• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

alagiyin kaathal thavam - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 16

ஒரு ஒட்டு வீட்டில் பதுங்கிக் கொண்டு இருந்தான், பாசில். அவனுக்கு இப்பொழுது உதவி தேவை, அதுவும் சாதாரண உதவி இல்லை, பெரிய உதவி, அதுவும் ஒரு பெண்ணை கடத்துவது. இதே, ஐநூறு வருடங்களுக்கு முன்னால் என்றால், அவள் எந்த மூலையில் ஒளிந்து கொண்டு இருந்தாலும், அவளை தூக்கிக் கொண்டு வருவது அவனுக்கு சுலபம்.

இங்கேயோ, இந்த உலகம் அவனுக்கு புதிது. அதுவும் இப்பொழுது வரை, ஏதோ அவன் திட்டப்படி நடந்தது போல் தெரியவில்லை. முதியவராக இங்கு வந்தது முதல், ஆதியையும், மதியையும் ஒன்றாக பார்த்தது, அடுத்து ஒரு முதியவரின் உதவியால் பழைய உருவத்திற்கே மாறியது எல்லாம் ஏதோ தன்னை யாரோ வழிநடத்துவது போல் இருப்பதாக உணர்ந்தான்.

“யார் நம்மை செலுத்தினால் என்ன, எனக்கு தேவை அவள், இளவரசி மதியழகி. இப்பொழுது அவளை கடத்த வேண்டும், அதற்க்கு முன் நான் தங்க ஒரு நல்ல இடமாக பார்க்க வேண்டும்”.

“காட்டு பகுதி தான் எப்பொழுதும், நமக்கு பாதுகாப்பு. இப்பொழுது அங்கே செல்ல, யாரின் உதவியை நாடுவது” என்று பலமாக சிந்திக்க தொடங்கினான் பாசில்.

அவனுக்கு ஒன்று புரியவில்லை, அவனின் தந்தை கூறியது போல் அவனின் சாவு ஆதியின் கையில், என்று முன்னமே குறித்தாகி விட்டது. அது புரியாமல், ஆணவத்தில் ஆடிக் கொண்டு இருக்கிறான், தன்னை வெல்ல யாருமில்லை என்று.

ரமணனின் உதவியால், ஆதி மதியை அவனுடைய பீச் ஹௌசிற்கு அழைத்து வந்து இருந்தான். யாருக்கும் தெரியாமல், ஆதியையும், மதியையும் இங்கே அழைத்து வருவதற்குள் ரமணணிற்கு வியர்த்து விட்டது.

“டேய்! அங்க வீட்டிலே மதி இருக்கட்டும் டா, நான் பக்கா போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறேன்” என்று ரமணன் சொல்லி பார்த்தும், ஆதி கேட்கவில்லை.

“அண்ணா! அவளை வீட்டில் வச்சு இருந்தா, அவன் எப்படியாவது கடத்திடுவான். கடத்தினா, நான் அவனை அடுத்து கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்”.

“கொஞ்சம் புரிஞ்சிக்கோ அண்ணா, நான் அடுத்து ஜெயில் போயிட்டா இவளால தான் நிம்மதியா இருக்க முடியுமா, இல்லை என்னால தான் நிம்மதியா இருக்க முடியுமா?”

“அவ்வளவு ஏன், அம்மா, அப்பா முதல இதை தாங்கிப்பாங்களா. எல்லாம் யோசிச்சிட்டு தான் அண்ணா, இந்த முடிவுக்கு வந்து இருக்கேன். இந்த பீச் ஹௌஸ் யாருக்கும் என்னோடதுன்னு தெரியாது, நம்ம தாத்தாவுக்கு அவர் நண்பர் ஒருத்தர் அவர் பெயருக்கு கிப்ட்டா வாங்கிக் கொடுத்தது”.

“ரெண்டு வருஷம் முன்னாடி தான், அப்பா இந்த விஷயத்தை என் கிட்ட சொன்னார். அதுவும் ஷூட்டிங்க்கு நான் பீச் ஹவுஸ் வாங்க போறேன்னு சொல்லும் போது தான், அப்பா என் கிட்ட இதை சொன்னார்”.

“சரின்னு அதை பார்க்க போகலாம்ன்னு இருக்கும் போது, டைரக்டர் வேற பாரின் லொகேஷன் பார்க்கலாம் சொல்லி கூட்டிட்டு போயிட்டார். அதுக்கு அப்புறம் நான் அங்கே போக வேண்டிய சூழ்நிலை இல்லை, இப்போ தான் உன் மூலமா அங்க போக போறேன், ஒளிஞ்சிக்க” என்று ஆதி கூறவும் தான், ரமணன் அடுத்து உடனே செயல்பட்டான்.

அவர்களை விட்டுவிட்டு, ரமணன் சென்ற பின்னர் ஆதி வீட்டிற்குள் சென்று மதியை தேடினான். அவளோ, அயர்ந்து கட்டிலில் ஒரு குழந்தை போல் உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்தவன், அவளுக்கு போர்வையை சரியாக போர்த்திவிட்டு, பெட்ரூம் கதவை லேசாக சாற்றிவிட்டு வெளியே ஹால் சோபாவில் சோர்வாக வந்து அமர்ந்தான்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி, மதியை இங்கு அழைத்து வர அவன் பெரும்பாடு பட்டான். அதுவும் திருமணம் முடிக்காமல், அங்கே இவளை அவன் அழைத்து செல்வது சரியாக படவில்லை.

பாரிஸ் அனுப்பும் பொழுது கூட பிரகதி, விஷ்வா, கிருஷ்ணா என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு கொடுத்து மதியை பாதுக்காத்து வைத்தார் காமாட்சி. ஆதியோடு தனியே சென்ற பொழுது கூட, பிரகதி அவர்களின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.

காமாட்சி, என்ன தான் மற்ற விஷயங்களில் முற்போக்காக இருந்தாலும், மகன் மருமகள் விஷயத்தில் சில கட்டுபாடுகளை விதித்து இருந்தார். அவர்கள் திருமணதிற்கு முன், தனியாக அதிக நேரம் சேர்ந்து பேசிக் கொள்ள அவர் விடவில்லை.

இப்பொழுது ஆதி, அவளை தன் பொறுப்பில் அவளை விடுமாறு கேட்கவும். முதலில் மறுத்தார். திருமணம் செய்து கொள், என்று அவர் கேட்டதற்கு கூட, அவன் எல்லா பிரச்சனை முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.

நிறைய பேசி, சமாதானம் செய்து தான் இறுதியில் அவன் அழைத்து வர வேண்டியதாகி இருந்தது. அவன் எடுத்த முடிவிற்கு, துணையாக நின்றது மதி மட்டும் தான்.

ஆதியின் அவனின் மனநிலையை அவளை தவிர யாருக்கும், அவன் தெரியபடுத்தவில்லை. எல்லோரிடமும் மேலோட்டமாக மட்டுமே, விஷயத்தை கூறி இருந்தான். மதியிடம் மட்டுமே, அவன் வெளிப்படையாக முழு உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தான்.

ஆகையால் தான், அவள் ஆதியின் முடிவிற்கு சரி என்று ஒப்புக் கொண்டு இங்கே அவனோடு வந்தது. அதை நினைத்து பார்த்தவன், அவளை நினைத்து பெருமிதம் கொண்டான்.

திருமணத்திற்கு முன்பே, கணவனின் மனநிலையை புரிந்து கொண்டு செயலாற்றும் மனைவி அமைவது என்பது வரம். அதை அவன் புரிந்து கொண்டதால், அது கொடுத்த பெருமிதம் அவன் முகத்தில் புன்னகையை வரவைத்தது.

உள்ளே அசந்து தூங்கிக் கொண்டு இருந்த மதி, சிறிது நேரத்தில் முழிப்பு வந்து எழுந்து அமர்ந்தாள். மாலை நேரத்து காற்று, அந்த அறையில் ஊடுருவி, குளிரச் செய்தது.

கடல் அலைகளின் சீற்றம், அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது. தோழிகளுடன், கடல் அலைகளுடன் விளையாடியது, அவள் மனகண்ணில் மின்னி மறைந்தது. இப்பொழுது தன்னவனுடன் சேர்ந்து, அங்கே அலைகளுடன் விளையாட ஆசை கொண்டு, அவனை தேடி வெளியே வந்தாள்.

அங்கே ஹால் சோபாவில், கண்களை மூடி தன்னவளை நினைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து மெதுவாக நெருங்கினாள். கனவில் அவள் பார்த்து பழகிய முகம், நனவில் அவனோடு கதைத்து இருந்தாலும், அவனோடு இருக்கும் இந்த தனிமை அவள் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அவனோடு நிறைய பேசலாம், அவனை இன்னும் தெரிந்து கொள்ளலாம். தன்னை பற்றியும், அவன் எவ்வாறு கனவில் வளம் வந்தான் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள துடித்தாள். அவனை நெருங்கியவள், அவனை வர்மா என்று பெயர் சொல்லி அழைக்கும் முன், அவன் கண்களை திறந்து அவள் கைகளை பிடித்து இழுத்து, தன் மேல் போட்டுக் கொண்டு அணைத்து இருந்தான் அவளை.

கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்வை, அவள் எதிர்பார்க்கவில்லை போலும், வாயை பிளந்து கொண்டு இருந்தாள். அவன் சிரித்துக் கொண்டே, அவள் வாயை கை விர கொண்டு மூடினான்.

“என்ன! இப்படி செய்கிறீர்கள்! நான் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைக்கவில்லை” என்று மீண்டும் வாய் பிளந்தவளை பார்த்து, இப்பொழுது விஷமமாக சிரித்தான்.

“அது என்ன ஷாக் ஆகும் பொழுது எல்லாம், உனக்கு உன் ஸ்டைல் மொழியே வருது போல. அப்புறம் இந்த வாயை, என் வாயை என் வாயால மூடட்டுமா அழகி” என்று கூறி கண் சிமிட்டிவிட்டு, அவளின் உதட்டை நெருங்குவது போல், அவன் வரவும் அவள் பட்டென்று வாயை மூடிக் கொண்டு, அவன் முகத்தை தள்ளிவிட்டாள்.

“இன்னைக்கு என்ன, நீங்க புதுசா இப்படி நடந்துகுறீங்க?”என்று கேட்டாள் மதி.

“பின்ன அழகான பீச் ஹவுஸ், கடல் காத்து, பக்கத்தில் என்னோட அழகி இன்னைக்கு இன்னும் அழகியா வேற இருக்கா. இப்படி இந்த ஏகாந்தத்தில் இருக்கும் பொழுது, ஒரு லிப் கிஸ் அடிக்க ஆசையா இருக்காதா என்ன” என்று அவன் வினவவும், அவள் சிரித்துக் கொண்டே அவன் மீது இருந்து எழுந்தாள்.

“இதுக்கு தான், அத்தை அனுப்ப மறுத்தாங்க. நம்மளை அவங்க நம்பி அனுப்பி இருக்காங்க, அதனால நாம இப்படி எல்லாம் இருக்க வேண்டாமே ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சவும், அவன் அவளை வம்பு வளர்க்க தொடங்கினான்.

“எப்படி எல்லாம் இருக்க வேண்டாம், அப்புறம் நீ சொல்லுறதை பார்த்தா அம்மா அட்வைஸ் நிறைய பண்ணி இருப்பாங்க போலயே. என்ன எல்லாம் சொல்லி விட்டாங்க, இங்க பக்கத்து சோபாவில் உட்காரலாம் அழகி, நான் நல்ல பிள்ளை ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று விஷம புன்னகையுடன் கூறவும், அவள் அவனுக்கு பலிப்பு காட்டிவிட்டு, அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“அவங்க என்ன எனக்கு மட்டுமா சொன்னாங்க, உங்களுக்கும் தான் பெரிய அட்வைஸ் எல்லாம் கொடுத்தாங்க. சும்மா தெரியாத மாதிரி எல்லாம் கேட்க கூடாது, இப்போ என்னை கடலுக்கு கூட்டிட்டு போங்க வர்மா” என்று அவள் ஆசையாக கேட்கவும், அவன் சரி என்றான்.

இருவரும் ரெப்ரெஷ் செய்துவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு அங்கே கடல் காற்று வாங்க பீச் அருகே சென்றார்கள். சிரித்து பேசிக் கொண்டே வந்தவர்கள், ஆதிக்கு அவன் செல்பேசியில் அழைப்பு வரவும், அவளை முன்னே நடக்க சொல்லிவிட்டு, அவளை பார்த்துக் கொண்டே செல்லில் பேச தொடங்கினான்.

“கரும்புள்ளி கொண்டவனே! பயந்து பதுங்கிக் கொண்டு இருக்கிறாய் போல் தெரிகிறது. உம்மோடு அவளும் இருக்கிறாள் அல்லவா, நீ என்ன முயன்றாலும் உன்னால் அவளை காப்பாற்ற முடியாது டா”.

“நான் சபாஹ் பாசில்! ஒன்றை நினைத்து செயல்பட்டால் எனக்கு தோல்வியே கிடையாது. அவளை உன்னிடம் இருந்து, பிரித்துக் கொண்டு செல்வேனடா” என்று பாசில் மறுமுனையில் கர்ஜித்தான்.

கரும்புள்ளி! கரும்புள்ளி! அந்த வார்த்தை அது கொடுத்த வலி, வேதனை, கோபம் எல்லாம் சேர்ந்து அவனுக்கு தலைவலிக்க தொடங்கியது. கூடவே, அந்த குரல் அவனை வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்றது.

செல்பேசியில் கேட்டுக் கொண்டு இருந்த விகார சிரிப்பில், மீண்டும் தன்னிலை வந்து பேச தொடங்கினான் ஆதி.

“டேய்! உன்னால என் அழகியை கடத்திட்டு போக முடியாது, அப்படியே நீ கடத்திட்டாலும், உன் சாவு என் கைல தான். ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உயிரோட இருக்கனும் நினைச்சா, ஓடிரு, இல்லை மிதிபட்டு சாவ நீ, வை டா போனை” என்று மிரட்டல் விட்டு செல்லை அணைத்தான்.

கண்களால் அவனின் அழகியை தேடியவன், அங்கே கடலை பார்க்காமல், அவள் வேறு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவளருகே சென்றான்.

“அழகி! என்னாச்சு? கடலை பார்க்கணும், விளையாடனும் சொல்லி வந்துட்டு, இங்க நீ எதை இப்படி முறைச்சு பார்த்துகிட்டு இருக்க?” என்று அவன் வினவியதும், அவள் அவன் கைகளை பிடித்துக் கொண்டு, அங்கு இருந்து விறுவிறுவென்று நேராக அவர்கள் இருந்த வீட்டின் முன் வந்து நின்றாள்.

“சீக்கிரம் கதவை திறங்க வர்மா, நாம இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு தான் ஆபத்து” என்று கூறிக் கொண்டே அவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு, கதவை திறந்தாள்.

“அழகி நில்லு, என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பதட்டமா இருக்க?” என்று அவன் அவளை பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கவும் அவள் தேம்பினாள்.

“இந்த இடம் அவனோட இடம், அவனுக்கு பழக்கப்பட்ட இடம், இங்க சீக்கிரம் அவன் நம்மளை தேடி வந்திடுவான்” என்று அவள் பயத்தில் சொல்ல, அவன் முறைத்தான் அவளை.

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுற? அவனால நம்மளை கண்டுபிடிக்க முடியாது, நாம இருக்கிறது பூம்புகார் ல” என்று அவன் சொல்லவும், அவள் அதான் விஷயம் என்றாள்.

ஐநூறு வருடங்களுக்கு முன், இதே காவிரிபூம்பட்டினத்தில் அவன் வேந்தன் மன்னரை கொண்டு ஆட்சி புரிந்தது, அவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு மறக்குமா? அதை கண்டுபிடித்து, அவனையே கேள்வி கேட்க போய், என்னை மணம் புரிந்து கொள்ள படை எடுத்தவன் தானே அவன்.

இப்பொழுது கோபத்தில் இருக்கிறான், நரியின் தந்திரமும் சூழ்ச்சியும் அவனிடத்தில் உண்டு. அவனை தெரிந்ததால் தான், அவள் இவ்வளவு உறுதியாக கூறுகிறாள். அதையே, அவனிடமும் கூறி கிளம்ப வேண்டும் என்றாள்.

“அவனுக்கு அந்த அளவுக்கு எல்லாம், அறிவு கிடையாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, அவன் மனதில் அந்த விஷயம் பட்டது.

அவன் சரியாக திருமணத்தன்று வந்தது, இப்பொழுது சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் பேசியது எல்லாம் வைத்து யோசித்து பார்த்தவனுக்கு ஒன்று புரிந்தது. எதிரி கண்காணிக்க தொடங்கி விட்டான், அவனுடன் மோத நாம் தயாராக இருக்க வேண்டும் என்று.

உடனே அங்கு இருந்து புறப்பட, அவன் எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு, செல்லையும் சிம்மையும் அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு, அழகியோடு காரில் பயணம் செய்ய தொடங்கிவிட்டான்.

எதிரியின் தேவை மதியும், தன் உயிரும் அல்லவா? அவன் கடத்தி செல்வதை விட, நாமே அவன் இடத்திற்கு சென்றால் என்ன, என்று யோசிக்க தொடங்கிவிட்டான். அதன் படி, பாசில் மதியை கடத்தி செல்ல ஆதியே எல்லா ஏற்பாடையும் செய்து விட்டான்.

அவன் கடத்தி சென்ற ஒரு மணி நேரத்தில், சிங்கம் போல் கர்ஜித்து அவன் முன்னே நின்றான் ஆதித்ய வர்மா.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,
ud thamathamaanatharkku ore reason thaan, oru yethirpaaratha maranam, engalin sonthathil kudumbath thalaivar thavari vittaar oru vibaththil, athu thodarnthu avarin manaiviyum, maganum maruthuvamanaiyil anumathikappattu irunthanar. netru thaan ninaivu thirumbi irukkirathu, seithi ketta athirchiyil meendum mayakkam. intha nilaiyil kathai elutha varavillai, netru koduthu irukka vendiya pathivu ithu.
oru vaara ottam ennai thookkathil netru thalliyathaal, ud kodukka mudiyavillai.. very sorry friends.. adutha ud monday thaan.. sat, sun paiyan piranthanaalukku avan kooda irukka solli application pottutaar.. so monday 2 uds yethirpaarkkalaam friends..
keep supporting thank u all..
 




Last edited:

Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi
Nice episode. Waiting for varma's next action block. Aadhi ku yetho story irukka maathiri thonuthu. Avanga rendu peroda jodi super o super. Good update ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமாதீபக்25 டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
viruviupaga irunthathu sis. adityavarma fasilai thedi selkirana........ nice sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top