• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Alagiyin kaathal thavam - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 14

இன்று:

கோபம்! கோபம்! கோபம்! கோபத்தை விட வெட்டி சாய்க்க நினைக்கும் அளவுக்கு, வெறி என்று தான் சொல்ல வேண்டும். கால சக்கரத்திற்குள் மாட்டிக் கொண்டு, வெளியே வர முடியாமல் ஆண்டுகள் கணக்காக தவித்து விட்டு, இதோ இப்பொழுது எண்பத்தி எட்டு வயது கிழவனாக இங்கு வந்து இறங்கினான் பாசில்.

இடம் புதிது, ஏதோ ஒரு கிராமம் அதில் முழுவதும் சிவ கோடி பக்தர்கள். அந்த இடத்தை சுற்றி பார்த்தவனுக்கு, அவனுக்கு உதவி புரிய இங்கு உள்ளவர்களால் முடியாது என்று தோன்றியது.

அவன் அந்த கிராமத்தில் இருந்து சற்று தள்ளி வெளியே வந்ததும், மக்கள் பேருந்தில் ஏறி செல்வதை பார்த்து, அது தான் வாகனம் என்று புரிந்தது. உடனே அடுத்த பேருந்துக்காக காத்து இருந்து, அது வரவும் ஏறினான்.

டிக்கெட்! டிக்கெட்! என்று கண்டக்டர் கத்திக் கொண்டே, ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கொடுத்து, ரூபாய் வசூல் செய்வதை பார்த்து, தன்னிடம் இப்பொழுது ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தான்.

அவன் அப்பொழுது செய்ததை தான், இப்பொழுதும் செய்ய துணிந்தான். திருட்டு! ஆம் திருட்டே தான்! வணிகன் என்ற முறையில், அப்பொழுது மக்களிடம் அதிகமாக வசூலித்து பொருள் கொடுத்தானே, அதே போல் இப்பொழுது அவர்களுக்கே தெரியாமல், காசை திருட எண்ணினான்.

பேருந்தில் கண்டக்டர் அருகில் வரவும், பஸ் நிறுத்தும் கடைசி இடம் என்று கூறிவிட்டு, கண்டக்டர் பின் பாக்கெட்டில் சொருகி இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து, அதில் தனக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டான்.

அவன் அப்படி வந்து சேர்ந்த இடம், சென்னை வண்டலூர் மிருக காட்சி இடத்திற்கு. மிருக காட்சிக்குள் செல்லாமல், அதன் அருகே உள்ள சாலையில் நடக்க தொடங்கினான். அது ஒரு காட்டு பாதையாக இருக்கவும், திரும்ப நினைக்கும் பொழுது அங்கே குரான் ஓதுவது அவன் காதுகளில் விழுந்தது.

குரான் ஓதி, அவன் பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஓத வேண்டும் இப்பொழுது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. எங்கே ஓதுகிறார்கள் என்று கவனித்தவன், காட்டு பாதை ஓரத்தில் உள்ள மசூதியில் இருந்து சத்தம் வரவும் அங்கே சென்றான்.

வயது கூடி, பார்க்க கிழவனாக இருந்தாலும் அவன் உடலளவில் ஆரோக்கியமாகவும், மனதளவில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்னிடம் என்று சொல்வது போல் திடமாகவே இருந்தான்.

மசூதிக்குள் அவன் நுழைய நினைக்கும் பொழுது, எதிர்த்திசையில் இருந்து அடேய் சாத்தானே! உள்ளே நீ நுழைய முடியாது என்ற குரல் ஓங்கி ஒலித்தது. எந்த திசையில் இருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவன், அங்கே நூறு வயதை தாண்டிய முதியவர் தான் இவனை முறைத்துக் கொண்டு இருந்தார் இவன் நின்று இருந்த எதிர்த்திசையில்.

அவனோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், உள்ளே செல்ல நினைக்கையில் அவர் அடுத்து கூறிய வார்த்தையில் அப்படியே நின்றான். உள்ளே செல்லாமல், அவன் விரைந்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

“உமக்கு, என்னை பற்றி நன்றாக தெரிந்து இருக்கிறதே! அப்பொழுது, நான் வந்ததன் நோக்கமும் உமக்கு தெரியும், அப்படிதானே!” என்று அவன் கேட்கவும், அவர் ஆம் என்றார்.

“சரி, இப்பொழுது கூறும் அந்த இளவரசி மதியழகி, இப்பொழுது எங்கே இருக்கிறாள்? நான் உடனே அவளை அழைத்துக் கொண்டு, கால சக்கரத்திற்குள் செல்ல வேண்டும்” என்று பரபரத்தான்.

“அடேய் சாத்தானே! ஒரு தடவை நீ கால சக்கரத்திற்குள் இருந்து வந்துட்ட, திரும்ப எல்லாம் போக முடியாது. உன் சாவுக்கு கூட நாள் குறிச்சிட்டார் அல்லா! உன்னை அவன் கிட்ட இருந்து, யாராலும் காப்பாத்த முடியாது” என்று பலத்த சிரிப்பு சிரித்தார்.

“போதும் நிறுத்து! அவள் இப்பொழுது எங்கே என்று மட்டும் கூறும். மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன், புரிந்ததா?” என்று கூறி சிடுசிடுத்தான்.

இருக்கும் இடத்தை அவர் கூறி முடிக்கவும், அவன் அங்கு இருந்து சென்று விட்டான்.

“அழிவை தேடி ஓடுறான்! ஹா ஹா!” என்று அவர் சிரித்துக் கொண்டே மசூதிக்குள் சென்றார்.

விறுவிறுவென்று வந்தவன், அடுத்து எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுக்கு அப்பொழுது, உதவிக்கு இரண்டு மூணு பேர் தேவைப்பட்டது. சூழ்ச்சி செய்பவன், தன்னை போல் சூழ்ச்சி செய்பவர்களை தேர்ந்தெடுக்க அங்கே பஸ் நிறுத்தத்தில் தேட தொடங்கினான்.

அங்கே ஒருவன், பிக் பாக்கெட் அடித்துக் கொண்டு இருந்தான் மக்களின் கவனம், அவன் மேல் பதியாத வரையில். வேறொருவன், ஒரு பெண்ணிடம் அவளின் குடும்ப பின்னணியை கூறிவிட்டு, அந்த பெண்ணிடம் தன்னை காதல் செய்யுமாறு மிரட்டிக் கொண்டு இருந்தான்.

இப்போதைய அவன் தேவைக்கு, இவர்கள் இருவரும் ஒத்து வருவார்கள் என்று அவனுக்கு தோன்றியது. பேச்சு சாதுரியம் கொண்டவன் என்பதால், இருவரையும் அவன் வசப்படுத்தி விட்டான்.

“முதலில் இருவரும், எனக்கு தங்கும் இடத்திற்கும், சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். அதன் பின் நான் கூறிய பெண்ணின் விபரங்களை சேகரித்து, என்னிடம் வந்து தாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

பிக் பாகெட் அடித்தவன், பாசிலை அழைத்துக் கொண்டு முதலில் ஆண்கள் மட்டுமே தங்குவதற்கு என உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான். எல்லா வசதியும் இருந்தது, எதையும் ஆனால் பார்வையிடாமல், குளிபதற்க்கு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு, அவன் முதலில் அங்கே சென்றான்.

குளித்து, முடித்து வரவே அவனுக்கு நேரம் பிடித்தது. ஒன்றை திருகினால், சுடு தண்ணீர் கொதிக்க கொதிக்க வந்தது. மற்றொரு குழாயை திருகவும், அவன் மேல் தண்ணீர் சொட சொடவென மழை போல், பெய்ய தொடங்கியது. ஒவ்வொன்றும் புதுசு என்பதால், அவன் தட்டு தடுமாறி தான் ஒவ்வொன்றையும் கற்றுவிட்டு, குளித்து வந்தான்.

அந்த பிக் பாக்கெட், அவனை முற்றிலும் மாற்றி விட்டான் தோற்றத்தில். அவனின் கம்பீரத்திற்கு ஏற்றது போல், அவனுக்கு அந்த சிகை அலங்காரமும், உடையும் கச்சிதமாக பொருந்தியது.

அப்பொழுது அங்கே வந்த மற்றொருவன், அவன் கேட்ட விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வந்து இருந்தான். அதில் இருந்த அவளின் புகைப்படத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதிர்ந்தான்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“துறவியாரே! அப்பொழுது உமக்கு விபரம் தெரியும், நான் முதியவனாக இங்கு வருவேன் என்று. அதற்க்கான மந்திரத்தை தான், அப்பொழுது உச்சரித்து இருந்து இருக்கிறீர்” என்று மனதிற்குள் கோபம் கொண்டான்.

அப்பொழுது கூட அவன் சேகரித்த விஷயங்களை பார்க்கவில்லை, அவளின் புகைப்படம் மட்டுமே பார்த்துவிட்டு, அவளுக்கு எங்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று அறிந்து, அங்கே அழைத்து செல்லும் படி கூறினான்.

மதியை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. என்ன ஆனாலும் சரி, அவளை தன்னுடன் வைத்து, ஒவ்வொரு நாளும் துன்பம் கொடுக்கலாம் அவளுக்கு என்று எண்ணினான்.

அதற்காகவே, திருமணம் நடக்க போகும் சில மணி நேரத்திற்குள் முன்பே அவன் அங்கே வந்துவிட்டான். அங்கே மணப்பெண் கோலத்தில் மதி இறங்கியவுடன், அவளை பார்வையால் அளந்தான். அவளின் அந்த அழகில் மயங்கி, இந்த அழகியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுப்பதா, அவனால் முடியாது.

அதனால் வார்த்தைகளில் விஷம் தடவி, அவளுக்கு தானும் பின்னேயே வந்து இருப்பதை உணர்த்தினான். யார் என்று திரும்பி பார்த்தவள், அங்கே விகார சிரிப்புடன் இருந்த முதியவரை பார்த்து முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

“இவ்வளவு அலட்சியம் உமக்கு ஆகாது, இளவரசி மதியழகி. உன் கனவில் வந்த பேரழகனை, நீ பார்த்து விட்டாயா? அவனை தான் இப்பொழுது மணம் முடிக்க போகிறாயா?”

“இல்லை, உன் கற்பை பறிகொடுத்து விட்டதால், இந்த அவசர திருமணமா?” என்று கோணல் சிரிப்புடன் அவன் கேட்கவும், காதுகளை மூடிக் கொண்டாள்.

“ஒரு இளவரசியிடம், பேசிக் கொண்டு இருக்கிறோம் என்ற பயமே இல்லை உமக்கு. முதலில், என் கண் முன்னால் வராதே! வேறு எங்காவது தொலைந்து போ!” என்று கம்பீரம் குறையாமலும், அவனிடம் சிறிதும் பயமில்லாமலும் பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஹா ஹா! நல்ல வேடிக்கை! என்னிடம் இருந்து தப்பிப்பதற்காக தானே, நீ கால சக்கரத்தில் பயணம் செய்து இங்கே ஓடி வந்தாய். இப்பொழுது நான் கிழவனாகிட்டேன் என்று, உமக்கு பயம் போய் விட்டதா?”.

“நான் முதியவனாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இன்னும் உன் மீது அதே மோகம் எனக்கு இருக்கிறது. அதிலும், இப்பொழுது இன்னும் நளினம் கூடி, தேவலோகத்து கன்னிகை போல் இருப்பவளை ருசிக்காமல் விடுவதா” என்று கூறி, அவளை அவன் நெருங்கி வர முயற்சி செய்யவும், மதி சுதாரித்து சற்று தள்ளி நின்று கொண்டாள், அவனுக்கு அகப்படாமல்.

“சீ.. உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் இங்கு இருந்து செல். என் மன்னவன், இப்பொழுது உள்ளே இருந்து வந்து உன்னை பார்த்தால், அடித்து துவசம் செய்து விடுவார், தெரிந்து கொள்” என்று எச்சரித்தாள் மதி.

“அப்படியா! அப்படியானால், நான் அவனை தான் முதலில் பார்க்க வேண்டும், எங்கே வர சொல் அவனை பார்க்கலாம்” என்று அவன் கூறி முடிக்கவும், அங்கே ஆதி வரவும் சரியாக இருந்தது.

“ஹே அழகி! ஏன் அங்கேயே நின்னுட்ட? ஆமா, அம்மா, பிரகதி எல்லாம் எங்கே?” என்று அவளை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தவன்,அவளிடம் வந்து நின்று கேட்டான்.

“அத்தை, பிரகதி எல்லாம் பூ கொஞ்சம் வாங்கிட்டு, சாமிக்கு மாலை சொல்லி இருந்தது வந்துச்சான்னு பார்க்க போய் இருக்காங்க வர்மா” என்று அவள் கூறினாள்.

“இப்படி உன்னை தனியா விட்டுட்டா போனாங்க? சரி வா நாம உள்ளே கோவிலுக்கு போகலாம், அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிக்கலாம்” என்று கூறிக் கொண்டே, அவள் கை பிடித்து அவளை உள்ளே அழைத்து செல்ல நினைக்கும் பொழுது, பாசில் குறுக்கே வந்தான் அவர்களுக்கு இடையில்.

“இளவரசி! தாங்கள் மணம் புரிய போவது, இவனை தானா! கரும்புள்ளி போல் இருக்கிறான், உங்கள் அருகில். இவன் தங்களுக்கு இணையா? இது சரியில்லையே?” என்று தாடையை தடவினான்.

கரும்புள்ளி! கரும்புள்ளி! அந்த வார்த்தை அதை அவன் எங்கேயோ கேட்டு இருக்கிறான், இந்த குரலும் கூட! எங்கே? எங்கே? என்று யோசித்தவனுக்கு தலை விண்ணென்று வலி எடுத்தது.

வலி கொடுக்கவும், அவள் பிடித்து இருந்த கையில் அவன் அறியாமல் அழுத்தம் கொடுத்தான். அவனின் அழுத்தத்தில், அவள் திரும்பி அவனை பார்த்தவள், ஒரு கையால் தலையை பிடித்து கொண்டு வலியில் துடித்துக் கொண்டு இருந்தான்.

“வர்மா! என்ன செய்யுது? வாங்க கோவிலுக்கு போகலாம்” என்று அவனை உள்ளே அழைத்து செல்ல பார்த்தவளை பாசில், அவள் கை பிடித்து தடுத்தான்.

“எங்கு செல்ல போகிறாய்? உனக்கு திருமணம் ஒன்று நடந்தால், அது என்னுடன் தான்” என்று கூறி அவளை பிடித்து இழுக்க தொடங்கினான்.

ஆதிக்கு, அந்த வலியிலும் தன்னவளுக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்த பின்பு, வலியை மறந்து அவளை அவன் பிடியில் இருந்து காப்பாற்ற, அவனை அவளிடம் இருந்து பிரித்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

“உமக்கு எவ்வளவு தைரியம், கரும்புள்ளி இனத்தவனே! என்னை எதிர்த்து நிற்க!” என்று கர்ஜித்தான் பாசில்.

அவன் திரும்ப, திரும்ப கூறும் கரும்புள்ளி பற்றி யோசிக்க, யோசிக்க தலை வலி வந்தாலும், எங்கு? யார் இப்படி தன்னை சொல்லி இருப்பர், என்று யோசித்து பார்த்தவனுக்கு, மங்கலாக சில நினைவு அவனை தாக்கியது.

அந்த தாக்கத்தில் அவன் இருக்கும் பொழுது தான், மீண்டும் பாசில் அவளை, அவனிடம் இருந்து பறிக்க முன் வரவும், அவனை ஓங்கி மிதித்து தள்ளினான்.

“இன்னொரு முறை என்னை கரும்புள்ளி என்று நீ அழைத்தால், அடுத்து உன் உயிர் உன்னிடம் இல்லை. இவள் என்னவள், அவள் மேல் உன் கை பட்டது என்று தெரிந்தாலே, உன்னை தொலைத்து விடுவேனடா சப்பாஹ் பாசில்!” என்று அந்த இடமே அதிரும்படி கர்ஜித்தான்.

அவனின் முழு பெயரை சொல்லி அழைப்பது, மூன்றே பேர் தான். ஒன்று அவனின் மாமா அலிகான், அடுத்து அவனின் குரு, அடுத்து அவன் எதிரி ஆதித்யவர்மா. எதிரில் இருப்பவனை, இப்பொழுது உற்று நோக்கினான் பாசில், அந்த கண்களின் தீட்சண்யம் அவன் யார் என்று காட்டிக் கொடுத்தது.

“உன்னை எத்தனை முறை கொல்வது டா, ஆதித்யவர்மா?”என்று அவனும் இப்பொழுது கண்டுவிட்ட தொனியில் பேச தொடங்கினான்.

அப்பொழுது அங்கே வந்த காமாட்சி, அவர்கள் பேசியதை கேட்டு, அவர் தான் பயந்த மாதிரியே இருவரும் சந்தித்து விட்டதோடு அல்லாமல், ஆதிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதையும் அறிந்து, அவரின் தாயுள்ளம் பரிதவித்து துடித்தது.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் மக்களே,
எப்படி இருக்கீங்க? இப்போ தான் பதினாலு எபி வந்து இருக்கு.. இன்னும் எத்தனை எபி வரும்ன்னு தெரியல..
இந்த எபி ல வில்லன் எப்படி இங்க வந்தான்னு சொல்லி இருக்கேன், அண்ட் மீட்டிங் ஆப் ஹீரோ அண்ட் வில்லன்..
இன்னும் நீங்க குழம்பி தான் இருக்கீங்க? என்ன நடக்குன்னு? ஹி ஹி.. பொருத்துகோங்க, மெதுவா உங்க கேள்விக்கான பதில் எல்லாம் கிடைக்கும்..
மிக்க மிக்க நன்றி எல்லோருக்கும்.. தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க..
கீப் சப்போர்டிங் ...
இப்படிக்கு,
உமா தீபக்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Interesting sis .Antha piraviyil adhiya konnutana fasil. ippo pazhaya ninaivu vanthutana . Kalyanam mudiyarsnkula vanthutane intha old man,..........
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
hi உமா தீபக்
இந்த பகுதியும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் தொடரும் போட்டு விட்டீர்கள் அப்ப ஆதியும் அழகி காலத்தை சேர்ந்தவன் தானா அவனும் காலச்சக்கரம் மூலம் வந்தவன் தானா அல்லது இது முன்ஜென்ம நினைவுகளாக இருக்குமோ காமாட்சி பயப்படுகிறார் என்றால் இதுபற்றி ஏதாவது விஷயம் தெரிந்திருக்குமோ அதனால் தான் அவர் அழகியை ஏற்று தன் மகன் ஆதிக்கு மணம் முடிக்க விரும்பினார் போல ஏற்க்கனவே வில்லனுக்கு வேற ஆதியை தெரிந்திருக்கிறது அவன் ஆதியை கொன்றதாகவும் சொல்கிறான் இனி என்ன ஆக போகுதோ என்று திக்கென்று இருக்கிறது நன்றி அப்டேட்க்கு காத்திருக்கிறோம் அடுத்த udக்கு
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
OMG semmmmmmma update aadhi and fazhil knows each other already ???!!!!! Aadhi ya already konnutta tha villan soldran, maranthathu niyabagam vanthuruchu nu avanoda amma soldranga,,, enna ya nadakkuthu inga?? Semma suspense and curiositya increase pandra epi I love it. Waiting for more
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top