• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

chippikul muthu-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
நாட்கள் வேகமாக நகர தொடங்கின....பாரதிக்கு மனதிற்குள் கலக்கம் கூடிக்கொண்டே சென்றது. தன் மகளை பிரிய போவதை எண்ணி வருத்தம்

ஒருபக்கம் மறுபக்கம் அன்புக்கரசி தன் மகளை ஏற்றுக்கொள்வாளா ? என்று வருத்தம் எல்லாம் சேர்ந்து மிகுந்த கவலை கொண்டாள் .."இதற்கு ஒரு

வழி தான் இருக்கு". சித்தரால் மட்டுமே ஒரு தீர்வு சொல்ல முடியும் என்று தன் அறைக்கதவை மூடிவிட்டு வேண்டினாள். அவள் வேண்டிய அந்த

நொடி கண் முன் தோன்றிய சித்தர் , " என்ன மா...............உனக்குள்ள என்ன வருத்தம் இப்போ? .என்றார்.

என் வருத்தம் எல்லாம் என் மகளை பத்திதான் .நான் போனப்புறம் அன்பு என்னோட மகளை ஏத்துகொள்வாளா? என் மகள் என்று தெரிந்ததும்

அவளோட அணுகுமுறை எப்படி இருக்கும்..

மகளே உன்னோட வருத்தம் நியாயமானதுதான் .ஆனா நீ இந்த உலகத்தை விட்டு பிரிஞ்சிட்ட ..உனக்கு கொடுக்கப்பட்ட நேரம் உன் மகளோட

எதிர்காலத்தை நிர்ணயிப்பதர்ககானது. இனி அவளோட வாழ்க்கையும், பிரச்சனைகளையும் அவ தான் பார்க்க வேண்டும்...நீ இந்த உடலை விட்டு பிரிய

வேண்டிய நேரம் வந்தவுடன் ஒரு கடிதத்தில இவ்வளவு நாள் நடந்த விஷயத்தெல்லாம் எழுதிவச்சிடு...அன்புக்கரசி அதை படித்துவிட்டு என்ன

பண்ணபோறானு விதி தீர்மானிக்கட்டும்...இன்னைக்கு இரவோட உன்னோட நேரம் முடியுது....பாரதி...அதுக்குமுன்னாடி ..உன் கிட்ட ஒரு விஷயம்

சொல்லணும்..நான்...என் உனக்கு இந்த உதவிய செய்ய ஒத்துக்கிட்டேன்....தெரியுமா....

தெரியாது இல்ல..............


நீ பொறந்த ஆறு மாசத்துல உன்னையும் உன் அம்மாவையும் நிற்கதியா விட்டுட்டு போன உன்னோட..............அப்பா நான் தான்......

பாரதியால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை....ம்ம்....இந்த உலக வாழ்க்கையை துறக்க நினைத்து உங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு போன அந்த

கல்நெஞ்சக்காரன் நான் தான்....
................................உங்கள விட்டு போன நான் ...முற்றும் துறந்தவனா மாறினேன்...அதுக்கப்புறம் அந்த ஊருக்கு நான் வந்தபோது ....உன் அம்மா உயிரோட

இல்லைனு தெரிஞ்சிகிட்டேன்...உன்னோட வாழ்க்கையும் இப்படி ஐடிச்சினு தெரிஞ்சி என்னகுல ஒரு குற்ற உணர்ச்சி வந்துது..அதுக்காகத்தான் உன்ன

அப்பப்ப வந்து பார்த்துட்டு இருந்தேன்....உன்னோட வாழ்க்கை முடியபோதுன்னு தெரிஞ்சுது....எனக்குள்ள இருக்கிற உணர்ச்சிகளை எல்லாம்

கட்டுப்படுத்திட்டு தான் உன்ன தேடிவந்தேன்....நீ இருக்கிற உனக்கு எதுவும் பண்ண முடில....நீ போனப்புறம் என்ன தேடிவருவனு என் தவ பலத்தால

உணர்தேன்....உனக்கு உதவவேண்டியது என்னோட கடமைனு நினைச்சிதான் உனக்கு இந்த உதவிய செய்தேன்......


தான் நினைத்தே பார்க்காத இந்த நிமிடத்தை தனக்கு கொடுத்தவர் தன் தந்தைதான் என்று எண்ணி கண்ணீர்விட்டாள் ..அவர் மீது எந்த கோபமும்

வரவில்லை...தனக்கு அவர் செய்த உதவி மட்டுமே அவள் கண் முன் தெரிந்தது.....கை எடுத்து வணங்கியவளாய் அப்பா...........என்று அழைத்தாள் ..

மகளே ! நான் உறவுகளை துறந்தவன்....என்னை அந்த வலைக்குள் சிக்கவைக்காதே.....நான் செய்த குற்றத்திற்கு பரிகாரம் செய்யவே உனக்கு

உதவினேன்....உன் மகள் கடவுளின் ஆசியுடன் நன்றாக வாழ்வாள்.....

நீ செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்....தலையசைத்து மறைந்துவிட்டார்.......

கண்களில் கண்ணீரோடு கடிதத்தை எழுத ஆரம்பித்தார் பாரதி....தான் விடைபெறும் முன் மகளை சந்திக்க எண்ணியவர் அவளின் அறைக்கதவை

தட்டினார்...

அம்மா என்னமா ...ஏதாது வேணுமா...ம்கூம்...அரவிந்த் இன்னும் வர்லியாமா ...இல்லாம ..கொஞ்சம் லேட்டா ஆகும்னு சொன்னாரு.. உள்ள வாங்கம்மா

.....அவர் கிட்ட ஏதாது சொல்ல வந்தீங்களா....

இல்ல கயல்...உன் கிட்ட தான்...என்றவள் கண்கள் கலங்கியது...

அம்மா! என்ன ஆச்சு ..ஏன் அழுறீங்க....ம்ம்...ஒன்னும் இல்லமா...எப்படியோ இந்த கல்யாணம் நடந்திருச்சி....இனி ...இதுதான் உன்னோட வீடு,,இங்க

இருக்கிறவுங்க தான் உன்னோட உறவு,உன்னோட மாமியார்..நான் .........என்னபண்ணாலும் உன்னோட அம்மாவா நெனச்சி நீ...அதையெல்லாம்

பொருத்துக்கணும் சரியா ..மா....

என்னமா...நீங்க...எனக்கு உங்கள மாதிரி ஒரு அம்மாவை என் அம்மாதான் குடுத்துருக்காங்கனு நான் நம்புறேன்...நீங்க என்னபண்ணாலும் நான்

பொறுத்துப்பேன்.....ம்ம்...சரிம்மா...சரியான நேரத்துக்கு சாப்பிடு...


அம்மா.....போறேன்...

என்னமா...எங்க போறீங்க....என்..ரூமுக்கு போறேன்னு சொன்னேன்...


ஏன் மா..என்னவோ போல இருக்கீங்க....ஒன்னும் இல்லம்மா ....எனக்கு ஒரு ஆசை கயல்...என்னமா....

உனக்கு....பொறக்குற பெண் குழந்தைக்கு என்...உன்னோட அம்மா பேரை வைக்கணும்...

சிரிப்புடன் ..சரிமா .. என்றாள் ...கண்ணீருடன் அறைக்குள் வந்தவர் கதவை தாழ்ப்பாள் இது தான் எழுதிய கடிதத்தை டேபிள் மேல் வைத்தார்....அன்புக்கரசி உடலை விட்டு வெளியே வந்தார்....அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியவில்லை....

மயக்கத்திலிருந்து எழுவது போல் உணர்ந்தார் அன்பு....என்ன நடந்தது .....எழுந்து அமர்ந்தவர் டேபிள் மேல் இருந்த கடிதத்தை நோக்கினார்.....யார் இதை

இங்க வைத்தது....எடுத்து படிக்க ஆரம்பித்தார்.....பாரதி அன்புவின் உடலுக்குள் நுழைந்தது, பிரகாஷ் தான் அவரின் கணவன், கயல் அவருடைய மகள்

என்று அனைத்தையும் எழுதி இருந்தார்.....படிக்க ஆரம்பித்தவர்....இது கனவா... தான் ஏதோ கெட்ட கனவை கண்டுகொண்டிருப்பதாக

நினைத்தார்.....தன்னைத்தானே கிள்ளி உறுதி செய்துகொண்டார்...இல்ல இதுகனவில்லை....இதுதான் நிஜம்.....என் உடம்புக்குள்ள எதோ

புகுந்துருக்கு.......என் பிரகாஷ் எனக்கு ....இல்ல ...துரோகம் பண்ணல....அவருக்கு கல்யாணம் ஆனது தெரியும்.....ஆனா ஒரு குழந்தை இருந்தது

தெரியாது.....ஆனா என்னால இத ஏத்துக்க முடில.....என் வீடு தலைகீழா மாறிருக்கு....அவ மாத்தீட்டா....

என்று அழ ஆரம்பித்தார்....................
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Acho ini anbu Enna Panna pora? Kayal oda nilamai
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top