• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 47: Moongil poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
மூங்கில் பூ ...:

ஸ்வேதாவின் பிரச்சனை ஒரு வழியாக சரியாகி விட்டது. அவளது மாமனார் மாமியார் இருவருமே பிசினஸ் செய்வதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள். அது மட்டுமல்ல காது குத்து விழாவுக்குப் போய் விட்டு வருவதாகவும் பிறகு ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் குடும்பத்தோடு சேலம் கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவதாகவும் ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்வேதா சனிக்கிழமைகளில் வேலைக்கு வரத்தேவையில்லை என்றும் மாலை நேரங்களில் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என்றும் சொல்லி விட்டனர். ஸ்வேதா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள். உதயாவுக்கும் இதில் மகிழ்ச்சியே. இனிமேல் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வேலையைப் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டாள்.

அர்ச்சனா வீட்டு வேலையும் வளர்ந்து கொண்டே இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் ரூஃப் போட்டு விட வேண்டும். அதே போல சிவ சாமி சாரின் அலுவக்லகமும் தயாராகி வந்தது. தரை தள வேலைகள் முடிந்து இனி முதல் தளத்தில் கான்ஃபெரன்ஸ் ஹால் வேலையை ஆரம்பிக்க வேண்டும். எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் இரு வேலைகளையும் முடித்து விடலாம் என திட்டமிட்டுக்கொண்டார்கள். அன்று வந்து மனோகர் கத்தி விட்டுப் போனதிலிருந்து அவனால் எந்தத்தொந்தரவும் இல்லை. அதனால் அப்பாடா என பெருமூச்சு விட்டார்கள்.

இன்னும் ஐந்து நாட்களுக்கு ஸ்வேதா வர மாட்டாள். அவர்கள் காது குத்து விழாவுக்குப் போகிறார்கள். அதனால் உதயா தனியாக நின்று எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டாள். அர்ச்சனாவும் அவள் கணவனும் அவ்வப்போது வந்து வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அதில் திருப்தி எனத் தெரிந்தது. அவர்களது நண்பர்கள் சிலர் வந்து வீட்டைப் பார்த்து விட்டு உதயாவை பிறகு வந்து தன்னைப் பார்க்குமாறு சொல்ல மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் உதயா. எப்படியும் தனக்கு வேலை கிடத்துக்கொண்டே தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்து விட்டது. சிறியதோ பெரியதோ அதனை செம்மையாக முடிக்க வேண்டும் அதுவே தனது கம்பெனியின் நோக்கம் என அனைவரிடமும் சொன்னதற்கு நல்ல பலன் இருந்தது.

அன்று அர்க்சனாவின் வீட்டிலிருந்து சிவா சாரின் சைட்டுக்குத் திரும்பி வந்தாள். உமாவும் அவளது கணவனும் நின்றிருந்தார்கள்.

"என்ன செல்வா? பகல்லயே ட்யூட்டிக்கு வந்துட்டீங்க?" என்றாள்.

"வந்து மேடம்! எனக்கு ஒரு நாலு நாளைக்கு லீவு வேணும். எங்க சித்தி மகளுக்கு நிச்சயதார்த்தம். நான் கோயம்புத்தூர் போயிட்டு ரெண்டே நாள்ல வந்திருவேன். அதான் லீவு கேட்டேன்" என்றான்.

"என்ன செல்வா இது? நைட் வாட்ச்மேன் வேலைக்கு எடுக்கும் போது லீவு கேக்கக் கூடதுன்னு சொல்லித்தானே சேர்ந்த்தேன்? இப்ப இப்படி லீவு கேக்குறியே?"

"தப்பு தான் மேடம்! ஆனா இப்ப நம்ம இருப்புல சிமிண்டு மூட்டைகளே இல்ல! இன்னும் ரெண்டு நாள்ல நாம காங்கிரீட் வேலை தான் ஆரம்பிக்கப் போறோம். அதுக்கு ரெடிமேட் கலவை தானே யூஸ் பண்ணப் போறோம்? அது தான் தைரியமா லீவு கேட்டேன் மேடம். "

"ஏம்மா நீயும் போகப் போறியா? அப்ப நாங்க சாப்பாட்டுக்கு என்ன செய்ய?" என்றாள் உதயா எரிச்சலுடன்.

"நீங்க லீவு குடுத்த போயிட்டு வரலாம்னு தான் இருக்கோம் மேடம். சாப்பாடு பத்திக் கவலைப் படாதீங்க! ஜெயா எல்லாமே செஞ்சு தரேன்னு சொல்லிட்டா"

"யாரு நம்ம ஜெயாவா?"

"ஆமாங்க மேடம்! இப்ப காங்கிரீட் போடுற வேலை முடிஞ்சதுன்னா யாருக்கும் அவ்வளவா வேலை இருக்காதுங்களே? வெறுமே தண்ணி கொட்டுற வேலை தானுங்களே! அதனால ஜெயா சமையல் செய்யுறேன்னு சொல்லிப்போட்டாங்க" என்றாள் உமா.

"எல்லாத்தையும் நீங்களே முடிவு செஞ்சிக்கிட்டு வந்து எங்கிட்ட சொல்லுங்க! சரி சரி போயிட்டு நாலு நாள்ல கரெக்டா வந்துரணும் அதுக்கு மேல அங்கிருந்து ஃபோன் பண்ணி லீவு கேக்கக் கூடாது என்ன?" என்றாள் கண்டிப்பாக.

"நிச்சயமா மேடம்! இதை விட்ட அப்புறம் நாங்க போகவே முடியாது மேடம்! அதான் " என்று சொல்லி விட்டு டீயைக் கொடுத்து விட்டு புறப்பட்டாள் உமா. அன்று மதியமே புறப்படுவார்கள் எனத் தெரிந்தது.

வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஏனோ தெரியவில்லை சமீப காலமாக மனது அமைதியாகவே இல்லை உதயாவுக்கு. தனது நிலை என்ன ஆகும்? ரவியுடன் தனக்குக் கல்யாணம் நடக்குமா? அவன் இன்னமும் கோபத்தில் தான் இருக்கிறானா என எதுவும் தெரியவில்லை. அவனது வீட்டில் ஏதோ ஒரு சில பெண்கள் ஃபோட்டோவைக் காட்டியதாகவும் தெரிய வந்தது அம்மா மூலம். ஆனால் அவன் அதற்கு என்ன பதில் சொன்னான் எனத் தெரியவில்லை. காவ்யவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பிரசவம் ஆகி விடும் என்று சொல்லி விட்டார்கள். அக்காவுடன் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் சேர்ந்து கொண்டது அவளுக்கு.

அம்மா மீண்டும் அழைத்தாள் வீட்டுக்கு. இப்போது தான் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்ப்டும் நிலையில் இருக்கிறதே? இப்போது கல்யாணம் செய்து கொண்டால் என்ன என்று கேட்டாள். ஆனால் ஏனோ மறுத்து விட்டாள் உதயா. அதனை நினைத்துத் தான் செய்தது தவறோ என்று எண்ணி ஏங்கினாள். பாட்டியிடம் கூட இதைப் பற்றிப் பேச வெட்கமாக இருந்தது அவளுக்கு. பாட்டியும் எதுவும் கேட்கவில்லை. அரசியல், சினிமா என பொதுவான விஷயங்களைப் பற்றித்தான் பேசினார்கள். அன்று டீயைக் குடித்து விட்டு அமர்ந்திருந்த உதாயவுக்கு ரவியோடு பேசினால் என்ன என்று தோன்றியது. அவனிடமே கேட்டு விடலாம் என எண்ணிக்கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஃபோனைப் போட்டாள். முழு ரிங்கும் போய்க் கட்டானது. தன் மேல் கோபம் இன்னமும் குறையவில்லை ஆகையால் எடுக்க மாட்டான் என நினைத்த போது அவனே அழைத்தான்.

"என்ன அதிசயமா எனக்கு ஃபோன் பண்ற? வேலை எதுவும் இல்லியா?" என்றான். அவனது குத்தல் புரிந்தது.

"நீ எப்படி இருக்கே ரவி?"

"எனக்கென்ன? நான் நல்லாத்தான் இருக்கேன்! நீயும் நல்லாத்தான் இருக்கேன்னு உங்கம்மா சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப எதுக்கு ஃபோன் பண்ணின?"

"பேசி ரொம்ப நாளாச்சேன்னு தான் கூப்பிட்டேன்."

"அடேயப்பா அந்த மாதிரியெல்லாம் உனக்குத் தோணுமா? பரவாயில்லையே? நீ பெரிய பிசினஸ் புள்ளியாச்சே என்னை மாதிரி இருக்கறவங்களோட பேசுவியா நீ?"

"ரொம்பக் குத்தாதே ரவி! நீ தான் என் மேல கோவிச்சுக்கிட்டுப் போன! உன்னால தான் எங்கப்பா என்னை வீட்டை விட்டு போகச் சொல்லிட்டாரு. நல்ல வேளை எங்க பாட்டி வந்தாங்க! இல்லைன்னா என்ன ஆகியிருக்குமோ? இதுக்கெல்லாம் நான் தான் உன் மேல கோவிச்சுக்கணும். ஆனா நீ என்னவோ இப்படிப் பேசுற"

"சரி இப்ப என்ன?"

"உனக்கு பொண்ணு பாக்கறாங்களாமே?"

"ஓ! உங்கம்மா சொன்னாங்களோ? அதான் இந்த ஃபோனா? ஆமா எங்கம்மா எனக்குப் போண்ணு பார்க்கறாங்க தான். வயசுப் பசங்க வீட்டுல இருந்தா பெற்றோர்கள் கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைக்குறது சகஜம் தானே?"

மூச்சுத்திணறியது உத்யாவுக்கு. மெல்லக் கேட்டாள் "அதுக்கு நீ என்ன சொன்ன?"

"உன்னைக் கேட்டேன் நீ இப்ப முடியாது இன்னும் ரெண்டு வருஷம்னு சொல்லிட்ட! எங்கம்மா பார்த்தாங்க அதான் நிறையப் பொண்ணுங்க ஃபோட்டோவைக் காமிச்சாங்க!"

"அதுக்கு நீ என்ன சொன்ன?" என்றாள் மீண்டும் மனதில் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையோடு.

"நான் எங்கம்மா சொல்லுக்குக் கட்டுப்பட்டவன். அப்பா அம்மாவை மீறாத பையன் நான். அதனால சரின்னு சொல்லிட்டேன். நாளைக்கு சாயங்காலம் கூட ஒரு பொண்ணைப் பார்க்க அடையாறு போறோம். பொண்ணு டாக்டருக்குப் படிச்சிருக்கு. வீட்டுலயே எங்கப்பா கிளினிக் கட்டிக்கொடுக்கறேன்னு சொல்லிட்டாரு. அநேகமா இந்த இடம் முடிஞ்சிரும்னு நினைக்கறேன்." என்றான்.

அதற்கு மேல் பேச அவளால் முடியவில்லை. டக்கென ஃபோனை வைத்தாள்.

மனதில் இருட்டு படர்ந்தது. கண்களில் நீர் கூட வரவில்லை. எல்லாமே வெறுமையானதாக தோன்றியது.

"இப்போது நான் என்ன சாதித்து விட்டேன்? சொந்தமாக இரு கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறேன். தொழிலைப் பொறுத்தவரை நான் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறேன். மேலும் இரு ஆர்டர்கள் கையில் கிடைக்கும் நிலை. ஆனா என் சொந்த வாழ்க்கை? ஸ்வேதாவுக்கு ஒரு வழி பிறந்து விட்டது. அவள் புகுந்த வீட்டோடு மிகவும் சந்தோசமாக இருக்கிறாள் ஆனால் நான்? எனக்கு என்ன இருக்கிறது? அம்மா அப்பா வீட்டுக்கு வராதே என்று சொல்லி விட்டார்கள். காவ்யாவுக்கு குழந்தைப் பிறப்பிற்குக் கூட என்னால எதுவும் உதவி செய்ய முடியாத நிலை. பாட்டி மாத்திரமே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு உடல் நிலை கொஞ்சம் முடியாமல் தான் இருக்கிறது. பாட்டி காலத்துக்குப் பிறகு எனக்கு என்ன ஆகும்? தனி மரமாக நிற்க வேண்டுமா? சிறந்த தொழிலதிபர் ஆனால் தனி மரம். மற்றவர்கள் குழந்தை குடும்பம் என இருக்க நான் மட்டும் கருகிய வாழ்க்கையோடு இருக்க வேண்டுமா?" என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை வேணி வந்து உலுக்கிய போது தான் விழித்துக்கொண்டாள். வெளியில் இருட்டி இருந்தது.

"என்ன மேடம்? என்ன யோசனையில இருக்கீங்க? வேலை முடிஞ்சு எல்லாரும் போயிட்டாங்களே? நீங்க மட்டும் தனியா என்ன செய்யுறீங்க? உங்க கிட்ட ஏதோ பேசணும்னு கந்தசாமி அப்ப இருந்து உங்களைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு. நீங்க கவனிக்கவே இல்லையே? நான் தொட்டு உலுக்குனப்புறம் தான் பார்த்தீங்க? உடம்புக்கு என்ன செய்யுது?" என்றாள் அக்கறையுடன்.

"ஒண்ணுமில்ல வேணி! ஏதோ யோசனை! அதோட தலைவலி வேற! அதான். போயிக் கொஞ்சம் சூடா டீ வாங்கிட்டு வரீங்களா? நான் கந்தசாமி கூடப் பேசிடுறேன்" என்றாள். அவ்வாறே கசை வாங்கிக்கொண்டு சென்றாள் வேணி. கந்த சாமி அருகில் வந்தான்.

"என்ன உங்களுக்கும் லீவு வேணுமா?" என்றாள் எரிச்சலோடு.

"இல்ல மேடம்! நான் வந்தது நாம ரூஃப் போடுற விஷயமா தான்"

"உம் சொல்லுங்க"

"நாம ரெடிமேட் கலவை போடறதுக்கு கம்பெனியில் சொல்லிட்டீங்க! கொஞ்ச நேரத்துக்கு முன்னால அந்த லாரி டிரைவர் பேசுனாரு மேடம்! கிட்டத்தட்ட 2500 சதுர அடிக்கு கலவை போடணும். அதனால லாரி பெருசா இருக்குமாம். பகல்ல எந்த லாரியும் சென்னைக்குள்ள வர முடியாது இல்ல? அதனால ராத்திரி 12 மணிக்கு மேல தான் அவங்க வருவாங்களாம். வந்து சேர எப்படியும் மணி ரெண்டு ஆயிரும்னாங்க!"

"ஏன் கொஞ்சம் முன்னாடியே கிளம்ப மாட்டாங்களாமா?"

"அவருக்கு டூட்டி 12 மணிக்குத்தான் ஆரம்பிக்குதாம் மேடம். அதுவும் போக கலவையைக் கொண்டு வர லாரியை வேகமா ஓட்ட முடியாதாம். ஏன்னா அந்தக் கலவை கெட்டியாகாம இருக்குறதுக்காக கண்டைனர் சுத்திக்கிட்டே இருக்குமாம். என்னைக்கு எடுத்துக்கிட்டு வரதுன்னு கேட்டாரு" என்றான்.

யோசித்தாள் உதயா. ஸ்வேதா வருவதற்கு எப்படியும் இன்னும் இரு தினங்கள் ஆகும். அது வரையில் ரூஃப் போடாமல் இருந்தால் நஷ்டம் கம்பெனிக்குத்தான். தொழிலாளர்களுக்கு சும்மா கூலி கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால் தனியாக நின்று என்னால் இதை கையாள முடியுமா? ஆமாம் வாழ்க்கை முழுவதும் தனி என்று முடிவாகி விட்டது. இதைத் தனியாக என்னால் செய்ய முடியாதா?' என்று முடிவு செய்து கொண்டாள்.

"நாளைக்கே கொண்டு வரச் சொல்லிருங்க கந்த சாமி! அவங்க வர நேரம் கண்டிப்பா நீங்க இருக்கணும். கூட வினோதையோ பெரிய பெருமாளையோ வெச்சுக்குங்க! "

"சரி மேடம்! நாளைக்கு நான் வேலை முடிஞ்சு போயிட்டு ஒரு மணி வாக்குல திரும்ப வந்துடுறேன். நீங்களும் அப்படியே செய்யுங்க" என்றான்.

"இல்லை வேண்டாம். வீட்டுக்குப் போயிட்டு நான் ஒரு 11 மணிக்கு வந்துடுறேன். ஒரு வேளை அவங்க சீக்கிரம் வந்தாலோ இல்லை இடம் தெரியாம எனக்கு ஃபோன் செஞ்சாலோ அவங்க கிட்டப் பேச வசதியாயிருக்கும். வீட்டுல எங்க பாட்டி தூக்கம் அஃபெக்ட் ஆகக் கூடாது பாருங்க" என்றாள்.

"செல்வ ராஜ் இருந்திருந்தா நல்லா இருக்கும். சரியான நேரத்துக்கு லீவுல போயிட்டான் அவன்" என்று திட்டினான் கந்தசாமி.

"சரி விடுங்க! தொழில்னு வந்தா இதையெல்லாம் பார்க்க முடியாது. நீங்க எதுக்கும் ஒரு மணிக்குள்ள வந்திருங்க!" என்று சொல்லி அவனை அனுப்பினாள். கலவை சப்ளை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் செய்து இஞ்சினியரை தொடர்பு கொண்டு நாளை இரவு கலவை வேண்டும் என ஆர்டர் கொடுத்தாள். எல்லா வேலைகளையும் முடிந்து கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினாள் உதயா.

இவை அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த ஜெகன் முகத்தில் வஞ்சகப் புன்னகை தோன்ற ராஜகோபாலுக்கு ஃபோன் செய்ய முனைந்தான்.
 
Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Udhaya than vazhalkkai patri yosikkama aarambithuvital.. Idharkaga than udi appa veetai vitu anupinaro?? Jegan um rajagopal um enna plan seikirargalo..
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
இவை அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த ஜெகன் முகத்தில் வஞ்சகப் புன்னகை தோன்ற ராஜகோபாலுக்கு ஃபோன் செய்ய முனைந்தான்.
enna panna poran jegan:unsure::unsure::unsure::unsure:paavam udhaya night watchman koota illai
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

பாவம் உதி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top