• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Andril 2: Paarvaiyin sparisangal Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஜாலன்

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
76
Reaction score
119
Location
Chennai
View attachment 52
அன்றில் ..


அன்றில் என்றால் என்னவென்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாத சிலருக்கு, அன்றில் ஒரு சங்க கால பறவை, காதலுக்கு இலக்கணமாக, ஒன்றை பிரிந்து மற்றொன்று வாழாத காதல் சின்னம். நம்ம ஊர் லவ் பேர்ட்ஸ் என்று கூட சொல்லலாம். இன்று அழிந்து போனாலும், இவற்றை போல பிரிக்க இயலாத காதல்கள் இன்னும் இம்மண்ணில் ஓயவில்லை. அப்படி ஒரு எதார்த்தமான காதல் கதை தான் இது.

மழலையின் முதல் தமிழ் போல, வசந்தத்தின் முதல் மலர் போல, மனதில் எழும் முதல் காதலும் பொக்கிஷம் தான். நம்மை அறியாமலே நம்மை ஆட்கொள்ளும் இந்த காதல், இணைந்தாலும் பிரிந்தாலும் நம் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். வாழ்வில் பின் சந்திக்கவிருக்கும் பல ஆச்சர்யங்களுக்கு, அதிர்ச்சிகளுக்கு, தோல்விகளுக்கு நம்மை ஒரு விதத்தில் தயார் செய்யும் இந்த முதல் காதல் அனுபவம் கிடைப்பதும் வரம் தான்.
இதை உணர்ந்தால், லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி என காவியங்களில் நாம் கண்டு கண்ணீர் சிந்திய காதல்களை போல, நம் ஆழ்மனதில் படிந்து, உயிரில் கலந்திருக்கும் நம் காதலும் புனிதம் தான் என்பது புலப்படும்.

மண் மேல் மரம் கொண்ட காதல் போல், மலர் மேல் வண்டு கொண்ட காதல் போல், கடல் மேல் முகில் கொண்ட காதல் போல், இவன் மேல் அவள் கொண்ட காதலும் அவள் மேல் இவன் கொண்ட காதலும் இந்த கதை வழியே உங்கள் முன்…
 




CreativeAfsha

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
37
Reaction score
14
Location
Chennai
அருமையான துவக்கம் காதலை கவிநயத்துடன் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ ???
 




Shalini panjanathan

புதிய முகம்
Joined
Jan 21, 2018
Messages
2
Reaction score
2
Location
Chennai
அன்றில்

அழகான தலைப்பு
எப்பவும் உன்னோட கதைகள் என்ன வேற உலகத்துக்கு கொண்டு போகும்

வார்த்தைகளில் மாயம் செய்யும் ஜாலானே
உன் "அன்றில்" காதலில் விழ காத்துக்கொண்டிருக்கிறேன்.....
 




ஜாலன்

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
76
Reaction score
119
Location
Chennai
மிக்க நன்றி சகோ.. உங்கள் எதிர்பார்ப்பை ஈடேற்ற என்னால் ஏன்டதை செய்வேன்.. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top