Chocolate boy - 12

#1
சாக்லேட் பாய் – 12

‘எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று....
ஏதோ.... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னை தொட மாட்டேன்....’

ஹர்ஷாவின் கைபேசியில் தர்ஷினி முகம் பளிசிட்டு கொண்டிருக்க, பின்னனியில் எஸ்.பி.பி யின் தேன்குரல் ஒலித்துக் கொண்டிருக்க , இணைப்பை ஏற்கும் நினைவு கூட இல்லாமல் தன்னவளின் எழில்முகத்திலும் அவளை விவரிக்கும் பாடல் வரிகளிலும் லயித்து போயிருந்தான் ஹர்ஷா.
நம் நாயகனும் நாயகியும் காதலிக்க தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டிருந்தது. இன்னும் இவர்களின் காதல் அலுவலகத்தில் தெரியாதிருந்ததால் இவர்களின் காதல் லீலைகள் ரகசியமாக தொடர்ந்து கொண்டிருந்தது. பாவம்.... ஹர்ஷாவின் சேட்டைகளை பார்த்து தர்ஷினி தான் திணறி போனாள். தினமும் இவளது கணினியின் ரகசிய குறியீட்டை மாற்றிவிடுவான் இந்த கள்ளன். எல்லாம் தன்னவளை தன்னை தேடி வரவழைக்க தான். அவளை சிரிக்க வைத்து, சிவக்க வைத்து, பயப்பட வைத்து, முறைக்க வைத்து, கெஞ்ச வைத்து, கொஞ்ச வைத்து.... பிறகு தான் குறியீட்டை சொல்லுவான். இன்றும் அதற்காக தான் தர்ஷினி அவனை அழைத்துக் கொண்டிருந்தாள். இணைப்பு துண்டிக்கபடும் நிலையில் சட்டென அழைப்பை இணைத்தான் ஹர்ஷா.

“ சொல்லு டார்லிங்.... “ என்றான் குறும்பு சிரிப்போடு.
“ ஏன் ஹர்ஷா இப்படி பண்ற? இன்னிக்கு பாஸ்வேர்டை மாற்றாத னு நேத்து நைட்டு எவ்ளோ சொன்னேன்?”

“ சொன்ன தான். ஆனா நீ நேத்து நான் கேட்டதை கொடுக்காமலே போன வைச்சேயில்ல.... அதான் பாஸ்வேர்டை மாத்தி வைச்சேன்” என்றான் கூலாக. அந்த பக்கம் சிறு அமைதி....

“ என்ன பேச்சை காணோம்? நான் கேன்டீன்ல தான் இருக்கேன் முதல்ல நீ இங்க வா....” என்று விட்டு இணைப்பை துண்டித்தான்.

மனதிற்குள் சிறுது திட்டினாலும் உதட்டில் சிறு முறுவலோடு கிளம்பி போனாள் தர்ஷினி.

அந்த காலை வேளையில் அனைவரும் தங்களது பணியில் மும்முரமாக இருக்க, கேன்டீன் காலியாக காட்சியளித்தது.

ஹர்ஷாவை முறைத்தபடி அவன் எதிரில் வந்தமர்ந்தாள் தர்ஷினி. இளமஞ்சள் நிறத்தில் உடை அணிந்திருந்தவள் முன் பக்க முடியை மட்டும் சுருட்டு கிளிப் போட்டிருந்தாள். உடைக்கு தோதான கம்மலை அணிந்தவளின் அழகில் சொக்கி தான் போனான் ஹர்ஷா. எப்போதுமே அவள் அழகு தான் இன்று ஏனோ பேரழகியாக தெரிந்தாள்.

“ என்ன பேபி.... கோபமா?” ஹர்ஷா எழுந்து அவளருகில் அமர்ந்தான். தர்ஷினி இமைகள் படபடக்க சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“பயப்படாத பேபி.இங்க யாருமேயில்ல கவுண்டர்ல இருக்குறவங்க கூட உள்ளே கிட்சன்ல இருக்காங்க”

“சீக்கிரம் பாஸ்வேர்டு சொல்லு ஹர்ஷா. இன்னைக்கு முக்கியமான ப்ரொஜட் இருக்கு னு சொன்னேனில்ல அப்புறமும் இப்படி பண்ணா எப்படி ? அந்த டீம் லீட் வேற இப்போ வந்துடுவான்.” தர்ஷினி பரபரத்தாள்.

“ ஓ.கே.. ஓ.கே... கூல் தர்ஷி.... அவன் வர்றதுக்குள்ள போயிடலாம். நீ சீக்கிரம் கொடு...” என தன் கன்னத்தை ஆள்காட்டி விரலால் தட்டியபடி கூறினான்.

“ ம்ஹூம்.... ” என்றாள் தலைகுனிந்தவாறு.

“ ப்ளீஸ்டி.... நாம லவ் பண்ண ஆரம்பிச்சு ஒன் மன்த் மேல ஆகுது. ஒரு கிஸ் கூட கொடுக்க மாட்டேங்குற?” என்றான் கொஞ்சலாய். அலுவலகத்தில் சாக்லேட் பாய் என அனைவராலும் கொண்டாடபடுபவன், இங்கே ஒரு முத்தத்திற்காக தர்ஷினியிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

“ ஹர்ஷா ப்ளீஸ்... புரிஞ்சிக்கோ....” என்றாள் கெஞ்சலாய்.

“என்ன புரிஞ்சிக்கணும்? நீ தான் புரிஞ்சிக்கணும் தர்ஷி. இந்த காலத்தில இது ஒரு விஷயமேயில்ல.... எல்லா லவ்வர்ஸும் பண்றது தான்.” என்றான் சிறிது எரிச்சலாய்.

“எல்லாரும் பண்ணா நாம்மளும் பண்ணணுமா? எனக்கு இது சாதாரண விஷயமில்லை ஹர்ஷா.”

“ இப்போ முடிவா என்ன தான்டி சொல்ற?”

“ என்னால.... எனக்கு... எனக்கு” தனது மறுப்பை தெரிவிக்க இயலாமல் தர்ஷினி திணறிக் கொண்டிருக்க சட்டென அவள் கன்னத்தில் இதழ்பதித்தான் ஹர்ஷா. தர்ஷினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் உடல் நடுங்க தொடங்கியது. முதல் முத்தத்தில் கிறங்கியவன் மீண்டும் அவளை நோக்கி குனிய அவளையுமறியாமல் அவனை அறைந்துவிட்டாள் தர்ஷினி. அவள் அறைந்ததில் தன்னிலை பெற்றவன் கோபத்திலும் அவமானத்திலும் முகம் இறுகி போனான். தர்ஷினியிக்குமே தான் செய்தது அப்போது தான் புரிந்தது. செய்வதறியாது திகைத்து போனாள் அவள்.

“ ஹர்ஷா.... ஸ..ஸாரி” என்றாள் சின்ன குரலில் கண் கலங்க

“ she kissed me” அவன் சட்டென சொல்ல அவனை புரியாமல் நோக்கினாள் தர்ஷினி.

“ என்ன பார்க்குற? இது தான் பாஸ்வேர்டு.” இன்று தன்னவளிடமிருந்து எப்படியாவது ஒரு முத்தத்தை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஹர்ஷா இந்த குறியீட்டை வைத்திருந்தான். எப்போதும் அத்தனை லேசில் பாஸ்வேர்டை சொல்லி விட மாட்டான் ஆனால் இப்போது அவனாகவே அதை சொன்னதில் அவனது கோபம் தர்ஷினிக்கு புரிந்தது.

“ ஹர்ஷா.... நான் வேணும்னே அடிக்கல... தெ...தெரியாம...” அவள் பேச்சை கை உயர்த்தி நிறுத்தினான் அவன்.

“ பாஸ்வேர்டு செல்லிட்டேன்ல கிளம்பு” என்றவன் எழுந்து செல்ல, அவன் கை பிடித்து நிறுத்தினாள் தர்ஷினி. அவளை திரும்பி பார்த்தவன் தன் பார்வையை அவள் கரம் பிடித்த இடத்தில் பதித்தான். கோபம் வழியும் அவன் கண்களை கண்டவள் அவன் கரத்தை விட, அவன் முன்னே சென்றான். ஒரு நொடி என்ன செய்வது என புரியாதவள் எழுந்து அவனுக்கு முன்னே சென்று நின்றாள்.

“ ஹர்ஷா.... ப்ளீஸ் ஹர்ஷா .... நான் சொல்றத கொஞ்சம் கேளு.... நான்.... நான் வேணும்னே அப்படி பண்ணல ஹர்ஷா. ஏதோ பதட்டத்தில பயத்துல அடி....அடிச்சிட்டேன். ஐ யம் வெரி வெரி ஸாரி ஹர்ஷா. நா... நான் வேணும்னா இப்போ கி.... கிஸ் பண்ணட்டுமா?” கண்ணில் நீர் வழிய அவனிடம் வினவினாள்.

அவளை கூர்மையாக பார்த்தவன்,” என்னை என்ன பொறுக்கி னு நெனச்சியா? உன் முத்தத்துக்கு மயங்கி வாங்குன அடிய மறந்துடுவேன்னு நினைச்சியோ? ” என்றான் கோபம் அடக்கிய குரலில். அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தாள் தர்ஷினி.

“நான் உன்னை கிஸ் பண்ணது தப்பு தான் தர்ஷி. ஒரு உரிமையில.... நீ என் மேல நிறைய நம்பிக்கை வைச்சிருக்கேன்ற தைரியத்தில அப்படி நடந்துக்கிட்டேன். ஸாரி.... ஆனா உனக்கும் எனக்கும் லவ் செட்டாகாது தர்ஷி. இனி இது ஒத்து வராது.... Lets break up....” மின்னாமல் முழங்காமல் ஒரு இடியை தூக்கி அவள் தலையில் போட திடுக்கிட்டு போனாள் தர்ஷினி.

“ என்ன ஹர்ஷா ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி பேசுற?”

“ உன் வேணும்னா இது சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை” என்றவன் விறுவிறுவென சென்றான்.... சென்றே விட்டான். மூளை மரத்து போனது போலிருந்தது தர்ஷினியிக்கு. செய்வதறியாது அவன் சென்ற வழியை பார்த்து சிலை போல் நின்றாள்.அலைபேசி ஒலித்ததில் சுற்றம் புரிந்தவள் கைபேசியை ஆவலாய் எடுத்து பார்த்தாள். அழைத்தது ரீனா.....

“ சொல்லு ரீனா?”

“ சிஸ்டம் கூட ஆன் பண்ணாம எங்க போயிட்ட தர்ஷினி? டீம் லீட் வந்தாச்சி....” அவள் பரபரக்க,

“இதோ.... இதோ.... டூ மினிட்ஸ் ரீனா.... நான் வந்துட்டே இருக்கேன்” அவளுக்கு பதில் உரைத்தவள் தற்காலிகமாக தன் மன சஞ்சலங்களை ஒதுக்கி விட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
FB_IMG_1563306402747.jpg
 
Last edited:
#7
unga story romba nalla irukku parveen darling..... but romba chinna thavum iruku... konjam lengthy ud ya poda mudiyuma...??
முயற்சி பண்றேன் சிஸ். நேரமின்மை காரணமாக பெரிய யூடி தர முடியல. ஆர்வம் காரணமாக எழுதாம இருக்கவும் முடியல. முடிந்த அளவு பெரியதாகவும் விரைவாகவும் தர முயற்சிக்கிறேன்.

பர்வீன்.மை
 

Advertisements

Latest updates

Top