• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சிறிது நேரம் வரை காத்திருந்த மது
"இப்படி நிற்குறத ஸ்டெப்ஸ்லயே போயிடலாம் வா ஸ்ரீ" என்று விட்டு ஸ்ரீதரின் கை பற்றி அழைத்து சென்றாள்.


அப்போது லிப்ட்டும் திறந்து விட
"மது லிப்ட் ஓபன் ஆகிடுச்சு போல. வா மது லிப்ட்லயே போயிடலாம்" என்று ஸ்ரீதர் மதுவை அழைக்க


"நோ இன்னைக்கு நீ நாலு ப்ளோரையும் ஸ்டெப்ஸ்ல நடந்து தான் இறங்கணும் வா" என்று விட்டு செல்ல


"எங்கே செல்லும் இந்த பாதை.....
யாரோ யாரோ அறிவாரோ....." என்று பாடிக் கொண்டே படியிறங்கி சென்றான் ஸ்ரீதர்.


லோகநாதனின் அறைக்குச் சென்ற அருளும், வினித்தும் அறையில் லோகநாதன் மாத்திரம் இருப்பதை பார்த்தனர்.


"ஸாரி லோகு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எங்கே அவங்க??" என்று அருள் கேட்கவும்


"ஏன்டா அருள் இந்தா பக்கத்தில் இருக்குற ஹாஸ்பிடல்ல இருந்து வர்றதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? ஏன்பா வினித் இவன் கூட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டியா??" என்று கேட்டார் லோகநாதன்.


"ஐயோ மாமா!!! நீங்க போன் பண்ணுணீங்கனு சொன்ன உடனேயே நான் கிளம்பி வந்துட்டேன். டிராபிக்ல தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று வினித் விளக்கம் அளிக்க


"நீங்க வருவீங்கனு காத்துட்டு இருந்த அந்த பசங்க இப்போ தான் போறாங்க. நீங்க அவசரமாக வராம விட்டதும் பரவாயில்லை. அவங்க டிசைன்ஸ் ஆல்பம் வேற கொண்டு வரல. அதனால சன்டே வீட்டுக்கு வர சொல்லிட்டேன். அங்க வைச்சே பேசிக்கலாம் தானே? உங்க இரண்டு பேருக்கும் ஓகே தானே?" என்று லோகநாதன் கேட்க


"சன்டேவா???" என யோசித்தான் அருள்.


"ஏன்டா??? சன்டே ஃப்ரீ தானே நமக்கு?" என்று வினித் கேட்க


"சடர்டே, சன்டே திருச்சியில் ஒரு கான்பிரன்ஸ் இருக்குடா. கண்டிப்பாக போகணும்" என்ற அருள் சிறிது நேரம் யோசித்து விட்டு


"பார்க்கலாம் சடர்டே மட்டும் தான் இம்ப்பார்ட்டண்ட்னு சீப் டாக்டர் சொன்னாரு. சன்டே எப்படியும் வீட்ட வர்றதுக்கு ட்ரை பண்ணுறேன். அம்மா வேற போன் பண்ணி வரச் சொல்லிட்டே இருந்தாங்க" என்று அருள் கூறவும்


"நல்ல வேளை இரண்டு நாள் அந்த கர்ண கொடூரமான இசை மழையில் இருந்து நான் தப்பிட்டேன்டா சாமி" என்று அருளின் காதில் கூறினான் வினித்.


வினித்தை முறைத்து பார்த்த அருள் சட்டென்று அவன் காலில் ஒரு மிதி மிதிக்க
"அய்யய்யோ!!! உலக்கை காலால மிதிச்சுட்டானே!! என் கால் போச்சே!! ஐயோ!! ஐயோ!!" என்று தன் காலைத் தூக்கி கொண்டு அலறினான் வினித்.


"ஏன்டா அருள் அவன் காலை மிதிச்ச??" என்று லோகநாதன் கேட்கவும்


"சும்மா ஒரு வேண்டுதல் தான் லோகு. அப்புறம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று பேச்சை மாற்றினான் அருள்.


அதன் பிறகு அரசியல், நாட்டு நடப்பு என அவர்களின் பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது.


ஆபிஸ் வந்திறங்கிய மது முதலில் தன்னுடைய அறைக்குள் சென்று டிசைன்ஸ் ஆல்பத்தை தேடினாள்.


எங்கு தேடியும் ஆல்பம் கிடைக்காமல் போக சோர்ந்து போன மது ஸ்ரீதரைப் பார்க்க அவனோ போனில் மூழ்கி இருந்தான்.


மேஜை மேல் இருந்த டேபிள் வெயிட்டை எடுத்து ஸ்ரீதரின் மேல் தூக்கி போடப் பார்த்த மது
"சேச்சே டேபிள் வெயிட் உடைஞ்சிடும்" என்று நினைத்து கொண்டவள் அருகில் இருந்த பேப்பர் ஒன்றை எடுத்து சுருட்டி அவன் மேல் எறிந்தாள்.


"என்னைப் பார்த்தா குப்பை தொட்டி மாதிரியா இருக்கு?? எதுக்கு இப்போ பேப்பரை எறிஞ்ச?" என்று ஸ்ரீதர் கேட்க


"நான் இங்க தனியா இருந்து ஆல்பத்தை தேடுறேன். கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணலாம்னு உன் புத்திக்கு தோணலயா??" என்று கேட்டாள் மது.


"உன் மேல செம காண்டுல இருக்கேன். இன்னைக்கு அங்கே ரிசப்சன்ல இருந்த பொண்ண நான் சைட் அடிச்சு மொக்கை வாங்குனத அர்ஜுன் கிட்ட எதுக்கு சொன்ன?" என்று ஸ்ரீதர் கேட்கவும் திருதிருவென்று விழித்தாள் மது.


"நானா?? நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லலயே!!" என்று மது சமாளிப்பாக கூற அவள் காதைப் பிடித்து திருகினான் ஸ்ரீதர்.


"ஸ்ரீ வலிக்குது விடு ஸ்ரீ..." என்று மது கத்த அவள் காதில் இருந்து கையை எடுத்த ஸ்ரீதர்
"நீ அம்மாகிட்டயோ, அப்பாகிட்டயோ ஏன் இங்க கூட்டிப் பெருக்குற ஆயாகிட்ட கூட சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. அவன்கிட்ட போய் சொல்லிருக்க. அவன் ஒரு பி.பி.ஸி ஆச்சே. இந்நேரத்துக்கு ஊர் புல்லா சொல்லி இருப்பான். இனி நான் எப்படி பக்கத்து வீட்டு மாலா, எதிர் வீட்டு கமலா, பின் வீட்டு வாணி முகத்தை எல்லாம் பார்ப்பேன்??" என்று கூறவும்


அவனை பார்த்து சிரித்த மது
"இனியாவது அந்த பொண்ணுங்க எல்லாம் உன் அறுவையில் இருந்து தப்பிக்கட்டுமே!!!" என்று கூறினாள்.


மேஜை மேல் இருந்த ஒரு பைலை ஸ்ரீதர் தூக்க அதிலிருந்து அந்த டிசைன் ஆல்பம் வீழ்ந்தது.


"ஹேய்...ஸ்ரீ!! பரவாயில்லையே ஆல்பத்தை கண்டு பிடிச்சிட்டியே வெல் டன்" என்று ஆல்பத்தை எடுத்து கொண்டு


ஸ்ரீதரின் கையைக் குலுக்கி பாராட்டிய மது
"நான் சாப்பிட கேன்டீன் போறேன். நீயும் வர்றதா இருந்தா வா" என்று விட்டு செல்ல அவளைத் தொடர்ந்து சென்றான் ஸ்ரீதர்.


சிறிது நேரம் லோகநாதனோடு பேசி கொண்டிருந்த அருளும், வினித்தும் வேலை
இருப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.


மாலை வேளை எல்லா வேலைகளையும் முடித்த மது ஆபீஸை பூட்டி விட்டு வெளியேறி வர அவள் முன்னால் வந்து காரை நிறுத்தினான் ஸ்ரீதர்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"வா மது நான் வீட்ல டிராப் பண்ணுறேன்" என்று ஸ்ரீதர் அழைக்கவும்


"இல்ல ஸ்ரீ வீட்டுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க இருக்கு. போற வழியில் கடைக்கு போயிட்டு போகலாம்னு இருக்கேன் நீ போ ஸ்ரீ. நான் பஸ்லயே போயிடுறேன்" என்று கூறினாள் மது.


"ஏன் என் கூட வந்தா உன்னை கடைக்கு உள்ளே வர வேண்டாம்னா சொல்லப்போறாங்க? வா வந்து உட்காரு" என்று ஸ்ரீதர் கூறவும்


"அது இல்லை ஸ்ரீ....." என்று மது மறுத்து கூறப் போக ஸ்ரீதர் கோபமாக அவளை பார்க்க எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் மது.


காரில் ஏறி அமர்ந்தது முதல் ஸ்ரீதர் எதுவும் பேசாமல் வரவும் அவனை பேச வைக்க படாத பாடுபட்டாள் மது.


"உனக்கு வீணா கஷ்டம் வேண்டாம்னு தான் பஸ்ல போறேனு சொன்னேன் ஸ்ரீ. அது தான் உன் கூட வரேன்லே அப்புறம் ஏன் மூஞ்சை இஞ்சி தின்ன குரங்காட்டம் வைச்சிருக்க?? கொஞ்சம் சிரியேன் ஸ்ரீ.." என்று மது கூறவும்


"ஈஈஈஈஈஈஈ....." என்று ஸ்ரீதர் பல்லைக் காட்டினான்.


"ஐயோ!!! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ஸ்ரீ....ரொம்ப அழகாக இருக்கே ஸ்ரீ. இப்படியே அந்த ரிசப்சனிஸ்ட் முன்னாடி சிரிச்சிருந்தேனு வை. அப்படியே மயங்கி விழுந்துருப்பா. அப்புறம் என்ன டும் டும் தான்! பக்கத்தில் அவ குழந்தை, ஹஸ்பன்ட்.... சான்ஸே இல்லை போ. சூப்பராக இருந்துருக்கும்" என்று மது கூற


"போடி வாயாடி..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஸ்ரீதர்.


மது செல்ல வேண்டிய கடை வந்ததும் இறங்கி கொண்ட மது
"நான் பர்சேஸ் பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும். நீ உள்ளே வர்றியா?? இல்லை இங்கேயே இருக்கப் போறியா??" எனக் கேட்கவும்


"நீ முன்னாடி போ மது. நான் காரைப் பார்க் பண்ணிட்டு வரேன்" என்று ஸ்ரீதர் கூற சரியென்று விட்டு சென்றாள் மது.


ஸ்ரீதர் காரை பார்க்கிங்கில் இடுவதற்காக ரிவெர்ஸ் எடுக்க பின்னால் வந்த பைக்கில் அவன் கார் இடித்துக் கொண்டது.


"ஓஹ்...காட்..." என்றவாறு காரில் இருந்து இறங்கிய ஸ்ரீதர் பின்னால் பைக்கில் நின்றவர்களை நோக்கி சென்றான்.


"ஸாரி ஸார் ஸாரி நான் கவனிக்காம ரிவெர்ஸ் எடுத்துட்டேன் ஸார் ஸாரி ஸாரி..." என்று ஸ்ரீதர் கூறவும்


"அது எப்படி ஸார் உங்கள சும்மா விட முடியும். என்னோட பேவரிட் பைக் ஸார் இது. எட்டு வருஷமா பாதுகாப்பாக வைச்சிருந்தேன். இப்போ பாருங்க என் பைக்கோட ஒரு கண்ணு போச்சு. இப்போ என் அம்மா கேட்டா என்ன சொல்லுவேன்?? பொத்திப் பொத்தி பாதுகாத்து வைச்ச பைக். இப்படி பண்ணிட்டீங்களே ஸார்" என்று கவலையுடன் கூற ஸ்ரீதர் செய்வதறியாது நின்றான்.


"டேய் வினித் பாவம் டா ஸார். விட்டுடு ரொம்ப பயப்படுறாரு" என்று அருள் கூறவும்


சிரித்து கொண்ட வினித்
"என்ன ஸார் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்குறீங்க?? சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். பைக்கில பெரிசா ஒண்ணும் இடிச்சுக்கல. நீங்க போய் காரை எடுங்க ஸார். நாங்க பார்த்துக்குறோம்" என்று கூற


"ரொம்ப தாங்க்ஸ் ஸார்" என்ற ஸ்ரீதர்


"பை த வே ஐ யம் ஸ்ரீதர்..." என்று கூறினான்.


ஸ்ரீதரைப் பார்க்க சிரித்து கொண்டே
"ஐ யம் வினித்...
ஐ யம் அருள்..." என்று அருளும், வினித்தும் ஸ்ரீதருடன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டனர்.


அப்போது ஸ்ரீதரின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவன்
'மது காலிங்' என்று வரவும்


"அய்யய்யோ போச்சு!! இன்னைக்கு மது சாமியாடப் போற. நான் உங்கள அப்புறம் மீட் பண்ணுறேன் ப்ரண்ட்ஸ் பாய்" என்று விட்டு அவசரமாக காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு கடையின் உள்ளே வேகமாக சென்றான்.


ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அருளும், வினித்தும்
"அவரோட வைஃப் போல. அது தான் இப்படி அவசரமாக போறார்னு நினைக்குறேன்!!" என்று பேசிக் கொண்டே அவர்களது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றனர்.


"எங்கே போன ஸ்ரீ இவ்வளவு நேரமா? காரை பார்க் பண்ணிட்டு வர இவ்வளவு நேரமா?" என மது கேட்கவும்


"நியூ பிரண்ட்ஸ் கூட பேசிட்டு நின்னுட்டேன் மா.." என்று கூறினான் ஸ்ரீதர்.


"நியூ பிரண்ட்ஸா???" என்று மது ஆச்சரியமாக கேட்க
வெளியில் நடந்த விடயங்களை எல்லாம் கூறியவன் அறிந்தோ, அறியாமலோ அவர்களது பெயரை குறிப்பிட மறந்து போனான்.


அதன் பிறகு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி விட்டு மதுவும், ஸ்ரீதரும் கவுன்டரில் வந்து நிற்கும் போது மற்றைய கவுன்டரில் அருளும், வினித்தும் வந்து நின்றனர்.


விதியின் விளையாட்டோ என்னவோ தெரியவில்லை அருகருகே நின்றும் மதுவும், அருளும் சந்தித்து கொள்ள முடியவில்லை.


அருள் மறுபுறம் திரும்பி நின்று போனைப் பார்த்துக் கொண்டு நிற்க மதுவோ ஸ்ரீதருடன் மறுபுறம் திரும்பி நின்று பேசிக் கொண்டு நின்றாள்.


மதுவும், ஸ்ரீதரும் வெளியேறிச் செல்லும் போது ஸ்ரீதரைக் கண்டு கொண்ட வினித்
"அங்கே பாரு அருள் ஸ்ரீதர் போறாரு. பக்கத்தில் போறது தான் அவங்க வைஃப் போல. பட் அவங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு" என்று கூறவும்
அருள் நிமிர்ந்து பார்த்தான்.


அதற்குள் ஸ்ரீதரும், மதுவும் மறுபுறம் சென்று மறைந்திருந்தனர்.


"சே...மிஸ் ஆகிடுச்சு..." என்று அருள் கூறவும்


"பரவாயில்லை விடுடா இன்னொரு வாட்டி மீட் பண்ணும் போது பார்த்துக்கலாம். ஆனா சூப்பர் ஜோடி" என்று கூறினான் வினித்.


மது எதுவுமே பேசாமல் வருவதைப் பார்த்த ஸ்ரீதர்
"என்னாச்சு மது?? டல்லா இருக்குற மாதிரி இருக்கு" என்று கேட்கவும்


"தெரியல ஸ்ரீ. சம்திங் கன்பியூஸ்ட் இன் மை மைண்ட்" என்று கூறினாள் மது.


"அதையும் இதையும் யோசிக்காம போய் உட்காரு மது. பேக் எல்லாம் நான் பின்னாடி வைச்சிட்டு வரேன்" என்று விட்டு மதுவின் கைகளில் இருந்த பைகளை எல்லாம் வாங்கி கொண்ட ஸ்ரீதர் காரின் பின்னால் கொண்டு சென்று வைத்தான்.


காரில் ஏறி அமர்ந்து கொண்ட கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.


வீடு வந்து சேரும் வரை கண்களை மூடி அமர்ந்திருந்தவள்
"வீடு வந்துடுச்சு மது..." என்று ஸ்ரீதர் தோள் தொட்டு எழுப்பவுமே கண் விழித்தாள்.


"ரொம்ப தாங்க்ஸ் ஸ்ரீ.." என்று மது கூற


"வாசல்லயே வைச்சு திருப்பி அனுப்பலாம்னு பார்க்குறியா? உள்ளே வந்து அம்மா கையால சாப்பாடு சாப்பிட்டுட்டு தான் போவேன்" என்று இறங்கி கொண்ட ஸ்ரீதர் பின்னால் வைத்திருந்த பைகள் எல்லாவற்றையும் தூக்கி கொண்டு வீட்டினுள் செல்ல


"சரியான லூசு பையன் இந்த ஸ்ரீ..." என்று நினைத்து சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள் மது.


அருளும், வினித்தும் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து தங்கள் அறைகளுக்குள் நுழைந்து கொண்டனர்.


வழக்கம் போல வினித் போனோடு ஐக்கியமாகி விட அருள் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.


அறையைக் காலி செய்ய வேண்டும் என்பதற்காக அவனது பகுதியில் இருந்து ஒவ்வொரு பொருளாக நீக்கி கொண்டு வந்த அருளின் கையில் வந்து தட்டுப்பட்டது ஒரு திருமண அழைப்பிதழ்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top