• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 08

ஹர்ஷா பைக்கில் முன்னால் போக, தர்ஷினி ஸ்கூட்டியில் அவனை தொடர்ந்து சென்றாள். பதினைந்து நிமிட பயணத்திற்கு பின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வண்டியை நிறுத்த, தர்ஷினியும் வந்து சேர்ந்தாள். இருவரும் வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு நடந்தனர்.

“ தர்ஷி! என்னோட ப்ளாட் மூன்றாவது மாடி. நாம லிப்டில் போயிடலாம்”

“ ம்....”

இருவரும் லிப்டில் நுழைந்தனர். மூன்றாவது மாடிக்கு பொத்தனை தட்டிவிட்டவன் தர்ஷினியை பார்த்தான்.

“என்ன தர்ஷி! அமைதியாயிட்ட.... எப்பவுமே நீ அமைதி தான். ஆனா இப்போ ரொம்ப அமைதியா வர்ற.....”
“அதெல்லாம் ஒன்றுமில்லை ஹர்ஷா.... கொஞ்சம் பயம்மா இருக்கு”

“என்னை பார்த்து ஏன் பயப்படுற தர்ஷி... உனக்கு பிடிக்கலனா நாம திரும்பி போயிடலாம்” என்றான் ஏமாற்றம் தொனித்த குரலில்.

“ சே.... சே... உங்கள பார்த்து பயப்படல. நான் வாழ போற வீட்டுக்கு முதல் தடவையா வரேன்ல அதான் கொஞ்சம் பயம்மா.... படபடப்பா.... ஆவலா.... இருக்கு.”

அவளது பேச்சில் மனம் தெளிந்தவன்,” ஆவல் மட்டும் போதும். பயம், படபடப்பெல்லாம் வேண்டாம்” என்றான் சிரித்தபடி. மின்தூக்கி மூன்றாவது தளத்தில் நின்று கதவு திறந்தது.

“ நீ என்னை பார்த்து தான் பயந்துட்டியோ னு நினைச்சேன்” என்றான் ஹர்ஷா வெளியில் வந்தபடி.

“ நான் ஏன் உங்கள பார்த்து பயப்படணும்?” என்றாள் அவனை தொடர்ந்தபடியே.

“ ஏன் னு உள்ள போய் சொல்றேன்” என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து திறந்தான்.

“ WELCOME MY CREAMY GIRL” என குனிந்து ஒரு கையை நீட்டியும் ஒரு கையை நெஞ்சருகே மடக்கியும் அவளை வரவேற்றான்.

“THANK U.... THANK U...” என்றபடி உள்ளே வந்தவள் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ வாவ்.... வீட்டை நீட்டா வைச்சிருக்கீங்க ஹர்ஷா... அழகாயிருக்கு” என பாராட்டினாள்.

“ இரு.... இரு.... ஹாலை மட்டும் பார்த்துட்டு சொன்னா எப்படி எல்லா இடத்தையும் பார்த்துட்டு சொல்லுங்க மேடம்”

“ஹால பார்க்கும் போதே வீடு முழுசும் இப்படி தான் இருக்கும் தெரியுது” என்றவள் சோபாவில் அமர்ந்தாள்.

“ சரி.... டீயா? காபியா? இல்ல ஜூஸ்ஸா?” என்றவனை பார்த்து ,” நல்லா வெய்ட்டர் கேட்குற மாதிரியே கேட்குறீங்க? என சிரித்தாள்.

தன்னுடன் பேசவே தயங்கியவள், பைக்கில் வர மறுத்தவள், வீட்டிற்கு வர பயந்தவள் இப்போது அவனோடு சகஜமாக பேசிக் கொண்டிருந்தவளை ஆச்சரியமாய் பார்த்தவன்,” சரி.... அப்புறம் சிரிக்கலாம். என்ன வேணும் சொல்லு...”என்றான்.

“ காபி..... பட் நான் போடுறேன்.”

“ நோ...நோ..நோ... அந்த கொடுமை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். இப்போ நான் தான் போடுவேன்” என அவன் சீண்ட,

“ நான் போடுற காபி கொடுமையா?” என முறைத்தாள்.

“ஹி.... ஹி.... சும்மா சொன்னேன் பேபி... ஆனா என் மனைவியா இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் உனக்கு அந்த உரிமை”

“ ஹூம்.... கிச்சனுக்காவது வரலாமா? இல்ல கெஸ்ட் மாதிரி இங்க ஹால்லயே உட்கார்ந்திட்டு இருக்கணுமா?” என்றாள் உதட்டை சுழித்தபடி.

“ கண்டிப்பா என் கூட தான் வரணும். ஏன்னா நீ என் கெஸ்ட் இல்ல.... சுவீட் கீரிமீ கேர்ள்” என்று அவளை சிவக்க வைத்தான்.

இருவரும் சமையலறைக்கு சென்றனர். குளிர்சாதன பெட்டி யிலிருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றியவன், “ என் அட்ரஸ் எப்படி உனக்கு தெரியும் தர்ஷி! ஆபிஸ் ரிக்கார்ட்ஸ்ல இருக்காது. கேர்ள்ஸூக்கு டீ. நகர்ல்ல இருக்கேன் னு தான் தெரியும். கரெக்ட்டா எந்த இடம் னு தெரியாது. பாய்ஸ் யாருகிட்டயும் நீ விசாரிச்சியிருக்க மாட்டே....” என்றான் நேரிடையாக.

“ அது.... அது....” என அவள் தடுமாற

“ உண்மையை மட்டும் தான் சொல்லணும் தர்ஷி” என்றான் ஆள்காட்டி விரலை எச்சரிப்பது போல் ஆட்டி.

“ நா.....நான் ஒரு முறை உங்க பின்னாடி வந்து வீட்டை கண்டுபிடிச்சேன். அப்புறம் உங்க பக்கத்து ப்ளாட்டில் அர்ச்சனா னு ஒரு பொண்ணை பார்த்தேன் அப்படியே பழகி பேஸ்புக்ல ப்ரெண்ட் ஆனேன். மெதுவா அவ கிட்ட உங்கள பத்தி விசாரிச்சேன். முதல்ல அவளுக்கு எதுவும் தெரியல. அப்புறம் எனக்காக உங்கள கவனிச்சி சொன்னா....” அவள் சொல்லி கொண்டே போக.....

“ ஸோ.... வேவு பார்த்துட்டு தான் லவ் பண்ணியா?” என்றான் கூர்மையான பார்வையோடு. அவனது கேள்வியில் துடித்து போனாள் தர்ஷினி.

“ ப்ளீஸ் ஹர்ஷா! நான் சொல்றத கொஞ்சம்...” என விளக்க துவங்கியவளை கை உயர்த்தி நிறுத்தினான்.

“காதல்னா என்னான்னு தெரியுமா உனக்கு? மனசை மட்டுமே பார்த்து வரது. இப்படி வேவு பார்த்து வர்றதில்ல.... உன் கிட்ட இருந்து இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல தர்ஷி ” என்றான் கோபமாக. அவனது கோபத்தில் பயந்து போனவள் மௌனமாக தலை குனிந்து நின்றாள். கண்ணீர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹர்ஷாவிற்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. காதல் என்பது ஓர் உணர்வு மட்டுமல்ல.... பரஸ்பர நம்பிக்கையும் அல்லவா? எதையும் எதிர்பாராமல் வருவது தானே காதல்? ஆனால் இப்படி ஆளை வைத்து கண்காணித்து வருவது எப்படி காதலாகும்?

“ஹ....ஹர்ஷா” மெல்லிய குரலில் அழைத்தாள் தர்ஷினி. அவன் திரும்பாமல் அமைதியாக நிற்க,” ஹர்ஷா.... ப்ளீஸ் என்னை பாருங்க” என கெஞ்சினாள்.

“ம்ப்ச்....என்ன?” என எரிந்து விழுந்தான்.
அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றம், கண்களில் தெரிந்த கோபம், குரலில் வழிந்த எரிச்சல் அவள் இதயத்தை கூறு போட்டது.

“ என் காதல் பொய் னு நினைக்கிறீங்களா?” என வினவினாள் தர்ஷினி.

“ ஓ.... இதுக்கு பேர் காதலா? ஒருவேளை நீ வேவு பாத்ததுல நான் நல்லவனில்ல னு தெரிஞ்சியிருந்தா இன்னோருத்தன் பின்னாடி வேவு பார்க்க போயிடுவயில்ல.... ”என்றான் இகழ்ச்சியாக.

உயிர் வரை கிழித்த வார்த்தைகளை தாங்க முடியாமல் மடமடவென வெளியேறி ஓடினாள் தர்ஷினி.

அழகிய மலர் போல் இனிமையாக துவங்கிய அந்த20190628_202948.png நாள் வாடிய சருகாய் உதிர்ந்தது.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nice update but very little
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top