• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

chippikul muthu- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
hai டியர் friends , இதோ அடுத்த பதிவு ,




" என்ன விட்டுட்டு எங்க போனீங்க ? ?? அழுகையுடன் வந்தது பாரதி குரல். தான் தாயாக போவதை எண்ணி மகிழ கூட முடியாமல்

துயரத்தில் ஆழ்ந்தாள் . அவருக்கு எதுவும் ஆபத்து நிகழ்ந்திருக்க கூடாது. அப்படி ஆனால் அவரோட அப்பா, அம்மாவுக்கு என்ன பதில்

சொல்லுவேன். உனக்காகத்தானே எங்களை விட்டுட்டு வந்தானு கேட்பாங்களே என்று அழுத அந்த நொடி அவளின் தாய் வேகமாக

உள்ளே நுழைந்து ஒரு முடிவோடு " இப்போ நீ எதுக்கு அழுற ? அப்பவே படிச்சு படிச்சி சொன்னேனே பணக்காரங்க மனசு நிலையா

இருக்காதுன்னு வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா . இப்போ உன்ன விட்டுட்டு அவரு அவுங்க அப்பா வீட்டுக்கே போய்ட்டாரு என்று

சொல்லி அழுதார். என்ன மா சொல்றீங்க அவரு வீட்டுக்கு போய்ட்டாரா?உங்களுக்கு எப்படி தெரியும்.

" நம்ம பக்கத்து வீட்டு பையன் நான் மாப்பிள்ளையை காணோம்னு சொன்னவுடனே அவன் வேலைக்கு போய்ட்டு வர வழில உங்க

மாப்பிள் ளையும் அவுங்க அப்பாவும் வீட்டுக்குள்ள கார்ல போனத பாத்தேன்னு சொன்னான். ஏம்மா இன்னும் அந்த மனுஷனுக்காக

கண்ணீர் விடற" .



இல்ல என்னால நம்ப முடில. நானே போய் பாத்துட்டு வரேன் . அப்டியே இருந்தாலும் அவரு பாக்க மட்டும் தான் போயிருப்பாரு. நான்

வரேன் என்று வேகமாக ஓடினாள். கொஞ்சம் இரு இந்த மாதிரி நேரத்துல ஓடக்கூடாது இரு நானும் வரேன் என்று கூறிய அவள்

அன்னையுடன் புறப்பட்டாள். அங்கிருந்து பஸ் பிடித்து தான் பிரகாஷ் வீட்டுக்கு செல்ல முடியும். 45 நிமிட பயணத்தின் பின் வேகமாக

இறங்கியவள் பிரகாஷ் வீட்டின் வெளிய நின்ற செக்யூரிட்டி முன் சென்றாள் . பிரகாஷ் வீட்டை முன்பு ஒருமுறை அவரே காட்டியிருக்கிறார். "அய்யா நான் அவரை பாக்கணும்".

"அவரு நா யாருமா" ........................ பிரகாஷ்

சின்ன அய்யாவை நீ எதுக்கு பாக்கணும்? " அவரு கிட்ட பாரதி வந்திருக்கேன்னு சொல்லுங்க"

ஒரு புரியாத பார்வையுடன் அருகில் இருந்த தொலைபேசி எடுத்து " அய்யா உங்கள பாக்க பாரதினு யாரோ வந்துருக்காங்க " என்றார். உடனே சரிங்க அய்யா என்று தொலைபேசியை வைத்துவிட்டார்.

பாரதி உடனே அருகில் வந்து உள்ள வரசொன்னார்களா ? என்று முன்னேறினார். " நில்லும்மா !!!! அய்யாவே வரேன்னு சொல்லிட்டாரு. அந்த மரத்தடில பொய் நில்லுங்க" என்று அருகில் இருந்த மரத்தை காட்டினார்.

பாரதியின் அம்மா " என்ன உள்ள கூப்பிட்டு கூட பேச முடியாதா? என்று அதிருப்தியை காட்டினார். சரி நீ போ நான் இங்க இருக்கேன்.

பாரதி சென்ற சிறிது நேரத்தில் பிரகாஷும் வந்துவிட்டார். வந்தவரால் பாரதியை நிமிர்ந்து பார்க்க இயலவில்லை. "என்னங்க , ஏன் என்

கிட்ட சொல்லாம வந்துடீங்க. " I am sorry Bharathi " என்னால உன்கூட சந்தோஷமா வாழ முடில . உன் மேல எந்த குறையும் இல்ல. ஆனா

இந்த வசதி வாய்ப்பில்லாம என்னால வாழ முடில . உன் கூட இருந்தா இதெல்லாம் இல்லாம தான் இருக்கனும் . ஏன்னா உன்ன எங்க

வீட்ல ஏத்துக்க மாட்டாங்க . நீயா இந்த லைப் ஆனு பாக்குறப்போ இதுதான் பெருசா தெரியுது.

" இதெல்லாம் என்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிலையா? இல்ல நமக்குள்ள ஒத்துவராது . என்ன விட்டுடுங்கனு

நான் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்ன காதலிக்கிறேன்னு என் பின்னாடி சுத்துனப்போ தெரிலையா ? இதற்கு பிரகாஷால் பதில்

சொல்ல முடியவில்லை.

பாரதி தப்பு என்னோடது. அதுக்கு உனக்கு எவ்ளோ பணம் வேணுன்னு சொல்லு, அப்பா கேக்க சொன்னாங்க. உன்னோட லைப் கு எவ்ளோ

தேவையோ சொல்லு???? பாரதியால் பதில் சொல்ல முடியவில்லை . கண்கள் கண்ணீர் குளமாய் மாறியது. உன்னுடன் வாழ்ந்த

வாழ்க்கைக்கு விலை கொடுக்கிறேன் என்று கூறும் கணவனிடம் , அவன் தந்தையாக போகிறான் என்று கூறாமலே ,அவன் கட்டிய

தாலியை கழற்றி அவன் கைகளில் திணித்தவள் இது எனக்கு பொருத்தமில்லாதது.பொருந்தாத உறவின் மேல் நம்பிக்கை , அன்பு

செலுத்திய தவறுக்கு நானே பொறுப்பு என்று தன் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டார்.


" என்ன மாதிரி வாழ்வு இது? என்று விம்மியவளை தேற்றினார் அவளின் தாய். இது தன் குடும்ப சாபக்கேடோ என்று தோன்றியது

அவருக்கு. பாரதியின் அன்னையும் கணவனை பிரிந்தவர். பாரதி பிறந்த சில நாட்களில் அவளின் தந்தை இல்லறத்தை துறந்து ஆன்மீக

வாழ்வை நோக்கி பயணிப்பதாக கடிதம் எழுதி விட்டு எங்கோ சென்று விட்டார். அதன் பின் பாரதியின் அம்மா உறவினர்கள் தான் அவருக்கு துணையை இருந்தனர். தன் நிலையே தன் மகளுக்கு ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கினார்.


"அம்மா ! அம்மா " என்ற அழைப்பில் தன் நினைவலைகளில் இருந்து மீண்டார் பாரதி .

என்ன............ அரவிந்த். அம்மா உங்களுக்கு என் மேல என்ன கோபம் . ஏன் என் கிட்ட செரியா பேசக்கூட மாட்டேங்குறீங்க ?

அப்படியெல்லாம் இல்லப்பா hopital ல இருந்து வந்ததிலிருந்து கொஞ்சம் டென்ஷன் அவ்ளோதா. ம்....புரியுதும்மா..உங்களுக்கு பயம்

வந்துடிச்சுனு நெனைக்கிறேன். நீங்க பயப்படற மாதிரி ஒன்னும் யாகத்துக்கு. உங்களுக்கு நாங்க இருக்கோம். அப்பாவும் நானும்

உங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டோம் மா .

பாரதியால் பிரகாஷ் மேலிருந்த வெறுப்பை அரவிந்தின் மேல் கட்ட முடியவில்லை. அவளை பொறுத்தவரை அவனை மகனை

நினைக்காவிட்டாலும் வெறுக்க முடியவில்லை.

சாரி பா ...அம்மா எதோ டென்ஷன் ல இருந்துட்டேன். இனி நான் normal ஆ இருக்கேன் பா .."குட் இதுதான் என்னோட அம்மா " என்று

கன்னத்தை பிடித்து கிள்ளினான்.


அன்புக்கு தேநீர் கொண்டுவந்த கயல் அரவிந்த் உள்ளே இருப்பதை பார்த்து காலை முன்வைக்க தயங்கினாள். அவளை பார்த்த அன்பு வா

கயல் என்று அழைத்தார். அரவிந்தை பார்த்தும் பார்க்காமல் தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் ." அம்மா உங்களுக்கு புதினா டீ

எடுத்துட்டு வந்திருக்கேன்"

"குடும்மா " என்று வாங்கி கொண்டாள் . அரவிந்த் அருகில் நின்றபடி இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


வெளியே சென்றவளின் பின்னாலே சென்று ,

" இன்னைக்கு என்னோட friends ரெண்டு பேர் அம்மாவ பாக்க வராங்க. நான் கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு. நான் ஒரு 45

மினிட்ஸ் ல வந்துடுவேன் அவுங்க இன்னும் ஒரு 15 மினிட்ஸ் ல வந்துடுவாங்க.


பாத்துக்கோ என்றுரைத்து கிளம்பிவிட்டான்,

கயலுக்கு ஆச்சரியமாக இருந்தது தன்னிடம் எரிந்து எரிந்து விழுபவன் தன்னை முதல் முறை ஒரு மனுஷியாக நினைத்து பேசியிருப்பது

போன்று தோன்றியது. "ம்.. எது எப்படியோ வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி " என்று தனக்குள் பேசியவளாக

தன் வேலையை தொடர்ந்தாள். சிறிது நேரத்திற்குள் சமையல்காரர் மணி, அம்மா ஐயா friends ரெண்டு பேர் வந்துருக்காங்க, அம்மாவ

பாக்க என்று கயலிடம் கூறினார். அன்புவின் அறைக்குள் சென்று அவரிடம் விவரத்தை கூறினாள் கயல் .

மணியிடம் கூறி அவர்களை அழைத்து வர சொன்னாள் .உள்ளே நுழைந்த இருவரும் முதலில் நோக்கியது கயலை தான். அவர்களுக்குள்

பேசிக்கொண்டனர். " யார்டா இந்த பொண்ணு, நம்ம அரவிந்த் வீட்ல இந்த பொண்ண நம்ம இதுக்கு முன்னாடி பாத்ததிலியே. பொண்ணு

வேற அழகா இருக்கா. அன்பு இவர்களின் எண்ணப்போக்கை கவனிக்க வில்லை. அவர்களை மரியாதையை நிமித்தம் வாங்கப்பா என்று

அழைத்தார். " அம்மா எப்படி இருக்கீங்க. உங்க health எப்படி இருக்கு. பேச்சு மட்டும் தான் அன்பரசியிடம் அவர்கள் பார்வை கயலிடமே

இருந்தது. இருவரும் அமைச்சருடைய மகன்கள். எந்த கவலையும் இல்லாமல் வாழ்ந்ததால் மனம் போன போக்கில் வாழ்க்கையை

ஓட்டினர். இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. அரவிந்த் தன்னுடைய ஸ்டேட்டஸ் பார்த்து நண்பர்களுடன் பழகுபவன்.ஆதலால்

அவனுடைய நண்பர் பட்டாளம் மிகவும் சிறியது. அதிலும் நல்லவர்கள் என்று பார்த்தால் சல்லடை போட்டு தான் தேட வேண்டும்.


அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே அரவிந்த் உள்ளே நுழைந்தான். நண்பர்களை பார்த்தவுடன் " hai மோகன், ஸ்ரீதர் எப்படி இருக்கீங்க .

இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா " என்று கேட்டவுடன் அவன் அருகில் வந்த மோகன் மெதுவாக அவனிடம் " மச்சி ! யாருடா

இந்த பொண்ணு ! செமயா இருக்கா " என்றான். அதை கேட்டவுடன் அரவிந்த்க்கு ஏனோ கோபம் வந்தது. " இவளை யாரு இவனுங்க

முன்னாடி நிக்க சொன்னது" உள்ள போக வேண்டியது தானே " என்று பற்களை கடித்த படி முறைத்து நோக்கினான். கயல் இதை எதுவும்

கவனிக்க வில்லை. " என்னடா பதில் சொல்லல " அது..... அவ என் தூரத்து சொந்தம் அம்மாவை கவனிச்சிக்கிறதுக்காக வந்துருக்கா ...

உன்னை கீழ மணி கூப்டாரு .என்னனு போய் கேளுன்னு அனுப்பிவைத்தான். தன் நண்பன் கயலை பற்றி இவ்வாறு கூறியவுடன் ஏன்

உணர்ச்சிவசப்பட்டான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனுக்கு தெரியாத தன் நண்பர்களின் இயல்பு.

அன்புவிடம் நலம் விசாரித்த பின் உணவருந்த வந்த இடத்தில் கயல் நின்று கொண்டிருந்ததை பார்த்த ஸ்ரீதர் " டேய் ! இவுங்க தூரத்து

சொந்தம் னு சொல்றான். அந்த பொண்ணு கிட்ட எதுவும் வம்பு பண்ண முடியாது. அப்டி ஏதாது பண்ணா நம்மள பொளந்து

கட்டிடுவான்.அதுனால சும்மா ஏதாது பேச்சுகுடுப்போம்....ம்க்கும் ..உங்க name என்ன ?....................கயல்விழி. பெயர் சொல்லி முடிப்பதற்குள்

அங்கு வந்த அரவிந்த் நீ ஏன் இங்க நின்னுட்டு இருக்க. அம்மா சாப்பிட்டங்களானு போய் பாரு என்று அனுப்பி வைத்தான். நண்பர்களுக்கு

இவனின் நடவடிக்கைகள் புரிந்து போனது. என்னடா அரவிந்த் ஏன் அந்த பொண்ண ரொம்ப மிரட்டுற. .உன் தூரத்து சொந்தம் தானே. ..

நாங்க என்ன சிங்கமா,

அரவிந்த் மனதிற்குள் " உங்களுக்கு சிங்கமே பரவாயில்லை. இவனுங்க கிட்ட என்ன பேச்சி அவளுக்கு ?

சரிடா. என்னக்கு கொஞ்சம் வெளிய வேல இருக்கு . நீங்க கெளம்புனீங்கனா நானும் போய்டுவேன்.


என்னடா.....முன்னாடியெல்லாம் இருடா போலாம் என்ன அவசரம் னு சொல்லுவா இப்போ என்னடானா தொரத்தி விடுற.....

இல்லடா ஒரு மீட்டிங் இருக்கு. "ம்.....சரிடா நாங்க கெளம்புறோம்" என்று அவர்கள் சென்றவுடன் கயலை தேடினான்.
உனக்கு என்ன அவனுங்க கிட்ட பேச்சு ..............அவுங்க தான் name என்னனு கேட்டாங்க ...

ம்... அவுங்க கொஞ்சம் சரியில்ல .. இனி அவுங்க எப்பாவது வந்தாக்கூட நீ அவுங்க கிட்ட பேசாதா. ஓகே .

"சரி" ...என்று சென்றுவிட்டாள்.

காலையில் தான் நினைத்தேன் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரினு அதுக்குள்ள ஏறிடிச்சே ....

இனி அடிக்கடி இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறும் அவளுக்காக. ...............
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
JJ @ ஜூலி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top