• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 1. 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
ei53UA243251.jpg



என்றும் என் துணை நீயேதான் 1



மான மதுரையில என்
மாமன் வாரான் குதிரையில.. தமிழ் பாட்டுல ஆரம்பித்து ஒட்டுமொத்த உலகத்திலும் மதுரையினா ஒரு கெத்தான ஊர் தான். அதிலும் அந்த மதுரையில வாழுற மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். வெள்ளிகிழமை, செவ்வாய்கிழமை மட்டுமில்லாம எல்லாம் நாளும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போகதா மக்கள் இல்லை. தினமும் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றாலும் அந்த ஆத்தாவ தரிசிக்காம எந்த ஜனமும் கோவிலைவிட்டு வெளிய போகமாட்டாங்க அப்படி ஒரு பக்தி.




மதுரையினா மீனாட்சியம்மன் மட்டுமில்லை, கள்ளழகர் கோவில், மதுரை பாண்டி கோவில்னு ரொம்பவே பிரசித்த பெற்ற கோவிலும் இருக்கும். அதே மாதிரி மதுரை மக்கள்னா சும்மா இல்லை, ஒவ்வொரு வீட்டிலையும் பெண் குழந்தை பிறந்தா அந்த மதுரையோட சேர்த்து மீனாட்சினு தான் வைப்பாங்க. வயசு பொண்ணுங்களை குலசாமியா நினைச்சு கும்பிடுற ஊரும் அது தான்.


மதுரையினா மல்லி, காளையினா ஜல்லிக்கட்டுனு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனது. மதுரை சுற்றியுள்ள ஊருனா, பாலமேடு, வாடிப்பட்டி, உசிலம்பட்டியோடு சேர்த்து மதுரை மாவட்டமே அல்லோல்படுற அளவுக்கு தைமாசம் அப்படி ஒரு விசேஷமா இருக்கும். மாசி பயிறுக்கு மீனாட்சி கோவில் ஜொலிக்கிறதும், சித்திரையில மதுரையே
ஜொலிக்கிறதும் அப்பாப்பா சொல்ல முடியாத வரலாறுகளும் உள்ளடக்கியது தான் மதுரை.



பழகுனா மதுரைக்காரங்கேங்கட்ட தான் பழகனும். அதே மாதிரி பொண்ணுங்களை தன் வீட்டு பொண்ணு போல நினைச்சு மதுரை பசங்களோட அனுப்பி வைத்தா எப்படி போன அப்படி திரும்பி வருவா எங்கவீட்டு பொண்ணு. காவலுக்கு மதுரை பசங்க, காதலுக்கு அருவாவும் பேசுங்க அப்படிப்பட்ட பசங்களும் வாழுற ஊரு தான் மதுரை.


வெளியூர்ல வேலை பார்த்தாலும், நம்ம மதுரைக்காரங்க பார்த்த தானா மதுரை பாஷை வாயில வந்திரும். அதே மதுரை மக்களுக்கு ஒன்னுனா ஒட்டுமொத்த மாவட்டமே ஒன்னா நிக்கும் அப்படிப்பட்ட ஊரு தான் மதுரை. கட்டுனா மதுரை பொண்ணுங்களை தான் கட்டுவேன் அடம்பிடிக்கிற பையனும், கட்டுனா மதுரைகார மச்சன தான் கட்டுவேன் அடம்பிடிக்கிற பொண்ணும் இருக்காங்க.


மதுரைக்கு இன்னொரு முகமும் இருக்கு.. தூங்காநகரம். நடு ஜாமத்திலும் பசிக்குது வந்தா சுட சுட இட்லிய வாரி வழங்குற ஹோட்டலும் இருக்கும். காஃபி ஷாப் இருக்கும். எந்த நேரம் ஆட்டவோம், பஸூம் வந்து வந்து போகும். எந்த நேரமும் மக்களோட நடமாட்டமும் இருக்கும். பாசம் வைச்சா மதுரைகாரன போல வைக்கனும், நேசம் வைச்சா மதுரை பொண்ணு மாதிரி நேசம் வைக்கனும்.


சுற்றி பார்க்க திருமலை நாயக்கர் மஹாலும், பிரமிப்பா பார்க்க மீனாட்சி கோவிலும், அதோட நாலு பெரிய கோபுரமும், நாலு திசையை குறிக்குற வாசலும் இருக்கும். தமிழ் மாசத்தோட ஒவ்வொரு பேரும் அந்த மதுரையில தெருவோட பெயரா இருக்கு. தெற்க்கு மாசி வீதி, மேல மாசி வீதி, ஆவணி மூல வீதி, சித்திரை வீதினு இருக்கும்.


சித்திரை மாசத்துல அம்மனுக்கே உரிய மாசம்னு அந்த மாசத்துல எந்த கல்யாணம் காரியமும் வைக்க மாட்டாங்க. அம்மனுக்கே கல்யாணம் செய்து பார்க்குற ஊரே மதுரை தான்.. அம்மாவோட கல்யாணத்துக்கு முதல் நாள் அவங்களோட பட்டாபிஷேகமும், அடுத்த நாள் கல்யாணமும் ஜெகஜோதியா இருக்கும். தங்கச்சி கல்யாணத்தை பார்க்க அழகரு மலையில இருந்து கீழ வர்ரர். கல்யாணம் தான் இல்லாம நடந்திருச்சுனு கோவத்துல வந்த வழியா அதாவது வைகையில திரும்பி நடக்க அதையே மக்கள் வைகை ஆற்றில் அழகர் எழல்னு சொல்லுராங்க.


அம்மா கல்யாணத்துல இருக்குற சந்தோஷம், அழகர் வைகை ஆத்துல இறங்கும் போது இன்னும் ஊரே சந்தோஷமா பார்க்கும். அந்தளவுக்கு மதுரையினா ஒரு அற்புதம், சந்தோஷம், ஆனந்தம், ஒரு பூரிப்பு மதுரையினாலே ஒரு உற்சாகம் தாங்க.


”ஏலேய் இன்னும் வயலுக்கு போகாம இங்க என்ன பண்ணுற.. அங்கன ஜோலி நிறைய கிடக்குனு உனக்கு தெரியாதாக்கும்.. போட போய் வயலுக்கு கிளம்பு.”


“ஐயா, அம்மா தான் என்னை வரச்சொல்லிருந்தாங்க.. அதான் என்னனு ஒரு காது கேட்டுட்டு போயிரலாம் வந்தேன்.” வயலில் வேலை பார்க்கும் பணியாள் பதில் சொல்ல


“உங்கம்மா என்னவோ சொல்ல அழைப்பானு உனக்கு தெரியாதாக்கும், இன்னைக்கு முதல் நெல் நடவு, சேவலை அறுத்து ஐயனாருக்கு படைக்கனும் அதுக்காக உன்னை சேவ வாங்க அனுப்ப கூப்பிட்டிருப்பாளாக்கும்.”


“அம்மா கூப்பிட போதே எனக்கு தெரியும் ஐயா, அதான் முன்னாடியே சேவ வாங்கிட்டு வந்தேன்.. ஆனா அம்மாவுக்கு சேவலை பிடிக்கனும் இல்லைனா என்னை தான் வசவு பாடுவாக.” பணியாள் பயந்தது போல சொல்ல


”சரி .. சரி.. சட்டுபுட்டுனு சேவலை காட்டிட்டு, வயலுக்கு போலே.. அங்க நெல் நடவுக்காரவுங்க கருக்காலையிலே வந்துட்டாங்க இப்போ போனா தான் காபி தண்ணி வாங்கி கொடுக்க முடியும்.” அந்த வீட்டிக்கும் மட்டுமில்லை அந்த மதுரையின் ஊருக்கே ராஜா போல் தோற்றம் அளிக்கும் வீரபத்திரன் தன் வீட்டுக்கும் மட்டுமில்லாது தோட்டத்திலும் வேலை பார்க்கும் பணியாளிடம் சொல்லிவிட்டு சென்றார்.


”ஏலேய் தர்மா.. சேவ எங்கலே..”


“ஆயி இந்த சேவ தான் நல்லா இருந்தது.. இதவே விலைகொடுத்து வாங்கியாந்தே.. இல்லை வேற சேவ வாங்கியாறேன் உங்களுக்கு பிடிக்கலைனா.” பவ்வியமாக விளக்கி கூற


“ம்ம்.. நல்லாத்தேன் இருக்கு சேவ... சொன்ன மாதிரி ஐயானாருக்கு காவகொடுத்து பொங்கல் வச்சிரு சொல்லு முனியாம்மாகிட்ட. இன்னைக்கு நெல் நடவு நல்லபடிய முடிஞ்சு நெல் விழைஞ்சு நல்ல விலைக்கு போனா தான் நம்ம மக்களுக்கு கூலி கொடுக்க முடியும். எங்க கையை கடிச்சாலும், கூலிக்காரங்க வயித்துல அடிக்கிற மாதிரி நிலை வந்திரக்கூடாதுலே புரிஞ்சதா.”


“புரியுது ஆயி... அப்போ நான் வயலுக்கு புறப்படுறேன் ஆயி.”

“ம்ம்..சரி.. நம்ம மக்களுக்கு இன்னைக்கு நம்ம இடத்துல தான் பொழுது சாப்பாடு சொல்லிடு.. அவ, அவ வீட்டுல இருக்கு குழந்தையையும் கூப்பிட்டு வரசொல்லிரு தர்மா”


“சரிங்க ஆயோ” அவன் சென்றுவிட்டான் ஒரு தெரு தாண்டி, அந்த அளவிற்க்கு அவனுக்கு கேட்பது போல பேசினார் அந்த வீட்டின் ராணி வீரலட்சுமி.


”உங்க மகனை எங்கன ஆளவே காணோம்.. துரை இன்னும் தூங்கிட்டு இருக்காரோ.. பெரியவன் எப்படி விடியுறதுக்கு முன்னே தோப்புக்கு போனான். இளைய துரைக்கு பொழுது விடிஞ்சு இன்னும் உறக்கம் போகலையோ.”


“அது சரி, பெரியவன் உங்க பிள்ளையாம், சின்னவன் என் பிள்ளையா.. நல்ல இருக்கே... இரண்டையும் பெத்தது நாம தான் அதை நியாபகம் வச்சுகோங்க. அவன் நேத்து முழுசும் பரிட்சைக்கு பட்ச்சுட்டு தாமசா தான் தூங்குச்சு.”


“இப்படியே நீ அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வை உருப்பட்டுருவான் அவன்.”


“நீங்க முதல்ல சாப்பிட்டு தோப்புக்கு போங்க, கருக்காலையில பெரியவன் போனான், பச்ச தண்ணி கூட அவன் குடிக்காம தோப்புல தேங்காய் வெட்டுறாங்கனு போன் வந்ததும் கிளம்பி போனவன் இன்னும் வரலை. நீங்க போயிட்டு அவனை அனுப்பி வையுங்க.”


“சரித்தா.. பிள்ளை சாப்பிடாம போனதும் ஆத்தாளுக்கு மனசு வலிக்குது. இதே நான் சாப்பிடாம இருந்தா, கண்டுக்ககூட மாட்டீங்களே.” மனைவி பெரியவன் மீது வைத்துள்ள பாசத்தில் அவர் பொறாமையின்றி பேச.


“ம்க்கும்.. அப்படியே ஐயா கவனிச்சு, சாப்பாடு போட்டாம இருந்தேனாக்கும். நான் உங்களுக்கு பரிமாறுப்போல்லாம் உங்க அம்மாயி வந்து என் பிள்ளைக்கு நாந்தேன் சோறு போடுவேனு.. இதுல ஐயாவ நாங்க கண்டுக்கலையாம்ல..” வீரலட்சுமி கழுத்தை நொடித்துகொண்டு சமையல் அறைக்கு சென்றார்.


”ஐயா காய் வெட்டியாச்சு.. எத்தனை காய்னு எண்ணிடலாமுங்களா. இல்லை உரிமையாளரு வரட்டுமாங்க ஐயா.” பரம்பரை பரம்பரையாக கணக்கு வழக்குகளை பார்க்கும் முத்துசாமி கேட்க.


“மாமா, அப்பா வந்திரட்டும் அவக என்ன சொல்லுறாங்கனு பார்த்துட்டு தேங்காய எண்ண ஆரம்பிக்கலாம். போன முறை மாதிரி அந்த உரிமையாளரு சரியான விலை சொல்லலைங்க மாமா. அதான் இந்த முறை அப்பாவுக்கு முன்னாடி தேங்காய் வெட்டுற இடத்துக்கு நான் வந்தேன்.” கர்ணன் சொன்னான்.


வீரபத்திரன் – வீரலட்சுமிக்கும் பிறந்த முதல் மகனான கர்ணன், இரண்டாவது மகன் நகுலன் கல்லூரி இறுதியாண்டு பயின்று வருகிறான். மதுரை நகரிலே அவர்கள் குடும்பம் பெரியது.


“சரி தானுங்க ஐயா..”


“மாமா, என்னை பேரு சொல்லி கூப்பிடுங்க.. அப்பாவுக்கு தான் உங்க மரியாதை எல்லாம். எத்தனை முறை நான் சொல்லுறது.”


“நீங்க நம்ம பெரியய்யாவோட அம்சம் அதனால உங்களை பேரு சொல்லி அழைக்குறது ரொம்ப தப்புங்க ஐயா. என்ன மாத்திக்க முடியதுங்க விடுங்க ஐயா.”


“உங்களை போங்க மாமா.. இதோ அப்பாரு வந்திட்டாரு.” பழகியவரை மாற்ற நினைத்தால் முடியுமா, அது போல் தான் அவன் மீதுகொண்ட மரியாதையும்.


“என்ன கர்ணா தேங்காய் எல்லாம் வெட்டியாச்சா.. எண்ணியாச்சா.”


“வெட்டியாச்சு ப்பா.. இன்னும் எண்ணலை.. உரிமையாளாருகிட்ட பேசனும், போன முறை தேங்காய் விலை இரண்டு ரூவா அதிகமா போச்சு அதை மறைச்சு நம்மகிட்ட ஐஞ்சு ரூவாக்கு வாங்கிருக்காரு. அதான் இந்த முறை என்ன விலையே அதுக்கேத்த மாதிரி நாம விலைக்கு கொடுக்கலாம் ப்பா.”


“ஏன் யா.. அவனே வயித்து பொழப்புக்கு தான் நம்மகிட்ட வியாபாரம் பண்ணுறான் இரண்டு ரூவா தானே விடு ய்யா.. அதை வைச்சு நாமா என்ன பண்ண போறோம்.. பத்தாததுக்கு தேங்கா மட்டை, நாறுனு நாம வேற சொந்தமா கயிறு திரிக்குரோம் அதில வராத வருமானமா இவன் கொள்ளையடிச்சுதுல வந்திர போது.” அவர் மற்றவர்களுக்கு தானமாக போகட்டும் என விட


 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹை மா உங்க ஸ்டோரி படிச்சேன்.

அப்படியே மதுரைக்குள் வாழும் பீல் ஆகுது.

உங்க மதுரை தமிழ் செம்மையா இருக்கு.

வாழ்த்துக்கள்.

இன்னொரு சிறந்த எழுத்தாளரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

ud தவறாமல் போடுங்கள் சகோதரி, அப்போதான் ரீடேர்ஸ் உங்களை பாலோவ் செய்வாங்க.

ud போடமுடியவில்லை என்றால் முன்னரே அறிவித்து விடுங்கள்.

கீழே இருக்கும் லிங்க் முகநூலில் நம்ம சைட் எழுத்தாளர்கள் தங்கள் அப்டேட் கொடுக்கும் குரூப்.அங்கேயும் ஒரு போஸ்ட் போடுங்க.

https://www.facebook.com/groups/smtamilnovels/?ref=bookmarks

எழுத்து உலகில் உங்கள் எழுத்துக்கள் மிளிர, இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் சகோதரி.

என்ன உதவி தேவையென்றால் கேளுங்க.

அன்புடன்
அனிதா ராஜ்குமார்.
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
ஹை மா உங்க ஸ்டோரி படிச்சேன்.

அப்படியே மதுரைக்குள் வாழும் பீல் ஆகுது.

உங்க மதுரை தமிழ் செம்மையா இருக்கு.

வாழ்த்துக்கள்.

இன்னொரு சிறந்த எழுத்தாளரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

ud தவறாமல் போடுங்கள் சகோதரி, அப்போதான் ரீடேர்ஸ் உங்களை பாலோவ் செய்வாங்க.

ud போடமுடியவில்லை என்றால் முன்னரே அறிவித்து விடுங்கள்.

கீழே இருக்கும் லிங்க் முகநூலில் நம்ம சைட் எழுத்தாளர்கள் தங்கள் அப்டேட் கொடுக்கும் குரூப்.அங்கேயும் ஒரு போஸ்ட் போடுங்க.

https://www.facebook.com/groups/smtamilnovels/?ref=bookmarks

எழுத்து உலகில் உங்கள் எழுத்துக்கள் மிளிர, இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் சகோதரி.

என்ன உதவி தேவையென்றால் கேளுங்க.

அன்புடன்
அனிதா ராஜ்குமார்.

oo thank you ani..

kandippa na ud weekly potturen...

ok ani...

thank you are info me

i am happy u r feedback
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?. அருமையான மதுரை தமிழ் :love::love:.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top