• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 27 ( 2) ( Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

UMAMOUNI

புதிய முகம்
Joined
Aug 9, 2020
Messages
14
Reaction score
10
“ அதான் நமக்கு பத்து பொருத்தமும் பச்சக் பச்சக் னு பொருந்திடுச்சே.... அதுக்கப்புறம் எங்க அம்மாவால நோ சொல்ல முடியல...”

“ ஒருவேளை நம்ம ஜாதகம் பொருந்தலனா என்ன பண்ணியிருப்பீங்க ஹர்ஷா”

“ என்ன இன்னும் ஒரு பத்து எபிசோடு கூடியிருக்கும். ஆனாலும் தர்ஷி நம்ம பர்வீன்.மை கதைகள் எப்பவும் சுபமா தான் முடியும். சோ.... நாம கவலைபட தேவையில்லை....” அவனது பேச்சில் லேசாக முறுவலித்தவள்,

“ அப்போ வேற வழியில்லாம தான் அத்தை ஒத்துக்கிட்டாங்களா” என வாடிய முகத்தோடு வினவினாள்.

“ முதல்ல அப்படி தான் தர்ஷி. ஆனா உன்னை உங்க வீட்ல வைச்சி பார்த்த பின்னாடி ரொம்ப பிடிச்சி போச்சாம். அழகா,அமைதியா, அடக்கமா, கேட்ட கேள்விக்கு அளவாக பதில் சொன்னீயாம். எங்கம்மா மொத்தமா கவுந்திட்டாங்க. உங்க அப்பா கூட லவ் மேட்டர் தெரிஞ்ச பிறகும் முகம் மாறாம உபசரிச்சாங்களாம். உங்க அம்மா என்னை பற்றி தப்பா பேசின போது கண்டிச்சாங்களாம். என்னை பற்றி ஒரு வார்த்தை கூட தரகுறைவா பேசலயாம். அதுல எங்க அப்பா மொத்தமா கவுந்துட்டாங்க.... பொண்ணு எடுத்தா இந்த வீட்டுல தான் பொண்ணு எடுக்கணும் னு முடிவே பண்ணிட்டாங்களாம். சோ.... எங்க வீட்ல எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் தர்ஷி.” என்றான் அவள் கரத்தை இறுக பற்றியவாறு.

“ அப்போ ஏன்....” அவள் அடுத்த கேள்வியை துவக்க

“ இன்னும் என்னடி?”

“ இல்ல... இல்ல... இது ஒன்றே ஒன்று தான். பொண்ணு பார்க்க வந்த போது நம்மள தனியா பேச சொன்னாங்க இல்ல.... நீங்க ஏன் வேண்டாம் னு சொன்னீங்க?”

“ அதுவா.... எனக்கும் பேசணும் னு தான் ஆசை தர்ஷி.... நீ அனுப்பின லெட்டர படிச்சதுல வேற உனக்கு வந்திருக்குறது நான் தான் னு தெரியவேயில்லை னு புரிஞ்சிகிட்டேன். நிஜமாகவே தவிச்சி போயிட்டேன். ஆனா உங்க அப்பாவே அரை மனசா தான் ஓகே சொல்லியிருக்காரு. அந்த நேரத்தில் நாம தனியா போய் பேசினோம் னு வை மனுஷன் காண்டாயிருப்பாரு. அதான் அடக்கி வாசிச்சேன். இப்போ உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் தர்ஷி.” பெருமூச்சோடு முடித்தான் ஹர்ஷா.

கண்ணில் காதல் வழிய கணவனை நோக்கியவள்,” ஐ லவ் யூ ஹர்ஷா” என்றாள் மனம் கனிய,

“ ஐ லவ் யூ டூடி என் பொண்டாட்டி. நான் நினைச்ச மாதிரியே உன் கணவனா உன் முன்னாடி வந்து நிற்கிறேன். இனி எனக்கு எல்லா உரிமையும் இருக்கு தானே?” என கண்ணடித்தவன், நாணத்தில் எழ போனவளை எட்டி பிடித்தான்.

“ ஆனாலும் நீ என்னை அடிச்சதுக்கு தண்டனை இருக்கு தர்ஷி” என்றான் குறும்பு குரலில்.புரியாமல் விழி நிமிர்த்தியவளின் காதில்,” நான் கிஸ் பண்ணதுக்கு அடிச்ச இல்ல.... இப்போ நீ தான் என்னை கிஸ் பண்ணனும்” என கிசுகிசுத்தான்.

முகம் முழுதும் குங்குமமாய் மாற,” நோ.... ஹர்ஷா என்னால முடியாது” என சிணுங்கினாள்.

“ நோ வே தர்ஷி... தி இஸ் யுவர் பனிஷ்மெண்ட்” என மிரட்டலாக கூற, கண்களை இறுக்க மூடி அவன் இதழை தன் இதழால் வருட, அவளை இழுத்து முத்தமிட்டான் ஹர்ஷா.

முற்றும்

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
Superb story
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top