோபோஸ் பண்ணனும், இன்னும் பதிவுகள் எத்தனை வரும் தெரியல பட் முடிந்தவரை சீக்கிரம் கொடுக்க முயற்சி செய்கிறேன் மக்களே,, கீப் சப்போர்டிங் .. கருத்துகளை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top