• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 48: sarracenia poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
சரசீனியா பூ:

ஃபோனில் விஷயத்தைக் கேட்ட ராஜகோபால் மனோகரையும் ஜெகனையும் வழக்கமாக வரும் பாருக்கு வரச் சொல்லி விட்டார். ஒரு கொண்டாட்டமான மன நிலையோடு கூடியிருந்தனர் மூவரும்.

"ஏன் ஜெகன் நீ சொன்னது உண்மையா? நாளைக்கு ராத்திரி அவ தனியா சைட்டுல இருக்கப் போறாளா? எத்தனை மணிக்கு?"

"நாளைக்கு அந்த சைட்டுல ரூஃப் போடப் போறாங்க! கலவை ரெடிமேடா வாங்கப் போறாங்க. அந்த லாரி ராத்திரி ரெண்டு மணிக்கு மேல தான் வரும். ஆனா உதயா பதினோரு மணிக்கே சைட்டு வந்திருவேன்னு சொன்னதை என் காதால கேட்டேன் சார்! அதான் உடனே ஃபோன் செஞ்சன்"

ஹா ஹா என சிரித்தார் ராஜகோபால்.

"அட் லாஸ்ட் ஐ கேன் ஹாவ் மை ரிவெஞ்!" என்று மேலும் விஸ்கியை உள்ளே தள்ளினார்.

"சார் என்ன சொல்றீங்க?"

"நான் அவளைப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சிருக்குன்னு சொன்னேன். ஆனா அந்த கந்த்சாமிப்பயலும் செல்வராஜும் இருப்பாங்களே? அவனுங்களை எப்படி ஆஃப் பண்ண? அவனுங்க என்னைப் பார்த்துட்டா டேஞ்சராயிருமே?" என்றார் வாய் நிறைய சிக்கனோடு.

"செல்வராஜி ஊருக்குப் போயிட்டான். வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகும். அந்த மேஸ்திரிப்பய வீட்டுக்குப் போயிட்டு ஒரு மணிக்கு வரேன்னு தான் சொல்லியிருக்கான். அதனால நாம கவனமா திட்டம் போட்டா அவளை ருசி பார்க்கலாம்"

தொடைகளைத் தட்டிக்கொண்டார் ராஜகோபால்.

"நினைச்சாலே எச்சி ஊறுதுடா! இது வரைக்கும் நான் யாரையும் கட்டாயப்படுத்தி உறவு வெச்சுக்கிட்டது இல்ல. இவ எப்படி இருக்கான்னு பார்த்துடுவோம். என்ன சொல்ற?"

"ஆமா சார்! எங்களுக்கும் சான்ஸ் உண்டு இல்ல?"

"உங்களுக்கு இல்லாமலா? ஆனா திட்டத்தை ரொம்ப கவனமாப் போடணும். நாம காரியத்தை முடிச்சப்புறம் அவ உயிரோட இருக்கக் கூடாது. ஏன்னா அப்படி அவ உயிரோட இருந்தா நமக்கு எதிரா சாட்சி சொல்லி அசிங்கப்படுத்திருவா! அதனால நாம எச்சரிக்கையா இருக்கணும். "

"ஆமா சார்! நீங்களே பிளான் சொல்லுங்க" என்றான் மனோகர்.

"நாளைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஒரு மணிக்குள்ள நாம காரியத்தை சாதிச்சாகணும். அந்த நேரத்துல நாம முகமூடி போட்டுக்கிட்டு சைட்டுக்குப் போவோம்"

"எதுக்கு முகமூடி?"

"ஒரு எச்சரிக்கை தான். குறுக்க பேசாம கேளு! நான் எனக்குத் தெரிஞ்ச ஃபார்மசியில சொல்லி மயக்க மருந்தை வாங்கிக்கறேன். அதை உள்ளே போனதுமே அவ முகத்துல ஸ்ப்ரே செஞ்சிருவோம். அப்பத்தான் அவ கத்தாம இருப்பா! "

"சூப்பர் மேல சொல்லுங்க!"

"மயக்க மருந்தை ஸ்ப்ரே பண்ணிட்டு அவளைக் கெடுத்துட்டு கொன்னுருவோம். ஆனா கொலை எப்படி செய்யன்னு தான் தெரியல்ல" என்றார்.

மனோகர் சிரித்தான்.

"அது ரொம்ப ஈசி சார்! எனக்குத் தெரிஞ்ச ஒரு போலி டாக்டர் இருக்காரு. அவரு கிட்ட காசைக் கொடுத்தாப் போதும் விஷ ஊசி குடுத்துருவாரு. அதை நாம அவளுக்குப் போட்டா போதும் அடுத்த ரெண்டே செகண்டுல ஆள் காலி. உடம்பை அறுத்துப் பார்த்தாக் கூட மாரடைப்புன்னு தான் தெரியும்ம். யாரோ வந்து கற்பழிச்ச அதிர்ச்சியில அவளுக்கு மாரடைப்பு வந்துரிச்சுன்னு சொல்லிருவாங்க" என்றான்.

"கைகளைத் தட்டிக்கொண்டார் ராஜகோபால்.

"சபாஷ் மனோகர்! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனா இன்னொரு முக்கிய விஷயத்தை நாம கவனத்துல வெச்சிக்கணும்."

"என்ன சார் அது?"

"நம்ம திட்டப்படி மனோகர் போயி கத்திட்டு வந்திருக்கான். அது தப்ப்போன்னு எனக்கு இப்பப் படுது. நேத்து நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அதுல இப்படித்தான் மூணு பேரு சேர்ந்து ஒரு கோலையை செய்துட்டு சாமர்த்தியமா தப்பிச்சிருவாங்க! அதை மாதிரி நாம செய்யணும். உதயாவை கொலை செய்யணும் அதே நேரம் நாம மாட்டவும் கூடாது"

"நான் தான் பழியை ஏத்துக்கறேன்னு சொல்லிட்டேனே சார்" என்றான் மனோகர்.

"போலீசை சாதாரணமா எடை போடதே மனோகர்! கிங்கரனுங்க அவனுங்க! நீ ஒத்துக்கிட்டா என்னையும் ஜெகனையும் கூட நெருங்கிருவாங்க! அதுக்கு நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். கேக்குறீங்களா?"

"சொல்லுங்க"

"நாம மூணு பேரும் அந்த நேரத்துல வேற எங்கியாவது இருந்தோம்னு நிரூபிச்சுட்டா நாம தப்பிச்சுரலாம்."

"அப்ப நாம மூணு பேரும் அந்த நேரத்துல வெளியூர் போயிருந்தா மாதிரி செட்டப் செஞ்சிரலாமா?" என்றான் ஜெகன்.

"இங்க தான் நாம மூளையை யூஸ் பண்ணணும். நாம மூணு பேரும் ஒண்ணாப் போனோம்னா அதையே கூட சந்தேகப்படுவாங்க! போலீசையும் மத்தவங்களையும் பொறுத்தவரை மனோகருக்கும் ஜெகனுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல! அதை நாம கெட்டியாப் பிடிக்கிரணும். அதனால நான் சொல்ற படி செய்யுங்க!"

"சொல்லுங்க சார்"

"நானு நாளைக்கு பத்து மணிக்கெல்லாம் சரியான தலைவலி காய்ச்சல்னு சொல்லி டாக்டர் கிட்டப் போயி ஊசி போட்டுக்கிட்டு எங்க வீட்டுல படுத்துடறேன். டாக்டர் ரசீது, மெடிக்கல் பில்லு இதை என் மனைவி கிட்டக் குடுத்துட்டு பெட்ரூமுக்குள்ள போயிடறேன். எங்க வீட்டுல நாலு பெட்ரூம் இருக்கு. அதுல ஒண்ணுல தான் நான் உடம்பு சரியில்லைன்னா தனியாப் படுப்பேன். அதுல தான் நாளைக்கு ராத்திரி படுக்கப் போறேன். ராத்திரி முழுக்க நான் அங்க தான் இருந்தேன்னு என் மனைவி சொல்லுவா போலீஸ் கிட்ட அப்படித் தேவைப்பட்டா" என்றார்.

"நீங்க தப்பிச்சுருவீங்க! நான் என்ன செய்ய?" என்றான் ஜெகன்.

"அதுக்கும் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். நீ என்ன பண்ற? உன் மனைவி குழந்தையைக் கூட்டிக்கிட்டு கூடுவாஞ்சேரியில இருக்குற யாராவது உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிரு. நாளைக்குக் காலையிலயே போயிரு. ராத்திரி எட்டு மணிக்கு தண்ணி போட்டா மாதிரி நடிச்சு வெளியில படுத்துக்க! அவங்க உன்னைக் கண்டுக்க மாட்டாங்க! ஒன்பது மணி வாக்குல எழுந்து டிரெயினைப் பிடிச்சு மாம்பலம் வந்துரு. அங்க இருந்து பஸ் பிடிச்சு உங்க வீட்டுக்குப் போயிரு. நான் வந்து உன்னை பதினோரு மணிக்கு பிக்கப் பண்ணிக்கறேன். இதுல என்ன கவனிக்கணும்னா நீ போற உறவுக்காரங்க வீட்டுல ஆம்பிளைங்க இருக்கக் கூடாது"

"ஆங்க்! எங்க அக்கா வீடு இருக்குது! ஆனா அது சிட்லபாக்கத்துல இல்ல இருக்கு"

"அது பராவாயில்ல! இப்ப மனோகர் தான் இன்னமும் கவனமா இருக்கணும். ஏன்னா முத சந்தேகம் அவன் மேல தான் வரும்"

"நான் சினிமா போனேன்னு சொல்லிடவா?"

"அது தான் நல்ல ஐடியா! நீ என்ன செய்யுற ஏதாவது படத்துக்கு கூடுமானவரை அது சைட்டுக்கு ரொம்ப தள்ளி இருக்கணும். அந்த தியேட்டர்ல நைட் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிக்க! ஆனா உனக்குப் பதிலா யாரையாவது அனுப்பு. படம் முடியவே 12 ஆயிரும். அப்புறம் பஸ் பிடிச்சு நீ வரதுக்கு ரொம்ப லேட்டாயிரும். அதனால நீ தப்பிச்சுக்கலாம். ஆனா உனக்கு பதிலா சினிமா பார்க்கப் போறவனுக்கு இந்தத் திட்டம் தெரியவே கூடாது"

"நல்ல ஐடியா சார்! என் தம்பி கீறான். அவனுக்கு புத்தி சரி கிடையாது. ஆனா சினிமான்னா அப்படிப் பார்ப்பான். அவனை அனுப்பிடுறேன். நானும் கூடப் போறா மாதிரிப் போயி படத்துல உக்காந்த்துக்கினு படம் ஆரம்பிச்சதுமே வந்திடுறேன். படம் முடிஞ்சதும் அவனா வீட்டுக்கு வந்திருவான் . அப்படியே வராட்டாலும் காலையில போயி நான் இட்டுக்கினு வந்துருவேன். அவன் லூசுன்றதால ஏதாவது சொல்லி சமாளிச்சுப்பேன்."

"சூப்பர் மனோகர். நீ ராத்திரியே போய் உன் தம்பியைக் கூட்டிக்கிட்டு வந்துரு. அவனைத் தேடி அலைஞ்சதா அவன் கிட்ட சொல்லு! அதை அவனை நம்ப வையி அப்படீன்னா நாளைக்கே போலீஸ் அவனை விசாரிச்சாக்கூட உன் மேல சந்தேகம் வராது. சம்பவம் நடந்த நேரத்துல நீ சினிமாவுல இருந்தே அதுக்கப்புறம் உன் தம்பியைக் கூட்டத்துல தேடிக்கிட்டு இருந்தேன்னு சொல்லிக்கலாம்" என்றார்.

"ஆமா சார்! என் தம்பியையும் அதையே சொல்லச் சொல்லுவோம். அப்ப போலீஸ் நம்பிருவாங்க! ஏன்னா என் தம்பிக்குத்தான் பொய்யே சொல்லத்தெரியாதே? அவன் தான் லூசாச்சே?" என்றான் சிரிப்புடன்.

விஸ்கி கோப்பையை உயர்த்தி சிரித்தனர் மூவரும். நாளை இரவு பதினொரு மணி வாக்கில் கூடுவதாக முடிவு செய்து கொண்டு பிரிந்தார்கள். இது எதுவும் தெரியாத உதயா வழக்கம் போல பாட்டியின் அருகே உறங்கிக் கொண்டிருந்தாள்.
 
Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Acho
Ena idhu ivanuga lam manusanga dhana????
Oru ponnu munera nenachadhuku ipdiya???
Udhaya epdiyachum thappichidanime kadavuleee..
 
Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Ivanunga ellam nalla vazhila yosicha engayo poiduvanga.. Ana oru ponna nasamakka epadi ellam yosikkaranga.. Ada kadavule..
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
intha moonu kulla nariyum urupadiyana yosanai panna mattangala ........ udhaya eppidi ivanga kitta irunthu thappa poral
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

உதயாவிற்கு எதுவும் நடக்குமா
ரவி காப்பாற்றுவனா
 
Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
ஒரு பெண்னை வீழ்த்த இப்படி ரவுண்டு கட்டி யோசிக்கிறானுங்களே இவனுங்களுக்கு துபாய் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் என்ன?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top