• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

C N 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
தங்களின் அபிப்பிராயங்களை தெரிவித்தமைக்கு நன்றி மக்களே. ❤❤❤
@Monisha thanks a lot for the pic❤❤❤
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
NICE update Ani... appo paatti vacha perthaana Indhiran... eno ivalavu kovam peran mela...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சின்ன நெஞ்சிலே-2

“இந்த பொட்டிக்குள்ள அப்படி என்ன தான்ட்டி இருக்கு? இதை எடுத்தாறேன்னு அவன் இருக்கிற இடத்துக்கு போகாதேன்னு சொல்லக் கேட்கியா? கொஞ்சம் கூட உனக்கு ஆத்தான்னு ஒரு மட்டு, மறுவாதை இல்லை. அந்த சண்டாளன் இப்படி ஏமாத்திபுட்டானே ஆவுடை பேத்தியை”

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் ஆவுடையம்மாள். வயதின் வேலை இது! இரும்பு மனதுக்காரியான அவரையும் புலம்ப வைத்திருந்தது. சங்கரனுக்கு ஆத்தாவின் உடல் நிலை பற்றி நன்றாகத் தெரியும்! இப்படியே புலம்பிக்கொண்டிருப்பது அவர் உடல்நிலைக்கு நல்லதில்லை. பல தடவை அவரிடம் தென்னந்தோப்பில் வேலையுள்ளது போகலாம் என்று அழைத்தும் பாட்டி அவ்விடத்திலிருந்து இப்போது நகருவதாக தெரியவில்லை.

“ஆத்தா நீ வயலுக்கு போயிட்டு வா, கஸ்தூரி இருக்குறால்ல என் துணைக்கு!” நிலானி சொன்னாலும் நம்பிக்கை இல்லாத முகபாவனை காட்டினாள் பாட்டி. அவன் திரும்ப வந்து பேத்தியின் மனதை கரைத்துவிடுவானோ! இவளும் அவனை நம்பி போய்விடக் கூடுமோ என்ற ஐயம் அவரை ஆட்கொண்டது!

“அவனை எங்கட்டி பார்த்தே! எப்படி உங்களுக்குள்ள பழக்கமாச்சு? இந்த சொத்துக்காக அவன் அப்பன் மவனை ஏவி விட்டிருப்பானோ, வெறும்பய!”
சற்று நேரம் தனக்கு தெரிந்த அத்தனை வசவு வார்த்தைகளையும் கொண்டு, வந்தவன், அவனை பெற்றவர்கள், அவனை சார்ந்த அனைத்தையும் ஏசித் தீர்த்தார்.


“பொம்பளை புள்ள, அதிலும் பெரிய படிப்பு படிச்சவ சூசனமா இருப்பியேன்னு நினைச்சா, இப்படி ஒரு கிரகத்தை புடிச்சிட்டு வந்திருக்கியே ட்டி! நானும் வந்த நாளா அவன பத்தி கேட்கேன் வாயை திறந்து சொல்லுதியா புள்ள நீ”

நிலா ஆத்தாவின் கால்மாட்டில் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
‘என்ன சொல்ல?’
பாட்டியிடம் அவனை எங்கே எப்படி சந்தித்தேன் என்று சொல்வது? உண்மையை அப்படியே சொல்ல முடியாது! அவரிடம் நிலா பொய் உரைக்கவும் பயந்தாள்.
என்றெல்லாம் பொய் சொல்லியிருக்கிறாளோ வசமாய் பாட்டி பிடித்துக் கொண்டிருக்கிறாள்.


அதற்காகவே இப்போது எதுவும் சொல்லாமல் நேரத்தை கடத்தினாள். வேண்டுமானால் சென்னையில் வேலை பார்த்த போது சந்தித்ததாய் சொல்லலாம். வெளிநாட்டில் அவர்கள் ஒரே பக்கம் இருப்பதை மட்டும் உளறிவிட்டால் இந்த பயணம், தன் வேலை எல்லாவற்றுக்கும் உலை வைத்தாகிவிடும். வேலைக்கும் போகாமல் இந்த ஊரிலிருந்து என்ன செய்ய?

தன் வாழ்க்கை இப்படி ஆனதே என்ற கழிவிரக்கம் மறுபடி தலை தூக்கியது. யோசனைக்கிடையே தலையை நிமிர்த்தி அந்த முதியவளை பார்த்தவள்,

“ஆத்தா நீ இப்ப கிளம்பு. மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேயில்ல அப்போ நடந்த எல்லாத்தையும் சொல்றேன்”
பாட்டியின் கையை பற்றி தூக்கி விட்டாள்.


“அதான் நிலா சொல்லுதால்ல வா ஆத்தா” சங்கரன் ஒரே பிடியாய் நின்றார்! வாசல் வரை போன ஆவுடையம்மாள்,

“ஏலேய் பாண்டி, காவலுக்கு இங்கனையே நில்லுலே. என் புள்ள பத்திரம். ஒரு பயலையும் உள்ளே விட்டிராதே, பார்த்துக்கோ! கஸ்தூரி ஏட்டி கஸ்தூரி”
“என்ன ஆத்தா?”அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள் அந்த தாவணி போட்ட பெண்.


“என்ன ட்டி கையில் புத்தகம்? பள்ளிகூடத்துக்கு படிக்க அனுப்பினா படிக்க மாட்டேனுட்டே! ஆனா எந்நேரமும் கையில் கதை புத்தகம்! கழுதை! உன்னை...எடுறீ அந்த விலக்கமாத்த!”
பாட்டி இருந்த மனக்குழப்பத்தில் பார்த்தவர்கள் அனைவரையும் குதறிக் கொண்டிருந்தாள்.


“ஆத்தா இது சமையல் புத்தகம் தான் ஆத்தா” பயந்துக் கொண்டே நிலாவின் பின்னோடு போய் ஒளிந்துக் கொண்டாள் அந்த சின்ன பெண்.

“என்ன கன்றாவியோ! எதையாவது படிச்சிட்டு தூங்கி போனையோ, தொலைச்சிடுவேன் உன்னை. ஒழுங்கா நிலா கூடவே இரு! இன்னிக்கு சமையலை உங்கம்மா பார்த்துப்பா என்ன?”

ஆத்தாவுக்கு தன் மீது நம்பிக்கை இல்லை என்பது அவள் செய்துவிட்டு போன ஏற்பாடுகளிலேயே நன்றாக புரிந்துவிட்டது நிலானிக்கு. அவள் செய்த காரியத்துக்கு இன்னுமா நம்பிக் கொண்டிருப்பார்கள்! இத்தனை பொறுமையாய் தன்னிடம் இருப்பதே அதிசயம்!

பாட்டி தயார் நிலையில் வைத்து விட்டுப் போன இத்தனை கெடுபிடிகளையும் உடைத்தே தீருவேன் என்பதாய் அவனும் வந்தான்.

கஸ்தூரியிடம் படுக்க போவதாக சொல்லி விட்டு தன் அறைக்குள் அடைந்திருந்தவள் நிலா. சற்று நேரத்துகெல்லாம் சலசலப்பு சத்தத்தில் அவர்கள் வீட்டின் வெளியே எட்டிப் பார்த்தாள்.

பாண்டி அங்கே வந்தவனை வீட்டிற்குள் விடாமல் வழிமறித்துக் கொண்டிருந்தான்!

இவனை என்ன தான் செய்ய!
“பாண்டி அவரை விடு” நிலாவின் சத்தம் கேட்டு திரும்பிய பாண்டி,
“நிலாம்மா ஆத்தா என்னை வையும்”
“நான் பார்த்துக்குறேன். நீ அவரை விடு என்னன்னு கேட்போம்”
வேக நடையில் அவளருகே வந்தான். வேர்வையில் நனைந்திருந்தான்! கைக்குட்டையை கொண்டு அவன் சாவகாசமாய் தன் நெற்றியை துடைத்துக் கொள்ள,


“எதுக்கு இங்கே வந்தே நீ. உன்னால பிரச்சனை செய்யாம இருக்க முடியாதா?”
வாசலிலேயே நிற்க வைத்திருந்தாள் அவனை. சுற்றியிருந்தவர்கள் பார்வையெல்லாம் இவர்கள் இருவரின் மேல் தான்!


அவனோ இருக்கும் நிலவரம் அறியாது அவளை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!
‘சைட் அடிக்கிற நேரமா இது! மாக்கான்’
அவன் பார்வையின் வித்தியாசத்தைக் கண்டவள் அவனை மனதில் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.


“இந்திரன், எதுக்கு வந்தே இங்கேன்னு கேட்டேன்!”
“புருஷன் பெயரை சொல்றது, நீ வா போன்னு பேசுறது எல்லாம் சரி கிடையாது நிலா. ஆத்தா உன்னை சரியாவே வளர்க்கலை!”


“இதை சொல்லத்தான் வந்தியா நீ? என்ன விஷயம்னு சொல்லிட்டு கிளம்பு”
அவள் தொணதொணத்தது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.
தலைக்கு குளித்திருந்தாள். தோள் அளவுக்கு இருந்த முடி காற்றில் அசைந்தாடி அவளை மென்மேலும் அழகாக்கியது. பேச வந்ததை மறந்துப்போய் மனைவியை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான்!


அவனின் செயல் இன்னமும் எரிச்சலை கிளப்ப,
“நீ சரி பட்டு வர மாட்டே, பாண்..”
அவள் வாயை தன் கையால் மூடியவன்,
“இதை தர தான் வந்தேன்” ஒரு பார்சலை அவள் கையில் திணித்தான்.


“நான் இன்னிக்கி சென்னை போறேன். இன்னும் மூணு நாளில் நமக்கு பிளைட், ஒழுங்கா வந்து சேரு!”
“யாரைக் கேட்டு டிக்கெட் வாங்கினே நீ? உன் கூட நான் எங்கையும் வரமாட்டேன்.”


“சரி வராதே. ஆவுடை கூடவே இரு!
நான் கிளம்புறேன்.”
போய் கொண்டேயிருந்தவனை,
“இந்திரன் நில்லு. என் பாஸ்போர்டை குடுத்திட்டு போ”
“அச்சோ ரூமில் வச்சியிருகேன்! வரியா எடுத்து தரேன்”
அவன் கண்ணடித்து சொல்ல, பதிலுக்கு முறைத்துவிட்டு திரும்பி வீட்டினுள் சென்றுவிட்டாள்.


“சீக்கிரம் போங்க தம்பி, ஆத்தா வந்திட போகுது”
பாண்டியன் வேறு படபடக்க அவனை ஆரய்ந்தான் இந்திரன். பாண்டியனின் இடுப்பு உசரம் தான் ஆவுடை பாட்டி, ஆனால் இவனானால் அவருக்கு பயப்படும் நடுங்கியாய் இருக்கிறானே! பாட்டியின் திறமை அப்படி!


நிலாவை பார்த்தது வேறு அவனை உற்சாகமாய் மாற்றியிருக்க, விசிலடித்தபடி தான் வந்திருந்த காரில் ஏறி கிளம்பிவிட்டான்.

அறையினுள் வந்தவளுக்கு ஒன்றும் விலங்கவில்லை. எத்தனை எளிதாய் அவன் கூட வரும்படி சொல்லிவிட்டான்! ஜன்னல் வழியே அவன் போவதை பார்த்துக் கொண்டு நின்றவளை கஸ்தூரி பிடித்து கொண்டாள்!

“அக்கா மாமா சூப்பர் கா. என்னா ஒசரம், என்னா நெறம்! இந்த கிழவி சும்மா புலம்பிட்டு கெடக்குது. அதை எல்லாம் மனசில் வச்சுக்காதே! நீ ஒரு தப்பும் செய்யலை! அவர் உன் மாமன் மவன் மட்டுமில்லை! உனக்கு ஏத்த ஆளா தான் கா தெரியுது”

அவள் பாட்டுக்கு இவளை ஏத்தி விட்டுக் கொண்டிருக்க நிலாவின் மனதில் ஒன்றும் ஒட்டவில்லை. போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் மூழ்கியிருந்தாள்.

அதை கலப்பது போல் ஆத்தாவின் கார் வாசலுக்கு வந்துவிட்டது! அவரை பார்த்த நொடி,
“கஸ்தூரி இதை என் பெட்டிக்குள்ள வைச்சிடு, ஓடு...சிக்கிரம்”
அவன் கொடுத்ததை மறைத்து வைத்து விட்டு சாதாரணமாய் தன்னை காட்டிக் கொண்டாள் நிலா!


ஆத்தா வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய்,
“உன் கல்யாணத்தை பதிஞ்சாச்சா நிலா?”
திடுதிப்பென்று வந்து விழுந்த கேள்வியால்,
“இல்லை” என்றாள் பொய்யாய்!
பேத்தி கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து பார்த்தாள் பாட்டி. அவர்கள் குல வழக்குப்படி இருந்தது கயிற்றின் நுனியிலிருந்த அந்த பொன் தாலி!


“இதை கட்டிடா அவன் பொண்டாட்டி ஆயிடுவியா நீ? சம்பிரதாயம்னு ஒன்னு இல்ல? அடுத்த மொற அவன பார்கேலே இதை கழட்டி அவன் மூஞ்சியில் விட்டெறிட்டி”
ஆத்தா சொன்ன விதத்தில் நிலாவின் கை அவளையும் அறியாமல் அந்த தாலியை இருக்கி பிடித்துக் கொண்டது.


அவளடைந்த பதட்டம் பாட்டியின் கண்களில் விழ தவறவில்லை. சற்று நேர அமைதிக்கு பின்,
“உனக்கும் அவனை பிடிக்குமாட்டி?எதுனாலும் ஆத்தா கிட்ட சொல்லு புள்ள. மனசிலே எல்லாத்தையும் வச்சிகிட்டு கஷ்டப்படாதே!”


தனக்கு இருக்கும் ஒரே உறவு பாட்டி தான். அவளின் இந்த ஆதரவான பேச்சில் மனம் இளகியது!

‘ஆமா ஆத்தா எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்! என் வாழ்க்கையே அவன் தான்’
தோன்றிய வாக்கியங்களை விழுங்கிவிட்டு,


“இல்ல ஆத்தா, இப்ப இல்லை! பொய்யில் என் வாழ்க்கை ஆரம்பிக்கிறதை நான் விரும்பலை. எனக்கு அவன் வேண்டாம்.”
கண்ணீர் வடிய நின்றிருந்தாள். கஸ்தூரி அவள் கையை ஆதரவாய் பற்றியிருக்க, பேத்தியின் கண்ணீரை பார்த்து ஆவுடை பாட்டியோ!


“எம் பேத்தி டி நீயி, இதுக்கெல்லாம் அழுவாதே”

“இதை காரணமா வச்சி என்னை வேலைக்கு அனுப்பாம விட்டிராதே ஆத்தா! எனக்கு என் வேலை முக்கியம் , நான் அதை ரொம்ப விருப்பப்பட்டு செய்றேன்”

“சரி சரி வேலைக்கு போலாம். ஒரு மாசம் போவட்டும் அனுப்பி வைக்கேன்”

“ஒரு மாசமெல்லாம் லீவ் இல்லை ஆத்தா. ரெண்டு வாரம் தான். நான் வர சனிக்கிழமை சென்னையிலிருந்து கிளம்பணும். டிக்கெட் போட்டாச்சு.”

“காலில் சுடு தண்ணி ஊத்தின மாதிரி எப்பையும் பறப்பே நீயி...நெல்லையில் எதுவும் வாங்க வேண்டி இருந்தா இன்னிக்கு போயிட்டு வா. சங்கரா வெரசா சாப்பிடுலே. பேத்தியை அழைச்சிட்டு போ. ஏட்டி கஸ்தூரி உனக்கு என்னவும் வேணுமின்ன போயிட்டு வாட்டி! அக்காக்கும் துணைக்கு ஆச்சு! சங்கரா எம் பேத்தி பத்திரம் லே!”

“சரி ஆத்தா! நான் போய் கிளம்புறேன்”
அறைக்குள் திரும்ப போனவளிடம்,
“நிலா அந்த பய பேரு என்னட்டி?”
அவளும் தலைகுனிந்தபடி,
“இந்திரன்” என்றாள்.
ஆசையாய் தலை பேரனுக்கு தான் வைத்த பெயர் மட்டும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டாள் ஆவுடை பாட்டி!
pollatha pattiya irukalea .......
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
அருமையான பதிவு
பாட்டியின் கோபம் தீர்க்க
இந்திரன் ஏன் ஒண்ணும் செய்யல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top