• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Dhuruva kaathal - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
“ரிகா! கடைசி ஒட்டக சவாரி தான் பண்ணனும் போல இருக்கே, இதுல ஏறகூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டு வந்தது என்ன? இப்போ பாரு இரண்டாவது தடவை, இது மேல சஃபாரி” என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

அதன் பின் அன்று காலை ஆரம்பித்த இந்த, ஒட்டக சஃபாரி மதிய வேளை ஒரு முடிவுக்கு வந்தது. அங்கே சிறிய மிகசிறிய டென்ட் ஒன்று இருந்தது, அதன் முன் தான் இப்பொழுது ஒட்டகத்தை நிறுத்தி இறங்கினர்.

அவன் கையில் சமர்த்தாக அமர்ந்து இருந்த கழுகு, இப்பொழுது ஒரு ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தது. இவளை அழைத்துக் கொண்டு, அங்கே அந்த டென்ட் உள்ளே சென்றவன், அவளிடம் map ஒன்றை காண்பித்தான்.
அதை பார்த்தவள், கண்களில் மின்னல் வெட்டதான் சேகரித்த விஷயங்களை அங்கே கடைபரப்பினாள். அதை எல்லாம் பார்த்துக் கொண்டே, அவன் கொடுத்த வரைபடத்தை வைத்து, அவள் ஒரு இடத்தை கூறவும், அது இவர்கள் டென்ட் அருகிலேயே இருந்தது.


“இங்க பக்கத்துல ஏதும், பழங்காலத்து கட்டிடம் இருக்கா?” என்று அவனிடம் வினவினாள்.

“இம்... இருந்தது, கொஞ்சம் தள்ளி. இப்போ அது இடிஞ்சு போய் இருக்கு, அங்கேயா உன் ஆராய்ச்சி சம்பந்தம்பட்டது இருக்கு?” என்று கேட்டான்.


“ஆமா! என்னை அங்க கூட்டிட்டு போறீங்களா” என்று அவள் கேட்கவும், அவனும் சரி என்றான்.

அருகில் என்பதால், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு, இவர்கள் கவனமாக அங்கே நடந்து சென்றனர்.

அவன் கூறியது போல், கட்டிடம் இடிந்து அதனுள் ஏதும் கிடைக்காதது போல் காட்சி அளித்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு, உள்ளே சென்று தேடாமல் இருக்க கூடாது என்று எண்ணியவள், கையில் சிறுடார்ச்லைட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவளைதொடர்ந்து, உள்ளே சென்றவன் அவள் அங்கு இருந்த ஒரு இரும்பு பீரோவை நகட்ட, இவனை அழைத்தாள்.

அவனும் அதை அவளோடு சேர்ந்து நகற்றி வைக்க, அதன் அடியில் இருந்த ஒரு தகடு மின்னிக் கொண்டு இருந்தது. அதை எடுத்து பார்த்தவள், அதில் கூறி இருந்த குறிப்பை எடுத்து வைத்து பார்த்தாள்.

அதில் சொல்லப்பட்ட செய்தி, அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது. வேகமாக அதை சரிபார்க்க, அவனுடன் டென்ட் உள்ளே சென்று அவள் எடுத்து வைத்து இருந்த குறிப்புடன் ஒப்பிட்டு பார்த்தாள்.

அவள் நினைத்தது போல், அதுகாட்டிய இடம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதை அருகில் இருந்தவனுடன் பகிர, அவனை அனைத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள். அவன் திகைத்து விழிக்க, அவளோ எதையும் உணராமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று, திட்டமிட தொடங்கினாள்.

கன்னத்தில் பதித்த முத்தம், உதட்டிற்கு கிடைக்காதா என்று அவன் நினைக்க, அவளோ அப்படி ஒருவன் இல்லாதது போல், அடுத்த அடுத்த வேளைகளில் மூழ்கிக் கொண்டாள்.

வயிற்றில் மணி அடிக்கவும் தான், அவனுக்கு உணவு சாப்பிடாத உணர்வு வந்து, சமைக்க தொடங்கினான். சிம்பிளான பருப்பு சோறும், பப்பெட் வகையும் வைத்து இருந்தான்.

சாப்பிட அவன் அவளை அழைக்க செல்ல, அப்பொழுதும் குறிப்பு எடுத்துக் கொண்டு இருப்பவளை பார்த்து, தனக்குள் சிரித்து அவளுக்கு தானே சாப்பாடு எடுத்து ஊட்ட தொடங்கினான்.

“ரொம்ப தேங்க்ஸ்பா! சரியான பசி. நானே வந்து சமைத்து இருப்பேன், ஆனா என் ஆராய்ச்சி முக்கால்வாசி முடிஞ்ச சந்தோஷதுல இருக்கேன்”.

“அதான் நான் சமைகவில்லை, தப்பா நினைக்காதீங்க” என்றவளை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் திணறினான் ஒரு நிமிடம்.

பின்னர் சுதாரித்து, அவளிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும் என்று நினைத்தவன், இப்பொழுது கேட்க தொடங்கினான்.

“எத்தனை நாளா, இந்த ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்க?” என்று அவன் வினவவும், அவள் சிரித்தாள்.

“இது எங்க தாத்தா எப்போதோ ஆரம்பிச்சது, இன்னைக்கு நான் படிச்சு முடிச்சு வந்ததுக்கு அப்புறம், இரண்டு வருஷமா இதை தான் செய்துகிட்டு இருக்கேன்” என்று கூறியவள் இனி மதுரைக்கு செல்லலாம் என்று அவள் கூறவும், அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

“என்ன அதிசயமா இருக்கு!” என்று வியந்தவணை, விநோதமாக பார்த்தாள்.

“நீ தான சொன்ன, இந்த trip success பண்ணினா, உன்னை மதுரை கூட்டிட்டு போகனும்னு அதான் கொடுத்த வாக்கை காப்பாத்த இப்போ கூப்பிடுறேன் உன்னை” என்று அவள் கூறவும், அவளை சிரித்துக் கொண்டே நம்பாத பார்வை பார்த்தான்.

“சரி சரி! உண்மையை சொல்லுறேன், இப்போ எனக்கு கடைசி கட்ட ஆராய்ச்சி, அங்க தான் இருக்கு. குறிப்பு கொடுத்து இருக்காங்க, இப்போவே போகலாமா இங்க இருந்து” என்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தவளை, இறுக அணைத்தான்.

இன்று இரவு இங்கு தான் தங்க வேண்டும், நாளை தான் செல்ல முடியும் இங்கு இருந்து எனவும், உடனே முகம் வாடினாலும், அவன் அருகே தனித்து இருக்க போகும் இரவுக்காக, படபடவென்று காத்துக் கொண்டு இருந்தாள்.

இரவும் வந்து, வானில் முழு நிலா இருக்க, குளிருக்கு இதமாக நேற்றுவிட அதிக நெருபு மூட்டி, அவளுக்கும் குளிரில் இதமாக அணியும் ஜாக்கெட் ஒன்றை அணிவித்தான்.

நேற்று போல், இன்றும் முத்தம் தருவானோ என்று அவள் தவிக்க, அவனோ மதுரைக்கு செல்லலாம் என்று அவள் சொன்னதில் இருந்து, அவன் ஆராய்ச்சிக்கு தாவி விட்டான்.

அவன் எதோ சிந்தனையில் இருப்பது புரிந்தும், வெட்கம் விட்டு அவனிடம் இதை கேட்க அவளின் பெண்மை இடம் தரவில்லை. சிறிது நேரத்தில் குளிர் காற்று பலமாக வீச, இவளை அழைத்துக் கொண்டு அந்த டென்ட் உள்ளே சென்றான்.

மூடும் வசதி கொண்ட பிளாஸ்டிக் டென்ட் அது, ஆகையால் உள்ளே நுழைந்து அந்த டென்ட்டை பூட்டிய அடுத்த நிமிடம், மெத்தையில் விழுந்தான். நேற்றும் சரியான தூக்கம் இல்லாததால், உடனே உறங்கியும் விட்டான். அவளோ, அவன் அருகில் படுத்துக் கொண்டு, அவனை தான் சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்.

“உன்னை நான் விட போறது இல்லைடா, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீயும், என்னை விரும்புற அப்படினு தெரியும் எனக்கு, ஆனா நீ இன்னும் முழுசா உன் காதலை சொல்லாம நான் சொல்ல போறது இல்லை” .

“உனக்கு லவ் பண்ணவே தெரியலடா சரியா, முதல அதுக்கு வகுப்பு எடுக்கணும். அப்புறம், என்னால தமிழ்ல தான் அதிகமா பேச முடியும், சோ மதுரை போன உடனே முதல் வேலை உனக்கு தமிழ் கத்துக் கொடுக்கிறது தான்”.

“ஹ்ம்ம்.. நீ நேத்து பண்ண வேலைக்கு, கொஞ்சம் இன்னைக்கும் முத்தம் கிடைக்கும் அப்படினு எதிர்பார்த்தேன், இப்படி ஏமாத்திட்ட போடா”என்று செல்லமாக சலித்துக் கொண்டு, அவனை கட்டிபிடித்துக் கொண்டே படுத்து விட்டாள்.

மறுநாள், அவள் எழும் பொழுது அவன் மீது படுத்து இருந்ததை பார்த்து, பதறிக் கொண்டு விலகினாள். அவனோ, அவளை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்தான்.

“எவ்வளவு வெயிட் நீ? இந்த கணம் இருக்க! கொஞ்சம் என்னை மாதிரி, சுறுசுறுப்பா இருந்தா இப்படி எல்லாம் வெயிட் போதாது என்ன” அவன் சொல்லிவிட்டு, சென்ற தினுசில் அவளுக்கு கோபம் வந்தது.

“கொழுப்பு, உடம்பு முழுதும் கொழுப்பு. ராஸ்கல்! என்னை சீண்டி பார்கிறதே முழுநேர வேலையா வச்சு இருப்பான் போல” என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே, எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு, தேவையானதை எடுத்து வைத்தாள்.

அதற்குள், அவன் சொல்லி இருந்த ஹெலிகாப்டர் அங்கே வரவும், அவள் எடுத்த குறிப்பும் வேறு சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு முதலில் மேலே ஏணியில் ஏறி ஹெலிகாப்டர் உள்ளே சென்றாள்.

அதன்பின் அவனும் சிலபொருட்களை, ஹெலிகாப்டரில் தூக்கி போட்டு அங்கு இருந்து கீழே போட்ட கயிற்றை, தன் மீது கட்டிக் கொண்டான். அதன்பின், மேலே ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த அவன் ஏற்பாடு செய்தவன், உடனே கயிற்றை மெஷின் மூலம் மேலே இழுத்தான். ஹெலிகாப்டரின் உள்ளே வந்த உடன், அந்த கயிற்றை உருவி விட்டு, நேராக துபாய் palace செல்லுமாறு, அவனிடம் கூறினான்.

கேள்வியாக பார்த்த அவளிடம், உடனே எல்லா ஏற்பாடும் செய்தால் தான், சீக்கிரம் மதுரை நாளை செல்ல முடியும் என்றான்.

“அது சரி!. அவன் தான் என்னை விட ரொம்ப தீவிரமா இருக்கான் போல, சீக்கிரம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லோரையும் பார்க்க போகிறோம்”.

“ஹையோ நாளைக்கு மதுரைக்கு அப்படினா, இங்க அண்ணாகிட்ட எல்லாத்தையும் சொல்லி, அவங்களுக்கும் லீவு சொல்லி, கையோட கூட்டிட்டு போக வேண்டும்”என்று எண்ணி, அவனுக்கு அழைத்தாள்.

அந்த பக்கம் அவன் செய்தி கேட்டதும், முதலில் அவளை செல்லுமாறு பணித்தான். அவன் இங்கு இருக்கும் வேறு சில வேலைகளை எல்லாம், முடித்துக் கொண்டு வருவதாக கூறினான்.

“அருங்காட்சியகம்ல, இன்னும் எனக்கு ஒப்பந்தம்படி இன்னும் 6 மாதவேலை இருக்கே” என்று faiq யிடம் கூறி யோசனை கேட்டாள்.

“அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ மதுரைக்கு போக திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு. உன் பாஸ்போர்ட், விசா எல்லாம் கொடு பிரைவேட் பிளேன்ல நாளைக்கு போகனும் அங்க” என்று கூறியவனை காதலாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனோ, அதன் பிறகு இவளை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல், அவனின் ஆராய்ச்சி பற்றி எண்ணிக் கொண்டு இருந்தான். துபாய் மாளிகை மேலே, அந்த ஹெலிகாப்டர் நிற்கவும், முதலில் இவன் இறங்கி, அதன் பின் அவளை இறக்கி விட்டு, அங்கு நின்று இருந்த ஒருவனிடம், இவளை அவள் வீட்டில் விடுமாறு கூறினான்.

அவளிடம், இன்று இரவு பாஸ்போர்ட் எல்லாம் தயார் செய்து வைத்து இருக்கும் படி கூறினான். அவனே வீட்டில் வந்து வாங்குவான் என்று எண்ணி, அவள் அன்று அவனை எதிர்பார்க்க அவனோ வரவே இல்லை.

அவனுக்குபதில், அவனின் நண்பன் ரசாக் வந்து வாங்கி சென்றான். மனதில் ஏனோ ஏமாற்றம் வந்து, அவளை சற்றுசோர்வடைய செய்தது.

மறுநாள் மதியம் ஏர்போர்ட்டில், அவள் இவனை ஆசையாக பார்க்க, அவனோ தன் நண்பன் ஆதிலுடன் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான்.

“இவனுக்கு லவ் பண்ணவே தெரியல, தத்தி” என்று மனதிற்குள் அவனை திட்டி விட்டு, அங்கே அமர்ந்து வாட்ஸ் ஆப் பார்க்கதொடங்கினாள்.

ஸ்டீஃபன்அனுப்பியமெசேஜ்ஒன்றுஇருக்கவும், உடனேஅதைஓபன்செய்துபார்த்தாள்.

அதில்அவன்,இவள்குறித்துகொடுத்தகுறிப்புகள்எல்லாம்வைத்து,அடுத்துஅவர்கள்செல்லவேண்டியஇடத்தைகண்டுகொண்டதைபற்றிகூறிஇருந்தான்.

மேலும், அதில்அவன்அடுத்துஅனுப்பியசெய்திஅவளையோசிக்கவைத்தது. அதற்குள், faiqஇவளைஅழைக்க, இவளோயோசனையில்ஆழ்ந்துஇருந்ததால், அவன்கூப்பிட்டதைகவனிக்கவில்லை.

சற்றுகுறும்புதலைதூக்க, அவன்சத்தமாககாவி, ஹேகாவிடிரஸ்போட்டகாவிஎன்றுஅழைக்கவும், இவள்காதில்அதுவிழுந்து, கோபத்துடன்அவனைமொத்தஉடனேஎழுந்துஅவனைபிடிக்கஓடினாள்.

அவனோ, இவளுக்குஆட்டம்காட்டிகொண்டுநேராகபிரைவேட்பிளேன்நோக்கிஓடதொடங்கினான். பின்னால், அவளைதுரத்திக்கொண்டுவந்தவள், அவன்ஏறியபிளேனைபார்த்துஅசந்துநின்றாள்.

“ஹேகாவி! ஒட்டகத்துலஏறிஉட்கார்ந்துதூங்கினமாதிரி, இங்கேயும்தூங்கிடாத. அதுலநீகீழேவிழாமஇருக்க, கயிற்றைவச்சுகட்டினேன்”.

“இங்கஇந்தbeltதாங்குமா, என்னனுதெரியல.

அதனாலநாலுமணிநேரம்,என்கூடபேசிகிட்டேவா”என்றுஅவன்கூறவும், இவள்வேகமாகஅதில்ஏறி, அவனைபிடித்துமொத்ததொடங்கினாள்.

மதுரைவரும்வரை, அவன்சளைக்காமல்இவளைஹேகாவிஎன்றுவம்புவளர்க்க, அவளோபோடாfakeஎன்றுகூறியதோடு, தமிழில்திட்டதொடங்கிவிட்டாள்.
மதுரையில்அவர்கள்கால்பதித்தஅடுத்தஒருமணிநேரத்தில், அவர்களைசுற்றிவளைத்தனர்எதிரிகள்.


தொடரும்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top