• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!! ஹலோ!! நமஸ்தே!! டியர் ப்ரெண்ட்ஸ்:love::love::love:

நீங்கள் அளித்த கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து அப்படியே மெய் மறந்து போயிட்டேன்.

ரொம்ப ரொம்ப நன்றி!!!!!!

உங்க எல்லாரையும் ரொம்ப நாள் காத்திருக்க வைக்காம அழகிய மேரி மீ முதல் அத்தியாயத்தோடு வந்து விட்டேன்.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்;):p
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெய்டிங் ஃபார் தி புன்னகை சிரிடி......
காணவில்லை ஹார்ட் பீட் திருடி……

அடடா....
நான் கவிஞன்....
உனை பார்த்து
கெட்டுப்போன கவிஞன்....

ஹானஸ்ட்டா நான் பேசவா
இல்லை இது போதுமா.....
ஓ……மை டார்லிங் ஐ ஏம் அங்க கம்மிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங்.....

ஹானஸ்ட்டாய் நான் கேட்கவா
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா

அழகியே…… மேரி மீ மேரி மீ அழகியே………
ப்ளிர்ட் வித் மீ....
கெட் ஹை வித் மீ....

அழகியே......
கோபம் வந்தால் கூச்சம் வந்தால் டோன்ட் ஒர்ரி....
அழகியே.... ஹே அழகியே....

ஹே அழகியே....
மேரி மீ....மேரி மீ....
அழகியே...
ப்ளிர்ட் வித் மீ....
கெட் ஹை வித் மீ....

அழகியே....
காதல் வந்தா.....
மேட்டர் வந்தா.....
காலடி....
அழகியே....ஹே....
அழகியே....ஹே....

என்று பாடலை போனில் சத்தமாக போட்டு வைத்து விட்டு அதனோடு இணைந்து பாடிக் கொண்டு இல்லை இல்லை உச்சஸ்தானியில் கத்தி கொண்டிருந்தான் அருள் வேந்தன்.


பெயர் தான் சற்று பழைமையாக இருக்கும்.


ஆனால் அருள் பார்ப்பதற்கு அல்ட்ரா மாடனாக ஆணழகன் போல இருப்பான்.


அலை அலையாக கேசம், கூர்மையான பார்வை, புன்னகை மாறாத முகம், தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடல் என நவீன காலத்திற்குரிய இளைஞன் என்பதற்கான அனைத்து தகுதிகளும் அவனிடம் இருந்தது.


லோகநாதன் - வத்சலா தம்பதிகளின் மூத்த வாரிசு தான் நம் நாயகன் அருள் வேந்தன்.
அவனுக்கு அடுத்தது விஜிமீனா.


லோகநாதன் தன் தங்கையின் கணவர் வேல்முருகனுடன் இணைந்து ஒரு பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனி Logo enterpriseயை நடத்தி வருகின்றார்.


வத்சலா பொறுப்பான ஒரு குடும்பத் தலைவி.


விஜி (விஜிமீனா தாங்கோ விஜி) பி.காம் பைனல் இயர் படித்து கொண்டிருக்கிறாள்.


அருள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய கார்டியாலஜிஸ்ட் மேற் படிப்பை முடித்து விட்டு பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணி புரிந்து வருகிறான்.


போனில் பாட்டு முழுதாக ஒலித்து முடிந்ததும் மீண்டும் அருள் அதே பாடலை போட அதை பார்த்து ஒரு ஜீவன் இரத்தக் கண்ணீர் வடித்து கொண்டிருந்தது.


அந்த ஜீவன் வேறு யாரும் அல்ல நம்ம அருளின் சிறு வயது உயிர் தோழன், கூடிய விரைவில் அருளின் தங்கையை திருமணம் முடிக்க இருக்கும் ஒரு நல் உள்ளம் வினித்.


வினித்தும் அருளோடு ஒரே வைத்தியசாலையில் தான் பீடியாட்ரிசியனாக பணி புரிந்து வருகிறான்.


சிறு வயது முதல் வினித்தின் குடும்பமும், அருளின் குடும்பமும் நல்ல நண்பர்களாக இருந்ததாலும், வினித்தைப் பற்றி நல் அபிப்பிராயம் அருளின் குடும்பத்தினருக்கு இருந்ததாலும் வினித்தை விஜிக்கு திருமணம் முடித்து வைக்கலாம் என பெரியவர்கள் தீர்மானித்திருந்தனர்.


தன் மேல் போர்த்தி இருந்த போர்வையை தூக்கி எறிந்து விட்டு எழுந்து வந்த வினித் அருளின் முன்னால் நின்று கொண்டு இடுப்பில் கை வைத்து அருளை முறைத்து பார்க்கவும் வினித்தை கேள்வியாக நோக்கினான் அருள்.


"ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா? காலங்காத்தாலேயே இந்த பாட்டை போட்டு கொல்லுற! சரி ஒரு தரம் போட்டுட்டு விட்டாலும் பரவாயில்லை. நீ விடிஞ்சு எழும்புனதுல இருந்து இப்போ வரைக்கும் 50 தரம் போட்டுட்டடா!!!" என்று கூறிய வினித் விட்டால் அழுது விடுவான் என்ற நிலையில் நின்று கொண்டிருந்தான்.


"என்ன 50 தானா??? நேற்று 75 தரம் போட்டேனே? எப்படியாவது நேற்றைய ரெக்கார்ட பீட் பண்ணிடணும்" என்று விட்டு மீண்டும் பாடலை போட


அவன் கையில் இருந்த போனை பறித்து பாடலை ஆஃப் செய்த வினித்
"டேய்!! டேய்!!! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எப்போவோ மால்ல ஒரு பொண்ண நீ பார்க்கும் போது இந்த பாட்டு எங்கேயோ எவனோ போட்டுட்டான். அதுக்காக இரண்டு வருஷமா டெய்லி இந்த பாட்டை நீ போட்டு என்ன ஏன்டா கொல்லுற?? பாட்டு போடுறதோட நிறுத்தாம உன் கர்ண கொடூரமான வாய்ஸால இந்த பாட்டை பாடி மொத்தமாக என்ன சாவடிக்குறியே!!! ஏன்?? ஏன்??? ஏன்????" என்று வினித் கேட்கவும்


எழுந்து அவன் தோளில் கையை போட்டு கொண்ட அருள்
"டேய் மச்சான்!!! உனக்கு லவ்வாலோஜியே தெரியலடா! இப்போ நான் ஏன் டெய்லி இந்த பாட்டை போடுறேன்னு தெரியுமா? நான் அந்த பொண்ண மால்ல ஒரு வீக்லயே நாலு வாட்டி மீட் பண்ணேன். மீட் பண்ண நாலு வாட்டியும் இதே பாட்டு தான் அங்க போட்டாங்க" எனவும்


"அதனால் தாங்கள் இந்த உலகத்திற்கு கூற வரும் கருத்து என்னவோ???" என்று வினித் கேட்டான்.


"இப்போ நான் டெய்லி இந்த பாட்டை போட்டுட்டே இருந்தேன்னு வை ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த பொண்ணு இந்த வழியால போகும் போது இந்த பாட்டை கேட்டா என்ன தேடி வரலாம்லே???" என்று கூறவும் தன் தலையில் அடித்துக் கொண்டான் வினித்.


"நீயெல்லாம் எப்படிடா டாக்டரான?? இந்த பாட்டு கேட்டா நீ தான் போட்டேனு அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்?? அதோட இந்த சென்னையில நீ மட்டும் தான் இந்த பாட்டு போடுவியா???" என்று வினித் கேட்கவும்


"அங்கே தான் ஐயா ஒரு ட்விஸ்ட்டு வைச்சிருக்கேன். அதை இப்போ சொன்னா சஸ்பென்ஸ் இருக்காது. சோ போகப்போக புரிஞ்சுப்ப. முதல்ல போய் ரெடி ஆகிட்டு வா. ஹாஸ்பிடல் போக டைம் ஆச்சு" என்று விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான் அருள்.


"எல்லாம் என் நேரம். நீ உளர்றத எல்லாம் கேட்கனும்னு என் தலையில விதிச்சிருக்கு பாரு. நீ பண்ணுற எல்லாத்தையும் மீனுக்குட்டிக்காக அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். இல்லனா எப்போவோ உன்ன கீழ்ப்பாக்கத்துக்கு பார்சல் பண்ணிருப்பேன்டா!!!" என்று வினித் சத்தமாக கூறவும்


உடை மாற்றி தயாராகி வந்த அருள்
"டேய்!!! நீ இன்னும் கிளம்பலயா??? உன்னை டாக்டர்னு நினைச்சு நாலு, அஞ்சு ஜீவன்கள் ஹாஸ்பிடல்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. போ போ போய் ரெடி ஆகிட்டு வாடா!!" என்று கூறவும் முணுமுணுத்துக் கொண்டே தயாராக சென்றான் வினித்.


அருளும், வினித்தும் மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலம் முதல் ஒரு அறையில் தான் தங்கி படித்து வந்தனர்.


அவர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்பும் அதே அறையில் தான் தங்கி இருக்கின்றனர்.


வினித் தயாராகி வரும் வரை காத்திருந்த அருள் போன் அடிக்க எடுத்து பார்த்தவன் 'வத்ஸ்' என்ற பெயர் வரவும் சிரித்துக் கொண்டே போனை அட்டன்ட் செய்தான்.


"ஹாய்!!! வத்ஸ். எப்படி இருக்க?? விஜி எங்க? காலேஜ் போயிட்டாளா?" என்று அருள் கேட்கவும்


மறு முனையில் வத்சலா
"நாங்க எல்லாரும் நல்லா தான்டா இருக்கோம். விஜி காலேஜ் போயிட்டா. ஆமா உனக்கு வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா? இல்லையா?" என்று கேட்க


"வத்ஸ் பேபி எனக்கு மட்டும் வர ஆசை இல்லையா?? கொஞ்சம் கொஞ்சமாக இப்போ தான் எல்லா திங்ஸையும் ரிமூவ் பண்ணிட்டு இருக்கோம். ரூம்ல வேலை முடிஞ்சதும் ஓடி வந்துடுறேன்" என்று கூறினான் அருள்.


"படிக்குற டைம்ல தான் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணணும்னு ரூம் எடுத்து தங்குன. அது தான் இப்போ வேலை எடுத்துட்டியேடா. இனியாவது வீட்டுக்கு வந்து தங்கலாமே" என்று வத்சலா கேட்டதற்கும்


"வத்ஸ் சம் டைம் நைட் சிப்ட் வேலை வரலாம். சம் டைம் லேட்டா வரவேண்டி இருக்கலாம். அது தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணாம இங்க இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் தானே. விஜி, வினித் மேரேஜ் நடந்துடுச்சுனா. வினித் அவங்க வீட்டுக்கு போய்டுவான். நானும் இந்த ரூம்மை புல்லா காலி பண்ணிட்டு வந்துடுவேன். சரியா??" எனக் கேட்கவும்


"அப்போ விஜி கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நைட் சிப்ட் வராதா??" என்று வத்சலா எதிர் கேள்வி கேட்க என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தான் அருள்.


அருள் அமைதியாக இருப்பதைப் பார்த்த வத்சலா
"என்னமோ சொல்ற! ஆனா சனி, ஞாயிறு கண்டிப்பாக வீட்டுக்கு வந்துடனும்" என்று வத்சலா கண்டிப்புடன் கூற


"ஓகே ஓகே டன்" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு போனை வைத்தான் அருள்.


"வீட்டுக்கு போனா இந்த பாட்டை சத்தம் போட்டு கேட்க முடியாதே!! இன்பாக்ட் நான் பாடவும் முடியாதே!! அப்புறம் எப்படி நான் அவளை கண்டு பிடிக்குறது??" என்று அருள் யோசித்து கொண்டிருக்க தயாராகி வந்த வினித்


"கிளம்பலாமா அருள்?" என்று கேட்கவும் தன் சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு ஹாஸ்பிடல் செல்ல புறப்பட்டான் அருள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
இருவரும் தங்கள் பைக்கை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர்.


ஹாஸ்பிடல் சென்ற பின் அருளும், வினித்தும் தங்கள் கடமைகளை பார்க்க தொடங்கினர்.


மதிய வேளை வந்ததும் சாப்பிட செல்வதற்காக அருளை அழைக்க வந்த வினித் அருள் அவன் அறையில் இல்லாமல் இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தவனாக அருளைத் தேடி சென்றான்.


ஹாஸ்பிடலின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தலையில் கை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்த அருளைப் பார்த்ததும் விரைந்து அவனருகில் சென்றான் வினித்.


"டேய்!!! அருள் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?? என்னடா ஆச்சு???" என்று வினித் கேட்கவும்


நிமிர்ந்து வினித்தைப் பார்த்து அருள்
"எனக்கு ரொம்ப பயமாக இருக்குடா வினித்" என்று கூறவும் அவனருகில் அமர்ந்து கொண்டு அவன் தோளில் ஆதரவாக கை போட்டு அமர்ந்தான் வினித்.


"என்னாச்சு அருள்???" என்று கேட்க


"அவளை நான் திரும்பவும் மீட் பண்ணுவேனா?? எனக்கு பயமாக இருக்குடா. அவ எனக்கு கிடைப்பா தானே???" என்று தவிப்பாக அருள் கேட்கவும்


"இரண்டு வருஷமா காத்துட்டு இருந்த தானே?? இப்போ என்ன திடீர்னு சந்தேகம்??" என்று கேட்டான் வினித்.


"இல்லடா காலையில நீ சொன்ன தானே! இந்த பாட்டை மட்டும் வைச்சு அவ எப்படி உன்னை தேடி வருவானு. இப்போ தான் நான் ஒவ்வொரு விஷயமாக யோசிச்சு பார்த்தேன். இரண்டு வருஷமா அவ வரலயேடா?? ஒரு வேளை அவ என்ன மறந்துட்டாளோ!!" என்று அருள் கூறவும்


அவனை பார்த்து சிரித்துக் கொண்ட வினித்
"டேய் உனக்கே இது ஓவரா தெரியலயா?? நீ என்னவோ அந்த பொண்ண லவ் பண்ணி பிரிஞ்சு வந்து அந்த பொண்ணுக்காக வெயிட் பண்ணுற மாதிரி சொல்ற?? நீ அந்த பொண்ண பார்த்ததே நாலு, அஞ்சு தடவை தான். அதற்கு
என்னவோ எத்தனையோ வருஷம் பழகிட்டு பிரிஞ்ச மாதிரி சீன் போடுற?? உனக்கு அவ தான்னு
இருந்தா கண்டிப்பாக அவ உன்னை தேடி வருவா. சும்மா கன்பியுஸ் ஆகாம வழக்கம் போல ஹெப்பியா இருடா. சியர் அப் மேன்" என்று கூறி அருளை அழைத்து சென்றான் வினித்.


"நான் தான் அவகிட்ட எல்லாமே தெளிவாக சொல்லிட்டு தானே வந்தேன். ஏன் அவ என்ன தேடி வரவே இல்லை?? அவ கண்ணுல நான் காதலை பார்த்தேனே? ஒரு வேளை எனக்கு அப்படி தோணுச்சா???" என்று அருள் மனதில் எழுந்த குழப்பத்தோடு வினித்தோடு இணைந்து நடந்தான்.


நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மனதிலும் வெவ்வேறான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.


"கடவுளே!!! எப்படியாவது அருள் ஆசைப்பட்ட லைப்ப அவனுக்கு கொடுத்துடு" என்று மனதில் வினித் வேண்டிக் கொள்ள


"கடவுளே!!! என்னோட ஏஞ்சலை எப்படியாவது என் கண்ணுல காட்டிடுப்பா" என்று அருள் மானசீக மனதினுள் வேண்டிக் கொண்டான்.


அருள் மனதை கொள்ளை கொண்ட அந்த கன்னி எங்கே இருக்கிறாளோ?????.......

ec185224-a207-7b3e-84d5-5a8136409e2e.JPG
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top