• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Azhagiye marry me.....-26[Pre-final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி........

என்னுடைய நாவலுக்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி......

IMG_20181023_204020.pngIMG_20181023_203915.png
அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட சுலோச்சனா
"என்ன விளையாடுறீங்களா??? யாரு இந்த பொம்பள?? ஏய் யாரு நீ???" என்று தன் ஒட்டுமொத்த கோபத்தையும் நேத்ராவிடம் காண்பிக்க அவரோ கொஞ்சம் கூட சலித்து கொள்ளாமல் அமைதியாக வேல்முருகனைப் பார்த்தார்.


"இதோ பார் சுலோச்சனா.....இத்தனை வருஷமா உன் பேச்சை கேட்டு ஒரு பொட்டி பாம்பு போல நான் அடங்கி ஒடுங்கி இருந்தது எல்லாம் முடிந்து போயிடுச்சு.....இனி என்னையும், என் பொண்ணையும் நேத்ரா பார்த்துக்குவா.....இனி உன் கிட்ட எனக்கு பேச்சு வார்த்தை இல்லை" என்று விட்டு அறைக்குள் செல்லப் போக அவர்களை நகர விடாமல் வழி மறித்தவாறு வந்து நின்றார் சுலோச்சனா.


"கண்ட கண்ட தெரு நாயெல்லாம் என் வீட்டுக்குள் வர்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்....மரியாதையா இவளை அடிச்சு விரட்டி விட்டுட்டு வாங்க..." என்று சுலோச்சனா கூறவும்


"என்னை வெளியே போக சொல்ல நீ யாரு???" என்று கேட்டார் நேத்ரா.


"நான் இந்த வீட்டு எஜமானி...இவரோட மனைவி...ஷோபாவோட அம்மா...." என்று படபடவென சுலோச்சனா கூற


அவரைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்ட நேத்ரா
"எஜமானி ஓகே....பட் இந்த மனைவி அன்ட் அம்மா....அக்செப்ட் பண்ணுற மாதிரி நீ நடந்துக்கிட்டதா தெரியலையே....ஒரு வேளை நீ மனைவியா ஒழுங்காக நடந்திருந்தா இவரு ஏன் என்னை தேடி வரப்போறாரு....


சரி இவரை விடு....உன் பொண்ணு...அவ கூட உன்னை வெறுத்துட்டு என்கிட்ட வந்துட்டாலே.....அப்புறம் எப்படி நீ ஒரு மனைவி அன்ட் அம்மாவாக இருக்க முடியும்???" என்று கேட்கவும் பதில் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றார் சுலோச்சனா.


"ஷோபா என்ன இது?? இந்த பொம்பள என்னென்னவோ எல்லாம் சொல்லுறா....யாரு இவ நீயாவது சொல்லுமா..." என்று ஷோபாவின் கை பிடித்து சுலோச்சனா கேட்கவும்


வேல்முருகனையும், நேத்ராவையும் ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்ட ஷோபா
"இவங்க என் அப்பா அன்ட் இவங்க என் அம்மா....." என்று அசராமல் சுலோச்சனாவின் தலையில் பாரிய இடி ஒன்றை இறக்கினாள்.


"என்ன ஷோபா விளையாட்டு இது எல்லாம்??? குத்து கல்லாட்டம் உன்னை பெத்த அம்மா இங்க இருக்கேன்.....கண்டவளை உன் அம்மானு சொல்ற??" என்று கோபமாக சுலோச்சனா சத்தமிட


தன் கையை சுலோச்சனாவின் கையில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்ட ஷோபா
"நீ குத்து கல்லு தான்மா....எல்லோர் வாழ்க்கையிலும் குத்து கல்லு மாதிரி தானே இருக்குற....நீ என்னை பெத்து எடுத்துவ தான்....ஆனா ஒரு அம்மாவா நீ நடந்திருக்கியா சொல்லு....நேரத்துக்கு சாப்பாடு, கேட்காமலே விதம் விதமான ட்ரெஸ்....இது மட்டும் தான் அம்மாவுக்கு உரிய கடமையா??? நல்லது எது? கெட்டது எது? எதுவுமே நீ சொல்லி தரலயே மா....உனக்கு தேவை எல்லாம் பணம்....கட்டுன புருஷனும் தேவை இல்லை, பெத்த பொண்ணும் தேவை இல்லை....இவ்வளவு நாள் பொறுமையாக போயிடுச்சு....ஆனா இனிமேல் இது நடக்காதுமா....


ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சு உன் பொண்ணோட வாழ்க்கையை உருவாக்க பார்த்தியே அப்போவே நீ ஒரு பொண்ணா, ஒரு அம்மாவா தோத்துட்டமா...தோத்துட்ட....உனக்கு தேவை சொத்து, பணம், ஆஸ்தி....நானும், அப்பாவும் இப்போவே இந்த நிமிஷமே வீட்டை விட்டு போயிடுறோம்....ஆயுசுக்கும் இந்த சொத்தோடு வாழு....வாங்கப்பா போகலாம்..." என்று விட்டு வேல்முருகன் மற்றும் நேத்ராவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.


"போயிடுவீங்களா நீங்க??? உங்களுக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா??? இப்போ பெரிய இவளாட்டம் பேசிட்டு போறேலே ஷோபா....நீயாவே திரும்ப என்கிட்ட வருவ...அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை....உங்க அப்பனுக்கும் சொல்லி வை. இருக்குற பணம் எல்லாம் செலவானதும் என்னைத் தேடி தான் வரணும்....மறந்துடாதீங்க...." என்று உச்சஸ்தானியில் சுலோச்சனா சத்தமிட்டு கத்தியும் அவரது பேச்சு காற்றோடு கரைந்து போனது.


வீட்டை விட்டு வெளியேறி வந்த மூவரும் ஏற்கனவே வாடகைக்கு எடுத்து இருந்த அவர்களது வீட்டிற்குள் சென்றனர்.


வீட்டினுள் நுழைந்ததுமே தன் கையில் இருந்த நேத்ராவின் கைகளை அவசரமாக விலக்கி கொண்ட வேல்முருகன்
"ஸாரி ஸாரி....." என்று விட்டு அவசரமாக தனது அறைக்குள் நுழைந்து கொள்ள சென்றார்.


"அப்பா...." என்று ஷோபா அழைக்கவும் திரும்பி பார்க்கமாலேயே அந்த இடத்திலேயே நின்றார் வேல்முருகன்.


அவர் முன்னால் வந்து நின்ற ஷோபா
"என்னாச்சு பா??? உங்க முகமே சரி இல்லையே...." என்று கேட்கவும்


"என்னதான் சுலோச்சனா கெட்டவளாக இருந்தாலும் என்னை எந்த காரணத்துக்காகவும் பிரிஞ்சு இருக்க மாட்டா....ஆபீஸ் வேலையா வெளியூருக்கு போனாலும் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் எடுத்துட்டே இருப்பா....இன்னைக்கு என்னை வேற ஒரு பொண்ணு கூட பார்த்ததும் அவ முகம் அப்படியே வாடி, சோர்ந்து போயிடுச்சு.....அதைத் தான் என்னால தாங்கிக்க முடியல...." என்று கண்கள் கலங்க கூற அவரது கைகளை ஆதரவாக பற்றி கொண்டாள் ஷோபா.


"அப்பா உங்க கஷ்டம் எனக்கு புரியுதுபா...ஆனா அம்மாவை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பிரச்சினை வருமோனு பயமாக இருக்குபா....அம்மா என்ன பண்ணுணாலும் உங்களை விட்டு கொடுக்க மாட்டாங்க. அதனால தான் இப்படி எல்லாம்....எப்பாடு பட்டாவது இந்த திட்டத்தில் நாம அம்மாவை திருத்தியே ஆகணும்பா..." என்று ஷோபா கூறவும் அவளது தலையை ஆதரவாக தடவி கொடுத்து விட்டு வேல்முருகன் அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.


அறைக்குள் சென்ற வேல்முருகனையே பார்த்து கொண்டு நின்ற ஷோபா
"ஷோபனா...." என்ற நேத்ராவின் அழைப்பில் கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டு சிரித்த வண்ணமாக அவரை திரும்பி பார்த்தாள்.


"உங்களோட திட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் ஷோபனா. அதற்காக என்னால முடிந்த எல்லா உதவிகளையும் நான் பண்ணுவேன்" என்று நேத்ரா கூறவும் புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தாள் ஷோபா.


மது எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஆபிஸ் செல்வதற்காக தயாராகி வந்து வத்சலாவிடம் சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.


போகும் வழியில் ஒரு முறை அவளை அறியாமலே ஷோபாவின் வீட்டை ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்டே மது தன் வண்டியை ஓட்டினாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஆபீஸ் வந்து சேர்ந்த மதுவின் மனதோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.


ஏனோ அன்று அவளினால் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை.


கதிரையில் அமர்ந்து கொண்டு பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே விட்டத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.


"எக்ஸ்கியுஸ் மீ..." என்ற ஸ்ரீதரின் அழைப்பில் தன்னிலை அடைந்த மது


முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு
"வா ஸ்ரீ...." என்று அழைத்தாள்.


"என்ன மது டல்லா இருக்க??? உடம்பு எதுவும் சரி இல்லையா??" என்று ஸ்ரீதர் கேட்கவும்


இல்லை என்பது போல தலை அசைத்த மது
"ஷோபா ஞாபகம் தான் ஸ்ரீ....அங்கே என்ன ஆச்சோ தெரியலை....சுலோச்சனா ஆன்டி என்ன நிலையில் இருக்காங்களோ தெரியலையே....பாவம் அவங்க இவ்வளவு பெரிய அதிர்ச்சியை தாங்குவாங்களா??" என்று கேட்கவும் வாய் விட்டு சிரித்தான் ஸ்ரீதர்.


"இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இந்த சிரிப்பு??" என்று மது கேட்கவும்


"இல்லை நீ நிஜமாகவே லூஸாகிட்டியா மது?? அந்த பொம்பளையைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ இந்தளவிற்கு பரிந்து பேசுற....யூ நோ முள்ளை முள்ளால் தான் எடுக்கணும். அதே மாதிரி அடுத்தவங்க வாழ்க்கையை அழிக்க நினைக்குறவங்களை அவங்க ரூட்ல போய் தான் மடக்கணும். ஷோபா செய்றது கரெக்ட் தான்....அவ அம்மாவை திருத்தணும்னு அவ இந்தளவிற்கு ரிஸ்க் எடுக்குறாளே....சீ இஸ் ரியலி கிரேட்...." என்று ஸ்ரீதர் கூற அவனை வியப்பாக பார்த்தாள் மது.


மதுவின் பார்வையில் இருந்த வியப்பை உணர்ந்தவனாக
"நானும் பழைய சம்பவங்கள் எல்லாவற்றையும் மறந்து அவகிட்ட பேசலாம்னு இருக்கேன் மது....முதல்ல இந்த பிராப்ளம் சால்வ் ஆகணும்....அப்புறம் அம்மா கிட்ட சொல்லி அவ வீட்டுக்கு ட்ரெக்டா போய் ஷோபாவிற்கு ஒரு சர்ப்பரைஸ் கொடுக்கலாம்...." என்று புன்னகையோடு கூறினான் ஸ்ரீதர்.


"கேட்டுச்சா ஷோபா....உனக்கு சர்ப்பரைஸாமாம்...." என்று மது கூறவும் அவசரமாக பின்னால் திரும்பிப் பார்த்த ஸ்ரீதர் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த ஷோபாவை அதிர்ச்சியாக பார்த்த வண்ணம் எழுந்து நின்றான்.


"ஸ்ரீ....." என்று கூவலோடு அவனை அணைத்துக் கொண்ட ஷோபா


"நீங்க மனசு மாறுவீங்கனு எனக்கு தெரியும் ஸ்ரீ....நான் வெளியில் வந்து நின்னு மதுவுக்கு மெசேஜ் பண்ணும் போது ஒரு குட் நியூஸ் சீக்கிரம் வானு அவ ரிப்ளை பண்ணா...அப்போவே என் மனசு சொல்லிச்சு நீங்க என்னை மன்னிச்சு இருக்குறதாதான் இருக்கும்னு....ஆனா நீங்க என்னை காதலிக்குறதையும் சொல்லுவீங்கனு எதிர் பார்க்கல ஸ்ரீ....இப்போவே என் உயி...." என்றவளின் வாயின் மேல் கை வைத்த ஸ்ரீதர்
வேண்டாம் என்பது போல தலை அசைத்தான்.


"க்கும்....." என்று மது சத்தம் இட சுற்றிலும் பார்த்து விட்டு சட்டென்று ஸ்ரீதரிடம் இருந்து விலகி நிற்க முயன்றாள் ஷோபா.


ஆனால் அவளை விலக விடாமல் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஸ்ரீதர் மதுவின் புறம் திரும்பி


"நீ இத்தனை வருஷத்துல பண்ணுண உருப்படியான காரியம் இது தான் மது...." என்று கூற ஸ்ரீதருக்கு பழிப்பு காட்டி விட்டு ஷோபாவின் கை பற்றி குலுக்கி மது தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாள்.


"அப்புறம் பிளான் எந்த ரேஞ்ச்ல போகுது??" என்று ஸ்ரீதர் கேட்கவும் காலையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறிய ஷோபா


"இப்போ தானே ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்....இன்னும் கொஞ்ச டேஸ் தான்....அம்மாவை மாற்றிடலாம்" என்று கூற ஆதரவாக அவள் கைகளை பற்றி கொண்டாள் மது.


சிறிது நேரம் பேசி விட்டு ஷோபா கிளம்பி சென்று விட மதுவும், ஸ்ரீதரும் ஆபீஸ் வேலைகளில் மூழ்கி போயினர்.


ஆபீஸ் முடிந்ததும் வீடு வந்து சேர்ந்த மதுவின் மனதோ காலையில் இருந்த நிலையில் இருந்து முற்றாக மாறி அமைதியாக இருந்தது.


குளித்து விட்டு வந்து பூஜையறையில் விளக்கேற்றி விட்டு கண் மூடி நின்று தன் தாய், தந்தை இருவரிடமும்
"நாங்கள் திட்டமிட்ட காரியம் வெற்றி அடைய வேண்டும்" என்று மனதார வேண்டிக் கொண்டாள்.


அருள் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அவனிடம் ஷோபா மற்றும் ஸ்ரீதர் பற்றி கூறிய மதுவை ஆசையாக அணைத்துக் கொண்டான் அருள்.


"அப்போ டோடலா எல்லாம் சுபம்....அத்தையை தவிர இல்லையா??? அப்போ அத்தையையும் சுபமா மாற்றிடுவோம்...." என்று கண்ணடித்து அருள் கூற


"ரொம்ப கரெக்ட்...." என்ன அவன் மேல் சாய்ந்து கொண்டாள் மது.


ஷோபா, வேல்முருகன் வீட்டை விட்டு சென்றதில் இருந்தே முழுமையாக சோர்ந்து போனார் சுலோச்சனா.


என்ன தான் வெளியில் தன்னை அலங்கரித்து கொண்டு மற்றவர்கள் கண்கள் முன்னால் சந்தோஷமாக இருப்பதை போல அவர் காட்டிக் கொண்டாலும் மனதளவில் உடைந்து போய் இருந்தார் சுலோச்சனா.


எதிர் வீட்டிலேயே வாடகைக்கு இருந்த வேல்முருகனும், ஷோபாவும் நேத்ராவோடு சந்தோஷமாக இருப்பதை காண காண சுலோச்சனாவிற்கு உள்ளமெல்லாம் சோகத்தால் உழன்றது.


இனி என் வாழ் நாள் முழுவதும் இப்படியே தனித்து தான் வாழ வேண்டி வருமோ என்ற எண்ணமே அவரை முதன் முதலாக அச்சம் கொள்ள செய்தது.


இந்த பணம் எதுவும் எனக்கு வேண்டாம் என்று சத்தமிட்டு கத்த வேண்டும் என்பது போல சுலோச்சனாவிற்கு எண்ணம் தோன்றினாலும் ஏனோ அவர் மனம் அதனை செய்ய விடாமல் தடுத்தது.


இரண்டு, மூன்று வாரங்களாக மறைவாக சுலோச்சனாவின் நடவடிக்கைகளை அனைவரும் கண்காணித்து கொண்டே வந்தனர்.


ஆனால் சுலோச்சனாவோ எந்த சுய உணர்வும் இல்லாமல் இயந்திரத்தனமாக வீட்டுக்குளேயே அடைந்து கிடந்தார்.


வேல்முருகன் சுலோச்சனாவைப் பார்த்து கவலை கொண்டு அவரிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று பலமுறை முயன்றும் ஷோபா அவரை கட்டுப்படுத்தி வைத்தாள்.


"வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்குற மாதிரி எல்லாம் கை கூடி வர்றப்போ சொதப்பிடாதீங்கப்பா....." என்று பலமுறை வேல்முருகனை அடக்கி வைத்தாள் ஷோபா.


அவர்களுடைய திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு இன்றோடு இரண்டு மாதங்கள் முடிவுற்று இருந்தது.


தங்கள் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஸ்ரீதர், மது, அருள், விஜி மற்றும் வினித் அனைவரும் ஷோபாவின் புதிய வீட்டிற்கு வருகை தந்து இருந்தனர்.


லோகநாதன்- வத்சலா தம்பதியருக்கு இந்த திட்டத்தை பற்றி தெரிந்திருந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று இளையோர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர்.


புதிதாக வளர்ந்து வரும் காதல் ஜோடி ஸ்ரீதர் மற்றும் ஷோபாவை மற்றைய இரு ஜோடிகளும் வம்பிழுத்துக் கொண்டிருக்க அவர்கள் சிரிப்பில் அந்த வீடே மிதந்து கொண்டிருந்தது.


அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவும்

"அப்பா வந்துட்டாங்க போல....நான் போய் கதவை திறக்குறேன்...." என்றவாறு எழுந்து சென்ற ஷோபா கதவைத் திறந்தாள்.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top