• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

AVAV 12

lakshmi2407

Author
Author
Messages
3,241
Likes
15,322
Points
353
Location
Tamil nadu
#1
அத்தியாயம் - 12



"மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா;

ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்;

நிர்விக்னதா ஸித்யர்த்தம்;

ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே " ,



கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து, அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், அவள் வேலைக்கு சேர்த்திருந்தோரையும், நெருங்கிய உறவினர் வட்டம் மற்றும் நட்புக்களை அழைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வளர்த்து, முறையாய் அவளது தொழிலை, இதோ துவங்கியே விட்டனர்.



ஊரில் இருந்து வந்திருந்த வைதேகி மற்றும் ஸ்ரீராமுலு, விடுமுறை இல்லாததால் அன்று இரவே கிளம்ப, "போனதறவ வந்தபோது டூர் முடிச்சிட்டு இங்க வரேன்னு சொன்னிங்க, நேரே சென்னைக்கு போயிட்டீங்க, இப்ப என்னடான்னா காலையில வந்துட்டு சாயங்காலம் கிளம்புறீங்க?", என வைதேகியிடம் சண்டையிட்டாள். " லீவ் இல்லம்மா, என்ன பண்ண சொல்ற?", என்று எப்பொழுதும் பாடும் பாட்டை பாட, "முதல்ல வீஆர்எஸ் வாங்கிட்டு வேலையை விடுங்க, வயசான காலத்துல பசங்க,பேரப்பசங்க கூட இல்லாம, எப்ப பாரு ஓடிட்டு இருக்கீங்க. போதும் நீங்க சம்பாதிச்சது", உரிமையாய் சிறிது கோபத்துடனும் கேட்டாள். எப்போதும் அவரிடம் இவள் இலகுவாய் பேசுவாள் தானே?



"நீ மொதல்ல பேரப் பசங்களை ரெடி பண்ணு, அடுத்த நாள் இங்க வந்துடறோம்", பாயிண்டோடு மெல்லிய சிரிப்புடன் பதிலளித்தார், சிறிது தாமதமாக புரிந்துகொண்ட வைதேகி. "ம்ஹும் .... அத்த...", செல்லமாய் சிணுங்கினாள் மருமகள்..



சற்று தொலைவில் மோகனசுந்தரத்துடனும், மைத்துனனுடனும் பேசிக்கொண்டிருந்த திரிவிக்ரமனின் பார்வையென்னவோ அன்னையிடத்துக்கும், நங்கையிடத்துமே. அன்று விசேஷ நாள் என்பதற்காக பட்டுடுத்தி மிக நேர்த்தியாய் தயாராகி இருந்தாள் நங்கை. த்ரிவிக் -கின் பேச்சைக் கேட்டு அவன் மனம் கட்டுப்பாடோடு இருந்தாலும், கண்கள் அவள் வசம் செல்வதை தடுக்க இயலவில்லை அவனால்.



இப்போது அவனது அம்மாவிடம் சிணுங்கி செல்லம் கொஞ்சும் மனைவியைக் கண்டு, "ஹய்யோ கொல்றாளே, ராட்சஸி", என மனதுக்குள் நினைத்து நீளமாக பெருமூச்சு விட்டான்.



நங்கையின் குடும்பமும் மறுநாள் காலை கிளம்புவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நங்கை நல்லாள் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு நாள் அவர்களது பிரயாணத்தை தள்ளி வைத்தனர். நங்கையின் வீட்டு நிர்வாகத்தில், அவள் அன்னையின் சாயலை கண்டு மகிழ்ந்தார் மோகனசுந்தரம்.



இதைத்தவிர, நங்கையே, மழலையர் விடுதியின் துவக்க முன்னேற்பாடுகள் மற்றும் அதில் பணிபுரியும் வேலையாட்கள் நிர்வாகம் என அனைத்தையும் செய்வதைப் பார்த்தவர், "ஏம்மா, மாப்பிள்ளைதானே செய்யப் போறார்? இதுல [நிர்வாகத்தில்] கொஞ்சம்கூட கலந்துக்கவே இல்லையே?", என்று கேட்டார்.



நங்கை பதிலளிக்கும் முன், அடுத்த அறையில் இருந்து வந்த த்ரிவிக், "நாந்தான் மாமா அவளே பாத்துக்கட்டும்-ன்னு விட்டுட்டேன். எனக்கும் பிசினெஸ் இருக்கில்லாயா ? நங்கை வீட்ல சும்மாத்தானே இருக்கா?, இந்த லைன் பழகிகட்டும், எங்க கணக்குப்படி, எப்படியும் ஆறு மாசத்துல நம்ம இன்வெஸ்ட்மென்ட் திரும்ப வந்திடும். நங்கைக்கு பிடிச்சா இன்னும் பெரிசா பண்ணலாம், இல்லன்னா, அவளுக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கூடவே, வீட்ல தனியா இருக்கிறத விட குழந்தைகளோட இருக்கிறது அவளுக்கு நல்ல டைம் பாஸ்", என நீளமாக பேசி அவரை சரிக்கட்டினான். நங்கை நல்லாளும், அதை ஆமோதிப்பது போல தந்தையைப் பார்த்து தலையசைத்து சிரித்தாள்.



திருமனம் செய்து மறுவீடு சென்ற மகள், அவ்வீட்டில் மலர்ந்த முகத்துடன், மதிப்புடன் சிறப்பாய் இருப்பதை காண்பதை விட, வேறு எதுவும் பெற்றோருக்கு மன நிம்மதியை தந்து விடுமா என்ன? மிகுந்த மனநிறைவுடன் நங்கையின் பிறந்த வீட்டினரும் சென்னை செல்ல... தம்பதிகளின் வழமையான இல்லறம் தொடர்ந்தது.



முதல் நாள் மூன்று பிள்ளைகள் எனத் துவங்கிய இவளது விடுதி, ஒரே வாரத்தில் இருபத்தி ஏழானது. அவர்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தது ... தவிர, இருபாலரும் வேலைக்குச் செல்வதென்பது, இக்காலத்தின் பொருளாதார நிர்பந்தமாய் இருக்க... இவளது விடுதிக் கோட்பாடுகளான "தரமான.. சத்தான உணவு, பிள்ளைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட வெளியரங்க/ உள்ளரங்க விளையாட்டுகள், யோகா, மருத்துவ ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ", போன்ற அம்சங்கள் பெற்றோரை காந்தமாய் ஈர்க்க...., இரு மாதத்திலேயே இவளது விடுதி மிகப் பிரபலமானது. தரமான சேவைக்கு வாடிக்கையாளரே மிக நல்ல விளம்பரதாரர்.



விளைவு , franchise எனப்படும் ஏஜென்சி உரிமைக்காக, ஒரு சில .. ஏற்கனவே இயங்கும் மழலையர் விடுதியினரும், புதிதாய் துவங்கத் திட்டம் வைத்திருப்போரும் நங்கையை அணுகினர். அவள் த்ரிவிக்ரமனிடம் ஆலோசனை கேட்க, அவனோ பிரஜனிடம் கேட்டு சொல்வதாகக் கூறினான். ஏனெனில், ப்ரஜன் அதில் கரை கண்டவன். ப்ரஜன், இவளது விடுதியின் செயல்பாட்டை இரண்டு, மூன்று நாட்கள் வந்து மேற்பார்வையிட்டான். பிறகே அவன், ஆரம்பித்து சில மாதமே ஆன நிலையில், தற்போதே உரிமையை தர அவசரப்பட வேண்டாம் எனவும், தேவைப்பட்டால், கிளைகளை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது பிற்பாடு ஏஜென்சி குறித்து ஆலோசனை செய்யலாம், எனவும் த்ரிவிக்-கிடம் தெரிவித்தான்.



ஆனால், இந்த கொள்கை முடிவால், நங்கை... சில விடுதி நிர்வாகிகளின் மறைமுக எதிரியானாள், அவளுக்குத் தெரியாமலேயே. ஏனெனில் அங்கிருந்த பிள்ளைகள் இவளது கரீச்சிற்கு மாறினர். அது அவர்களின் வருமானத்தை நேரடியாய் பாதித்தது.
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top