AVAV - 09(1)

lakshmi2407

SM Exclusive
Author
#1
AVAV -09 (01)

க்ராஸ் டாக்::

"என்ன சுக்கிரா?, பொன்மயமான உன் தேகம் மலர்ந்த சிரிப்பால் மேலும் பொலிவுடன் காணப்படுகிறதே? அப்படி என்ன மகிழ்ச்சி?", தேவகுருவான பிரகஸ்பதி கேட்க....

"த்ரிவிக்ரமன், நங்கை நல்லாளின் பிணக்கு தங்கள் பார்வை மகிமையோ என்னவோ, இப்போது தீர்ந்து விட்டதே?", என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்க....

"அசுரகுருவே, இது தாற்காலிகம் என்பது தமக்கு தெரியும், இன்னமும் அத்தம்பதிகள் கடக்கவேண்டியவை அதிகமென்பதும் அறிவோம், அங்கே நாடகம் நடக்கிறது, அவரவர் வினைப்பயன்.... நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது, நாம் வெறும் பார்வையாளர்கள். அவ்வளவே"

"ஆம் பிரகஸ்பதி.. நன்றாகச் சொன்னீர், வினைப்படி விதி என்றிருக்க.... பழியோ நம் தலையில்.. ஆ!!! ஆ!! இது என்ன தேஜோமயம்?"

"ஆஹா.. லக்ஷ்மிதேவி யாரைக் கடாக்ஷிக்க இத்தனை வேகமாய் விரைகிறார்?

"நாம் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒரு பெண், அவள்தான் நம் கதையின் நாயகி.. அவளை மேலும் கனக புஷ்பராகத்தினால் அலங்கரிக்க திருமகளே செல்கிறாள் என்றால், அவள் கட்டத்தை என்னவென்று சிலாகிக்க?"

"ஓ..அப்படியானால், தனகாரகன் வலுக்கிறானா?",

"ஆம், சுக்கிரா, இனி அப்பெண் தொட்டதெல்லாம் பொன்னாய் மாறும். ஆனால்... ம்ஹ்ஹ்.. சரி .... வருகிறேன்", சிறிது புருவம் சுருக்கி, பெருமூச்சுடன் பிரஹஸ்பதி அவர் வீட்டினுள் செல்ல....

"ம்ம்ம்... புரிகிறது குருவே, தேவர்களாகிய நமக்கு எதிர்காலம் குறித்த ஞானம் இருப்பது எத்தனை பெரிய சாபம் என்று இப்போது தெரிகிறது. இல்லையெனில், மகிழ்வோடு பேச்சை ஆரம்பித்தார் நாம், பின் நிகழ்வு தெரிந்ததால்... சோகமானோம் . ஆனாலும் இந்த தேவலோகத்தையே இரண்டாக்கப் போகும் ஜாதகக் கட்டங்கள் கொண்டவளல்லவா, அச்சிறுபெண்?", மனதுக்குள்ளே பேசியபடி.... அவரும் நடையைக் கட்டினார்.

இவர்கள் இருவரும் வார்த்தையாடிக்கொண்டிருந்த அம்மரத்தின் கிளையில் இருந்து கிளியின் ரூபத்தில் அமர்ந்திருந்த நாரதர் கீழிறங்கி சுய ரூபத்தை அடைந்தார்... "ஏதேது ? புலம்பல் திலகங்கள் ஆகி விட்டனரே இவர்கள்?..இப்பெண் பேசப்போகும் பேச்சில் சிக்கி சின்னாபின்னமாகப்போகும் சிற்றம்பலத்தான், த்யானத்தில் இருக்க... அவரையே தீயென தகிக்கப்போகும் தில்லை பெருமாட்டியோ, அவர்தம் பிள்ளைகளை நர்சரிக்கு அனுப்புவதில் மும்மரமாய இருக்கிறார். ஒரு எட்டு சென்று பார்த்தே செல்வோம். நாராயண... நாராயண.."

பெரிய மாளிகையின் முன் நின்று, நாரதர் காலிங் பெல்லை அமுக்க... "கதவு திறந்துதான் இருக்கு. யாராயிருந்தாலும் உள்ள வாங்க", தேன் குரலில் அழைப்பு வேகமாய் வர... வீட்டினுள் நுழைந்தார்.

"நான்தான் தாயே, நாரதன் வந்துள்ளேன்",என்க..

"ஒரு பத்து நிமிடம் பொறு நாரதா, காலை எட்டு மணிக்குள் இவர்களை நர்சரிக்கு அனுப்ப வேண்டும், சின்னவனோ மலைவாசி, தேனும் தினையும், பழங்களும் வேண்டுமென்கிறான், பெரியவனோ, அபார பசி கொண்டவன். மோதகம் கொழுக்கட்டை, அப்பம், அவல்,பொரி என்று வரிசை கட்டுகிறான் . இவர்களை சாப்பிட வைத்து , கிளப்பி அனுப்புவதற்குள் என் பிராணன் போகிறது. சற்று அமர்ந்திரு, லன்ச் பாக்ஸ் தயார் செய்து வருகிறேன்.", என பார்வதி உரைக்க..

அங்கே ஷூக்களோடு மல்லுக்கட்டிய இளைய குமாரரை பார்த்து, "அப்பா எங்கே குமரா?"

"அவர் பேச்சை இழுக்காதே நாரதா, கொழுக்கட்டைக்கு மாவு பூரணம் இரண்டும் தயார். சற்று சொப்பு செய்துத்தாருங்கள் என்றேன், அடுத்த நொடி, குளியலறை சென்று கங்கை ஸ்நானம் செய்து... கச்சம் கட்டி த்யானத்தில் அமர்ந்து விட்டார். பிள்ளைகள் செல்லட்டும், பிறகு வைத்துக்கொள்கிறேன் அவரை.. ", பதில் நறநறத்த பற்களுக்கிடையே அடுக்களையிலிருந்து கோபமாய் வந்தது. ஆளைக்காணோம், இன்னமும் குரலை மட்டும்தான் அனுப்பிக்கொண்டிருந்தார். "ஆஹா அயனான சமயத்தில் வந்து விட்டோமோ", என்று நாரதர் நினைத்தார்.

சற்றே குண்டான பெரிய பிள்ளை, பள்ளி செல்லத் தயாராகி ஓடிவர.. வீடு அதிர்ந்தது. "அண்ணா சற்று மெதுவாய் வா.., நாரதர் பூகம்பமோ என்று பயப்படுகிறார்", குறுநகையுடன் சொன்ன சிறுவன் தமிழ்க்கடவுள் குமரன்.

"டாட், மாம், பை", ஒருமித்த குரலில் கூறி தத்தம் வாகனங்களில் பள்ளி சென்றனர். "உஷ்...", நெற்றி வியர்வையை துடைத்து, "வா நாரதா.. பார்த்தாயா காலை நேர பரபரப்பை..? சின்னதாய் ஒரு உதவி கேட்டால், உலகைப்படைத்தவர், ஓடிச்சென்று த்யானத்தில் அமர்கிறார். இவரே இப்படி இருப்பதால்தான் , இவர் படைத்த மனிதனும்.. இவரை பின் பற்றுகிறான் .. க்ஹும், எல்லாம் நேரம்"

"இப்போது பரவாயில்லை தேவி முன்புக்கு இப்போ நிறைய மாறி இருக்காங்க. சரி தேவி, பிள்ளைகள் அன்னை சரஸ்வதியிடமா பாடம் பயில சென்றுள்ளனர்?"

"அடடே, உனக்கு விஷயமே தெரியாதா?, லியனார்டோ டாவின்சி என்று ஒரு பல்கலைவித்தகர் இங்கே நம் காலனிக்கு அருகே குடிவந்துள்ளார். ஆங்கிலத்தில் கரை கண்டவராம், ஓவியத்தில் இருந்து, ராக்கெட் சயின்ஸ் வரை தெரிந்தவராம், இந்த அறிவியல் மேதை பற்றி சரஸ்வதி என்னிடம் கூறி, பிள்ளைகளுக்கு இரு வார சிறப்பு வகுப்பிற்கும் ஏற்பாடு செய்தாள்", என்றார் உவகையுடன்.

"தாயே தகுமா? முத்தமிழை... அவ்வையார் கணபதியிடம் யாசித்து நிற்க... தமிழுக்கே இறையாக நம் செல்வக்குமரன் இருக்க... நம்மிடத்து அறிஞருக்கு குறையோ? நம் அறிவிற் குறையுண்டோ? கொல்லனிடம் ஊசி விற்கத் தலைப்பட்டவன் அறிவிலியெனில்.... வாங்குபன் முழுமூடனல்லவா?", சற்று நிறுத்தி, "ஆங்கிலத்துக்கு கட் அவுட்டு... தமிழுக்கு கெட் அவுட்டா?"

"நாரதா ... சற்று மூச்சு விடு. கணபதி முருகன் இருவரும் தொலைக்காட்சியில் வரும் இளம் விஞ்ஞானி போட்டியில் கிரிப்டெக்ஸ் தயாராகிறார்கள். டாவின்சி அதில் மேதையாம். இது தாற்காலிக ஏற்பாடுதான்.. அதற்குள் மொழிப்போரை நீ துவக்காதே அப்பனே, இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட அக்கப்போர்"

"ஓ... young scientist ப்ரொஜெக்ட்?", என்றார் நாரதர் ஆசுவாசமாக...

"யெஸ் .. யெஸ் ", என்று வேறு உலக விஷயங்கள் பேசத் துவங்க... நாம் டெல்லி செல்வோமா?

https://www.dhresource.com/0x0/f2/albu/g6/M01/3A/69/rBVaSFsZIS2AQ9cKAAQydveYlGY307.jpg
 

lakshmi2407

SM Exclusive
Author
#2
அரிவை விளங்க அறிவை விலக்கு - 09

இன்னுமொரு இனிதான விடியல்... நங்கை துயிலெழுந்து, அருகே த்ரிவிக் இல்லாததால், நடைப்பயிற்சி சென்றிருப்பான் என்ற அறிதலுடன் காலியாக இருந்த படுக்கையை கண்டாள். கணவனின் வாசம் மற்றும் முந்தைய நாளின் தாக்கம் உடலில் இருக்க, அதைத் தள்ளி நிறுத்தி, அத்தை மாமாவின் வருகை நினைவில் வர, நேரமாகிவிட்டதென வெளிச்சம் உரைக்க.. விடுவிடுவெனவெழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து, விளக்கேற்றி பின் அடுக்களையில் நுழைந்தாள். தாமதமாயிற்றே, ஏதாவது சொல்லுவார்களோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.

அங்கே சென்றால்... !! அத்தை வைதேகி... சாப்பாடு மேஜையின் அமர்ந்து ஏதோ சாப்பிட்டு கொண்டிருந்தார். மாமா எங்கோ தெரியவில்லை, த்ரிவிக் தோசைகளை வார்த்து அவன் அம்மாவிற்கு போட்டுக்கொண்டு இருந்தான். ஆம். த்ரிவிக்கேதான். பக்கத்தில் வெங்காயம் அரிந்து வைத்து, அதை அடிக்கடி கல்லில் தடவி, தோசை ஒட்டாமல் வருமாறு அழகாய் எடுத்தான். "ஓ. இவ்ளோ நல்லா தோசை செய்ய வருமா இவருக்கு? என்னிக்காவது நமக்கு செஞ்சு போட்டிருக்கிறாரா இவர்?", என்ற எண்ணம் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

"டேய் , பொடியோட ஒரேயொரு நெய் ரோஸ்ட், அதான் லாஸ்ட், ஓகே ?" எனக் வைதேகி கூற

"மாம்.. நோ மோர் கீ [ghee]. ஃபாட் போட்டுடுவீங்க, கேதார், பத்ரிக்கு உங்க உடம்பு லாயக்கில்லைன்னு திருப்பி அனுப்பப் போறான் பாருங்க..", திரும்பாமல் பேசியவனின் கவனம் தோசையில் . "ஹும் . அம்மாகிட்டயும் ஃபாட் கணக்குதானா? இவர் திருந்தமாட்டார்", இது நங்கையின் மைண்ட் வாய்ஸ்.

"அப்படி அனுப்பிடுவானா என்ன? ஹா ஹா .. அதுக்குத்தான் நாங்க பிரைவேட்டா போறோம், முடிஞ்சா மேல போயி சுவாமியை பாக்கறோம், இல்லையா, எங்க முடியலைன்னு தோணுதோ, அங்க டக்குன்னு இறங்கி அந்த இடத்துல இருக்கிற ஈஸ்வரனை பாத்துட்டு, பை சொல்லி கீழ வந்துடுவோம். எல்லாமே சுவாமிதாண்டா, நீ தோசைய போடு", என்றபடி தோசை விள்ளலை வாயில் போட்டார். அருகில் அசைவு தெரிந்து நிமிர்ந்தவர்.. நங்கையைப் பார்க்க , ... "ழேய் உன் பொன்..ணா..டி", வாயில் உணவு இருக்க ... பேச்சு குழறியது.

கையில் தோசைக்கரண்டியுடன் தலையை மட்டும் பாதி திருப்பி... "மாம்.. நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன், வாயில சாப்பாடு வச்சிக்கிட்டு பேசாதீங்கன்னு, புரை ஏறும்மா", கண்டிப்புடன் கூறிய த்ரிவிக் தோசையுடன் திரும்ப.. அங்கே நங்கை நல்லாள்.. இவன் முகத்தில் கொஞ்சமாய் அசடு வழிந்தது.

வாராத தலை, மேட்சிங் இல்லா நைட் டிரஸ், வெப்பத்தில்/வியர்வையில் சிவந்த முகம், சமையலறையில் தோசைக்கரண்டியுடன் இவளது ஏப்ரன் கட்டியிருந்த, கணவன் கலவையாய் தெரிந்தான்.

கரண்டியை த்ரிவிக்கிடம் இருந்து வாங்கப் போன நங்கையை கைபிடித்து நிறுத்தி, "வாம்மா, இங்க உக்காரு, காலைல சீக்கிரமா முழிப்பு வந்துடுச்சு, பசிக்க வேற செஞ்சதா, என்ன பண்றதுன்னு பாத்தேன், இவனும் எழுந்து வந்தானா, பிரிட்ஜ்-ல மாவு எப்பவும் இருக்கும்னு சொல்லி இருந்தியே, அது ஞாபகம் வந்தது. குளிச்சிட்டு வர்றேன் தோசை வார்த்து தா-ன்னு இவன்கிட்ட சொன்னேன். தோ , சாபிட்டுட்டு இருக்கேன், உன் இட்லிப்பொடி சூப்பர், அதும் தயிரோட காம்போ செம போ", என்று நீளமாய் பேசியவர், மகனிடம் திரும்பி...

"டேய் உன் பொண்டாட்டி -ன்னு தான் டா சொன்னேன் அப்போ, அது உனக்கு காதுல விழல. சரி சரி சூடா அவளுக்கு ஒரு காபி போடு," நங்கையைப் பார்த்து, "குளிச்சிட்ட இல்லையா அப்படியே டிஃபனையும் முடிச்சிடு", மகனிடம்.."டேய் அடுப்ப ஆஃப் பண்ணிடாத அப்படியே உன் பொண்டாட்டிக்கும் தோசை", என்ற அடுத்த நொடி அவன் பொறுமை பறந்து, தோசைக்கல்லில் கரண்டியை "ணங்' கென்று போட்டிருந்தான். கூடவே, ஹை டெஸிபலில் த்ரிவிக்கின் குரல் கேட்டது. "மாம், அப்போதலேர்ந்து சொல்லிட்டு இருக்கேன்10 மணிக்கு ஆபீஸ் மீட்டிங் இருக்குன்னு, இன்னிக்கே ஆக்ரா போகணும்னு வேற சொல்றீங்க. சரி, போனா போகுதுன்னு 12 மணிக்குள்ள வந்து கூட்டிட்டு போக பிளான் பண்ணிருக்கேன். உங்களுக்கு ...", மேலே என்ன சொல்ல வந்தானோ தெரியாது. அதற்குள் வைதேகி குறுக்கிட்டு, " சரிடா. நீ ரொம்ப பிசிதான். ஒத்துக்குறேன் கிளம்பு நான் பாத்துக்கிறேன்", என்று சமாதானப்புறாவை பறக்க விட்டார். நொடிப்பொழுதில் அங்கிருந்து மாயமானான் த்ரிவிக்.

அருகில் அமர்ந்திருந்த மருமகளைப் பார்த்து, கிசு கிசுவென, "அப்பவே லேட் ஆயிடுச்சுன்னான்", என்ற உபரித்தகவலையும் அளித்தார். கூடவே, "அவனுக்கு எல்லாம் ரெடி பண்ணு, அஞ்சே நிமிஷத்துல வந்து நிப்பான்", எனவும் சொன்னார், மகனை நன்கறிந்தவராய்.


"நேரம் இருந்தா மட்டும் எனக்கு செஞ்சிடுவாராக்கும்?", நங்கையின் மனது அங்கலாய்க்க, காஃபி ஊற்றி அதை அடக்கினாள். அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செல்ல, கூடவே மாமியாரும் பேசியவாறு உதவி செய்ததால், சீக்கிரமாயும் முடிந்தது.
AVAV - 09 (01) contd ..

த்ரிவிக் சாப்பிட வர, அவனுக்கு தேவையானவைகளை நங்கை பரிமாற, சாப்பிட்டு முடித்தபின் கடைசியாய் நான்கு வெள்ளரிபிஞ்சின் மேல் அரைமூடி எலுமிச்சை பிழிந்து வைத்தாள். சற்று டென்ஷானானாலோ, சாப்பாடு காரம் அதிகம் இருந்தாலோ, இவ்வாறு சாப்பிடுவது அவனது வழக்கம். ஆனால், அவளிடம் சொன்னதாக இவனது நினைவில் இல்லை. நிமிர்ந்து அவள் முகம் பார்த்த த்ரிவிக், அவைகளை எடுத்து சாப்பிட்டவாறே நங்கைக்கு மட்டும் கேட்கும் குரலில், "தேங்க்ஸ்", என்றான்.

எதற்கென புரியாமல், தலையை ஒரு பக்கமாய் சாய்த்து, புருவம் சுருக்கி கேள்வியாய் பார்த்தாள்.

நங்கையின் அந்த பாவம் அழகாய் இருக்க, ரசனையுடன் அவளை பார்த்து, இளநகை பூத்து, "ம்ம்.. எல்லாத்துக்கும். ரெடியா இரு வெளில போகணும் ", கள்ளச் சிரிப்போடு கணவனாய் பேசி விடை பெற்றான்.

கூடத்தைக் கடந்து நடக்கையில், அவளையும் அறியாமல் அனிச்சைச் செயலாய் பார்வை, அன்று த்ரிவிக் சரிசெய்த சுவர் கடிகாரத்தை தீண்டியது. முகம் தானாய் கோப முலாம் பூசிகொண்டது.
 

Advertisements

Latest updates

Top