• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana Ratchasiye-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சர்வதேச புகழ் வாய்ந்த ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி தொடங்கியது.

"ஸ்ரீ... ஊட்டி ரோஸ் பிளவர் ஷோ தொடங்கிருச்சு. நாம இந்த சண்டே போலாம். அங்க எவ்வளவு ரோஸ் பிளவர்ஸ் இருக்கு தெரியுமா? செம சூப்பரா இருக்கும்" என்றாள் சரண்யா.

"நானும் கேள்விபட்டிருக்கேன் அங்க பிளவர்லேயே பொம்மை எல்லாம் இருக்குமாமே" என்றாள் ஸ்ரீதேவி.

ஸ்ரீநிவாஸ் அண்ணன் அங்கே வர உடனே சரண்யா "அண்ணா ரோஸ் கார்டன்ல கண்காட்சி போட்டாங்க. வர சண்டே போலாமா?" என்றாள்.

"அதுக்கென்ன போனா போச்சு" என்றான் அண்ணன்.

"அண்ணான்னா அண்ணாதான்" என்று சந்தோஷமாய் சொன்னாள் தங்கை.

சில நிமிடங்களில் வந்தனா அங்கே வந்தாள்.

"மாமா... மாமா...ரோஸ் கார்டனுக்கு இந்த சண்டே கூட்டிட்டு போறியா?"

"நான் வேணா கூட்டிட்டு போகவா" என்றபடி வந்தான் அஸ்வின்.

"நான் ஸ்ரீமாமாவதான் கேட்டேன் உன்ன இல்லை"என்றாள் வந்தனா.

"சரி வந்தனா இந்த சண்டே போகலாம்" என்று ஸ்ரீநிவாஸ் சொன்னவுடன் "ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்.

ஞாயிற்றுக்கிழமை வர அன்று காலை வேளையில் டிபன் முடிந்தவுடன் வந்தனா ரெடியாகி வந்து விட்டாள்.

"மாமா... நான் ரெடி. ரோஸ் கார்டன் போலாம் வாங்க" என்றாள் வந்தனா.

"வந்தனா... மத்தவங்க யாரும் ரெடியாகல. மத்தியானம் சாப்பிட்டு முடிச்சிட்டு போகலாம்" என்றான் ஸ்ரீநிவாஸ்.

"அவங்க எல்லாம் மத்தியானம் போகட்டும். நீங்க வாங்க நாம இப்ப போகலாம்."

வந்தனா சிறுவயதில் தாய் தந்தையை இழந்ததால் சற்று செல்லமாக பானுமதி அம்மாவால் வளர்க்கபட்டாள். அவள் பிடிவாதத்தையும் குணத்தையும் அனைவரும் நன்கு அறிவார்கள்.

"ஸ்ரீ... அவள கூட்டிட்டு போயிடுப்பா.நாங்க பின்னாடி அஸ்வின் கூட வர்றோம்" என்றார் பானுமதி.

"ஆமாண்ணா... அதுதான் சரி. நீங்க வந்தனாவ கூட்டிட்டு போங்க" என்றாள் சரண்யா.

"அதான் எல்லாம் சொல்றாங்க இல்லை. மாமா... கிளம்புங்க..." என்றாள் வந்தனா.

"சரி... நான் ரெடியாயிட்டு வர்றேன்" என்று சென்ற ஸ்ரீநிவாஸ் சில நிமிடங்களில் தயாராகி வர அவனும் வந்தனாவும் கிளம்பி சென்றனர்.

மதிய சாப்பாடு வேளை முடிந்த பின் மூன்று மணிக்கு ஸ்ரீதேவி, சரண்யா, அஸ்வின், பானுமதி அம்மாள் எல்லோரும் கிளம்பி சென்றனர்.

காலையில் சென்ற ஸ்ரீநிவாசும், வந்தனாவும் இன்னும் வந்திருக்கவில்லை.

அஸ்வின் கார் டிரைவ் செய்ய பானுமதி அம்மாளும், ஸ்ரீதேவியும் பின்னால் அமர்ந்து கொள்ள சரண்யா முன்னால் அமர்ந்து கொண்டு வந்தாள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சரண்யா மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்ய "வெண் மேகம் பெண்ணாக உருவானதோ" என்ற பாடல் ஒடியது.

கார் சில நிமிடங்களில் ரோஸ் கார்டனில் போய் நின்றது.

அஸ்வின் சென்று டிக்கெட் வாங்க அனைவரும் உள்ளே சென்றனர்.

பானுமதி அம்மாளுடன் ஸ்ரீதேவியும், சரண்யாவும் சுற்றி பார்க்க உள்ளே நுழைந்தனர்.

அஸ்வின் அவர்களுக்கு துணையாக எங்கும் விட்டு செல்லாமல் வந்து கொண்டிருந்தான்.

ரோஜா மலர்களால் ஆன மயில், இந்தியா கேட், சோட்டா பீம் பொம்மை, காளை மாடு பொம்மை, ரங்கோலி கோலம் என்று அனைத்தும் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தன.

ஸ்ரீதேவி எல்லாவற்றையும் நின்று நிதானமாக ரசித்து விட்டு அனைத்தையும் பாராட்டி விட்டு சென்றாள்.

"சரண்... இந்த படகு சூப்பரா இருக்கு இல்ல" என்று படகை காட்டி சொன்னாள் ஸ்ரீதேவி.

"ஆமா 5000 ஆயிரம் பூவால் செஞ்சிருக்காங்கப்பா" என்றாள் சரண்யா.

"இந்த கல்யாணமாலையும் நல்லா இருக்குடி" என்றாள் ஸ்ரீதேவி.

"200 ரோஜா மலரால் செஞ்சிருக்காங்கப்பா." என்று சரண்யா சொன்னாள்.

"என்ன சரண்... உன் பிரண்டுக்கு கல்யாணமாலை ரொம்ப பிடிச்சிருக்கா?" என்றான் அஸ்வின்.

"ஆமாண்ணா" என்று சரண்யா சொல்ல "அவங்க கல்யாணத்தப்ப இதேமாதிரி ரோஜா மாலை செஞ்சிடலாமுன்னு சொல்லு" என்றான் அஸ்வின்.

"என்ன ஜில்லு... அண்ணா சொல்றது ஒகேவா?" என்றாள் சரண்யா.

"சரண்..." என்று ஸ்ரீதேவி அதட்ட "சரி... சரி..." என்றாள்.

ரோஜா மலர் கண்காட்சியில் ஸ்பெசலாக வைக்கபட்டிருந்த ரோஜாபூ அல்வாவை அஸ்வின் வாங்கி தர அனைவரும் சாப்பிட்டனர்.

ஸ்ரீதேவி கண்காட்சியில் வைக்கபட்டிருந்த அனைத்து ரோஜா பூக்களையும் பார்த்து பிரமித்து போனாள்.

"சரண்... எவ்வளவு ரக ரோஜா? எவ்வளவு கலர்ல இருக்குடி?" என்று அதிசயித்து கேட்டாள்.

"இந்த கண்காட்சியில நாலாயிர ரக ரோஜாக்கள் இருக்கு" என்றாள் சரண்யா.

சரண்யா அவர்களுக்கு பிடித்த மஞ்சள் ரோஜாவை வாங்கி கொள்ள இருவரும் தலையில் வைத்துக் கொண்டனர்.

ரோஜா கார்டனை ஒருவழியாக சுற்றி பார்த்து முடித்தபின் பானுமதி அம்மா, ஸ்ரீதேவி, சரண்யா மூவரும் புல்வெளியில் அமர்ந்தனர்.

"என்ன சுற்றி பார்த்தாச்சா? நாம வீட்டுக்கு போலாமா?" என்று அங்கு வந்து சேர்ந்த அஸ்வின் கேட்டான்.

"என்ன ஜில்லு... போலாமா?" என்றாள் சரண்யா.

ஸ்ரீதேவி சரி என்று தலையசைக்க அனைவரும் கிளம்பினார்கள்.

காரை கிளப்பிய அஸ்வினிடம் "அண்ணா... பஜ்ஜி சாப்பிட்டு போலாம்" என்றாள் சரண்யா.

சரி என்ற அஸ்வின் காரை ஒரிடத்தில் நிறுத்தி ஊட்டி மிளகாய் பஜ்ஜி அனைவருக்கும் வாங்கி தந்தான்

ஸ்ரீதேவி அதை சாப்பிட்டு விட்டு "இது காரமே இல்லையே" என்றாள்.

"அதுதான் ஊட்டி மிளகாய் பஜ்ஜி ஸ்பெஷல்" என்றாள் சரண்யா.

"இந்தா உன் பேவரைட்" என்று அவித்த மக்கா சோளமும், வறுத்த கடலையும் வாங்கி தந்தாள் சரண்யா.

"அதான் அங்கேயே நிறைய சாப்பிட்டாமே சரண்." என்றாள் ஸ்ரீதேவி.

"இது வீட்டுல நீ கொறிக்க " என்று அவள் சொல்ல "சரண்... உன்ன" என்று செல்லமாக முறைத்தாள் ஸ்ரீதேவி.

கடலை பொட்டலத்தை பிரித்த ஸ்ரீதேவி எல்லோருக்கும் பிரித்து தர அஸ்வின் உட்பட அனைவரும் சாப்பிட்டனர்.

கார் வீட்டை அடைய அனைவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஸ்ரீநிவாசின் கார் நிற்க அவர்களும் வந்திருந்ததை உணர்த்தியது.

அடுத்த வாரத்தில் வந்தனாவின் தோழிகள் ஆறு பேர் ஊட்டிக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.

தோழிகள் தங்குவதற்காக அறைகளை தேடிய வந்தனா அவுட்ஹவுசில் சிலரை தங்க வைத்தாள்.

அவளின் நெருங்கிய தோழிகள் இருவர் தங்க இடம் தேடியவள் கண்களில் ஸ்ரீதேவியின் அறை தெரிந்தது.



Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top