• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Azhagiye marry me.....-27 [Final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
கதவைத் திறந்த ஷோபா எதிரில் நின்ற சுலோச்சனாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போக பேச நா எழாமல் விழித்து கொண்டு நின்றாள்.


"யாரு வந்துருக்காங்கனு பார்க்க போறேனு சொல்லிட்டு போனவ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா?? ஷோபா யாரு வந்துருக்காங்க???" என்றவாறே வாயிலை நோக்கி சென்ற ஸ்ரீதர்வெளியே நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து சட்டென்று நின்றான்.


"என்னாச்சு இவனுக்கு??? ஏதோ பேய், பிசாசைப் பார்த்த மாதிரி ஜெர்க் ஆகி நிற்குறான். ஒரு வேளை சுலோச்சனா அத்தை வந்துட்டாங்களோ???" என்று கேலியாக சிரித்துக் கொண்டே அருள் சத்தமிட்டு கேட்கவும்


அவனைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீதர்
"அத்தையே தான் வந்துருக்காங்க..." என்று கூற


"என்ன????....." என்று அதிர்ந்து போய் அனைவரும் ஸ்ரீதரின் அருகில் வந்து நின்றனர்.


வாசலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனா மதுவைக் காணவும்


அவசரமாக அவளருகில் ஓடி வந்து அவளது காலில் விழப் போக
"ஐயோ!!!! என்ன பண்ணுறீங்க நீங்க???" என்றவாறு அவரைத் தடுத்து நிறுத்தினாள்.


"நான் பாவி!!! நான் பாவி!!! என்னால எத்தனை பேர் வாழ்க்கை சீரழியப் பார்த்துருக்கு....நான் பாவி!!!! காலம் பூரா உங்க எல்லாருக்கும் சேவகம் பண்ணுணாலும் நான் பண்ண தப்புக்கு பரிகாரம் கிடைக்காது.....நான் பாவி ஆகிட்டேனே...." என்றவாறு தன் முகத்தில் அறைந்து கொண்டு சுலோச்சனா அழவும்


ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்ட ஷோபா
"அம்மா அழாதேமா....நீ அதெல்லாம் தெரியாம பண்ண தப்புமா....நீ அழுதா என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு....ப்ளீஸ் மா அழாதேமா....நீ மனசு மாறி திருந்தி வாழுறது தான் எங்களுக்கு தேவை.....இப்படி நீ உன்னையே அடிச்சுக்காதேமா ப்ளீஸ்...." என்று கண்ணீரோடு கூற சூழ நின்ற மற்றவர்களும் சிறிது கலங்கி தான் போயினர்.


இரண்டு, மூன்று வாரங்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால் என்னவோ சுலோச்சனாவின் முகமெல்லாம் வாடி, கண்கள் எல்லாம் கலங்கி, எந்த வித ஆபரணங்களோ, ஒப்பனையோ இல்லாமல் எளிமையான கசங்கிய காட்டன் புடவை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்ற இந்த சுலோச்சனா முற்றிலும் புதிதாகவே தெரிந்தார்.


"என்ன அத்தை இப்படி ஆகிட்டீங்க???" என்றவாறு விஜி அவரருகில் வந்து நின்று கேட்க


அவளைப் பார்த்து புன்னகத்து கொண்ட சுலோச்சனா
"எத்தனை பேர் எத்தனை விதமான அறிவுரைகள் எடுத்து சொல்லியும் கேட்காமல் இருந்த என் புத்திக்கு என் பொண்ணும், என் கணவரும் நல்லா உறைக்குற மாதிரி புரிய வைச்சுட்டாங்க.....என்ன நடந்தாலும் அவங்க என் கூட தானே இருக்கப் போறாங்கனு எல்லாத் தப்பையும் யோசிக்காமல் பண்ணுணேன்.....ஆனா அன்னைக்கு ஷோபா சொன்ன வார்த்தை என் தப்பை எனக்கு உணர்த்திடுச்சு.....ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்து உன் பொண்ணுக்கு வாழ்க்கை அமைக்கப் போறியானு கேட்டா....அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நடந்த போது தான் என்னோட தப்பெல்லாம் நான் உணர்ந்தேன்....." என்று கண்கள் கலங்க கூறினார்.


"ஒரு விஷயம் அவங்களுக்கு நடக்கும் போது தான் அதோட வீரியம் புரியும்....அதே தான் என்னோட இந்த மாற்றங்களுக்கும் காரணம்...." என்று சுலோச்சனா கூறவும் அன்போடு அவரை இறுக அணைத்துக் கொண்டாள் ஷோபா.


"எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க.....இத்தனை நாள் பணம் தான் எல்லாம்னு வாழ்ந்துட்டு இருந்தேன்.....ஆனா இன்னைக்கு உறவுகளும் முக்கியம்னு நான் புரிஞ்சுகிட்டேன்....ஆனால் நான் இதை உணர்ந்து கொள்றதுக்கு முதல் எல்லாம் கை மீறி போயிடுச்சு...." என்று வருத்தத்துடன் சுலோச்சனா கூறவும்


"என்ன கை மீறி போயிடுச்சு???" என்று புரியாமல் அனைவரும் கேட்டனர்.


"அதுதான் அவர்... வேற ஒரு பொண்ணு....." என்று மேற் கொண்டு கூற முடியாமல்
சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழ அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு நின்றனர்.


அனைவரும் சிரித்த வண்ணமாக நிற்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட சுலோச்சனா
"ஏன் எல்லாரும் சிரிக்குறீங்க???" என்று கேட்கவும்


அவர் தாடையைப் பிடித்து ஆட்டிய ஷோபா
"என் செல்ல அம்மா.....அவ்வளவு ஈஸியாக உங்க ஹப்பி வேல்முருகன் வேற பொண்ணு பின்னாலே போயிடுவாருனு நினைச்சீங்களா....இந்த பிளான்க்கு அப்பாவை சம்மதிக்க வைக்கப் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்......அய்யோ.....போதும் போதும்னு ஆயிடுச்சு...." என்று போலியாக அலுத்துக் கொள்வது போல கூற


"அப்போ இதெல்லாம் டிராமாவா???" என்று அதிர்ச்சியாக கேட்டார் சுலோச்சனா.


"ஆமா எங்க அத்தையை நல்லவங்களா மாற்ற நாங்க போட்ட டிராமா...." என்று மது கூறவும்


தன் கண்களை துடைத்து கொண்ட சுலோச்சனா
"எனக்கு தெரியும் என்னோட வீட்டுக்காரர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாருனு...." என்று மகிழ்ச்சியுடன் கூற


"இத்தனை மாசப் போராட்டம் இந்த அத்தையை நாங்க வெளியில் கொண்டு வர்றதுக்காகதான்...." என்று கூறினான் அருள்.


"ஷோபா உங்க அம்மா....." என்றவாறே வீட்டினுள் நுழைந்த வேல்முருகன் ஹாலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து ஆணியடித்தாற் போல உறைந்து நின்றார்.


வேல்முருகனைப் பார்த்ததும் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு அவர் முன்னால் வந்து நின்ற சுலோச்சனா


"ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்களோ??? புது பொண்டாட்டி, புது வீடு....ஒரே குதூகலம் தான் போல....அப்படியே இந்த வீட்டுலேயே இருந்துக்கோங்க.....நான் மாற எல்லாம் மாட்டேன்...." என்று கோபமாக கூற புரியாமல் சுலோச்சனாவை பார்த்து கொண்டு நின்றார் வேல்முருகன்.


சுலோச்சனாவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன ஷோபா
"அம்மா...." என்று அழைக்கவும்


சுலோச்சனா பின்னால் திரும்பிப் பார்த்து
"உன் அம்மாவை குறைச்சு எடை போட்டுட்டியே ஷோபா...." என்று கேலியாக சிரித்தார்.


"அம்மா என்னம்மா பேசுற நீ??? இவ்வளவு நேரமாக நல்லா தானே பேசிட்டு இருந்த??" என்று ஷோபா கேட்கவும்


அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சுலோச்சனா அங்கே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு வாகாக கால் மேல் கால் போட்டுக்கொண்டே விரலை சொடக்கிட நேத்ரா தலை குனிந்த வண்ணம் வந்து நின்றார்.


"நேத்ரா ஆன்டி...." என்று மது முணுமுணுத்துக் கொள்ள எல்லோரும் அதிர்ச்சியாக நடப்பது புரியாமல் நின்றனர்.


"என்ன நினைச்சுட்டீங்க எல்லாரும் என்னை பற்றி??? நீங்க எல்லாரும் போனா என்னால இருக்க முடியாதா??? உங்க எல்லாரையும் நம்ப வைக்கத்தான் இத்தனை நாள் சோகமாக இருக்கிற மாதிரி நடந்துக்கிட்டேன்.....
இந்த ஆளு வேற ஒருத்தியை கூட்டிட்டு வந்து நின்னா....அவர் காலடியில் போய் விழுந்துடுவேனா என்ன?? ஆனாலும் என் நடிப்பை நம்பி அநியாயமாக எல்லாரும் ஏமாந்துட்டீங்க போல.....நீங்க இந்த வீட்டுக்கு குடி வந்து நான்கு, ஐந்து நாள்லயே இதெல்லாம் டிராமானு எனக்கு தெரியும்....எத்தனை நாள் உங்க திட்டம் போகுதுனு பார்க்கலாம்னு தான் அமைதியாக இருந்தேன். இன்னைக்கு வந்து சும்மா ஒரு ஆக்ட் கொடுத்தா எல்லாவற்றையும் உளறிட்டிங்கலே....." என்று விட்டு விகாரமாக சுலோச்சனா சிரிக்க அனைவரும் அவரது இந்த நடவடிக்கையை பார்த்து முகம் சுருங்கி நின்றனர்.


"ஆன்டி ஏன் இப்படி இருக்கீங்க??? உங்க நல்லதுக்கு தானே நாங்க...." என்று பேசிய மதுவை கை காட்டி நிறுத்திய சுலோச்சனா


"உன்னால தான் இத்தனை பிரச்சினையும்...நீ மட்டும் அருள் வாழ்க்கையில் வராம இருந்திருந்தால் என் பொண்ணு வாழ்க்கை நல்லா அமைஞ்சிருக்கும்....எல்லாம் உன்னால தான் பாவி...." என்றவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் லோகநாதன்.


லோகநாதனை அங்கு எதிர்பார்க்காத சுலோச்சனா
"அண்ணா......" என்று அதிர்ந்து போய் நிற்க


"நீ உண்மையாகவே திருந்திட்டேனு நினைச்சேன்.....ஆனா நீ.....சே.....உன்னை எல்லாம் என் தங்கச்சினு சொல்லவே அசிங்கமாக இருக்கு......எந்த சொத்துக்காக நீ இப்படி பேயாட்டம் திரிஞ்சியோ அந்த சொத்து எல்லாம் எப்போவோ உன் கணவர் பேர்லயும், உன் பொண்ணு பேர்லயும் எழுதி வைச்சிட்டேன்.....இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும்....இருந்தும் நீ திருந்தணும்னு இத்தனை நாள் பொறுமையாக இருந்தா நீ இப்படி பண்ணிட்டு இருக்க....
இப்போ சொல்றேன்....மரியாதையாக இந்த வீட்டை விட்டு போயிடு....உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....இனி உன் வீடு, சொத்து எல்லாமே ஷோபாவுக்கும், வேல்முருகனுக்கும் தான்.....நீ போகலாம்..." என்று வாசலை நோக்கி லோகநாதன் கை காட்ட அதிர்ச்சியடைந்து நின்றார் சுலோச்சனா.


கோபம் தலைக்கேற அனைவரையும் முறைத்து பார்த்த சுலோச்சனா

"எல்லாத்துக்கும் காரணம் இதோ இந்த மது தானே.....இவளை...." என்று வேக எட்டு வைத்து மதுவை நெருங்கியவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தப் போக மதுவை பாய்ந்து அருள் தன் புறம் இழுத்து கொண்டான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மூர்க்கத்தனமாக சுலோச்சனா கத்தி கொண்டிருக்க ஸ்ரீதர் ஒரு புறம், வினித் ஒரு புறம் நின்று சுலோச்சனாவை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.


ஷோபா அவசரமாக ஹாஸ்பிடலுக்கு போன் போட ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும் பெரும் பிரயத்தனப்பட்டு சுலோச்சனாவை ஹாஸ்பிடல்க்கு கொண்டு சென்றனர்.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் ஹாஸ்பிடல்க்கு விரைந்து சென்றனர்.


சுலோச்சனாவை பிரபல மனநல மருத்துவர் ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருக்க ஷோபாவை ஸ்ரீதர் ஆறுதல் படுத்தி கொண்டு நின்றான்.


மதுவோ பயத்தில் நடுங்கி கொண்டிருக்க அருள் அவளை தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு நின்றான்.


அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் அருளின் அருகில் வரவும் எல்லாரும் ஆவலாக அவரது வார்த்தைக்காக காத்து கொண்டு நின்றனர்.


"மிஸ்டர் அருள்....பேஷண்ட் மென்டலி ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்காங்க....சின்ன வயசுல இருந்து இந்த பிரச்சினை அவங்களுக்கு இருந்திருக்கு....பட் அது இப்போ இப்படி வளர்ந்து வந்து இருக்கு....இவங்களை இப்போ எல்லார் கூடவும் பழக விட முடியாது....அது எல்லாருக்கும் ஆபத்து...." என்று கூற


"அப்போ இதுக்கு வேற வழியே இல்லையா???" என்று கண்கள் கலங்க கேட்டார் வேல்முருகன்.


"ட்ரீட்மெண்ட் தான் ஒரே வழி....ஒரு ஆறு மாசத்துக்காகவது இவங்க ஹாஸ்பிடல்ல இருக்கணும்" என்று டாக்டர் கூறவும்


அவர் கைகளை பற்றி கொண்ட ஷோபா
"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை....அவங்களை குணமாக்குங்க..." என்று கூற


"வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்...." என்று விட்டு டாக்டர் சென்றார்.


எல்லோர் மத்தியிலும் கனத்த அமைதி நிலவ
"க்கும்...." என்றவாறு முன்னால் வந்து நின்ற அருள்


"அத்தை நல்ல படியாக வரணும்....அதற்கு தான் இவ்வளவு பாடு பட்டோம்....இப்போ அவங்களை மாற்ற இந்த ஒரே வழி தான் இருக்கு....நாம எல்லாரும் அவங்களுக்கு உறுதுணையாக இருந்து அவங்களை மீட்டு எடுக்கணும்....இப்போ நாம எல்லாரும் தைரியமாக இருக்கணும்...
முக்கியமாக ஷோபா நீ தைரியமாக இருக்கணும்...." என்று கூற


கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்ற ஷோபா
"நான் தைரியமாக இருப்பேன் அத்தான்....அம்மா நல்ல படியாக திரும்ப வந்தா போதும்..." என்று கூற எல்லாரும் ஒவ்வொரு வித எண்ணத்தோடு வீட்டை நோக்கி சென்றனர்.


ஆறு மாதங்களாக சுலோச்சனாவிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு கொண்டே இருந்தது.


மது மற்றும் ஷோபா சுலோச்சனாவிற்கு அருகில் இருந்து அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டு வந்ததில் அவர் சிறிது குணமடைந்து வந்திருந்தார்.


சுலோச்சனாவை ஹாஸ்பிடலில் சேர்த்த அடுத்த நாள் மது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அருளிடம் கூற அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்.


அருள் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரும் மதுவை தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல பார்த்து கொண்டனர்.


ஷோபாவை விரும்பும் விடயத்தை ஸ்ரீதர் பத்மாவிடம் கூற சந்தோஷமாக அதனை ஏற்றுக் கொண்ட பத்மா சுலோச்சனா குணமடைந்து வந்ததும் திருமணத்தை வைத்து கொள்ளளலாம் என்று கூற அனைவரும் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.


இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் சுலோச்சனாவைப் பரிசோதித்து விட்டு அவரை பற்றி கூறுவதாக டாக்டர் கூறவும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷம் கொண்டனர்.


மதுவிற்கு இன்றோடு ஆறு மாதங்கள் நிறைவு பெற்று இருக்கவும் அருள் மதுவிற்கு வளைகாப்பு இப்போதே நடத்த வேண்டும் என்று கூறி எல்லா ஏற்பாடுகளும் செய்யத் துவங்கி இருந்தான்.


மது அருளிடம்
"சுலோச்சனா அத்தை பற்றி நல்லதாக ஏதாவது டாக்டர் சொல்லி அவங்களை வீட்டுக்கு அனுப்பி வைச்சா....அதற்கு அப்புறம் இதெல்லாம் பண்ணலாமே...." என்று கூறவும்


மறுப்பாக தலை அசைத்தவன்
"ஒரு வேளை மறுபடியும் அன்னைக்கு மாதிரி ஏதாவது நடந்துடுச்சுனா.....வேண்டாம் மது.....என்னோட சந்தோஷத்துக்காக இது நடக்கணும்...எனக்காக...." என்று கூற எதுவும் பேசாமல் அவனது வார்த்தைக்கு மது கட்டுப்பட்டாள்.


வளைகாப்பு நாளும் இனிதே விடிந்தது.


மேடிட்ட வயிற்றோடு பட்டு சேலை அணிந்து, மல்லிகை பூ சரம் தோளின் இரு புறமும் வீழ்ந்து இருக்க வெட்க முறுவலோடு அமர்ந்திருந்த தன் காதல் மனைவியை ரசித்து கொண்டு நின்றான் அருள்.


மதுவின் இருபுறமும் விஜியும், ஷோபாவும் நின்று கொண்டிருக்க வத்சலா வந்து சடங்குகளை ஆரம்பித்து வைத்தார்.


அதன் பிறகு பத்மா வந்து மதுவிற்கு சந்தனம் தடவி சடங்குகளை செய்து விட அருள் எல்லாவற்றையும் சந்தோஷமாக பார்த்து கொண்டு நின்றான்.


அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் எல்லோரும் வாசலை திரும்பி பார்த்தனர்.


காரில் இருந்து இறங்கி சுலோச்சனா வரவும் எல்லோரும் வியப்புடனும், ஆச்சரியத்துடனும் அவரைப் பார்த்து கொண்டு நின்றனர்.


சுலோச்சனாவைப் பார்த்த ஷோபா ஓடி வந்து அவரைக் கட்டி கொள்ள புன்னகையோடு அவள் தலையை வருடி கொடுத்தார் சுலோச்சனா.


"எப்படி மா இருக்க??? எப்படி வந்த நீ??? டாக்டர் என்ன சொன்னாரு???" என்று ஷோபா கேட்கவும்


அவளைப் பார்த்து புன்னகத்து கொண்ட சுலோச்சனா மதுவின் அருகில் செல்ல அருள் விரைந்து வந்து மதுவின் அருகில் நின்றான்.


மதுவின் அருகில் வந்த சுலோச்சனா கீழே குனிந்து சந்தனத்தை எடுத்து மதுவின் கன்னத்தில் தடவி விட்டு அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து விட அவரை விழி அகலாது மது பார்த்து கொண்டு இருந்தாள்.


சுலோச்சனாவோடு நடந்து வந்த நர்ஸ் ஷோபா அருகில் வந்து
"உங்க அம்மா பரிபூரணமாக குணமாகிட்டாங்க....டாக்டர் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க தான் சொன்னாங்க....ஆனா மதுவோட வளைகாப்புக்கு நான் போகணும்னு அவங்க கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க....அதனால டாக்டர் என்னையும் அவங்க கூட அனுப்பி வைச்சாங்க.....நவ் யுவர் மாம் பேர்பக்ட்லி ஆல் ரைட்....அவங்களை பார்த்துக்கோங்க....நான் வர்றேன்...." என்று விட்டு சென்று விட வேல்முருகன் சுலோச்சனா அருகில் வந்து நின்றார்.


"தீர்க்க சுமங்கலியாக இருடா மது.....சீக்கிரமாக ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுத்துடு...." என்று சுலோச்சனா கூறவும்
அவரை புன்னகையோடு அணைத்துக் கொண்டாள் மது.


"இனிமேல் நம்ம வீட்ல எப்போதுமே சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்...." என்று அருள் கூறவும்


அவனது தலையை வாஞ்சையோடு வருடி விட்ட சுலோச்சனா
"கடந்த காலத்தை விட்டு எல்லாரும் வெளியேறி வந்துட்டோம்....இனி எதிர்காலத்தை நோக்கி மட்டுமே யோசிப்போம்....எல்லோரும் என்னை மன்னிக்கனும்...." என்று கூற


அவரை கை பிடித்து தடுத்த லோகநாதன்
"எங்களோட ஆசை இப்படி நல்லவளா என் தங்கை வரணும்னு தான்...அது நடந்துடுச்சு....இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்ப்போம்" என்று கூறவும்


ஸ்ரீதரும், ஷோபாவும் சட்டென்று சுலோச்சனா, வேல்முருகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க குழப்பமாக அவர்களைப் பார்த்தார் சுலோச்சனா.


பத்மா அவரருகில் வந்து ஷோபா, ஸ்ரீதர் பற்றி கூற ஆனந்தக் கண்ணீரோடு ஸ்ரீதரின் கை பற்றி கொண்ட சுலோச்சனா
"உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு தம்பி..." என்று கூறவும்


அவர் கைகளில் இருந்து தன் கையை எடுத்து கொண்ட ஸ்ரீதர்
"நல்லா வாய் நிறைய மருமகனேனு சொல்லுங்க அத்தை...." என்று கூற வினித் அவன் தோளில் தட்டி கொடுத்தான்.


அதன் பிறகு நிச்சயதார்த்தத்துக்கு என்று தாம்பூலத் தட்டு கொண்டு வரப்பட்டு சுலோச்சனா- வேல்முருகன் தம்பதியரும் பத்மாவதி- அழகேசன் தம்பதியரும் தட்டை மாற்றி கொண்டனர்.


இளையோர்கள் எல்லோரும் மது மற்றும் அருளின் அருகில் வந்து நின்று கொண்டிருக்க
மது எல்லாவற்றையும் சந்தோஷமாக பார்த்து கொண்டு நின்றாள்.


மதுவின் அருகில் வந்து நின்ற அருள் அவளை அமரச் செய்து விட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.


மதுவின் முகத்தில் தெரிந்த புன்னகையைப் பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்ட அருள்
"இப்போ சந்தோஷமா???" என்று கேட்கவும் அவனைக் குழப்பமாக பார்த்தாள் மது.


"நீ தான் எனக்காக உன்னோட ஆசையெல்லாம் சொல்லாம விட்டுட்டே....ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாதா??? அது தான் அத்தை கிட்ட நேற்று போய் இன்னைக்கு உனக்கு வளைகாப்பு நீங்க வந்தா மது சந்தோஷப்படுவான்னு சொன்னேன்....அவங்களும் வந்துட்டாங்க..." என்று கூற மனம் நிறைந்த மகிழ்வுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மது.


"தாங்க்ஸ் வேந்தா....." என்று மது கூறவும்


அவளை தோளோடு அணைத்துக் கொண்ட அருள்


"அடடா
நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப் போன கவிஞன்....
ஹானஸ்டா நான் பேசவா.....
எஸ்-ஆ-எஸ்-ஆ-நோ-ஆ-எஸ்-ஆ
அழகியே மேரி மீ...
மேரி மீ....
அழகியே..." என்று அவள் காதில் மெல்லமாய் பாட காதலோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் மது.


பெரியவர்கள் ஆசிர்வாதம் பண்ண மதுவும், அருளும் அமர்ந்திருக்க இன்று போல் என்றும் அவர்கள் காதல் நிலைத்து நிற்கும் என்று நாமும் விடை பெறுவோம்.....
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Nice UD sis...

Ada pavamey... sulo ku lastah... mentalahki... treatment kuduka vachutingaley sis.. pavam sulo... bt periya boogambam... romba panito... sulo dialoguelam sema super sis...

Congrats madhu and arul...

Happy ending sis...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top