• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!! ஹலோ!! ப்ரெண்ட்ஸ்!!!

சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!! நன்றி!!!

Manirathnam-New-Hero.jpg
nazriya-nazim-hd-photos-wallpapers-aom1dd.jpg
தன் கையில் இருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்த அருள்
"யாரோட வெடிங் இன்விடேஷன் இது? 2016னு டேட் போட்டு இருக்கு" என்று தனக்குள் பேசி கொண்டே அந்த திருமண அழைப்பிதழைப் பிரித்து பார்த்தான்.


மணமகன் என்ற இடத்தில் கார்த்திக் என்றும், மணமகள் என்று இருந்த இடத்தில் மதுமிதா என்ற பெயர் இருக்கவும் யோசித்து பார்த்த அருள்
"இந்த இரண்டு நேமும் நான் இதுக்கு முன்னாடி கேள்வி பட்ட மாதிரியே இல்லையே!!" என்று நினைத்து கொண்டவன்


"வினித் கிட்ட கேட்கலாம்" என்று விட்டு வினித்தைத் தேடி சென்றான்.


"வினித்....வினித்...." என்று அழைத்தவாறு அருள் வரவும் போன் பேசுவதை நிறுத்தி விட்டு வந்த வினித்


"என்ன அருள்?? ஏதாவது பிரச்சினையா??" என்று கேட்டான்.


"இந்த வெடிங் இன்விடேஷன் யாரோடது வினித்? இதுல இருக்குற நேம் எதுவும் நமக்கு ரிலேடட் ஆன மாதிரி தெரியலையே!" என்று அருள் கூறவும்


அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தான் வினித்.


கையில் இருந்த போனை காதில் வைத்த வினித்
"மீனும்மா நான் கொஞ்சம் லேட்டா போன் பண்ணுறேன். ஒரு சின்ன வேளை இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தான்.


"இந்த இன்விடேஷனை எங்க இருந்துடா எடுத்த? எவ்வளவு நாளா இதை தேடுறேன் தெரியுமா?" என்று வினித் கேட்கவும்


குழப்பமாக அவனைப் பார்த்த அருள்
"உனக்கு தெரிஞ்சவங்களா??" என்று கேட்டான்.


"அட மக்கு சாம்பிராணியே!!! இது உனக்கு இம்ப்பார்ட்டண்ட் ஆன இன்விடேஷன்டா!" என்று வினித் கூறவும்


"நீ புரியுற மாதிரியே பேச மாட்டியாடா?" என்று கேட்டான் அருள்.


"என் பாசத்துக்குரிய நண்பா!! இது நீ இரண்டு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கியே உன் பெயர் தெரியாத ஏஞ்சல் அவங்க கிட்ட இருந்து எடுத்த இன்விடேஷன்" என்று வினித் கூறவும்
அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.


"அவகிட்ட இருந்தா எப்படிடா? எங்கே இருந்துடா எடுத்த? இது யாரோடது? சொல்லுடா!" என்று அருள் பதட்டத்துடன் கேட்கவும்


"பொறுமை!! பொறுமை!! இந்த இன்விடேஷன் யாரோடதுனு எனக்கு தெரியாது. பட் அந்த பொண்ணு கிட்ட இருந்து எடுத்தேன். செகன்ட் டைம் அந்த பொண்ண மால்ல மீட் பண்ணப்போ அவகிட்ட நாலு தடியனுங்க வம்பு பண்ணிட்டு இருந்தாங்கனு நீ போனலே. அப்போ அந்த பொண்ணு கைல இருந்து இந்த இன்விடேஷன் விழுந்துச்சு. அவ பார்க்காம போயிட்டா. நான் எடுத்து வைச்சேன்.


உன் கிட்ட தர்றதுக்கு மறந்து போயிட்டேன்.
அதுக்கு அப்புறம் நீ அந்த பொண்ண பத்தி பேசுறப்போலாம் இந்த இன்விடேஷனைத் தேடுனேன் கிடைக்கல. இரண்டு வருஷம் கழிச்சு இன்னைக்கு கிடைச்சுருக்கு பாரேன்" என்று வினித் ஆச்சரியப்பட்டவனாக கூற
அவனை கட்டித் தழுவி அவன் கன்னத்தில் முத்தமிட்டான் அருள்.


"அய்யே!!! சீ!!!" என்று தன் கன்னத்தை அழுந்த துடைத்து கொண்ட வினித்


"நான் ஆம்பள டா. நீ கிஸ் பண்றதுக்காகவா என் கன்னத்தை இவ்வளவு பொலிஸா, பளபளப்பாக வைச்சிருக்கேன்??" என்று கேட்கவும்


"அதெல்லாம் விடுடா. அப்போ அவ இந்த இன்விடேஷன் வைச்சிருந்தானா அவளுக்கு சொந்தமான யாரோ ஒருத்தரோட வெடிங்கா இது இருந்துருக்கலாம் இல்ல??" என்று கேட்டான் அருள்.


"ஹ்ம்ம்ம்.... யாஹ் ரைட். மே பீ அந்த பொண்ணோட வெடிங் இன்விடேஷனாக் கூட இருக்கலாம்" என்று வினித் கூறவும் கொலைவெறியுடன் அவனை முறைத்து பார்த்தான் அருள்.


அருளின் முறைப்பை பார்த்த வினித்
"நான் அப்படி சொல்லலடா. அவங்க வீட்ல யாரோடயும் வெடிங்கா கூட இருக்கலாம்னு சொல்ல வந்தேன்" என்று கூற


"அது....." என்று ஒரு விரல் நீட்டி வினித்தை எச்சரித்தான் அருள்.


"இங்க பாரு இதுல ஒரே ஒரு வீட்டு அட்ரஸ் மட்டும் தான் போட்டுருக்கு. ஷோ இந்த அட்ரஸ்ல போய் கேட்டா அந்த பொண்ணப் பத்தி ஏதாவது ஒரு டீடெய்ல் கிடைக்கலாம்லே" என்று அருள் கூறவும்


"உன் அறிவுல பெட்ரோல் ஊத்தி கொளுத்த. அந்த பொண்ணோட பேர், ஊர் எதுவுமே உனக்கு தெரியாது. அட்லீஸ்ட் அவ போட்டோ கூட இல்ல அப்புறம் எப்படிடா கண்டுபிடிப்ப?" என்று கேட்டான் வினித்.


"அவ பேர், ஊர் தெரியாது தான். பட் அவ போட்டோ இல்லனு யாரு சொன்னா. அதெல்லாம் என் கிட்ட இருக்கு. நாளைக்கு முதல் வேலை இந்த அட்ரஸுக்கு போய் என் ஏன்ஜலைப் பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சுக்குறது தான். ஷோ காலையில ஸார்ப்பா எட்டு மணிக்கு ரெடியா இருடா என் பாசமிகு மச்சானே!!!" என்று கூறி விட்டு உல்லாசமாக விசிலடித்தபடியே சென்றான் அருள்.


"இவன் கூட தானே நான் இருந்தேன் எப்படி போட்டோ எடுத்தான்??" என்று வினித் யோசிக்க அவன் போன் அடித்தது.


'மீனு' என்ற பெயரைப் பார்த்ததும் மற்ற எல்லா சிந்தனைகளும் பின்னால் சென்று விட மறுபடியும் போனில் மூழ்கி போனான் வினித்.


அவனுடைய அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டு கொண்ட அருள் அவனுடைய கப்போர்ட்டைத் திறக்க அதனுள் பெரிய அளவில் லெமினேட் செய்யப்பட்டு இருந்தது மதுவின் புகைப்படம்.


அவளை முதன் முதலாக மாலில் வைத்து பார்த்ததும் அவளுக்கே தெரியாமல் அவன் திருட்டுத்தனமாக எடுத்த புகைப்படம்.


ஆசையாக அந்த புகைப்படத்தை வருடிக் கொண்ட அருள்
"மை டியர் ஏன்ஜல்!!! உன்னை தேடி இந்த மாமன் வந்துட்டே இருக்கேன்" என்று கூறி கொண்டே அந்த புகைப்படத்தை ஆரத்தழுவிய படி கட்டிலில் சரிந்தான்.


அவன் மனப் பெட்டகத்தில் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷமான அந்த தருணம் அவன் கண் முன்னே காட்சியாக விரிந்தது.


இரண்டு வருடங்களுக்கு முன்னர்...

"டேய் அருள்!!! சீக்கிரம் வாடா. உனக்கு ரெடியாக இவ்வளவு நேரமா? பொண்ணுங்கள விட லேட்டா ரெடி ஆகுற!" என வினித் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய அறையில் இருந்து வெளியேறி வந்தான் அருள்.


"எதுக்குடா கத்துற?? மாலுக்கு போகப் போறோம். அங்க அழகழகாக பொண்ணுங்க வருவாங்க. நாம கொஞ்சம் பெர்ஸ்னாலிட்டியா போனா ஏதாவது பொண்ணு நம்மள பார்த்து இம்ப்ரெஸ் ஆகலாம்லே" என்று அருள் கண்ணடித்து கூற


"என்ன கொடுமை சார் இது???" என்று கூறி கொண்டே அறையை விட்டு வெளியேறினான் வினித்.


பைக்கை பார்க் செய்து விட்டு அருளும், வினித்தும் மாலுக்குள் நுழைந்தனர்.


ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த வினித்தைப் பார்த்த அருள்
"ஏன்டா உனக்கு வாக்கிங் போக இந்த மால் தானா கிடைச்சது? இரண்டு மணி நேரமாக இப்படியே அலைஞ்சு திரிய வைக்குறியேடா! உனக்கே இது அடுக்குமா??" என்று கேட்டான்.


"நெக்ஸ்ட் வீக் மீனுவோட பர்த்டே டா. அது தான் என்ன கிப்ட் வாங்குறதுனு ஒவ்வொரு ப்ளோரா பார்த்துட்டே வரேன்" என்று வினித் கூறவும்


"அடப்பாவி!!! என் தங்கச்சிக்கு கிப்ட் வாங்க என்னையே கூட்டிட்டு வந்துருக்கியா?? நீயெல்லாம் நல்லா வருவடா!!" என்று கூறினான் அருள்.


"என்னால இதுக்கு மேல நடக்க முடியாது. நீயே போய் அலைந்து திரிந்து கிப்ட் வாங்கிட்டு வா" என்று அருள் கூறவும்


"ஓகே..." என்று தோளைக் குலுக்கி கூறி விட்டு சென்றான் வினித்.


"கால் வேற ரொம்ப வலிக்குதே!! எங்கேயாவது போய் உட்காரலாம்" என்று எண்ணி கொண்டு அருள் திரும்ப அவன் மேல் பூங்குவியலாய் வந்து வீழ்ந்தாள் ஒரு பெண்.


"எவ அவ??" என்று கோபத்துடன் நிமிர்ந்த அருள் தன் மேல் மோதி நின்ற பெண்ணை பார்த்து அசந்து போனான்.


தன் மேல் மோதிய பதட்டத்தில் படபடவென பட்டாம்பூச்சி போல அடித்துக் கொண்ட விழிகள், கூர்மையான மூக்கு, கொவ்வைப் பழம் போன்ற உதடுகள், பளபளக்கும் கன்னங்கள், அசைந்தாடும் அவள் கம்மல் என மெய் மறந்து அவளை ரசித்து கொண்டிருந்தான் அருள்.


அவனிடமிருந்து விலகி கொண்டவள்
"ஸாரி ஸார் பசங்க கூட விளையாடிட்டு வந்து தெரியாம இடிச்சுட்டேன் ஸாரி ஸார்..." என்று விட்டு சிட்டாக அவள் பறந்து சென்று விட அவளின் பின்னால் மந்திரித்து விட்டவன் போல் சென்றான் அருள்.


அந்த தருணம் பார்த்து எங்கிருந்தோ
அழகியே மேரி மீ....
மேரி மீ....
என்ற பாடல் காற்றில் கலந்து அவனின் செவிகளை வந்தடைந்தது.
"செம்ம...சிட்டுவேஷன் சாங் தான்..." என்று அந்த பாடலை ஹம் செய்தவாறே அவள் செல்லும் வழியெல்லாம் அவள் பின்னாலேயே சென்றவன் அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து கொண்டு நின்றான்.


அவள் பார்க்காத தருணம் அவளுக்கே தெரியாமல் அவளை போனில் புகைப்படம் எடுத்தவன்
"ஸாரி ஏஞ்சல் உன் பெர்மிஷன் இல்லாமல் உன்ன போட்டோ எடுத்துட்டேன் ஸாரி ஏஞ்சல்..." என்று மானசீகமாக மனதினுள் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.


அவள் மாலை விட்டு வெளியேறி செல்வதைப் பார்த்தவன் அவசரமாக அவள் பின்னாலேயே சென்று அவள் செல்லும் இடத்தை பார்க்கலாம் என்று வேகமாக படியிறங்கி சென்று கொண்டிருக்கையில் அருளின் தொலைபேசி சிணுங்கியது.


போனை எடுத்து காதில் வைத்தவன்
"ஹலோ...அருள்!!! எங்கேடா இருக்க?" என்று வினித்தின் குரலில் சுய நினைவுக்கு வந்தான்.


"ஹலோ....ஹலோ....அருள்....நான் பேசுறது கேட்குதா? இல்லையா?" என்று வினித் மீண்டும் மீண்டும் கேட்கவும்


"சொல்லுடா வினித்!!! நான் என்ட்ரன்ஸ் ஏரியால நிற்குறேன்" என்று கூறினான் அருள்.


"அங்கே எதுக்குடா போன? சரி அங்கேயே நில்லு...நான் வரேன்" என்று விட்டு போனை வைத்த வினித் அருள் நின்ற பகுதிக்கு சென்றான்.


அருள் யாரையோ மும்முரமாக தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வினித்
"யாரடா தேடிட்டு இருக்க??" என்று கேட்கவும்


"யாரையும் இல்லையே!!..சரி நீ கிப்ட் வாங்கிட்டியா? போகலாமா?" என்று அருள் கூற


அவனை வித்தியாசமாக பார்த்த வினித்
"சரி போகலாம்.." என்று விட்டு பார்க்கிங்கை நோக்கி சென்றான்.


அறைக்கு வந்த சேர்ந்த பின்பும் அருளுக்கு அந்த பெயர் தெரியாத ஏஞ்சலின் நினைவாகவே இருந்தது.


இரவு தூங்க சென்றவன் புரண்டு புரண்டு படுத்தும் அவன் கண்களை தூக்கம் எட்டவில்லை.


அருள் அவனது போனை எடுத்து அதிலிருந்த அவளுடைய போட்டோவை ரசித்து பார்த்தான்.


"உன்னை ஒரு நாள் தானே பார்த்தேன் ஏஞ்சல். என்னை இந்தளவிற்கு டிஸ்டர்ப் பண்ணிட்டே. ஏன்??ஏன்???" என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.


"ஒரு வேளை இது தான் காதலா????...." என்று அவன் மனம் யோசிக்க ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அவனை சுற்றி பறப்பதை போல உணர்ந்தான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"கண்டதும் காதல் எல்லாம் அப்போ உண்மையா???" என்று யோசித்தவன்


" ஒரு வேளை பண்ணலாம். நாளைக்கும் மாலுக்கு போவோம். அவ அங்கே வந்தானா கன்பர்மா இது லவ் தான்" என முடிவெடுத்த அருள் எழுந்து சென்று வினித்தின் அறைக் கதவை தட்டினான்.


கண்களை கசக்கி கொண்டு எழுந்து வந்த வினித் கதவைத் திறக்க அறை வாயிலில் அருள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து


"ஏன்டா நடு ராத்திரி ஒரு மணிக்கு வந்து இப்படி எழுப்புற?? எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் போடா.." என்று விட்டு அறைக் கதவை சாத்தப் போக


"டேய் காலையில ஷார்ப்பா 8 மணிக்கு ரெடி ஆகு. ஒரு இடத்துக்கு போகணும். மறந்துடாத எட்டு மணி...ஓகே" என்று விட்டு அருள் செல்ல


"இவன் என்ன லூசா? சன்டே ஒரு நாள் தான் ப்ஃரீ அது பொறுக்கலயா இவனுக்கு?? இடியே விழுந்தாலும் நான் எழும்ப மாட்டேன்" என்று விட்டு வந்த வினித் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.


அறைக்குள் சென்ற அருள் எப்போது விடியும்?? என்று கடிகாரத்தை பார்ப்பதும் வானத்தை பார்ப்பதுமாக இருந்தான்.


மெலிதாக சூரிய ஒளி தன் மேல் படவும் பதறியடித்து கொண்டு எழுந்த அருள் அவசர அவசரமாக குளித்து தயாராகி விட்டு கண்ணாடியின் முன் நின்று தன்னை ஒரு முறை பார்த்து கொண்டான்.


"நீ அழகன்டா.." என்று கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தைப் பார்த்து கூறி கொண்ட அருள் வினித்தை தேடி சென்றான்.


கதவை பல முறை தட்டியும் வினித் வராமல் இருக்க மாற்று சாவி கொண்டு கதவை திறந்த அருள்
குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்த வினித்தைப் பார்த்து


"கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம எப்படி தூங்குறான் பாரு? உனக்கு இன்னைக்கு இருக்குடா கச்சேரி.." என்று விட்டு அவனருகில் சென்றான் அருள்.


வினித்தை போர்வையோடு தூக்கி தோளில் போட்ட அருள் குளியலறைக்குள் சென்று அவனை ஷவரின் கீழ் உட்கார வைத்து விட்டு ஷவரை திறந்து விட அலறியடித்து கொண்டு எழுந்தான் வினித்.


தொப்பலாக நனைந்திருந்த வினித்தைப் பார்த்து சிரித்த அருள்
"உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம். சீக்கிரம் ரெடி ஆகிட்டு வர்ற" என்று கூறி விட்டு செல்ல
பாதி திறந்த கண்களோடு தயாராகி வந்தான் வினித்.


வினித்தைப் பார்க்க பாவமாக இருந்தாலும்
"நண்பனோட காதலுக்காக ஒரு நாள் தூக்கத்தை கூட தியாகம் செய்யலனா எப்படி???" என்று நினைத்து கொண்ட அருள் பைக்கை ஸ்டார்ட் செய்ய ஏறி அமர்ந்து கொண்ட வினித் அருளின் மேல் சாய்ந்து கொண்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்.


மாலிற்கு சென்று பைக்கை நிறுத்திய அருள் வினித்தை தட்டி எழுப்ப தூக்க கலக்கத்தோடு வினித் எழுந்து நின்றான்.


மால் இன்னும் திறக்கப்படாமல் இருக்கவும் குழப்பமடைந்த அருள்
"ஏன் இன்னும் மால்ல திறக்கல. ஒரு வேளை சன்டே லீவோ??" என்று வினித்தைப் பார்த்து கேட்க


"உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்கா? சன்டேல யாராவது மால்ல மூடுவாங்களா? இப்போ டைம்ம பாருடா கிராதகா!" என்று வினித் கூறவும் நேரத்தைப் பார்த்தவன் மணி 6.45 எனக் காட்டியது.


"என்ன டைம் இப்போ தான் 6.45 ஆ???" என்று அருள் அதிசயமாக கேட்க


"உன்னை போல ஒரு ப்ரெண்ட் கிடைக்க போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணுணனோ??" என்று புலம்பிய வினித்


"தள்ளுடா எருமை..." என்று விட்டு மாலிற்கு உள்ளே செல்லும் படிக்கட்டு ஒன்றில் சென்று படுத்துக் கொண்டான்.


வேறு வழியின்றி அவனருகில் சென்று அமர்ந்து கொண்ட அருள் நேரத்தைப் பார்ப்பதும் சுற்றி இருந்த தெருவை பார்ப்பதுமாக இருந்தான்.


மால் திறந்து விட அவசரமாக வினித்தை தட்டி எழுப்பிய அருள்
"டேய் வினித்!! மால் திறந்துட்டாங்க. எழும்பு!!எழும்பு!!" என்று வலுக்கட்டாயமாக அவனை உள்ளே இழுத்து கொண்டு சென்றான்.


அவனது மனம் கவர்ந்தவள் எங்காவது தெரிகின்றாளா? என்று கண்களாலயே வலை வீசி தேடி கொண்டிருந்தான் அருள்.


"யாரைப் பார்க்குறதுக்குடா என்ன இங்கே இழுத்துட்டு வந்த?" என்று வினித் கேட்கவும்


"அதெல்லாம் சஸ்பென்ஸ் நீ போய் அந்த பெஞ்சில் உட்கார்ந்து தூங்கு போ" என்று அருள் வினித்தை அனுப்ப


"செவனேனு ரூம்ல தூங்கிட்டு இருந்தவன கதற கதற இழுத்துட்டு வந்து இப்போ பெஞ்சில தூங்க சொல்றியே உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க?" என்று கேட்டான் வினித்.


"அது...." என்று அருள் ஏதோ கூற தொடங்கும் போது அவர்கள் நின்ற இடத்தில் இருந்து சற்று தள்ளி ஏதோ சலசலப்பு கேட்கவும் அங்கே சென்றான் அருள்.


அங்கே அவனது ஏஞ்சல் மிரட்சியாக பயந்து போய் நின்று கொண்டிருக்க அவளை சுற்றி நான்கு, ஐந்து தடியர்கள் நின்று அவளை வம்பிழுத்துக் கொண்டு நின்றனர்.


அந்த நபர்களின் முன்னால் சென்று நின்ற அருள்
"என்ன பாஸ்??? வேலை எதுவும் இல்லையா?? தனியா நிற்குற பொண்ணு கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கிங்க??" என்று கேட்க


அங்கு நின்றிருந்த நபர்களில் ஒருவன்
"தோ பாருடா வந்துட்டாரு ஹீரோ!! பார்க்க பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கே. அடிச்சு மூஞ்சலாம் உடைக்குறதுக்குள்ள ஓடிடு" என்று கூறவும்
அந்த நபரை நெருங்கி நின்ற அருள்

அவன் கைகளை பற்றி குலுக்கிக் கொண்ட படியே
"பாஸ் நீங்க நினைக்குற மாதிரி
நான் ஹீரோலாம் இல்லை பாஸ். சாதாரணமான ஒரு அப்பாவி ஜீவன்" என்று கூறி கொண்டே பற்றியிருந்த அவன் கைகளை இறுக்கமாக பிடிக்க எதிரில் நின்றிருந்தவனோ வலியால் துடித்துக் கொண்டு நின்றான்.


"ஸார் ஸார் விட்டுடங்க ஸார். இனிமே இந்த ஏரியாவுக்கே வர மாட்டோம் ஸார். ப்ளீஸ் ஸார் விட்டுடுங்க ஸார்" என்று கெஞ்சிய படி அருளின் கைகளில் இருந்து தன் கையை மீட்டெடுக்க அந்த நபர் போராடிக் கொண்டு நின்றான்.


"இனி இந்த ஏரியால எங்கேயாவது உங்கள பார்த்தேன் தொலைச்சிடுவேன்" என்று அருள் கூறவும் விட்டால் போதும் என்று அந்த தடியர்கள் ஓடி விட தன் பின்னால் நின்று கொண்டிருந்தவளின் புறம் திரும்பினான் அருள்.


அருளை நிமிர்ந்து பார்த்தவள்
"ரொம்ப தாங்க்ஸ்...." என்று விட்டு ஓடி விட


"ஹேய்...." என்று அவன் அழைத்தும் நிற்காமல் சென்று விட்டாள்.
மீண்டும்
அழகியே மேரி மீ....
என்று பாடல் கேட்கவும்
"நம்மள கலாய்க்குறதுக்காகவே வேணும்னு இந்த பாட்டை எவனோ போடுறான் போல இருக்கே!!!" என்று கூறி கொண்டே சுற்றும் முற்றும் தேடி பார்த்தான் அருள்.


தூர நின்று நடப்பவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற வினித் அருள் யாரோ ஒரு பெண்ணுடன் பேசுவதைப் பார்த்ததும் அவனருகில் சென்றான்.


வினித் அருள் அருகில் செல்லும் போது அந்த பெண் சென்று விட அவள் கையில் இருந்து கீழே ஏதோ விழவும் அதை வினித் எடுத்து கொண்டான்.


"அருள் யாருடா அது?? உனக்கு தெரிஞ்சவங்களா?" என்று வினித் கேட்கவும்


"கூடிய சீக்கிரம் தெரிஞ்சவங்களா ஆகப் போறாங்க" என்று அருள் கூற குழப்பமாக அவனைப் பார்த்தான் வினித்.


தன் மனதில் இருந்த எண்ணங்களை எல்லாம் வினித்திடம் கூறிய அருள்
"நாளைக்கே அவகிட்ட என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்லலாம்னு இருக்கேன்டா" என்று கூறவும்


"நீ ரொம்ப அவசரப்படுறியோனு தோணுது அருள். எதுவாக இருந்தாலும் ஒண்ணுக்கு ரெண்டு தரம் நல்லா யோசிச்சு முடிவெடு. அப்புறம் பின்னாடி பீல் பண்ணுற மாதிரி வைச்சுராத" என்று கூறினான் வினித்.


அறைக்கு வந்த பின்னரும் பலமுறை தான் எடுத்த முடிவு சரியா என யோசித்து பார்த்த அருள் நாளை அவளிடம் எல்லாவற்றையும் கூறி விடலாம் என்ற முடிவோடு உறங்கச் சென்றான்.


அடுத்த நாள் காலேஜ் செல்ல வேண்டும் என்பதற்காக நேரத்துக்கு தயாராகி வந்த வினித் அருளை அழைக்க அவனோ


"இன்னைக்கு நான் வரலடா நீ போ" என்று கூறவும்


"மச்சான் எதுவாக இருந்தாலும் யோசிச்சு பண்ணு அப்புறம் வருத்தப்படக்கூடாது" என்று விட்டு வினித் சென்று விட தன் பைக்கை எடுத்து கொண்டு மாலை நோக்கி சென்றான் அருள்.


அன்றும் அவனை காக்க வைக்காமல் அவனுடைய ஏஞ்சல் வந்து விட அவளின் பின்னால் சென்று கொண்டிருந்தான் அருள்.


தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் நெருங்கி செல்கையில் மறுபடியும்
அழகியே மேரி மீ....
என்ற பாடல் கேட்கவும் கடுப்படைந்த அருள்


"மவனே!! எவனோ என்ன வேணும்னே இந்த பாட்ட போட்டு ஓட்டுறான். இருடா உன்னை யாருனு கண்டு பிடிக்குறேன்" என்று விட்டு ஒவ்வொரு தளமாக சென்று அந்த பாடல் எங்கிருந்து வருகிறது என்று தேடத் தொடங்கினான்.


ஒரு கட்டத்திற்கு மேல் இயலாமல் சலித்து போனவன்
"சே!! யாரு போடுறாங்கனு தெரியலையே!" என்று கூறி கொண்டவனுக்கு அப்போது தான் தான் வந்த வேலை ஞாபகம் வந்தது.


"அய்யய்யோ!!! ஏஞ்சல்..." என்றவாறு தேடியவன் அவளைக் காணாமல் போகவே


"மிஸ் பண்ணிட்டேனே..." என்று வருத்தத்துடன் கூறி விட்டு அவனது பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அறை வாயிலிலேயே காத்து நின்ற வினித் அருளை பார்த்ததும் அவனருகில் வந்து
"என்னடா சக்ஸஸா? எல்லாமே சொல்லிட்டியா?" என்று கேட்கவும்


"அட போடா!! அவகிட்ட பேச போறதுக்குள்ள அவ போயிட்டா" என்று விட்டு நடந்தவற்றை எல்லாம் வினித்திடம் கூறினான் அருள்.


"ஒரு வேளை அந்த பாட்டு மூலமாக தான் நீங்க சேரணும்னு இருக்கோ என்னவோ?" என்று வினித் கூறியது பின்னாளில் அவனுக்கே வினையாகப் போகிறது என்பதை அவன் அறிந்திருந்தால் இந்த வசனத்தை கூறாமலேயே விட்டிருப்பான்.


"நாளைக்கு என்ன நடந்தாலும் சரி. அவ கால்ல இருக்குற சிலிப்பரால என்ன அடிச்சாலும் சரி. நான் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ண தான் போறேன்" என்று விட்டு அருள் சென்று விட


"இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?" என்று புலம்பியபடி வினித்தும் சென்று விட்டான்.


காலையில் எழுந்து இருக்கும் அனைத்து கடவுளையும் வேண்டிக் கொண்ட அருள் அவனது ஏஞ்சலைத் தேடி சென்றான்.


அன்று பியூட்டி பார்லர் சென்று விட்டு வந்திருப்பாள் போல வழக்கத்திற்கு மாறாக அழகு தேவதையாக அவள் ஜொலித்து கொண்டிருந்தாள்.


அவளை நெருங்கி சென்ற அருள்
"ஹாய்...." என்று கூற
அவனது குரலில் திரும்பியவள்


"ஹலோ...ஸார்..எப்படி இருக்கீங்க??" என்று கேட்கவும்
அவளை வியப்பாக பார்த்தான் அருள்.


"என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்று அருள் கேட்கவும்


"நாலு நாளா இந்த மால்ல இங்க வேலை செய்யுற செக்யூரிட்டிஸ விட உங்கள தான் நிறைய வாட்டி பார்த்துருக்கேன்" என்று அவள் கூறி
சிரிக்க அவளோடு இணைந்து சிரித்தான் அருள்.


"பை த வே ஐ யம் அருள். அருள் வேந்தன்" என்று கூற


"நைஸ் நேம்..." என்று அவள் கூறவும்


"உங்க நேம் சொல்ல மாட்டீங்களா?" என்று அருள் கேட்கவும் அவள் அமைதியாக இருந்தாள்.


"ஓகே உங்களுக்கு விருப்பம் இல்லனா வேண்டாம்" என்று கூறிய அருள்


"நாலு நாளும் நீங்க என்னை பார்த்தீங்களா?" என்று அவளைப் பார்த்து கேட்டான்.


"ஆமா பெர்ஸ்ட் டைம் பசங்க கூட விளையாடிட்டு வந்து மோதுனேன், செகன்ட் டைம் அந்த தடிமாடு பசங்க கிட்ட இருந்து ஹெல்ப் பண்ணுணிங்க, நேத்து யாரையோ நீங்க மால்ல தேடிட்டு இருந்தீங்க, இதோ இன்னைக்கு இப்போ மீட் பண்ணிருக்கோம்" என்று அவள் கூறவும்


"அப்படி என்றால் இவளும் என்னை போலவே என்னை பார்த்து இருக்கிறாளா??" என்ற எண்ணமே அவன் மனதில் சந்தோஷச் சாரலை வீசச் செய்தது.


"இனியும் தாமதிக்க கூடாது" என்று எண்ணிய அருள்


"உங்க கிட்ட ஒரு இம்ப்பார்ட்டண்ட் மேட்டர் சொல்லனும்" என்று கூறினான்.


"சொல்லுங்க.." என்று அவள் கூறவும்


"நான் உங்கள லவ் பண்ணுறேன். உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். என்னடா பார்த்து நாலு நாள்லயே லவ் சொல்றானேனு நீங்க நினைக்கலாம். உங்கள பெர்ஸ்ட் டைம் பார்த்ததுமே என் மனசு சொல்லிடுச்சு. எனக்கு நீங்க தான்னு. நீங்க பொறுமையாக யோசித்து உங்க முடிவை சொல்லுங்க. இதே இடத்தில் நாளைக்கு உங்களுக்காக வெயிட் பண்ணுவேன். யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க" என்று விட்டு அருள் செல்ல
ஷாக்கடித்தது போல் உறைந்து நின்றாள் அவனது ஏஞ்சல்.


அவளது அதிர்ச்சியான முக பாவனையாய் பார்த்து ரசித்த அருள் மீண்டும் அவளருகில் வந்து
"ஸாரி மை ஏஞ்சல்.." என்று விட்டு அவளது கன்னத்தில் முத்தமிட மொத்தமாக உறைந்து போய் நின்றாள் அவள்.


சரியாக அந்த தருணம் பார்த்து அவனது மனம் கவர்ந்த பாடல் ஒலித்தது.
அழகியே மேரி மீ....
மேரி மீ.....
என்று வரிகள் கேட்கவும் சிரித்துக் கொண்ட அருள்


"யூ நோ நமக்கும் இந்த சாங்க்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கு. இந்த சாங் கேட்கும் போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம் வர்ற மாதிரி உனக்கும் என் ஞாபகம் வரணும் ஓகே. எத்தனை வருஷம் கழித்து இந்த பாட்டை நீ எங்கே கேட்டாலும் என்னைத் தேடுனனா உன் மனசுல நான் இருக்கேனு அர்த்தம். மறந்துடாதே நாளைக்கு உனக்காக இங்கே நான் காத்துட்டு இருப்பேன். பாய் மை டியர் ஏஞ்சல்" என்று அவள் கன்னம் தட்டி விட்டு செல்ல அவளோ கண்கள் கலங்க திகைத்துப் போய் நின்றாள்.


சந்தோஷமாக வந்த அருளை பார்த்த வினித்
"என்னடா முகமெல்லாம் அப்படியே ஜொலி ஜொலிக்குது? எல்லாமே சொல்லிட்டியா?" என்று கேட்க


அவனைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்த அருள் தன் அறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டு மனம் நிறைந்த மகிழ்வுடன் அவளைப் பற்றி எண்ணி கொண்டிருந்தான்.


அடுத்த நாள் காலை காலேஜ் சென்றவன் அவளை வரச் சொன்ன நேரம் நெருங்கியதும் வினித்திடம் சொல்லி விட்டு அவளை தேடி சென்றான்.


வெகு நேரமாக காத்திருந்தும் அவள் வராமல் போகவே அவனுக்குள் பயம் தொற்றிக் கொண்டது.


"ஒரு வேளை அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ?" என்று யோசித்த அருள்


"அப்படி எல்லாம் இருக்காது.." என்று தனக்குள்ளேயே ஆறுதல் கூறி கொண்டான்.


மால் மூடும் நேரமும் நெருங்கி விட கவலையுடன் அறையை நோக்கி சென்றான் அருள்.


தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களாக வந்து ஏமாற்றத்துடன் திரும்பி போய்க் கொண்டிருந்தான் அருள்.


அருள் கவலையாக இருப்பதை பார்த்த வினித்
"அருள் நீ இப்படி சோகமாக இருக்குறதால எதுவும் மாறப்போறதில்லை. அவ உனக்கு தான்னு நீ உறுதியாக இருந்தா கண்டிப்பாக அவ வருவா" என்று அவன் கூறியும்
அருளின் முகம் தெளிவடையாமல் இருக்கவும்


"வேணும்னா இப்படி பண்ணு. அந்த பொண்ண பார்க்குறப்போலாம் ஒரு பாட்டு எப்போவுமே கேட்கும்னு சொன்னலே. அந்த பாட்டை ஒரு பெரிய மைக் செட்ல போட்டுட்டு அந்த மால் இருக்குற ஏரியாவுக்கு போ. அவ உன்னை தேடி வருவா" என்று வினித் கூறவும் அவனை ஆரத் தழுவி கொண்டான் அருள்.


அன்று வினித் கூறிய ஐடியா இன்று அவனுக்கே எமனாக மாறி விட்டது.


பழைய நினைவுகளிலிருந்து மீண்டு கொண்ட அருள் நாளை தன் மனதுக்கு இனியவளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் என்ற மனம் நிறைந்த மகிழ்வுடன் உறங்கிப் போனான்.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top