• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Alagiyin kaathal thavam (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 20

அங்கு இருந்த கபே ஷாப்பில், ஆதியும், மதியும் அமர்ந்து இருந்தனர். ஆதிக்கு, அவளின் இந்த மாற்றம் ஆச்சர்யம் அளித்தது. ஆள் மட்டுமா மாறி இருக்கிறாள், அவளின் பேச்சும், நடையும் அல்லவா மாறி இருக்கிறது.

“எப்படி இருக்க தர்பூஸ்? இல்லை இப்போ ஆப்பிள் பழம் மாதிரி இருக்க! எப்படி இருக்க ஆப்பிள்?” என்று சிரிப்போடு வினவினான் ஆதி.

அதில் கடுப்பானவள், கடுப்புடனே பதிலும் அளித்தாள் அவனுக்கு அப்பொழுது.

“எனக்கு என்ன, நான் நல்லா இருக்கேன் மிஸ்டர் ஆதித்ய வர்மா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க கைக்கு ஸ்கிரிப்ட் கிடைச்சு இருக்கும் நினைக்கிறேன், பிடிச்சு இருந்தா பண்ணுங்க, இல்லேன்னா ட்ராப் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, அவன் அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.

“என்ன அவசரம்! நான் இன்னும் நிறைய கேள்வி கேட்கணும் உன் கிட்ட, சோ எல்லாத்துக்கும் உண்மையான பதிலை சொல்லு புரியுதா?” என்று அவள் கண்களை பார்த்து கூறினான் ஆதி.

அவளும் சரி, எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு செல்லலாம் என்ற முடிவுடன் அமர்ந்து விட்டாள்.

“நீ என்னை லவ் பண்ணுறியா இன்னும்?” என்று அவன் கேட்கவும், அவள் முறைத்தாள்.

“எப்போ நீங்க என்னை வேண்டாம் சொல்லி, போனீங்களோ அப்போவே உங்களை நான் மறந்துட்டேன்” என்று பட்டென்று பதில் வந்தது.


இதைக் கூறும் பொழுது, அவள் கண்களில் உள்ள வலியை பார்த்து நிதானித்தான்.

“சரி ஸ்கிரிப்ட் எனக்கு பிடிச்சு இருக்கு, சில டவுட்ஸ் இருக்கு கிளியர் பண்ணு சரியா” என்று அவன் கேட்கவும், இவளும் சரி என்றாள்.

“சோழர்கள், அவங்க ஆயிரத்தி ஐநூறு வருஷம் முன்னாடி தான இருந்தாங்க. நீ ஏன் அதுல ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்த?” என்று கேட்டான்.

“இது ஒன்னும் முழுசா உண்மை கதை இல்லையே, ஜஸ்ட் ஒரு பாண்டஸி! அதான் ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்தேன்”.

“அது மட்டும் இல்லாம, கால சக்கரம் எல்லாம் உண்மை தான். தஞ்சை கோவில் ல worm hole இருக்குன்னு, ரீசென்ட்டா கண்டு பிடிச்சு இருக்காங்க. அதே மாதிரி, ஒரு தடவை அந்த கால சக்கரம் வழியா வந்தாச்சுன்னா, திரும்ப போக முடியாது” என்று அவள் கூறவும் அவன் அதிர்ந்தான்.

“ஏய்! இங்க யாருக்காவது தெரிஞ்சா அவங்க மூலமா, ஐநூறு வருஷம் முன்னாடி போகலாம் சொல்லி இருந்தியே” என்று கேட்கவும், அவள் ஆம் என்றாள்.

“ஆமா! சொல்லி இருந்தேன்! ஆனா இங்க அப்படி யார் அவங்களை திரும்ப அழைச்சிட்டு போக முடியும்? பாசில் ஒருத்தனுக்கு தான் கால சக்கரம் வழியா போக தெரியும், அவனையும் போட்டு தள்ளியாச்சு”.

“ இங்க வேற யாருக்கும் தெரியாது, அப்புறம் எப்படி கால சக்கரம் வழியா பயணிக்க முடியும். அப்படி ஒன்னு இருக்கிறது தெரியுமே தவிர, அதுல போறதுக்கான process இன்னும் யாருக்கும் தெரியாது”.

“அப்புறம் எப்படி அவங்க, கடந்த காலத்துக்கு போக முடியும்? அது மட்டுமில்லாம எப்போவுமே, பாஸ்ட் இஸ் பாஸ்ட் தான். அதனால, அவங்க ப்ரெசென்ட் ல இருக்கிற மாதிரியே விட்டுட்டேன்” என்று அவள் கூறவும், அவன் கண்களில் ஒளி.

“சரி அப்புறம் பாசிலை ஏன் கிழவனா, முதல depict பண்ண? அப்புறம் அவங்க அப்பா கேரக்டரை, ஏன் நீ கொண்டு வந்த?” என்று கேட்டான்.

“பாண்டஸி அப்படின்னு டிசைட் பண்ணியாச்சு, அப்போ அங்க அங்க இப்படி கொடுத்தா தான படம் பார்க்க நல்லா இருக்கும்” என்று கூறியவளை பார்த்து சிரித்தான்.

“உனக்கு படம் பார்க்க பிடிக்கும் அப்படின்ற விஷயத்தையே, நான் மறந்துட்டேன். உன் கற்பனையை எல்லாம் நல்லா தூவி இருக்க, ஆமா நீ ஏன் இதை ஸ்க்ரிப்டா எடுத்து எழுதி என் கிட்ட கொடுத்த?”

“உனக்கு அப்போ என் மேல, லவ் இன்னும் இருக்கு தான பொய் சொல்லாத” என்று அவன் கண் சிமிட்டி கேட்கவும், அந்த கண் சிமிட்டலில் அவளுக்கு முகம் சிவந்தது.

சிவந்த முகத்தை மறைக்க, அவள் தலையை குனிந்து கொண்டு தண்ணீர் எடுத்துக் குடித்தாள். அவள் தலையை குனியும் பொழுதே, அவன் கவனித்து விட்டான் அவளின் சிவந்த முகத்தை.

“இன்னும் எவ்வளவு நேரம், இப்படி என்னை ஏமாத்துறன்னு பார்க்குறேன் தர்பூஸ். உனக்கு ஆப்பிள் விட, தர்பூஸ் பெயர் தான் ரொம்ப பொருத்தமா இருக்கு” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் ஆதி.

“சரி அதை விடு, அது என்ன ஆதி + மதி = மாதி? இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவன் வினவவும், மீண்டும் தடுமாறினாள்.

“ஹையோ! இதை எப்படி மறந்தேன்? இவர் கிட்ட பேசுற ஆசையில், ஓடி வந்தது தப்பா போச்சு. மதி! தப்பிக்கிறதுக்கு வழியை பாரு டி” என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தவளை, ஆதி உலுக்கி அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.

“சாரி! நான் கிளம்பனும், பை!” என்று சொல்லிக் கொண்டு எழும் பொழுது, அவன் இவள் கையை பிடித்து இழுக்கவும், தடுமாறி அவன் மீது விழுந்தாள்.

விழுந்ததோடு அல்லாமல், அவன் இதழில் அழுத்தமாக முத்தமும் பதித்தாள். அதிர்ச்சியில், அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட புரியவில்லை.

ஆதிக்குமே அதிர்ச்சி தான், பிடித்து நிறுத்த வேண்டும் என்று நினைத்து தான் அவளை பிடித்து இழுத்தான். ஆனால், அவள் இப்படி தடுமாறி தன்னை கீழே விழ வைத்ததோடு அல்லாமல், அவளும் விழுந்து இதழில் முத்தம் பதிக்கவும் அதிர்ந்தான்.

இருவரின் கண்களும், ஒன்றோடு ஒன்று சந்தித்து அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிபடுத்தியது. அதற்குள், அங்கே சிலர் இதை படம் பிடிக்கவும், சுதாரித்து அவளை எழுப்பி விட்டதோடு அல்லாமல், அவனும் எழுந்தான்.

“மதி! நான் உன் கிட்ட பேசணும், ப்ளீஸ் வா என் கூட” என்று ஆதி அழைக்கவும், மறுத்தாள்.

“இல்லை, இப்போ நான் உங்க கூட இருக்கிறது சரியா படல எனக்கு. கீர்த்தனா, உங்களை நம்பி இருக்காங்க” என்று கூறியவளை பார்த்து வெறித்தான்.

“அப்போ எனக்கு நிச்சயம் நடந்தது வரை, உனக்கு தெரிஞ்சு இருக்கு. குண்டா இருந்த நீ எனக்காக தான மெலிஞ்ச, ஏன் டி இப்போ கூட நீ என்னை விரும்புறன்னு சொல்ல மாட்டேங்குற? சொல்லு டி” என்று இறுதியில் கர்ஜிக்கவும், அவள் அழுது சிவந்த கண்களோடு திரும்பினாள்.

“ஆமா! நான் உங்களை தான் லவ் பண்ணுறேன். இப்போவும், எப்போவும் உங்களை மட்டுமே தான் லவ் பண்ணுவேன். நான் உங்களுக்காக வெயிட் குறைக்கல, நீங்க என்னை கடைசி வரைக்கும் ஏத்துக்காம இருந்தது ல தான் எனக்கு மூச்சு விட முடியாம போய் ரெண்டு வருஷமா ஆஸ்பத்திரியில் இருந்தேன்”.

“உங்களுக்கு தெரியுமான்னு தெரியல, நான் சென்சிடிவ் டைப். நீங்க அன்னைக்கு உன்னை நான் திரும்பியே பார்க்க நினைக்கல, என்னை பின் தொடராதன்னு சொல்லிட்டு போனதுல இருந்து, நான் நானா இல்லை”

“மதர் தான் என்னை, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் அங்க தான் ரெண்டு வருஷம் இருந்தேன், எங்க இருந்தாலும் உங்க நினைப்பை மட்டுமே தான் சுமந்துகிட்டு இருந்தேன்”.

“உங்களை பார்க்கணும் அப்படின்ற ஆசையில் தான், அன்னைக்கு நீங்க இருந்த அந்த பப்க்கு வந்தேன். நீங்க அங்க ஒரு பேப்பர் ல சோழர் பத்தின விஷயம் எழுதிகிட்டு இருந்தீங்க, அப்போவே நீங்க அதை வச்சு தான் அடுத்த படம் எடுக்க போறீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்”.

“அப்புறம் தான் நான் தேடி எடுத்து படிச்சு, இந்த ஸ்கிரிப்ட் ரெடி பண்ணேன். ஒவ்வொரு நிமிஷமும், நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சு உங்களை தான் நான் பின் தொடர்ந்தேன்”.

“இப்போ இருக்கிற காலகட்டம், அந்த ஸ்கிரிப்ட் ல இருந்தது எல்லாம் உங்களை follow பண்ணும் பொழுது எழுதினது தான். உங்களுக்காக எழுதினதை உங்க கிட்ட கொடுக்கணும்னு தோனுச்சு, அதான் கொடுத்துட்டு கிளம்ப முடிவு பண்ணி, இப்போ கிளம்புறேன்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று நடக்க தொடங்கியவளை இமைக்க மறந்து பார்த்தான்.

ஒரு பெண்ணால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை விரும்ப முடியுமா? முடியும் என்று நிருபித்து காட்டிவிட்டு சென்று கொண்டு இருந்தாள் அவனின் தர்பூஸ்.

அப்பொழுது அவனுக்கு, அவனின் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் யார் பேசுகிறார்கள் என்று கவனிக்காமல், போனை எடுத்து ஹலோ என்றான்.

“டேய் கண்ணா! நீ எங்க இருக்க? கொஞ்சம் வீட்டுக்கு வா டா, முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவர் கூறவும், அவன் சரி என்றான்.

அவன் முடிவு செய்துவிட்டான், தர்பூஸ் தான் அவனின் வாழ்க்கை துணை என்று. அவளை இனியும் வேண்டாம் என்று சொல்ல, அவன் என்ன முட்டாளா?.

நேராக அவள் டிக்கெட் எடுக்க நிற்கும் கவுன்டரில் இருந்தவளை, இவன் கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அங்கே எல்லோரும், வேடிக்கை பார்த்தனரே தவிர, என்னவென்று கேட்டு யாரும் முன் வரவில்லை.

காரணம் அவனை சுற்றி, அவனது பாதுகாவலர்கள் அவன் நிழல் போல் தொடர்ந்து கொண்டு இருந்தனர். இவளோ, அவனிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டு இருந்தாள்.

“ச்சு! சத்தம் போடாம வா” என்று அவன் அதட்டல் போடவும், அந்த அதட்டல் வேலை செய்தது.

அவன் காரை வேகமாக ஒட்டிக் கொண்டு, அவனின் வீட்டிற்கு சென்றான். அவனுக்கு, அப்பொழுது அம்மாவிடம் இவளை பற்றி எல்லாம் சொல்லி, திருமணம் உடனே செய்ய எண்ணி இருந்தான்.

எங்கு விட்டால், சொல்லாமல் திரும்பவும் ஓடி விடுவாளோ என்று அஞ்சினான். ஆகையால், அவளை அழைத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் வீட்டிற்கு சென்றான். வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு, அவளை வெளியே நிற்க வைத்துவிட்டு இவன் மட்டுமே உள்ளே சென்றான்.

அங்கே வீட்டில், அவனின் அன்னை கவலையே உருவாக அமர்ந்து இருந்ததை பார்த்து, அவரின் கவலையை போக்க வேண்டும் முதலில் தாயை நெருங்கி, அவரிடம் என்னவென்று கேட்டான்.

“அந்த பொண்ணு கீர்த்தனா, வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டாளாம் டா. அவங்க வீட்டுல, இவளை வற்புறுத்தி தான் ஒத்துக்க வச்சு இருந்து இருக்காங்க”.

“காட்டின அத்தனை பொண்ணுங்களை, இவளை தான் பிடிச்சு இருக்கு சொன்ன. நல்லா விசாரிக்காம, உனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லவும் தான் தெரிஞ்ச குடும்பம் தான அப்படின்னு நிச்சயம் பண்ணோம் டா”.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“கண்ணா! அம்மாவை மன்னிச்சிரு டா, உனக்கு ஏத்த பொன்னை பார்த்துக் கொடுக்க கூட முடியல டா” என்று கூறி வருந்தியவரை அவன் தேற்றினான்.

“அம்மா! உன்னையும், என்னையும் நல்லா பார்த்துக்க நான் ஒரு பொன்னை கூட்டிட்டு வந்து இருக்கேன் நம்ம வீட்டுக்கு. ஆரத்தி கரைச்சு கொண்டு வாங்க மா, எங்களை ஆசிர்வாதம் பண்ணி கூபிடுங்க உள்ள” என்று அவன் மெதுவாக அந்த செய்தியை கூறவும், முதலில் புரியாமல் விழித்தவர், அதன் பின் புரிந்து, மகனுக்கு பிடித்த பெண் என்று புரிந்து ஆரத்தி கரைக்க உள்ளே ஓடினார்.

அவனின் தந்தையோ, அவனை ஆச்சர்யமாக பார்த்தார். அவனோ, வெட்கத்தில் தலை குனிந்து கொண்டே வெளியே ஆவலுடன் வந்து நின்றான்.

“பாரு டா! என் பையனுக்கு வெட்கத்தை” என்று அவரும் கிண்டல் அடித்துக் கொண்டே, மனைவியுடன் வெளியே வந்தார்.

அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து, இருவருக்கும் மிக சந்தோஷமாக இருந்தது. மகனுக்கு பிடித்தவள், என்ற ஒரு காரணத்தால் அவள் யாரென்று கூட கேட்டுக் கொள்ளாமல் ஆரத்தி எடுத்து உள்ளே அவளை பரிவுடன் அழைத்து வந்தார்.

அதன் பின், அவன் அவள் யாரென்று கூறியதோடு அல்லாமல், அவளின் ஸ்கிரிப்ட் பற்றி கூறி, அவளை இப்பொழுது சந்தித்து கூட்டிக் கொண்டு வந்தது வரை எல்லாம் கூறினான்.

“ஏம்மா! அப்போவே இவன் உன்னை பத்தி சொல்லி இருந்தால், கண்டிப்பா அப்போவே உன்னை இங்க கூட்டிட்டு வந்து இருப்பேன். இப்படி நீ கஷ்டப்பட்டு இருந்த நேரத்துல, உன்னை தனியா விட்டு இருக்க மாட்டேன்” என்று அவர் கூறவும், அம்மா என்று கூறி கண்களில் நீர் வழிய அவரை கட்டிக் கொண்டாள்.

“என்னோட அம்மா, அப்பா சின்ன வயசுல ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அப்புறம் எங்க சித்தப்பா தான் என்னை, அங்க மதர் கிட்ட ஒப்படைச்சு பார்த்துக்க சொன்னாங்க”.

“அவங்களோட டிரஸ்ட் ல தான், நான் வளர்ந்தேன். இவரை நான் ஸ்கூல் படிக்கும் பொழுதே பார்த்து இருக்கேன், அப்போவே எனக்கு இவரை பிடிச்சு இருந்தது”.

“அப்புறம் இவர் படிச்சிகிட்டு இருந்த காலேஜ் ல, நான் தற்செயலா சேர்ந்தேன். அப்போ எனக்கு அவரை, இன்னும் தீவீரமா பிடிச்சு இருந்தது”.

“அவர் எங்க இருந்தாலும், தேடி போய் பார்த்திடுவேன். அப்போ நான் குண்டா இருந்தது, இவருக்கு பிடிக்கல. என்னை அவர் வேண்டாம் சொல்லிட்டார், அப்புறம் தான் தள்ளி நின்னு பார்க்க ஆரம்பிச்சேன்”.

“ஆனா, ஒரு கட்டத்தில நான் பார்க்கிறது கூட அவருக்கு வெறுப்பா இருந்தது. உடனே காலேஜ் மாறி போயிட்டார், அப்போ தான் ரொம்ப உடைஞ்சு போய் படிப்பில் கவனம் இல்லாம இரண்டு வருஷம் ஆஸ்பத்திரி ல இருந்தேன்”.

“அப்புறம் மதர் தான், என்னை படிக்க சொல்லி ரொம்ப சொன்னாங்க. படிப்பை, அப்போ நான் கரஸ் ல பண்ணி முடிச்சேன். நல்லா தேறின பிறகு, இவர் என்ன செய்றார்? எங்க இருக்கார்? இதை தான் முதல தேடினேன்”.

“அப்புறம் இவரை follow பண்ணி, அவர் எடுக்கணும் நினைச்ச சோழர் கதையை என் கற்பனைக்கு தகுந்த மாதிரி, ஒரு கதையை உருவாக்கி இவர் கையில் கொடுத்துட்டு போக நினைச்சேன்”.

“அதுக்குள்ள, இவர் என்னை பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டார்” என்று அவள் தன்னை பற்றியும், அவளின் காதல் பற்றியும் கூறவும் ஆதியின் அன்னையும், தந்தையும் அசந்து விட்டனர்.

மகனுக்கு இப்படி ஒரு குணவதியை தானே தேடினார், ஆகையால் இருவருக்கும் திருமணம் வேகமாக முடிக்க எண்ணி அந்த வாரத்திலே நாள் குறித்தார்.

திருமணம் முடிந்த அந்த இரவில், அவன் அறையில் நடுங்கிக் கொண்டு இருந்தவளை பார்த்து சிரித்தான்.

“அந்த ஸ்கிரிப்ட் ல, நீ எழுதின மாதிரியே நடுங்குற இப்போ” என்று அவன் கூறவும், அவள் முறைத்தாள்.

“அது நான் வேற ஒரு கதையில் இருந்து சுட்டது, அதை அப்படியே எழுதிட்டேன். இது இப்போ ரியாலிட்டி, எனக்கு நிஜமாவே கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்று கூறியவளை அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பில், அவன் அவளிடம் எதுக்கும் பயம் வேண்டாம் இனி, நானிருக்கிறேன் உனக்கு என்று கூறுவது போல் அவனின் அணைப்பு இருந்தது. அதை புரிந்து கொண்டவளும், அந்த அணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்தாள்.

“நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்” என்று திடிரென்று அவள் கூறவும், அவன் எல்லாம் நாளை கூறலாம் என்று கூறிவிட்டு அவளை கையில் ஏந்திக் கொண்டு, அன்றைக்கான பாடத்தை அவளுக்கு சொல்லிக் கொடுக்க தொடங்கினான்.

முதலில் திணறினாலும், அதன் பின் அவன் கற்றுக் கொடுத்த பாடத்தை சரியாக படித்தாள். நள்ளிரவில் ஆரம்பித்த பாடம், அதிகாலை வரை தொடர்ந்தது. பாடம் படித்த களைப்பில் அவளும், சொல்லிக் கொடுத்த அவனும் அதன் பின் நன்றாக உறங்கினர்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
இரு மாதங்கள் கழித்து, அந்த ஷூட்டிங் செட்டில் மதிய வேளை ஆதி, விஷ்வா, ரகு, கிருஷ்ணா எல்லோரும் மதி கொண்டு வந்து இருந்த சாப்பாடை சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

“ஹே மதி மா ! உண்மையை சொல்லு, அது எப்படி இவன் இருக்கிற இடம் உனக்கு ஒவ்வொரு தடவையும் சரியா தெரிஞ்சது?” என்று வெகுநாள் மனதில் அழுத்திக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டான் விஷ்வா.

“அது கிருஷ்ணா தான் உங்க எல்லோரையும் பத்தி சொன்னான், இவங்க எங்க இருக்காங்கன்னு எல்லாம் அவன் மூலமா தான் தெரியும் எனக்கு” என்று அசடு வலிந்து கொண்டே கூறினாள்.

“அதான, அந்த பக்கியும், நீயும் ஒரே கிளாஸ்ல. டேய் கிருஷ்ணா துரோகி! ஒரு தடவையாவது, நீ இவளை பத்தி சொன்னியா டா ஆதி கிட்ட” என்று அவனை பிடித்தான் விஷ்வா.

“அவ தான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லக் கூடாதுன்னு, உங்க மேல சத்தியம் வாங்கிட்டா விஷ்வா அண்ணா. அதான் அண்ணா சொல்லல, அப்படி தான மதி” என்று அவன் கூறவும், விஷ்வா அவனை அடிக்க துரத்திக் கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்து, எல்லோரும் அங்கே சிரித்துக் கொண்டு இருந்தனர். ரகு அப்பொழுது, மதியிடம் ஐநூறு வருடக் கதை எப்படி உனக்குள் உதித்தது என்று கேட்கவும் தான், அன்று சொல்லாமல் விட்ட உண்மை இப்பொழுது நியாபகம் வந்தது.

“இதை தான் நான் அப்போ சொல்ல நினைச்சேன், இவங்க கிட்ட. எனக்கு அப்போ தஞ்சாவூர் போய் அந்த கோவிலை பார்க்க வேண்டி இருந்தது, அதனால போனேன் அங்க”.

“அப்போ தான், அந்த கோவில் ல ஒரு வயசான தாத்தா, என்னை கூப்பிட்டு இப்படி ஒரு கதை சொன்னார். எனக்கும் அது பிடிச்சு இருந்தது, கொஞ்சம் கதைக்கு ஏத்த மாதிரி அங்க, அங்க மட்டும் கொஞ்சம் மாத்தினேன்”.

“அப்புறம், அவரை நான் நம்ம கல்யாணத்துல தான் பார்த்தேங்க. அவருக்கு எப்படி தெரியும் அப்படின்னு அப்போ யோசிச்சேன், ஆனா எனக்கு அப்போ ஒன்னும் புரியல”.

“இப்போ தான் திரும்ப ஸ்கிரிப்ட் படிக்கும் பொழுது, ஒரு வேளை நான் அவர் பொண்ணு மதியழகி மாதிரி இருக்கேனோ அப்படின்னு ஒரு சந்தேகம் வருது” என்று அவள் கூறவும், அங்கே ஆதியும், ரகுவும் அதிர்ந்தனர்.

“என்ன சொல்லுற மதி! உண்மையா! சரி, ரகு நீ இங்க பார்த்துக்கோ, நாங்க உடனே தஞ்சாவூர் கிளம்புறோம்” என்று ஆதி கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு, தஞ்சை பறந்தான் அவனின் காரில்.

தஞ்சை கோவிலுக்கு மறுநாள் காலையிலே சென்றவர்கள், அங்கே அவள் முதல் முதலில் பார்த்த இடத்தில் தேடினார்கள் அவரை. அங்கு அவர் இல்லை எனவும், சுற்றி இருப்பவர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.

ஒருவருக்கும் தெரியவில்லை எனவும், சோர்ந்து போய் திரும்பி கோவிலை விட்டு வெளியே வரவும், அங்கே இருந்த பூ கடை பாட்டி ஒருவர், மதியை அழைத்தார்.

“அவங்களுக்கு தெரிஞ்சிக்கலாம், வா போய் கேட்கலாம்” என்று ஆதி அவளை அங்கு அழைத்து சென்றான்.

“நீ வந்தா இந்த கவரை கொடுக்க சொல்லி இருந்தார் மா, உன் அப்பா” என்று அவர் கூறவும் அதிர்ந்தனர் இருவரும்.

அந்த கவரை வாங்கிக் கொண்டு, இருவரும் காரில் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அறைக்கு வந்ததும், அந்த கவரை திறந்து, அதில் இருந்ததை படிக்க தொடங்கினர்.

“அன்பு மகள் மதிக்கும், மாப்பிள்ளை ஆதித்யாவிற்கும் என் வணக்கங்கள். மதி மா, நான் சொல்லி இருந்த கதை போன ஜென்மத்தில் நாம வாழ்ந்து இருந்தது மா”.

“அந்த ஜென்மம் மாதிரி, இந்த ஜென்மத்திலும் எனக்கு இரண்டு மனைவி. விபத்து நடந்த அன்னைக்கு, உன்னை மட்டும் ஸ்கூல் அனுப்பிட்டு, நாங்க எல்லோரும் சேர்ந்து தஞ்சாவூர் கோவிலுக்கு புறபட்டு வந்தோம்”.

“கோவில் ல சாமி தரிசனம் எல்லாம் பார்த்துட்டு, திரும்பி வரும் பொழுது தான் அந்த விபத்து நடந்தது. நான் தூக்கி எறியப்பட்டதால, நிறைய காயங்களோடு அந்த புல்லுல மயங்கி இருந்து இருக்கேன்”.

“ஓரு சிலர் என்னை பார்த்துட்டு, தூக்கிட்டு ஆஸ்பத்திரி போனாங்க. அங்க தான் பூர்வ ஜென்மத்துல, நான் யாரு? என்னனு எல்லாம் தெரிஞ்சிகிட்டேன்”.

“அன்னைக்கு நீ கோவில் வந்த பொழுது, உன் கிட்ட நான் தான் உன் அப்பான்னு சொல்ல முடியாம ஏதோ ஒன்னு தடுத்தது. ஆனா, உன் வேண்டுதலை கேட்ட உடனே, உனக்கு உதவி பண்ணனும் நினைச்சேன், அதனால அந்த கதை எல்லாம் சொன்னேன்”.

“இது தான் கடவுளோட சித்தம் போல, உன் கல்யாணம் அன்னைக்கு தான் அப்புறம் பார்த்தேன். இந்த லெட்டர் உனக்கு கிடைக்கும் பொழுது, நான் உயிரோட இருக்க மாட்டேன், ஏன்னா எனக்கு ரொம்ப நாளாவே இதய கோளாறு இருக்கு”.

“உன் கல்யாணம் பார்த்த திருப்தியிலே, இந்த கடிதத்தை எழுதிட்டேன். மாப்பிள்ளை, என் பொண்ணை நீங்க பத்திரமா பார்துபீங்கன்னு தெரியும்”.

“இருந்தாலும், ஒரு அப்பாவா சொல்லுறேன், அவளை நீங்க கண் கலங்காம
பார்த்துக்கோங்க மாப்பிள்ளை. பழைய ஜென்மம் எல்லாம் நியாபகத்துக்கு வந்த எனக்கு, இந்த ஜென்மத்து நியாபகம் ரொம்ப நாளா மறந்து போய் இருந்தது”.

“கோவிலை என் மகளை பார்த்த பிறகு தான், எனக்கு லேசா நினைவு வந்தது. நினைவு திரும்பிய பிறகும், என்னால என் பொண்ணை எங்க கண்டுபிடிக்கன்னு கூட தெரியல”

“உங்க கல்யாணம் கூட, ஒருத்தர் என்னை கூட்டிட்டு வந்ததால தான் பார்க்க முடிஞ்சது. யோசிச்சு பார்த்தா, எல்லாம் சிவனோட திருவிளையாடல் மாதிரி இருக்கு”.

“நல்லா இருங்க ரெண்டு பேரும், பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். இப்படிக்கு, இளங்கோவன்(தமிழ் வாத்தியார்)” என்று முடித்து இருந்ததை பார்த்து இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.


“அவர் தான் என் அப்பான்னு தெரியாம இருந்து இருக்கேன், நான் என்ன பொண்ணுங்க” என்று அவனை கட்டிக் கொண்டு தேம்பி அழுதாள்.

“அழ கூடாது, எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ. நடக்கிறது எல்லாம் பார்த்தா, ஏதோ கர்மா மாதிரியே இருக்கு” என்று கூறியவனை பார்த்து முழித்தாள்.

“நீ கவனிச்சியா, நீ முதல் முதல என்னை எப்போ பார்த்த? அந்த டீ கடையில், குடிசையை கிழிச்சிட்டு என் மடியில் வந்து விழுந்த. அப்புறம் முதல் தடவை நீ எங்க வீட்டுக்கு வரும் பொழுது, எங்க அம்மா உனக்கு ஆரத்தி எடுத்து உள்ள வர சொன்னாங்க”.

“இது எல்லாமே அந்த ஸ்கிரிப்ட் படி நடக்குது, நாம இப்போ தஞ்சாவூர் வர வரைக்கும். இதுல இருந்து என்ன தெரியுது, எல்லாமே ஆல்ரெடி கடவுள் முதலிலே பிளான் போட்டு வச்சு இருக்கார்”.

“அது படி தான் இப்போ வரைக்கும் நடக்குது, சோ நாம இப்போ முடிஞ்சதை நினைக்க கூடாது, அடுத்து என்னனு பார்ப்போம் சரியா” என்று அவன் எடுத்துக் கூறவும், அவளும் மெதுவாக சற்று தெளிந்தாள்.


“ஹே தர்பூஸ்! உன்னோட காதல் தவம் நிறைவேறிடுச்சா என்ன?” என்று கேட்டான் ஆதி.

“ம்ம்.. என்னோட காதல் நீங்க, தவம் நீங்க. அதனால நீங்க எனக்கு கிடைச்சது மட்டுமில்லாம, அந்த காதலுக்கு பரிசா என் வயிற்றில் இப்போ குட்டி ஆதியோ, அழகியோ இருக்காங்க”.

“அதனால, இந்த அழகியோட காதல் தவம் நிறைவா நிறைவேறிடுச்சு” என்று அவள் கூறவும், அவன் அவளை கட்டிக் கொண்டு இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.

முற்றும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே,

ஹே ஒரு வழியா உமா ஒரு பெரிய கதையை முடிச்சு இருக்கா, ரொம்ப நாள் கழிச்சு .
அழகியை இனி மிஸ் பண்ணுவேன் நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு, ஆனா இப்போ நிறைவாவும் இருக்கு.

அழகி பற்றி உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் மக்களே, நீங்க இந்த கிளைமாக்ஸ் பற்றி என்ன நினைக்குறீங்க எல்லாம் சொல்லுங்க.. அடுத்து நாளை இன்னும் இது பற்றி பேசலாம், பை பை friends.. கீப் சப்போர்டிங்..

அன்புடன் ,
உமா தீபக் ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top