Latest Episode AP 3 promo

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
"இது எப்படி சாத்தியம்? இல்லை! இப்படி இருக்க கூடாது!" என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டு இருந்தாள் பிரியங்கா தேவி.

இந்த பதினைந்து வருடத்தில் அவள் மறக்க வேண்டும் என்று நினைத்த முகம், இப்பொழுது கன் முன்னே தோன்றி நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன் பார், என்று அவளுக்கு காட்சி கொடுக்கவும் அவளுக்குள் ஒரு பூகம்பம் வெடித்து கிளம்பியது.

இத்தனை நாட்கள் எதற்காக காத்து இருந்தோம் என்பது புரிய, இனி அதற்கான வேளைகளில் இறங்க தொடங்கினாள். இனி அவளின் செயல்கள் எல்லாம், நரியை வேட்டையாட போகும் பெண் புலியாக இருக்க போகிறது.
†*****************†***************†******************************

“என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க? அங்கிள் கொஞ்ச நாளைக்கு உங்களை அவ கண் முன்னாடி போகாதீங்க அப்படினு வார்ன் பண்ணி இருந்தேன் தானே”.

“உங்க பையன் சொன்னானு, நீங்க ஆண்டியை வேற கூட கூட்டிட்டு போய் இருக்கீங்க. இனி அவ சும்மா இருப்பா அப்படினு எனக்கு தோணல, நிச்சயம் அவ அந்த கேஸ் திரும்ப எடுத்து நோண்ட போறா, கூண்டோட எல்லோரும் மாட்ட போறோம்” என்று கத்திக் கொண்டு இருந்தாள் அனு.

“எனக்கு அப்போ இருந்த கோபத்தில், போய் நாலு கேள்வி கேட்கணும் அப்படினு தோணுச்சு மா, அதான் போனேன். நீ சொன்ன மாதிரி கேஸ் எடுத்து அவ நோண்ட ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு”.

“அப்படியே அதை எடுக்கணும் நினைச்சு இருந்தா, அவ அதை போலீஸ்ல சேர்ந்த உடனே அதை எடுத்து இருப்பா” என்று வாதிட்டார் சக்தியின் தந்தை.

“ஹா ஹா ! நான் பிளான் பண்ண மாதிரியே அவ கேஸ் எடுத்துட்டா. இனி அவளை வச்சே நான் கேம் விளையாட போறேன், அந்த குள்ளநரி யாருன்னு கண்டுபிடிக்க” என்று சக்தி விஷம சிரிப்பு சிரித்தான்.

“டேய்! நீ அவளை பலியாடு மாதிரி அப்போ உபயோகப்படுத்திக் கொண்டு இருக்குறியா? டேய்! வேண்டாம் டா, அந்த பொண்ணு பாவம் உன் ஆட்டத்துக்கு நீ அவளை இழுத்து விடாத டா இதுல” என்று எச்சரித்தான் ராமன், அவனின் வலது கை, நண்பன் என்று இருமுகம் அவனுக்கு.

“ஹ்ம்ம்! நான் அவளை இதுல இழுத்து விட்டதே, என்னோட பழைய கணக்கு ஒன்னு அவ கிட்ட தீர்துக்க வேண்டி இருக்கு, அதுக்கு தான் இந்த மாஸ்டர் பிளான் எல்லாம்” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.

நண்பனிடம், தன்னுடைய இராட்சத முகத்தை காட்டியவன் அறியவில்லை, அவன் கட்டி இருப்பதும் அவனை போன்ற ஒரு ராட்சசி தான் என்று..


 

Sponsored

Advertisements

Top