• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே!
வீரா சாரதியின் பயணம் முடிவை நோக்கி... இன்னும் எத்தனை பதிவுகள் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. ஆனால் விரைவில்... வர போகும் பதிவுகள் சற்று கனமாக இருக்கும். இதுவரை உங்களின் துணையோடு இந்த கதையை வெற்றிகரமாக எழுதிவிட்டேன். இனிவரும் பதிவுகளுக்கும் அதே அளவுக்காய் கருத்தையும் ஊக்கத்தையும் தருவீர்களாக.


இதோ உங்களின் பதிவு...

************************----******************
கார் போஸ்ட்கம்பத்தில் இடித்துப் பெரும் சத்தம் எழ, சாரதியுமே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் ஒருவாறு சுதாரித்துக் கொண்டுவிட,

அவன் பார்வை அந்த நொடி வீராவின் நலனைப் பற்றி எண்ணி பதட்டத்தோடு அவள் புறம் திரும்பியது.

அவளோ இடித்த வேகத்தில் ஸ்டியரிங்கில் தலை முட்டி சாய்ந்துக் கிடந்தாள். அவன் பதட்டத்தோடு அவள் தலையை நிமிர்த்த... அவளோ நெற்றியில் குருதி வடிந்த வண்ணம் மயக்க நிலையில் கிடந்தாள்.

அவன் துரிதமாய் செயல்பட்டு அவளைப்
பின் இருக்கையில் கிடத்திவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

சில நிமிடங்களில் அவள் மயக்கம் தெளிந்தது. இருப்பினும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஏதோ சொல்லவொண்ணா தவிப்பும் வேதனையும் அவள் முகத்தில் குடியிருக்க, அதனை அவன் விழிகளும் கவனிக்கலாயின.

இருவரும் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு திரும்ப.... அவளோ கனத்த மௌனத்தை சுமந்துக் கொண்டே அவனுடன் வந்தாள். அவனும் அவள் மௌனத்தைக் கலைக்க முற்படவில்லை.

வீட்டை அடைந்ததும் அவள் காயத்தைப் பார்த்து அவள் தங்கைகளும் தெய்வானையும் பதற, அவர்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லித் தேற்றியவள்... பின் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை கூட தெய்வானை கட்டாயப்படுத்திய ஓரே காரணத்தால் விருப்பமே இல்லாமல் கொஞ்சமாய் உண்டாள்.

சாரதி தள்ளி நின்று அவள் மனநிலையை ஆராய்ந்தானே ஒழிய... நடந்தேறிய விஷயம் குறித்து எந்தவித விளக்கமும் அவளிடம் கேட்கவில்லை.

ஆனால் அவளிடம் அது பற்றிப் பேச எண்ணியவன் தன் அறைக்குள் நுழைய... அவளோ படுக்கையில் விழிமூடி படுத்திருந்தாள். அவள் உறங்கிவிட்டாளா என்று எண்ணும் பொழுதே அவள் விழிகள் மூடியவாறே கண்ணீரை சுரந்து கொண்டிருந்தன.

"வீரா" என்றவன் அழைக்கவும் அவள் வேகமாய் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுவிட,

"என்னாச்சு டி?" என்றவன் அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு கேட்க, "ஒண்ணும் இல்லையே" என்று அவள் பதிலளித்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவள் எதையோ மறைக்க முற்படுகிறாள் என்பது அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.

அவன் அவசரமாய் அவளைத் தன் புறம் திருப்பி, "என்னடி பிரச்சனை?! சொல்லுடி" என்று அவன் படபடப்போடு கேட்க, அவள் உள்ளம் என்னமோ அவனிடம் சொல்லிவிடத்தான் தவித்தது. ஆனால் என்ன செய்ய? அவளுக்கு அந்த விஷயத்தை அவனிடம் சொல்லதான் துணிவு வரவில்லை.

அவள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதை அவள் முகபாவனைகள் கொண்டே கணித்தவன்,

"உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லக் கூடாதா?" என்றவன் அவள் தாடையை நிமிர்த்தி அவள் முகத்தை ஆழமாய் ஊடுருவிப் பார்க்க, அவள் மனம் கலவரப்பட்டது.

அவன் பார்வையில் சிக்குண்டவள் தன்னை அறியாமல் சொல்லி விட வாய்திறந்து பின் அது ஏனோ முடியாமல் அவன் அணைப்பிலிருந்து விலகி வந்தாள்.

"வீரா... ப்ளீஸ் சொல்லு" என்று அவன் அவள் தோள் மீது கரம் பதிக்க, அவள் இப்போது கோபமாகி, "என்ன சொல்லணும்... சொல்றதுக்கெல்லாம் எதுவுமில்லை" என்று கடினமான குரலோடு உரைத்தாள்.

"சரி... சொல்ல வேண்டாம்... ஆனா அங்க உன் பேரைக் கூப்பிட்டவர் யாருன்னு சொல்லு... நான் தெரிஞ்சுக்கணும்" என்றவன் அழுத்தமாய்க் கேட்க, அவள் அதிர்ந்து மௌனமானாள். அவன் மீண்டும்,

"யாரு அது வீரா?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க,

"எனக்குத் தெரியாது" என்று சொல்லி விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறிவிட அவள் எத்தனிக்க... அவன் பாய்ந்து வந்து அவள் கரத்தை பிடித்துத் தடுத்துவிட்டான்.

இயலாமையோடு, "விடுய்யா கையை" என்றவள் தவிப்புற, "முடியாது... சொல்லிட்டுப் போ" என்றான்.

"என்னைப் போட்டு படுத்தாதய்யா... எனக்கு அந்த ஆள பத்தி பேச இல்ல... நினைக்க கூட வேணாம்" என்றவள் விழிகள் கனலை கக்கிய அதே நேரம் நீரை ஊற்றாகப் பெருக்கியது.

அவள் ஏதோ ஆழமாய் காயப்பட்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அதன் பின் இன்னும் தீர்க்கமாய் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு, "அப்படி என்னடி பிரச்சனை அவருக்கும் உனக்கும்... இப்ப நான் தெரிஞ்சுகிட்டே ஆகணும்... நீயா சொல்றியா இல்ல நானே விசாரிச்சிக்கவா?!" என்றவன் அழுத்தமாய் வினவ,

அவளோ கண்ணீர் உறைந்த நிலையில் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்தாள்.

"நீ எதையோ நினைச்சு இந்தளவுக்கு வேதனை படுறன்னா... ஸாரி வீரா..அதை என்னால அப்படியே விட முடியாது... இன்னைக்கு நான் உனக்கிட்ட பார்த்த பதட்டத்தையும் பயத்தையும் வேற என்னைக்கும் பார்த்ததே இல்ல... உனக்கு மட்டும் எதாவது ஆயிருந்தா... சத்தியமா நான் என்ன ஆயிருப்பேன்னு... எனக்கே தெரியல" என்று அழுத்தமாய் கண்ணீர் நிரம்பிய விழிகளோடு அவன் சொல்லி முடிக்கும் போதே அவள் தேகம் சிலிர்த்தது.

அவனை இமைக்காமல் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், "உனக்கு அந்த ஆள் யாருன்னு தெரியனும்... அவ்வளவுதானே?!" என்று விரக்தியான பார்வையோடு கேட்க அவனோ பதில் பேசாமல் தீர்க்கமான பார்வையோடு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.

அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "என்னை எங்க அம்மா... அந்த... ப்ப்ப்பன்னாடைக்குத் தான் பெத்துப் போட்டா" என்றவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

அவன் அதிர்வோடு, "அப்போ... அவர் உங்க அப்பாவா?!" என்றான்.

அவள் தன் செவிகளை இறுக மூடிக் கொண்டு, "அந்த பரதேசிய போய் எனக்கு அப்பன்னு சொல்லாத... செத்துரலாம் போல இருக்கு" என்றவள் சத்தமிட்டுக் கத்திவிட, அவனுக்கு சில நொடிகள் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை.

அவன் மெலிதாக, "அவர் குடிப்பாரு... அதனால உனக்கு அவரை பிடிக்காதுன்னு தங்கச்சிங்க ஒருதடவை சொன்னாங்க... ஆனா நீ டென்ஷனாகுறத பார்த்தா" என்றவன் நிறுத்திவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.

"ஆமா குடிகாரன்தான்... குடிச்சி குடிச்சி எங்க அம்மா வாழ்க்கையை நாசம் பண்ணதோட இல்லாம.... அந்த ஆளு சே! சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்று ஆக்ரோஷமாய் உரைத்தவள் பட்டென நிறுத்தி அவனைப் பார்த்து,

"அந்த பொறுக்கி குடிபோதைல ஒருநாள் தூங்கிட்டிருந்த என்கிட்ட தப்பா... நடந்துக்க பார்த்தான்" என்றவள் சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் சொன்னதை கேட்டு திடுக்கிட்டவன் அவள் அழுகையை பார்த்துப் பொறுக்க முடியமால் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

வார்த்தைகளால் அவளுக்கு தேறுதல் சொல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அவள் வேதனையை வாங்கி கொள்ள முடியாவிட்டாலும் அதனை தாங்கிக் கொள்ளவாவது முடியுமா என்ற தவிப்பு அவனுக்கு!

மௌனமாய் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். மென்மையாய் அதே நேரத்தில் அழுத்தமாய் இருந்த அவன் அணைப்பில் மெழுகு போல் இறுகியிருந்த அவள் உணர்வுகள் நெருப்பிலிட்டது போல் உருகிக் கண்ணீராய் கரைந்தோடிக் கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

அழுது அழுது ஓய்ந்தவள் சில மணித்துளிகளில் மனபாரம் லேசாக அவன் தோளிலேயே உறங்கியும் போனாள்.

******​
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பனியை விலக்கிக் கொண்டு ஆதவன் தன் ஆதிக்கத்தை பூமியின் மீது செலுத்த தொடங்கியிருக்க,

அதனை உணர்ந்து வீராவின் மனம் விழிப்படைந்தாலும் அவளால் தம் விழிகளை திறக்க முடியவில்லை. வெகுநேரம் உறங்கிவிட்டது போல் ஓர் இறுக்கமான உணர்வு! தலை பாரமாய் விண்விண்ணென்று வலிக்க நேற்று உண்டான காயத்தினால் ஏற்ப்பட்ட வலி போலும் என்று எண்ணிக்கொண்டாள்.

தோன்றிய அதே சமயம் கதகதப்பாய் ஓர் கரம் அவள் தேகத்தை அரவணைப்பாய் அணைத்துக் கொண்டிருந்தது. மிருதுவாய் அதே நேரம் கொஞ்சம் அழுத்தமாய்! முயன்று மெல்ல தம் விழிகளை மலர்த்தினாள்.

இருள் கவ்வியிருந்தாலும் மனதிற்கு ஒருவாறு நிம்மதியாய் இருந்தது. மனம் லேசானது. பெருமூச்செறிந்து கொண்டவள் கணவனின் முகத்தைப் பெருமிதமாய் பார்த்தாள்.

அவளின் கருவிழிகள் இரண்டும் அவன் மீதே லயித்திருக்க... சீரான இடைவெளியில் வந்த அவனின் மூச்சுக் காற்று அவன் உறக்கத்தின் ஆழத்தை சொல்லியது. இன்னும் நெருக்கமாய் அவன் அணைப்பிற்குள் தன்னை கிடத்திக் கொண்டவள் எட்டிச் சென்று அவனின் அடர்ந்த கேசத்தைக் கோதிவிட்டு அவன் நெற்றிப் பொட்டில் பட்டும் படாமல் தன் இதழ்களை பதித்தாள்.

"கொடுக்குறதுதான் கொடுக்குற...ஒரு இரண்டு இன்ச் கீழே கொடுக்கலாம் இல்ல" என்றவன் தூக்க நிலையிலேயே விழிகளை திறவாமல் சொல்ல, "அப்போ நீ தூங்கின்னிலையா!" என்று அதிர்ச்சியாய் கேட்டாள்.

விழிகளை திறந்து அவள் பிடியை இறுக்கியவன், "உம்ஹும்" என்றவன் மேலும், "இப்ப நார்மலாயிட்டியா?" என்று கேட்டு அவள் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தான்.

"ஹ்ம்ம்" என்றவள் மேலும் கீழுமாய் தலையசைக்க,

"அப்போ நான் கேட்டதைக் கொடுக்குறது" என்றவன் பார்வையால் வினவியதை அவள் மௌனமாய் மறுக்க,

"அப்போ நான் கொடுக்கறேன்" என்றவன் சொல்லி முடித்து

அவன் செய்கையை அவள் உணர்ந்து கொள்ளும் முன்னரே தன் தோளின் மீது சாய்ந்திருந்தவளை அதிரடியாய் தனக்கு கீழ் தள்ளி விட்டு அவள் உதடுகளோடு வெகுநேரம் உறவாட

அந்த முத்தம் அவள் வேதனைகளை மறக்கடித்து மொத்தமாய் அவளை அவன் வசப்படுத்தியது. திகட்ட திகட்ட அவளை இன்ப உணர்வில் திளைக்க வைத்தவன் தன் காதலின் மூலமாக அவள் காயங்களை மறக்கடித்தான் என்றே சொல்ல வேண்டும்.
************
திருமணத்திற்கு ஒரு நாளே இருந்தது. அந்த நாளுக்காக அவள் எத்தனை எதிர்பார்ப்போடு காத்திருந்தாள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கத்தரித்திருந்த அவள் கேசம் வளர்ந்து கழுத்து புறத்தில் வளைந்து அவள் தோளைத் தீண்ட... ஏக்கமாய் அதனை தொட்டு பார்த்தாள்.

அப்போது அவசரமாய் அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்த சாரதி அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் படிந்திருந்த ஏக்கத்தையும் கவனித்தான்.

ஓசைபடாமல் அவள் பின்னோடு வந்து அவளை அணைத்துப் பிடித்து,

"என்னாச்சு? மேடம் டல்லா இருக்கீங்க... மேரேஜ் டென்ஷனா?!" என்று கேட்டு அவள் காதோரம் உரசினான்.

"ப்ச் அதில்ல" என்றாள் சலிப்பாக!

"பின்ன எது?"

"அது...முடி இன்னும் கொஞ்சம் நீட்டா இருந்தா... நாளைக்கு ஜடை வைச்சின்னு இருக்கலாம்" என்றவள் ஏமாற்றத்தோடு சொல்ல, ஓர் சராசரி பெண்ணின் ஆசைகள் யாவும் மீண்டும் அவளுக்குள் மொட்டுவிட ஆரம்பித்திருந்தன.

"இந்த ஹேர் ஸ்டைலையே...நீ செம்ம கார்ஜியஸா இருக்க டார்லிங்... அன் மோரோவர் இந்த ஸ்டைல் இன்னும் உன்னை யூனிக்கா காட்டுது" என்றவன் சொல்லிக் கொண்டே அவன் கரங்கள் அவளிடம் அத்துமீற அவன் தீண்டலில் அவள் தனைமறந்து நெகிழ ஆரம்பித்தாள். ஆனால் அவர்களின் சந்தோஷத்தைக் குலைக்கும் விதமாய் அவன் பேசி அலறியது.

அவள் கடுப்பாக அவனை முறைத்துப் பார்க்க அவன் அசடு வழிந்தபடி தன் பேசியை எடுத்து சுருக்கமாய் பேசியவன்,

"சாரி... கொஞ்சம் வேலை இருக்கு... சீக்கிரம் போயிட்டு வந்திடிறேன்" என்றதும் அவள் பதிலின்றி கையெடுத்துக் கும்பிட்டு வாசல் புறம் காண்பிக்க,

"ஓகே... ஆனா ... ஈவனிங் சீக்கிரம் வந்திடிறேன்" என்றவன் சொல்ல அதிர்ந்து பார்த்தவள்,

"வேண்டவே வேண்டாம்... நீ லேட்டாவே வா தெய்வமே!" என்று மீண்டும் பெரிய கும்பிடாய் போட்டவள் பிரயத்தனப்பட்டு அவனை அலுவலகத்திற்கு ஒரு வழியாய் அனுப்பி வைத்தாள்.

அவன் சென்ற சில நொடிகளில் அவள் உடலில் படர்ந்த சோர்வு அவள் மனதையும் சோர்வடைய செய்ய அந்த களைப்பின் காரணம் அவளுக்கு பிடிபடாமல் இல்லை. அவள் உடலில் மாதம் மாதம் உண்டாகும் சுழற்சிதானே!

நாட்குறிப்பில் வேகமாய் ஆராய்ந்து பார்த்தவள், "இன்னும் ஒரு வாரம் இருக்கே" என்று யோசிக்க, இயற்கையாய் ஏற்படும் நம் உடலின் செயல்பாடுகளுக்கு நேரத்தையும் காலத்தையும் நாம் விதிப்பதும் கணிப்பதும் முடிகிற காரியமா என்ன?

ஆனால் அது இன்று பார்த்து வர வேண்டுமா? என்று சலித்துக் கொண்டவளின் கவலையும் தவிப்பும் நாளை கோவிலில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் திருமணம்தான். குழப்பத்தில் உழன்றவள் என்ன செய்வதென்று புரியாமல் யோசனையோடு அறைக்குள் அடைந்து கிடக்க,

தெய்வானை அவளிடம் திருமணத்தின் ஏற்பாடுகளை பற்றி பேச வந்து அவளின் பிரச்சனையை அறிந்து கொண்டார்.

"இப்ப நான் என்ன பண்றது மாமி?" என்றவள் தவிப்புற கேட்க,

"இதுக்கு போய் எதுக்குடி இவ்வளவு கவலை படுற... எல்லா பொம்மனாட்டிக்கும் வர்றதுதானேடி" என்க, அதிர்ச்சியாய் ஒரு பார்வை பார்த்தவள்,

"புரியாம பேசாதீங்க... நாளைக்கு கோவில்ல கல்யாணம்" என்றாள்.

"தவிர்க்க முடியாத சூழ்நிலைல என்னடி பண்ண முடியும்... நானும் ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மா"

"இல்ல மாமி... எனக்கு யோசனையா இருக்கு... பேசாம தள்ளி வைச்சிடலமா"

"அபசகுனமா பேசாதே... நல்ல காரியத்தை போய் தள்ளி வைப்பாளா... அதெல்லாம் ஒண்ணுமில்ல"

"தீட்டில்லையா மாமி"

"வீரமாகாளி கோவில்லதானேடி கல்யாணம்"

"ஹ்ம்ம்"

"அப்புறம்... தாய்க்கு மக எப்படிறி தீட்டாவா... அசடு" என்று அவள் தலையில் நங்கென்று கொட்ட வீராவிற்கு தெய்வானையின் வார்த்தைகள் வியப்பாய் இருந்த அதே நேரம் மனதிற்கு நிம்மதியாகவும் இருந்தது.

சாரதியுடன் நடக்கப் போகும் அந்த திருமணத்திற்காக அவள் மலையளவு ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தாள். அதில் ஓர் சிறு தடங்கல் வருவதைக் கூட அவள் விரும்பவில்லை.

உடல் சோர்வையும் தாண்டி மனதளவில் நடக்கப் போகும் அவள் திருமண நாளை குறித்து உற்சாகத்தில் திளைத்திருந்தாள்.

அப்போது வீட்டின் முகப்பறையில் இருந்த தொலைப்பேசி ஒலிக்க அதனை எடுத்து பேசிய முத்து பதட்டமாய் வீராவை அழைத்தான்.

அப்போது அந்த தொலைபேசியில் வீராவிடம் பேசிய நபர் சொன்ன தகவலை கேட்டு அவள் உடலெல்லாம் நடுக்கமுற்றது. தாறுமாறாய் பதட்டமேற படபடப்போடு தெய்வானையிடம் விஷயத்தை தெரிவிக்க, அவருமே பதட்டமடைந்தார்.

வீரா உடனே சாரதிக்கு அழைத்து, "நதி சைக்கிள்ல போகும் போது ஆக்ஸிடென்ட்டாயிடுச்சாம்" என்று சொல்லி முடிக்கும் போதே, "எங்கே எப்போ?" என்று பதறினான் சாரதி.

விவரத்தை உரைத்தவள், "நான் போறேன்... நீயும் வந்திருய்யா" என்று உரைத்துவிட்டு அவன் பதிலுரையை கேட்கக் கூட பொறுமையில்லாமல் அழைப்பைத் துண்டித்தாள். தெய்வானை தானும் வருவதாக சொல்ல வீரா மறுத்துவிட்டு விரைவாய் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் சென்ற சில நிமிடங்களில் அதிகாரிகள் சிலர் காரில் சாரதியின் வீட்டிற்குள் நுழைய தெய்வானை அவர்களை யாரென்று புரியாமல் மிரட்சியடைந்தாள்.

அதே சமயம் சாரதி தன் அலுவலகத்தில் இருந்து புறப்பட எத்தனிக்க, அங்கேயும் நுழைந்த அதிகாரிகள் உடனடியாக சாரதியைத் தடுத்து நிறுத்தி,

"வீ ஆர் ப்ஃரம் ஐடி டிபார்ட்மெண்ட்" என்று தெரிவிக்க, அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சோதித்தவன் பின் பதட்டம் குறையாமல்,

"என் சிஸ்டர் இன் லா க்கு ஆக்ஸிடெண்டாயிடுச்சு... நான் இப்போ போயே ஆகனும்" என்றவன் டென்ஷனோடு சொல்ல, அந்த அதிகாரிகள் அவனை சந்தேகப் பார்வையோடு அளவெடுத்தனர்.

அவன் மேலும், "உங்களுக்கு தேவையான எல்லா டீடைல்ஸ் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் என் ஸ்டாஃப்ஸ் கொடுப்பாங்க... புரிஞ்சிக்கோங்க... நான் போகணும்... போயே ஆகணும்... இட்ஸ் ஹேன் எமர்ஜென்சி ஸிட்டுவேஷன்" என்றவன் சொல்ல,

"இது எமர்ஜென்சி ஸிட்டுவேஷனா இல்லையான்னு நாங்க டிசைட் பண்றோம் மிஸ்டர். சாரதி" என்றவர்கள் துரிதமாய் சாரதி சொன்ன விவரங்களை கேட்டு அங்கிருந்தபடி அவற்றின் உண்மை நிலவரத்தை விசாரித்தனர்.

சாரதிக்கோ அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அவன் பொறுமை தகர்ந்துக் கொண்டிருக்க அவர்கள் பேசி முடித்து, "எங்களையெல்லாம் பார்த்தா எப்படி தெரியாது.... எமர்ஜென்சி ஸிட்டுவேஷன்... அது இதுன்னு நீங்க பொய் சொன்னா அப்படியே நாங்க நம்பிடுவோமா?" என்று அந்த நபர் இடித்துரைக்க,

"பொய்யா?" என்று அதிர்ந்தான் சாரதி!

"எஸ்... உங்க சிஸ்டர் இன் லா நதியா... ஸ்கூல்ல சேஃபாதான் இருக்காங்க" என்றனர். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் குழப்பமாய் யோசித்திருக்க,

"எங்க டைம்மை வேஸ்ட் பண்ணாம... நீங்க எங்களுக்கு கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணிங்கன்னா நல்லா இருக்கும்" என்று சொல்ல சாரதியின் முகம் இருளடர்ந்து போனது.

அவன் சிந்தனை அவர்களிடத்தில் இல்லை. வீரா ஏன் அப்படி சொன்னாள் ? யார் எதற்காக இப்படி ஒரு பொய்யான தகவலை அவளிடம் சொல்லி இருப்பார்கள் என்று யோசித்தவனுக்கு அப்போதே நினைவு வந்தது... அம்மு நதியாவின் ஐடி கார்டுகள் மற்றும் பள்ளியில் கொடுக்கப்பட்ட விவரங்களில் அவனுடைய கைப்பேசி எண்கள் பதிவாகியிருந்தது. அம்மு மயங்கிய போது கூட அவனைத்தானே அவர்கள் அழைத்தார்கள்.

அப்படியெனில்....

அவன் மனம் யூகித்த கற்பனைகள் யாவும் பயங்கரமாய் இருக்க, பூமி அவன் காலுக்கு கீழே நழுவியது போன்ற உணர்வு!

உடனடியாய் சாரதி தன் பேசியை எடுத்து வீராவிற்கு அழைக்க எண்ணிய போது,

அந்த அதிகாரிகள் அதனைப் பறித்துக் கொண்டனர்.


"சாரி... ரைய்ட் முடியிற வரைக்கும் நீங்க யாரையும் கான்டெக்ட் பண்ண அனுமதி இல்லை" என்றவர்கள் அழுத்தமாய் சொல்லி முடிக்க, அவன் நிலைகுலைந்து போனான்.
அந்த நொடி அவனின் பலம் மொத்தம் முடக்கப்பட்டிருக்க, வீராவிற்கு ஏதோ ஆபத்து என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top